• உள்நுழை
 • |
 • பதிவு
கல்வி மற்றும் கற்றல் குழந்தை உளவியல் மற்றும் நடத்தை

1- 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு

Bharathi
3 முதல் 7 வயது

Bharathi ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Sep 27, 2021

 1 8 1
நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

தமிழகத்தில் நவம்பர் 1 ஆம் தேதி முதல் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார். அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த பள்ளிகள் மேற்கொள்ளும் என்றும் அறிவுத்துள்ளார்கள். பள்ளி செல்லாமல் பல மாதங்களாக தொடர்ந்து வீட்டிலேயே இருப்பதால் குழந்தைகளின் கற்றலில் பெரிய இடைவெளி உண்டானது. வயதுக்கேற்ற கல்வித் திறனில் தாமதம் ஏற்பட்டது. மேலும்  பெரும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக மருத்துவ வல்லுநர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் தெரிவித்ததைக் கருத்தில் கொண்டு, அனைத்து பள்ளிகளிலும், 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கான வகுப்புகள், முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்க அனுமதிக்கப்படும்.

தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவலின் 2-வது அலையால் நடப்பாண்டு பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டது. கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணைய வழியில் மாணவர்களுக்குப் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்தச் சூழலில் தொற்றின் பரவல் குறைந்ததால், 9 முதல் 12-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகள் செப்.1-ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டன.

முதல் கட்டமாக 9 முதல் 12-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு மட்டும் சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. விருப்பம் உள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று ஓரளவு கட்டுக்குள் உள்ளதால் 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்குப் பள்ளிகளைத் திறப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு வருகிறது.

1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் எப்போது திறக்கப்படும் - கல்வியமைச்சரின் பதில்

1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்குப் பள்ளிகளைத் திறப்பது குறித்து மருத்துவத் துறை, பள்ளிக் கல்வித்துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதன்பிறகு நிருபர்களிடம் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாட்டில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகளை சுழற்சி முறையில் திறக்கலாமா, அல்லது 1ம் வகுப்பிலிருந்தே திறக்கலாமா என்பது பற்றி விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளோம். இந்த சூழலில்  1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் நவம்பர் 2 முதல் திறப்பது உறுதியானது.

கரோனா பாதிப்பு சூழல் முடிந்து பள்ளிகள் முழு அளவில் செயல்படத் தொடங்கியதும் மன அழுத்தத்தைப் போக்க மாணவர்கள், பெற்றோருக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஆங்காங்கு பள்ளிகளில் கொரோனா பரவுவதாக செய்திகள் பதிவாகியுள்ளன. அதுபோன்ற பள்ளிகள் 1 வாரம் மூடப்படுகின்றன. சானிடைசர் தெளித்து சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் பள்ளிகள் இயங்குகின்றன. இந்த அனுபவத்தை வைத்து, அடுத்ததாக 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகளை திறக்க தமிழக கல்வித் துறை திட்டம் வைத்துள்ளது. 

பள்ளிகள் திறப்புக்கு பிறகு, கன்னியாகுமரி மாவட்டத்தில், அதிக வருகைப் பதிவேடு பதிவாகியுள்ளது. கோவை மாவட்டத்தில் குறைவான வருகை பதிவேடு பதிவாகியுள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு வந்தேயாக வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை.

பள்ளி திறப்பும் அச்ச உணர்வும்

சுதந்திரமாக இருக்கும் பிள்ளைகளுக்கு இனி பள்ளி திறந்தால் காலையில் எழுந்து பள்ளிக்கு சென்று பாடங்களை படிக்க வேண்டும் என்ற அச்சம் ஒருப்புறம். மறுபுறம் நண்பர்களுடன் கலந்து உரையாடலை தொடர முடியும் என்று சந்தோஷம். அதே போல் பெற்றோர் வீட்டில் இருந்து படிப்பதால் பிள்ளைகளின் கல்வியின் தரம் குறைந்து வருவதை எண்ணி கவலையோடு சேர்த்து, குழந்தைகளுக்கு கொரோனா வந்து விடும் என்று அச்சம் வேறு.. இப்படி பலவிதமான உணர்வுகளை பிள்ளைகளும், பெற்றோரும் வெளிப்படுத்துகிறார்கள்.

பள்ளிகள் திறக்க வலியுறுத்தல்  உலக சுகாதார அமைப்பின் தகவல்படி

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி பள்ளிகள் திறப்பு சரியானதுதான். ஏனென்றால் கிராமத்தில் உள்ள பிள்ளைகளுக்கு ஆன்லைன் கல்வி கிடைப்பது இல்லை. வீடுகளிலையே இருப்பதால் குழந்தைகள் மீதான வன்முறை , குழந்தைகள் திருமணம் அதிகரித்து உள்ளதால் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

குழந்தைகளின் கற்றல் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் பள்ளிகள் விரைந்து திறக்க வேண்டும் என்று கூறுகிறார் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன்.மேலும் இப்போதைய சூழ்நிலையில் நாடு முழுவதும் 68 சதவீத மக்களுக்கு நோய் எதிர்ப்பு திறன் உருவாகியுள்ளதாகவும், தடுப்பூசி போடுவதும் அதிகரித்துள்ளதால் கொரோனாவின் 3 வது அலை குறித்த அச்சத்தை தவிர்க்க வேண்டும். பள்ளிகள் மூலம் கொரோனா பரவுகிறது என்று அச்சப்படாதீர்கள். அதை விட வணிக வளாகங்கள், அலுவலகம், மார்க்கெட் போன்ற இடங்களினால் தான் அதிகரிக்கரிக்கின்றது. கிராம மக்க்ள், மலைவாழ் மக்கள் என இணைய வசதிகள் இல்லாதவர்கள் கல்வி கற்க முடியாத சூழல் இருக்கின்றது. 

இதனை கருத்தில் கொண்டு முகக் கவசம் அணிதல், தனிமனித இடைவெளி, கைகழுவுதல், தடுப்பூசி போடுதல் ஆகிய முன்னெச்சரிக்கை நடவடிக்களை முறையாக பின்பற்றினாலே கொரோனா பரவுவதை குறைக்க முடியும். 

பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான முடிவு பின்வரும் நன்மைகளை கருத்தில் கொள்ள வேண்டும்:

 • மாணவர்கள் கல்வியில் அடுத்த நிலைக்கு செல்ல அனுமதித்தல்
 • அத்தியாவசிய சேவைகள், ஊட்டச்சத்துக்கான அணுகல், குழந்தைகள் நலன், குழந்தைகள் மீதான வன்முறையைத் தடுப்பது போன்றவை.
 • சமூக மற்றும் உளவியல் நல்வாழ்வு
 • தங்களையும் மற்றவர்களையும் எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருப்பது என்பது குறித்த நம்பகமான தகவலுக்கான அணுகல்
 • குழந்தையின் ஒட்டு மொத்த வளர்ச்சியில் பள்ளி படிப்பு முக்கியமானது.
 • பள்ளிகள் திறப்பு குழந்தைகளின் மனநலனுக்கு முக்கியமானது. 
 • மற்ற குழந்தைகளுடன் எவ்வித தொடர்பும் இல்லாமல் இருப்பது குழந்தைகளின் மனநலனுக்கு பாதிப்பு.
 • பள்ளிகளுக்கு சென்று நேரடியாக கல்வி கற்பது தான் எளிதாக புரியும்.
 • ஆன்லைன் கல்வி என்ற பெயரில் இணையத்தில் முடங்கி இருக்கும் மாணவர்கள் மொபைலில் விளையாடுவதை தவிர்ப்பது.
 • கண் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து பாதுகாத்தல்
 • கிராமப்புற மாணவர்கள் பாதியில் படிப்பை விட்டு வேறு வேலைகள் செய்யும் பரிதாப நிலை உருவாகி உள்ளது.
 • பெற்றோர்கள் வேலை செய்ய அனுமதிப்பது.

மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான முறையான பாதுகாப்பிற்கான ஆலோசனைகள்:

இந்த  சூழ்நிலையில் வருத்தம், கவலை, குழப்பம், பயம் அல்லது கோபம் வருவது இயல்பு. குழந்தைகளின் கொரோனா பயத்தை கையாள உதவும் ஆலோசனைகளை வழங்கவும்.  நீங்கள் தனியாக இல்லை என்பதை அறிந்து உங்கள் பெற்றோர் அல்லது ஆசிரியரைப் போல் நீங்கள் நம்பும் ஒருவரிடம் பேசுங்கள், இதனால் உங்களையும் உங்கள் பள்ளியையும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவ முடியும்.

 1. உங்களைப் பயிற்றுவிக்கவும் மற்றும் நம்பகமான மூலங்களிலிருந்து தகவல்களைப் பெறவும் கேள்விகளைக் கேளுங்கள்
 2. உங்களையும் மற்றவர்களையும் பாதுகாக்கவும்:
  • உங்கள் கைகளை அடிக்கடி சோப்பு மற்றும் தண்ணீரில் குறைந்தது 20 விநாடிகள் கழுவவும்.
  • உங்கள் முகம், கண்கள், மூக்கு மற்றும் வாயைத் தொடக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
  • உணவுப் பாத்திரங்கள், தண்ணீர் பாட்டில், உணவு அல்லது பானங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள்
 3. உங்களை, உங்கள் பள்ளி, குடும்பம் மற்றும் சமூகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் ஒரு தலைவராக இருங்கள்.
 • உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும், குறிப்பாக இளைய குழந்தைகளுடன் நோயைத் தடுப்பது பற்றி                      நீங்கள் கற்றுக்கொண்டவற்றைப் பகிரவும்.
 • உங்கள் முழங்கையில் தும்மல் அல்லது இருமல் மற்றும் உங்கள் கைகளை கழுவுதல், குறிப்பாக குடும்ப                                      உறுப்பினர்களுக்கு நல்ல நடைமுறைகளை மாதிரியாக பின்பற்றுங்கள்.
 • சக மாணவர்களை இழிவுபடுத்தாதீர்கள் அல்லது நோய்வாய்ப்பட்டிருப்பதைப் பற்றி யாரையும் கிண்டல் செய்யாதீர்கள்; புவியியல் எல்லைகள், இனங்கள், வயது அல்லது திறன் அல்லது பாலினம் ஆகியவற்றை வைரஸ் பின்பற்றாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
 • உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் உங்கள் பெற்றோரிடம், மற்றொரு குடும்ப உறுப்பினர் அல்லது பராமரிப்பாளரிடம் சொல்லுங்கள், வீட்டிலேயே இருக்க சொல்லுங்கள்.

கொரோனா வந்து குணமடைந்த குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் போது என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

பெற்றோர்கள் பயப்படாமல் கொரோனா விதிமுறைகளை சொல்லிக் கொடுத்து இப்போது இருந்தே அவர்களை மனது அளவில் தயார் படுத்த வேண்டும்.பள்ளிகள் திறப்பதால் மட்டும் நோய் தொற்று வரும் என்று கூற முடியாது. வெளி இடங்கள் செல்வதையும் தவிர்க்க வேண்டும். ஆனால் அரசு இன்னும் பள்ளி திறப்பு பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை..

கொரோனா வந்தாலும் 10 நாட்கள் கழித்து குறைய தொடங்கிவிடும். ஆனால் அவர்களின் கல்வியின் நிலை குறித்த கவலையே அதிகமாக உள்ளது. எப்போது திறந்தாலும் குழந்தைகளை கவனமாக இருக்க சொல்லி அனுப்பி வைப்பதே அவர்களின் எதிர்காலத்துக்கு நல்லது.

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

 • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த கல்வி மற்றும் கற்றல் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}