• உள்நுழை
 • |
 • பதிவு
பெற்றோர் பொழுதுபோக்குகள் குழந்தை உளவியல் மற்றும் நடத்தை பொம்மைகள் மற்றும் குழந்தைகள் வி கேஜெட்கள் மற்றும் இணையம்

குழந்தைங்க டிவி/மொபைல் அதிக நேரம் பார்க்கிறதை கட்டுப்படுத்த உதவும் வழிகள்

Radha Shri
1 முதல் 3 வயது

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Jun 04, 2021

நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

கொரோனா ஆரம்பித்த காலத்திலிருந்து இன்று வரை  எல்லோர் வீடுகளிலும் சந்திக்கக்கூடிய மிகப்பெரிய சவால் என் குழந்தையோட டிவி/மொபைல் பார்க்கிற நேரத்தை எப்படி குறைக்கிறது? பெரும்பாலான அம்மாக்களோட கவலை இது. குழந்தைங்க ஸ்கூலுக்கு போக முடியாம, நண்பர்கள பார்க்க முடியாம, வீட்டுக்குள்ளேயே இருக்காங்க. எவ்வளவு ஆக்டிவிட்டி கொடுத்தாலும் டிவி பார்க்கிறது மாதிரி ஈடுபாட செய்ய ஆர்வம் காட்டுறதில்ல அல்லது எதுல ஈடுபடுத்துறதுன்னு தெரியல அல்லது வீட்டுல இருந்து வேலை செய்ற பெற்றோர்களா இருந்தா, நாள் முழுதும் குழந்தைகள எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியல இப்படி ஒவ்வொரு வீட்டுலையும் ஒவ்வொரு மாதிரியான சவால்கள் ஓடிக்கிட்டு இருக்கு.

எப்படியாவது என் குழந்தை டிவி பார்க்கும் நேரத்தை குறைச்சு, மற்ற செயல்பாடுகள்ல ஈடுபட வைக்கனும் என்பது தான் எல்லா பெற்றோரும் ஆசைப்படுறாங்க. நிச்சயமா இது நடக்கும். அதற்கு சில வழிமுறைகளை, கட்டுப்பாடுகளை வீட்டுல இருக்கிற அத்தனை பேரும் ஒத்துழைச்சா கண்டிப்பா குழந்தைகங்க கிட்ட கொஞ்ச கொஞ்சமா மாத்திடலாம். குழந்தைகளுக்கு ஏற்ற மாதிரி என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கனும்? அதை அவர்களுக்கு எப்படி புரிய வைக்கனும்? டிவி/மொபைல் பார்க்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியை மற்ற என்னென்ன ஆக்டிவிட்டீஸ் மூலம் கொண்டுவரலாம் ? போன்ற பல விஷயங்களை இந்த பதிவில உங்களோட பகிர்ந்துக்கப் போறேன்.

டிவி/மொபைல் பார்க்கும் நேரத்தை குறைக்க உதகிற முக்கியமான விஷயங்கள்

 1. கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் லாக்டவுனில் இருக்கும்  குழந்தைகள் எளிதாக சலிப்படையலாம் மற்றும் கவலைப்படலாம்.
 2.  டிவி/மொபைல் போன்ற கேட்ஜெட்டுகளில் அதிக நேரம் விளையாடுவதை கட்டுப்படுத்த உதவும் விதிமுறைகள்.
 3.  உங்கள் குழந்தைகளை மற்ற செயல்பாடுகளில் ஈடுபட வைக்கவும் சில பெற்றோருக்குரிய உதவிக்குறிப்புகள் இங்கே.

உங்க குழந்தைங்க என்னென்ன மிஸ் பண்றாங்க

பெற்றோர் மற்றும் குழந்தைகள் வழக்கமாக பொழுதுகளை கழிக்க வெவ்வேறு விதமான செயல்பாடுகள் அதாவது ஸ்கூல், வெளியில நண்பர்களுடன் விளையாடுவது, வெஷாப்பிங் மால்கள் செல்வது eன இருந்தது. இப்போது வீட்டிற்குள்ள டிவி, கம்ப்யூட்டர் ஸ்மார்ட்போன்களுக்கு முன்னால் மட்டுமே அதிகமாக செலவாகின்றது.

குழந்தைங்க என்னென்ன விஷயங்களை இந்த லாக்டவுன்ல மிஸ் பண்றாங்கன்னு ஒரு பட்டியல் போட சொல்லுங்க. ஏன்னா இந்த பட்டியல் என்னோட குழந்தைகளை புரிஞ்சுக்க ரொம்ப உதவியா இருந்துச்சு. உதாரணத்திற்கு..

 • ஸ்கூலுக்கு செல்வது
 • நண்பர்களுடன் நேரில் பேசுவது, விளையாடுவது
 • கல்யாணம், பிறந்த நாள் போன்று விவேஷக்களுக்கு செல்வது
 • சுற்றுலா செல்வது
 • கோவிலுக்கு செல்வது
 • வெளியில் சென்று விளையாடுவது
 • பாட்டி, தாத்தா உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டுக்கு செல்வது
 • ஷாப்பிங் செல்வது, ஹோட்டலில் சாப்பிடுவது
 • சினிமா தியேட்டருக்கு செல்வது

இப்படி ஒவ்வொரு குழந்தைகளும் தாங்கள் மிஸ் பண்ற விஷயங்களை அடுக்கிக் கொண்டே போவார்கள். இப்போதைக்கு வெளியில் செல்ல முடியாத நிலை என்பதால், அவர்கள் மிஸ் பண்ணுகிற வீட்டில் நிறைவேற்றக்கூடிய விஷயங்களை நீங்க உங்க குடும்பத்தோடு சேர்ந்து திட்டமிடலாம். ஏன் இதை நான் சொல்றேன்னா, குழந்தைகளை பொறுத்தவரையில் டிவி, மொபைல் பார்ப்பதும் ஒரு நேரத்தில் சலிப்பை ஏற்படுத்தும். அவர்களுக்கு வெளியில் அந்த உணர்வை காட்ட தெரியாமல் அடம் பிடிக்கவோ, எரிச்சலகவோ வெளிப்படுத்துவார்கள்.

இந்த மாதிரி வீட்டில் செய்யக்கூடிய அவர்களுக்கு பிடித்த, மகிழ்ச்சியான செயல்களை செய்யும் போது ரிலாக்ஸாக உணர்வார்கள். அவர்களுக்கு எல்லாவற்றையும் மிஸ் பண்ற உணர்வு இருக்காது. மேலும் எங்கு இருந்தாலும் நம்மால் சந்தோஷமாக இருக்க முடியும் என்பதை அவர்கள் இயல்பாகவே கற்றுக் கொள்வார்கள்.

டிவி/மொபைல் நேரத்தை கட்டுப்படுத்தும் விதிமுறைகள்

எப்போதுமே குடும்பத்தில் விதிமுறைகள் விதிக்கும் போது, எல்லோரும் அதை பின்பற்ற வேண்டும். அப்போது தான் குழந்தைகள் பெரியவர்களை பார்த்து பின்பற்றுவார்கள். அதற்கான சில உதவிக்குறிப்புகளை இங்கே பார்க்கலாம்.

எந்த ஒரு கேட்ஜெட்ஸும் இல்லாத ஒரு இடம்:

 • வீட்டுல ஒரு இடத்தை குறிப்பா டிவி, மொபைல், லேப்டாப், கம்ப்யூட்டர் போன்ற கேட்ஜெட்ஸ் இல்லாத இடத்தை உருவாக்க முயற்சிக்கவும், அதில் உங்கள் குழந்தைகள் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது. நேரத்தை குடும்பத்துடன் தரமான  நேரத்தை செலவிட உங்கள் குழந்தைகளை ஊக்குவிக்கவும். நீங்களும் அவங்களோடு முழுமையான ஈடுபாடோடு நேரத்தை செலவிடனும்.
 • உங்கள் குழந்தைகள் சாப்பிடும் போது அல்லது அம்மா அப்பாவோடு பேசும் போது செல்போன்கள் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள்.

டிஜிட்டால் பயன்பாட்டை குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் பயன்படுத்துவதை நிறுத்தும் பழக்கம்:

உங்கள் முழு குடும்பத்திற்கும் டிஜிட்டல் நேர விதிமுறைகளை பின்பற்ற சொல்லுங்கள். எந்தவொரு மின்னணு கேஜெட்களையும் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் குழந்தைகள் முன்னிலையில் பயன்படுத்துவதில் இருந்து விலகி இருங்கள். உதாரணத்திற்கு உங்கள் குழந்தைகள் அல்லது நீங்கள் படுக்கைக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு செல்போன்களைப் பயன்படுத்த வேண்டாம், போன்ற விதிமுறையை பின்பற்றுங்கள்.  அதற்கு பதிலாக, ஒருவருக்கொருவர் நேரத்தை செலவிடலாம்.

குழந்தைகள் மொபைலில் பார்ப்பதை கண்கானிக்கவும்:

 • உங்கள் குழந்தை ஆன்லைனில் பார்ப்பது வன்முறை அல்லது ஆக்ரோஷமானதாக இருக்கக்கூடும் என்பதால், விதிமுறைகளை அமைத்து, அவற்றைக் கண்காணிக்கவும். படுக்கையறையில் இருக்கும்போது உங்கள் பிள்ளை டிவி பார்க்கவோ அல்லது மொபைல் ஃபோனைப் பயன்படுத்தவோ அனுமதிக்காதீர்கள். உங்கள் குழந்தைகளுக்கு சொந்த ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட்டை கொடுக்க வேண்டாம். அவற்றின் பயன்பாட்டு பழக்கத்தை கட்டுப்படுத்துங்கள்.
 • உங்கள் குழந்தை எப்போது டிவி பார்க்க வேண்டும் அல்லது ஸ்மார்ட்போன் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து சரியான அட்டவணையை அமைக்கவும். அதை தினமும் அவர்கள் சரியாக கடைப்பிடித்தால் அவர்களுக்கு அன்பளிப்பு, வெகுமதி, பாராட்டு போன்றவற்றை கொடுத்து அந்த பழக்கத்தை ஊக்கப்படுத்தலாம்.

உங்கள் குழந்தையை வீட்டில் ஈடுபடுத்தும் யோசனைகள்

வீட்டுக்குள்ளேயே குழந்தைகள் இருப்பதால் எளிதில் சலிப்படையவோ, சோர்வாகவோ வாய்ப்பு உண்டு. வீட்டிலிருந்து வேலை பார்க்கும் பெற்றோரால் அதிக நேரம் குழந்தைகளோடு சேர்ந்து செயல்களில் ஈடுபட முடியாது. டிவி பார்க்கும் நேரத்தை குறைப்பதற்கான 8 வழிகளை பார்க்கலாம்.

1. உடல்  அசைவுகளை ஊக்குவிக்கும் ஆக்டிவிட்டி

உடல் செயல்பாடுகளை ஊக்குவிப்பதற்கான ஒரு இயற்கையான வழியாகும், உங்க குழந்தை ஒரு புதிர் விளையாட(Puzzle) விரும்பினால். நீங்க மற்றொரு அறையில் அதற்கான புதிர்களை வைக்கலாம். ஒவ்வொரு முறையும் புதிர் கார்டையும் எடுக்க அவர்கள் அடுத்த அறைக்கு வந்து எடுத்து செல்ல வேண்டும். இது அவர்களை சுறுசுறுப்பாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், அவர்கள் எந்தத் துண்டைத் தேடுகிறார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள கடினமாக உழைக்கும்போது இது அவர்களின் மூளைக்கும் சவால். உடலை இயக்க நடனம் , உங்க குழந்தையின் பொம்மை அலமாரியில் அட்டைகளை வைப்பது ஆகியவை அடங்கும்.

2. சுயமாக விளையாட கற்றுக் கொடுக்கலாம்

பெற்றோர்கள் டிவி நேரத்தை குழந்தைகளுக்கு கொடுப்பதற்கான பொதுவான காரணங்களில் ஒன்று, அவங்களுக்கு மகிழ்ச்சியான நிமிடங்களை கொடுக்கனும்னு நினைக்கிறாங்க. அதற்கு ஒரு மாற்று இருக்கிறது: உங்கள் பிள்ளை அவர்களாகவே விளையாட கற்றுக்கொள்ள உதவுவதன் மூலம் இதைவிட அதிக மகிழ்ச்சியோடு செய்வார்கள்

உங்கள் பிள்ளை சுயமாக விளையாடுவதற்கு பழக்கமில்லை என்றால், அதை படிப்படியாக அறிமுகப்படுத்த தயாராகுங்கள்.

நீங்கள் ஒரே அறையில் குழந்தைகளோடு விளையாட ஊக்குவிப்பதன் மூலம் தொடங்கவும். முதலில் 10 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தை சுயமாக விளையாடுற நேரத்தை மெதுவா அதிகரிக்கவும். அவர்கள் தனியாக விளையாடும் கேம்களை வாங்கி கொடுக்கவும். முதலில் ஆர்வமில்லாத மாதிரி தோன்றும்,. முயற்சியை தொடருங்கள். அதன் பிறகு அவர்களாகவே அதிக நேரம் தனியாக விளையாட தொடங்குவார்கள்.

3. பெற்றோரின் உதவி அவசியம்

குழந்தைகள் சுயமாக விளையாட வேண்டும் என்று நாம் விரும்புகிறோம், சில சமயங்களில் அவர்களுக்கு உதவி தேவைப்படும். உதாரணத்திற்கு மணல் கோட்டையை, பில்டிங் ப்ளாக்ஸ் ஐ எவ்வாறு உருவாக்குவது என்பதை காட்ட சில நிமிடங்கள் செலவழிக்க வேண்டியிருக்கும். பின்னர் அவர்கள் உருவாக்குவதை கவனிக்கவும். வீட்டில், உங்கள் குழந்தையுடன் வரைவதற்கு உட்கார்ந்து, பின்னர் அவர்கள் தொடரும் போது நீங்கள் அமைதியாக மற்ற வேலைகளில் ஈட்டுபட செல்லுங்கள் . சில நேரங்களில் குழந்தைகளுக்கு தொடக்கத்தில் கொஞ்சம் உத்வேகம் தேவை.

4. தினசரி வழக்கத்தை கடைப்பிடிக்க உதவுங்கள்

இப்போது எல்லாரும் வீட்டில் இருப்பதால் எந்த நேரம் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனநிலை பெரியவர்களுக்கும் வந்துவிட்டது. குழந்தைகள் பள்ளி செல்லும் போது, ஒரு வழக்கமான நடைமுறையை அவர்கள் கடைப்பிடித்திருப்பார்கள். நீங்கள் ஒரு மாற்றத்தை உருவாக்க விரும்பினால், அவர்களின் அடத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள். பல நேரங்களில் குழந்தைகளின் கூச்சல் தாங்க முடியாமல் அவர்களிடம் ஐபாட் அல்லது மொபைலை கொடுத்துவிடுவோம். அப்படி செய்தால் மாற்றத்தை உருவாக்குவது கடினம்.

 • டிவி/மொபைல் நேரத்தை திட்டமிடுங்கள். உதாரணத்திற்கு, உங்கள் குழந்தையிடம் டிவி/மொபைல் நேரத்தை கூற சொல்லுங்கள். எவ்வளவு நேரம் என்பதையும் முன்னரே முடிவு செய்யுங்கள். அவர்களுக்கு தேவையான சுதந்திரமும் கிடைக்கும் அதே நேரத்தில் கட்டுப்பட்டுகளுக்கும் அவர்கள் ஒத்துழைக்க வேண்டும்.
 • நீங்கள் வீட்டிலும் வழக்கத்தை கொண்டுவரலாம். திரை நேரம் சனி, ஞாயிறுகளில் ஒரு  திரைப்படம் பார்க்கலாம். ஒவ்வொரு நாளும் பள்ளி முடிந்த அல்லது ஆன்லைன் வகுப்பு முடிந்து 30 நிமிடங்களுக்கு மட்டும் பார்க்கலாம்  என்று நீங்கள் தீர்மானிக்கலாம். நீங்கள் என்ன முடிவு செய்தாலும், புதிய விதியை உங்கள் குழந்தைக்குத் தெரிவிக்கவும். அவர்கள் முதல் இரண்டு வாரங்களுக்கு பின்பற்ற மறுப்பார்கள், ஆனால் விரைவில் இந்த புதிய விதிமுறை அவர்களின் இயல்பாக மாறும்.

5. வீட்டுச் சூழலைக் குழந்தைகளுக்கு ஏற்றவாறு மாற்றவும்

ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு சூழல் மிக முக்கியமானது.  இந்த விஷயத்தில் உங்கள் வீட்டில், குழந்தைகளுக்கு ஏற்றவாறு, அதாவது உடல் இயக்கத்துக்கு, மூளை வளர்ச்சிக்கு, அறிவாற்றல் ரீதியாகத் தூண்டுவதற்கு என செயல்கள் செய்யும்படி அமைக்கப்பட வேண்டும்.

 • வீட்டை சுற்றி உங்கள் குழந்தை விளையாடுவதை கவனியுங்கள். ஏறுவது, எறிவது, தொங்குவது அல்லது கனமான பொருட்களை எடுத்து செல்வது போன்ற விஷயங்களைக் கொண்டு அவர்கள் உடலை சவால் செய்ய வழிகள் உள்ளதா?
 • தாவரங்களுக்கு நீர் ஊற்றுவது அல்லது வாசலை துடைப்பது போன்ற நோக்கமான வேலையில் அவர்கள் ஈடுபடுவதற்கான வழிகள் உள்ளதா?

வீட்டிற்குள் உங்கள் பிள்ளைக்கு வேடிக்கையாகவும் சவாலாகவும் இருக்கும் பொம்மைகள் அல்லது செயல்பாடுகளை வைத்திருங்கள்; உங்கள் குழந்தையின் ஆர்வத்தை தூண்டக்கூடிய செயல்களை செய்ய சூழலை உருவாக்குங்கள். உங்கள் குழந்தையின் நலன்களையும் மேம்பாட்டுத் தேவைகளையும், ஆர்வத்தையும் பூர்த்தி செய்ய வீட்டுச் சூழல் அமைந்திருந்தால் செயலற்ற பொழுதுபோக்குகளை அதிகம் விரும்ப மாட்டார்கள் குழந்தைகள்.

குழந்தைகளின் டிவி/மொபைல் நேரத்தை கட்டுப்படுத்த உதவுகிற யதார்த்தமான, குழந்தைகளின் மனநிலைக்கேற்ற செயல்களை, விளையாட்டுகளை, விதிமுறைகளை வடிவமைக்கும் போது குழந்தைகளிடம் பாஸிட்டிவ்வாக மாற்றங்களை கொண்டுவர முடியும். அவர்களின் சீரான வளர்ச்சிக்கும் இது பெரிதளவில் உதவும் என்ற திருப்தியும் , மகிழ்ச்சியும் பெற்றோருக்கு கிடைக்கும்.

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

 • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த பெற்றோர் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}