புதிய தாய்மார்களுக்கான 7 அழகு குறிப்புகள்

Parentune Support ஆல் உருவாக்கப்பட்டது புதுப்பிக்கப்பட்டது Nov 26, 2020

பெண்கள் பொதுவாகவே ஒரு குழந்தை வருவதற்கு முன்பு வரை அவர்களுடைய அழகை பேணுவதில் மிகவும் அக்கறையுடனும், ஆர்வமுடனும் இருப்பார்கள். அதுவே ஒரு குழந்தை பிறந்தவுடன் அவர்களுடைய ஆரோக்கியம் மற்றும் அழகை பற்றி சிறிதும் கவலைப் படுவதில்லை.குழந்தை மேல் இருக்கும் அதிக அக்கறை காரணமாக தங்களுடைய அழகை பேணுவதில் ஆர்வம் இல்லாதவர்களாக மாறிப் போய்விடுவார்கள். அந்த காலகட்டத்தில் பெண்கள் இது போன்ற விஷயங்களை இழப்பதை பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள்.
குழந்தை பிறந்த பின் பெண்கள் அவர்களது அழகை மேம்படுத்த செய்ய வேண்டிய சில விஷயங்களை நாம் இப்போது பார்க்கலாம்.
முகப்பொலிவு:
பிரசவத்திற்கு பிறகு பெண்களின் முகம் பொலிவிழந்து காணப்படும். அவர்கள் தங்களுடைய முகத்திற்கு வீட்டிலேயே இருக்க கூடிய புதினா எழுமிச்சை, தயிர் ஆகியவற்றை பயண்ப்படுத்தி ஃபேஸ் மாஸ்க் போடலாம். ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்த பழ வகைகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். பெர்ரி, பிளம்ஸ், ஆரஞ்சு, திராட்சை ஆகியவை எடுத்துக் கொள்ளலாம்.
வயிற்று சுருக்கம்:
பிரசவத்திற்குப் பிறகு பெண்களின் வயிற்று பகுதி சுருங்கி காணப்படும். அதனை சரி செய்ய வயிற்றில் தினமும் ஆலிவ் ஆயில் தடவி 15 நிமிடம் வரை மசாஜ் செய்ய வேண்டும். கண்டிப்பாக வயிற்றில் பெல்ட் அணிய வேண்டும். பெல்ட் அணிவதால் வயிறு அழுந்தி தொப்பை இல்லாமல் திரும்பவும் பழைய மாதிரி ஆகிவிடும்.
கரும்புள்ளிகள்:
கர்ப்ப காலத்தில் ஹார்மோன்கள் அதிக அளவில் சுரக்கும். பிரசவத்திற்குப் பிறகு அது குறைந்து விடும். இவ்வகையான ஹார்மோன் இம்பாலன்ஸ் காரணமாக சில பெண்களுக்கு கர்ப்ப காலத்திலும், சிலருக்கு பிரசவத்திற்குப் பிறகும் முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் கரும்புள்ளிகள் ஏற்படும். இதனை சரி செய்ய மாயிஸ்ச்சரைசர் க்ரீமை பயன்படுத்தலாம். அடிக்கடி முகம் கழுவுவது நல்லது. அதுவும் பன்னீர் கொண்டு முகம் கழுவினால் முகத்தில் ஏற்பட்ட கரும் புள்ளிகள் சீக்கிரம் மறைந்து விடும்.
சோர்வு:
பெரும்பாலன பெண்கள் பிரசவத்திற்கு பிறகு சோர்வுடன் காணப்படுவார்கள். இதற்கு முக்கியமான காரணம் நீர்ச்சத்து குறைவு. பிரசவத்தின் போது அதிக அளவிலான நீர்ச்சத்து வெளியாகி இருக்கும். இதனால் அதிக தண்ணீர், இளநீர், ஜூஸ், நீர்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள் உள்ளிட்டவைகளை உட்கொண்டால் சோர்வடையாமல் தெம்பாக இருக்கலாம்.
கருவளையங்கள்:
பிரசவத்திற்கு பிறகு பெண்களுடைய தூக்கம் அறவே குறைந்து விடும். பெரும்பாலான குழந்தைகள் இரவு நேரங்களில் விழித்திருக்கும். இதனால் சரியான தூக்கம் இல்லாததால் பெண்களுடைய கண்ணின் கீழ் கருவளையங்கள் ஏற்படும். இதனை சரி செய்ய தினமும் வெள்ளரி துண்டுகளை கண்களில் 15 நிமிடங்கள் வைக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் பகலிலோ அல்லது இரவிலோ குழந்தைகள் எப்போது தூங்குகிறதோ அப்போதே பெண்களும் தூங்கி கொள்ள வேண்டும். அப்போது தான் பெண்களுக்கு சிறிது அளவாவது ஓய்வு கிடைக்கும். அப்படி செய்வதால் இது போன்ற பிரச்னைகளை தவிர்க்கலாம்.
நடைப்பயிற்சி:
கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு பெண்ணும் கண்டிப்பாக 12 முதல் 15 கிலோ வரை எடை ஏறுவார்கள். பிரசவம் முடிந்ததும் அதனை குறைக்கும் முயற்சியை எடுப்பவர்கள் மிகவும் குறைவு. பிரசவத்திற்குப் பிறகு 6 மாதங்களுக்காவது கண்டிப்பாக கடுமையான உடற்பயிற்சி மேற்கொள்ளக் கூடாது. ஆனால் தினமும் வாக்கிங் செல்லலாம். இதனால் எந்த பிரச்னையும் வராது. உடல் எடையை குறைக்கவும் உதவியாக இருக்கும்.
சரும வறட்சி:
பிரசவத்திற்குப் பிறகு பெண்களுடைய சருமம் வறண்டு காணப்படும். இதற்கான முக்கிய காரணம் சத்து குறைபாடாகும். இதனைத் தவிற்க பீட்ரூட், கேரட், பீன்ஸ் போன்ற காய்கறிகளை அதிகமாக எடுத்து கொள்ளலாம். அதே சமயத்தில் அசைவம் சாப்பிடுபவர்கள் முட்டை, ஈரல் போன்ற வகைகளை எடுத்துக்கொள்ளலாம். பெண்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான் அவர்கள் பிள்ளைக்கு கொடுக்கும் தாய்ப்பாலும் சத்துள்ளதாக இருக்கும்.
அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.



