• உள்நுழை
  • |
  • பதிவு
பெற்றோர் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்

ப்ரோபியோடிக் (L.reuteri) மூலம் குழந்தையின் அழுகையை எவ்வாறு ஆற்றுவது?

Vandana Chawla
0 முதல் 1 வயது

Vandana Chawla ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Apr 24, 2019

 Lreuteri

குழந்தை இரவு தூங்க முடியாமல்  2 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து அழுதுகொண்டே இருப்பதை கோலிக் வலி அல்லது வயிற்று வலி என்று சொல்லலாம், எதற்கு அழுகிறது என்ற காரணம் புரியாமல் பல குழப்பத்துடனும் கவலையுடனும் அந்நேரத்தை பெற்றோர்கள் கடத்துகிறார்கள். இந்த கோலிக் வலி குழந்தைகளுக்கு பொதுவாக  மாலை பொழுதில் வருவதால் அவர்கள் அழ ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக  கதறல் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது, ஒரு நாளைக்கு சராசரியாக 3 மணி நேரமும் வாரத்தில் இது போல் 3 நாட்கள் இந்த பிரச்சனையால் அவதிக்குள்ளாக வாய்ப்புகள் இருக்கின்றது.

ஏன் இவ்வாறு நடக்கிறது ?

குழந்தையின் வயிற்றில்  வாய்வு ஏற்படுவதனால் இந்த கோலிக் வலி உண்டாகின்றது. குழந்தைகள் அசொளகரியமாக உணர்வதால் உடலை முறுக்கிக் கொண்டு அழுவார்கள். தாய் பால் கொடுக்க முனைந்தாலும் அக்குழந்தையால் ஒரு வாய் கூட குடிக்க முடியாது. இந்த கோலிக் வலி குழந்தை பிறந்த 2 அல்லது 3 வாரத்திலேயே ஆரம்பித்துவிடும் இது சுமார் 4 மாதம் வரை தொடரும் வாய்ப்புள்ளது.  

ஏன் கோலிக் வலி வருகிறது ?

குழந்தைகள் வயிற்றில் சமநிலையற்ற பாக்டீரியாக்கள் அளவு இருப்பதால் தான் இந்த கோலிக் வலி வர முக்கிய காரணமாகிறது. மனித உடலில் இயற்கையாக  நன்மை பயக்கும் பேக்டீரியாக்கள் பல இருக்கும், இத்தகைய பாக்டீரியாக்கள் வயிற்றில் இருந்து சீரான செரிமானத்திற்கு பேருதவியாக இருக்கிறது. குழந்தைகளுக்கு செரிமான அமைப்பு மண்டலம் முதிர்ச்சியடையாமலும் மற்றும் வாய்வை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களும் அதிகம் இருக்கும்.  வயிறுப் பகுதி வளர்ச்சி அடைந்தவுடன் பாக்டீரியாக்களின் தன்மை மாறி சமநிலை பெற்றுவிடும்.

சில குழந்தைகளுக்கு மட்டும் அதிகப்படியான வலி இருப்பதற்கு காரணமா ஏதும் இல்லை, இது பரம்பரை பிரச்சனையும் இல்லை. ஆண்  குழந்தை பெண் குழந்தையென இருபாலருக்கும் வரக்கூடிய பிரச்னை இது. தாய் பால் குடிக்கும் குழந்தைக்கும் சரி புட்டிப்பால் குடிக்கும் குழந்தைக்கும் இந்த கோலிக் வழி வரும்

குழந்தை அழுவதை பார்த்து தாங்க முடியாத பெற்றோர் அழுகையை நிறுத்த சில வழிகளை கையாள்கின்றனர்.

  • கோலிக் வழியால் அழும் குழந்தையை அரவணைத்து அங்கும் இங்கும் நடந்தும் வெளியிடத்தை காட்டி வலியில் இருந்து கவனத்தை திருப்ப முயற்சி செய்கின்றனர்.
  • குழந்தையை தொடை மீது தலை குப்புறபோட்டு வைப்பார்கள்.
  • ஏப்பம் வர வைக்க முயற்சி செய்வார்கள்.

ப்ரோபியோடிக் எல் ரூட்டெரி எனும் பாக்டீரியா குழந்தைகளின் கோலிக் வலியை தவிர்க்கும் தன்மை கொண்டதாக விளங்குகிறது, இதனால் குழந்தைகளின் அழும் நேரம் கணிசமாக குறைந்துள்ளது. இந்த ப்ரோபியோடிக் எல் ரூட்டெரியை (L.reuteri)  வைத்து  பல ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.  

எல் ரூட்டெரி L.reuteri என்றால் என்ன?

லேக்டோபேச்சிலஸ் ரூட்டெரி (Lactobacillus reuteri)  எனப்படும் இந்த நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் தொற்று ஏற்படாமல் தடுக்க உதவுகின்றது.  இந்த எல். ரூட்டெரி பாக்டீரியாக்கள் பொதுவாக வாய் மற்றும் வயிற்று பகுதியில் இருப்பவையாகும். இந்த பாக்டீரியாக்கள் குழந்தைகளுக்கு உடல் சார்ந்த பிரச்சனைகள் வராமல் தடுக்க வழிவகுக்கின்றது. இது குழந்தைகளை கோலிக் வலி ஏற்படுவதிலிருந்து காக்கின்றது. 

ப்ரோபையாட்டிக் எனப்படுவது நமது உடலுக்கு பல வகையில் உதவுகிற உயிருள்ள பாக்டீரியாக்கள். வயிற்றில் சேரும் வாய்வை குறைத்து வயிற்றில் ஏற்படும் அசௌகரியத்தில் இருந்து விடுவிக்கின்றது. இந்த நன்மை தரக்கூடிய பாக்டீரியாவில் ஒன்று தான் லேக்டோபேச்சிலஸ் ரூட்டெரி, இது பொதுவாக தாய்ப்பாலில் அதிகம் இருக்கும்.

இந்த லேக்டோபேச்சிலஸ் ரூட்டெரி கொடுக்கப்பட்ட குழந்தைகள் வயிற்று வலியால் அழுவது கணிசமாக குறைந்துள்ளதாக ஆராய்ச்சிகள் சொல்கிறது,

2011 ஆம் ஆண்டு J Fam Pract ஆய்வின்படியும் தி ஜர்னல் ஆப் பீடியாட்ரிக்ஸ் 2012ல் மேற்கோள் காட்டியபடியும் லேக்டோபேச்சிலஸ் ரூட்டெரியினால் கோலிக் வலியால் அவதிப்படும் சுமார் 50% குழந்தைகளின் அழும் நேரம் குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. மேலும் இந்த ப்ரோபையோட்டிக்ஸ் மூலம் நல்ல குடல் செயல்பாடும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், வீக்கங்களை குறைக்கவும் உதவுகிறது.

தாய்ப்பால் இல்லாத போது உங்கள் குழந்தை நல மருத்துவரிடம் அணுகி அதற்கேற்ற எல்.ரூட்டெரியை பரிந்துரைக்க சொல்லுங்கள்.

ஆய்வுகள் இந்த பாக்டீரியாக்கள் மூலம் கோலீக்கிற்கு தீர்வு என்றாலும் உங்கள் குழந்தை நல மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது அவசியம்.  

கட்டுரையின் ஆசிரியர் பற்றி

டாக்டர் சிப்ரா மாத்தூர் ஏறத்தாழ 10 வருடங்களுக்கு மேலாக குழந்தை மருத்துவத்தில் அனுபவம் பெற்று தற்போது குர்கானில் உள்ள Fortis Memorial Research Institute இல் குழந்தை நலம் மற்றும் நியோநேடாலஜி பிரிவின் மூத்த ஆலோசகராக இருக்கிறார். 

 

  • 1
விளக்கக்குறிப்புகள்()
Kindly Login or Register to post a comment.

| May 01, 2019

எனது குழந்தையும மோசன் போகும் போது முக்கி அழுது போரான் ஏதும் தொந்தரவு இறுக்கா

  • அறிக்கை
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}