• உள்நுழை
 • |
 • பதிவு
பெற்றோர் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்

ப்ரோபியோடிக் (L.reuteri) குழந்தையின் வயிற்று வலியை எவ்வாறு குணப்படுத்துகிறது ?

Vandana Chawla
0 முதல் 1 வயது

Vandana Chawla ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Jan 12, 2020

 Lreuteri
நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

புதிதாக பிறந்த குழந்தையை பாராமரிக்கும் இளம் தாய்மார்களுக்கு குழந்தை தொடர்ந்து அழுவது வேதனையை அளிக்கும். அதிலும் மற்ற குழந்தைகளை விட நம் குழந்தை அதிகமாக அழும் போது அதை எவ்வாறு கையாளுவது என்ற குழப்பம் இருக்கும். குழந்தையின் அழுகையை நிறுத்த பால் கொடுப்பது, வெளியில் அழைத்து சென்று வேடிக்கை காட்டுவது என பல்வேறு முயற்சிகள் செய்வார்கள். ஆனால் சில நேரங்களில் உங்களின் இந்த முயற்சி அனைத்தும் வீணாகும் சூழ்நிலை ஏற்படுகிறதா?

எனவே குழந்தை தொடர்ந்து அழுவதன் காரணம் என்னவாக இருக்கலாம் ?. இது கோலிக் வலியாக கூட இருக்கலாம். கோலிக் வலி என்றால் என்ன?

கோலிக் ஒரு நோய் அல்ல ஆனால் பல்வேறு காரணங்களை உள்ளடக்கியது. ஐந்தில் ஒரு குழந்தைக்கு இந்த கோலிக் வலி ஏற்படலாம். குழந்தை பிறந்த 2 முதல் 4 வாரத்தில் இந்த வலி வருவதை காணலாம். இந்த வலி திடீரென்று நிறுத்தலாம் அல்லது கொஞ்சம் கொஞ்சமாக குறையலாம். இந்த இக்கட்டான சூழ்நிலையை கடந்து செல்வதற்கு இதை பற்றிய தகவல்கள் மற்றும் பொறுமையும் பெரிதளவில் உதவும்.

கோலிக் வலிக்கான அறிகுறிகள் என்னென்ன?

 • மருத்துவர்களால் சொல்லப்படுகின்ற அறிகுறிகள், அவர்களுடைய மூன்று வயதிற்குள், குழந்தை ஒரு நாளில் 3 தடவையும், வாரத்தில் மூன்று முறையும் அதிகமாக அழுவது கோலிக் வலியின் அறிகுறியாகும். அதாவது தாய்மார்களால் அமைதிப்படுத்தவே முடியாத அளவிற்கு குழந்தை அழும். முக்கியமாக தொடர்ந்து குறிப்பிட்ட ஒரு நேரத்தில் அழுவது அல்லது மதியத்திற்கு பிறகு அழுகை தொடங்கும்.
 • இந்த கோலிக் வலி சில நிமிடங்கள் ஆரம்பித்து 3 மணி நேரம் வரை இருக்கலாம். குழந்தைக்கு வாயு வெளியேறியவுடன் அல்லது மலம் கழித்ததும் சொளகரியமாக உணரும். குழந்தையின் வயிறு சற்று ஊதிப்போனது போல் மற்றும் இறுக்கமாக காணப்பட்டால் அது கோலிக் வலியாக இருக்கும்.
 • கோலிக் வலியை குழந்தையால் தாங்க முடியாது என்பதால் எளிதாக சோர்வடைந்து விடுவார்கள். அவர்களின் முகம் பழுப்பாக மாறும். கால்களை பின்னிக் கொண்டு அழுவது, கைகளை இறுக்கி மடக்கிக் கொள்வது, அவர்களது வயிற்று தசைகள் கடினமாக ஆவது போன்ற அறிகுறிகளை காணலாம்.

கோலிக் வருவதற்கான காரணங்கள் என்ன?

கோலிக் வலி பற்றிய பல்வேறு புரிதல் இருக்கின்றது. வாயுத் தொல்லை, மலம் கழிப்பதில் சிரமம், ஒவ்வாமை, செரிமான மண்டலம் முதிர்ச்சியடையாமல் இருப்பது, பெற்றோர்களுடைய பதட்டம், பால் குடிக்கும் விதம், பால் குடித்தவுடன் படுக்க வைப்பது என பல்வேறு காரணங்களை உள்ளாடக்கியது. மேலும் குழந்தையின் அழுகை காரணமாக அவர்களது குடலில் கெட்ட பேக்டீரியா சென்றடையும். இதனால் வீக்கம், சிவப்பது போன்றவைகள் காணப்படலாம். இதிலிருந்து பாதுகாக்க நல்ல பேக்டீரியாவின் தேவை உள்ள நிலையில் ப்ரோபையாட்டிக் எல். ரூட்டெரி எனும் பாக்டீரியா குழந்தைகளின் கோலிக் வலியை தவிர்க்கும் தன்மை கொண்டதாக விளங்குகிறது.

எல். ரூட்டெரி என்றால் என்ன?

லேக்டோபேச்சிலஸ் ரூட்டெரி (Lactobacillus reuteri) அல்லது  எல். ரூட்டெரி நமது வாய் பகுதியிலும் வயிற்றிலும் இருக்கக்கூடிய  நன்மை பயக்கும் பாக்டீரியாவாகும்.  இது குழந்தைகளை உடல் உபாதைகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. அதிலும் முக்கியமாக குழந்தைகளுக்கு ஏற்படும் கோலிக் வலியை போக்க பேருதவியாக இருக்கிறது.

எல்.ரூட்டெரி இயற்கையான ஆண்டிபயாடிக் பொருள் ரூட்டெரின் என்று அழைக்கப்படுகிறது. இந்த ரூட்டெரின் குடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் ஈஸ்ட், மற்றும் பூஞ்சைகளின் வளர்ச்சியை  தடுத்து குழந்தைகளின் ஆரோக்கியத்தை காக்கிறது.

 

கோலிக் பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு குடல் பகுதியில் நல்ல பாக்டீரியாக்கள் குறைவான எண்ணிக்கையிலேயே இருக்கும், ஆராய்ச்சியாளர்கள் எல். ரூட்டெரி போன்ற நன்மை தரும் பாக்டீரியாக்களை கொடுப்பதன் மூலம் கோலிக் பிரச்சனைக்கு தீர்வு காண இத்தாலி நாட்டில் ஆய்வு செய்யப்பட்டது. 2007 ஆண்டு வெளிவந்த பீடியாட்ரிக்ஸ் இதழில் கோலிக் பிரச்சனை உள்ள தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டதில் 95% தீர்வு கிடைத்துள்ளதாகவும், கோலிக் வலியால் அழும் நேரம் கணிசமாக குறைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2013ல் ஜாமா பீடியாட்ரிக்ஸ் இதழில் எல். ரூட்டெரி கோலிக் வலியால் அவதித்தப்படும் தாய்ப்பால் அருந்தும்  குழந்தைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  

ப்ரோபையாட்டிக் எனப்படுவது நமது உடலுக்கு பல வகையில் உதவுகிற உயிருள்ள பாக்டீரியாக்கள். இவை செரிமானம் ஆகவும் தேவையான சத்துக்கள் கிடைக்கவும் உதவுகிறது.ம்நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க செய்கிறது.

இவை செரிமானத்தின் போது உதவிகரமாக இருப்பதோடு உடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்களை பெருங்குடலுக்கு சென்றடைய செய்கிறது. இவ்வகை ப்ரோபியோடிக்கள் ஆரோக்கியமான பாக்டீரியாக்களை  பெருக்கவும் அதனை மறுசீரமைப்பு செய்யவும் உதவுகிறது.

புரோபயாடிக்குகள் வலியை குறைப்பதும் அழும் நேரத்தை குறைக்கவும் செய்கிறது என்றாலும் உங்கள் குழந்தை நல மருத்துவரிடம் இது பற்றி கலந்துரையாடுவது மிக அவசியம், உங்கள் மருத்துவர் உங்கள் குழந்தைக்கு ஏற்ப அதனை தேவைப்படும்போது பரிந்துரைப்பார்.

சான்றாதாரங்கள்

* SavinoF, PelleE, Palumeri E, Oggero R, and Miniero R. "Lactobacillus reuteri(American Type

Culture Collection Strain 55730)Versus Simethicone in the Treatment of Infantile Colic: A

Prospective Randomized Study". Pediatrics 2007;119;e124-e130.

** Sung V, Collett S, de Gooyer T, Hiscock H, Tang M, Wake M. Probiotics to Prevent or Treat

Excessive Infant Crying: Systematic Review and Meta-analysis. JAMA Pediatr.

2013;167(12):1150–1157. doi:10.1001/jamapediatrics.2013.2572

எழுத்தாளர் பற்றி

வந்தனா சாவ்லா ஒரு ஊட்டச்சத்து நிபுணர் UKVRN மற்றும் சான்றளிக்கப்பட்ட  Dr Sears 'LEAN பயிற்சியாளர். அவர் ஊட்டச்சத்துப் பிரிவில் 20 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் பெற்றவர் மற்றும் ஹீரோ பேபி நிறுவனத்திலும், எகிப்திலும்  ஊட்டச்சத்து ஆலோசகராக பணியாற்றியவர்.

 

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

 • 5
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.

| Apr 24, 2019

1 month baby Ku gray water kudukkalaama...

 • Reply
 • அறிக்கை

| May 13, 2019

en baby 5 month agapothu. but saria motion pogamatran mam pls tel the reason

 • Reply
 • அறிக்கை

| Jun 10, 2019

l reuteri yendha unavu porulil ulladhu

 • Reply
 • அறிக்கை

| Aug 09, 2019

new born baby ku gray water kodukalama

 • Reply
 • அறிக்கை

| Oct 03, 2019

Ennoda papavuku one month aghuthu papa konjam konjam motion ozhukura doctor kamichom avugha neo Smile drops kuduthagha gas release aghuthu but ennum azhukura but motion ozhukurathu nirmala,Papa azhughavum seiyra

 • Reply
 • அறிக்கை
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}