கோடைகால உணவுப்பழக்கம் - குழந்தையின் ஆரோக்கியத்திற்கான வழிகள்

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது புதுப்பிக்கப்பட்டது Mar 29, 2022

வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. வெப்பநிலை உயர தொடங்கும் போது, உங்கள் குழந்தையின் ஆற்றல் குறைய வாய்ப்பு உள்ளது. மேலும், விரைவில் பரிட்சை முடிந்து கோடை விடுமுறை தொடங்கும் நிலையில், உங்கள் குழந்தை வெயிலில் அதிக நேரம் செலவிடப் போகிறார்கள், விளையாட்டில் அதிக ஈடுபாட்டுடன் இருப்பதால் எளிதாக சோர்வாகவும் பசியுடனும் இருக்க போகிறார்கள்.
இந்த பருவநிலையில், குழந்தைகள் எப்போதும் சோர்வாகவும் பசியாகவும் இருப்பார்கள். விடுமுறை தொடங்கியவுடன் ஒரு வழக்கத்தை கடைப்பிடிப்பது கடினம் தான். ஆனால் இதனால் அவர்கள் அனைத்து வகையான நொறுக்குத் தீனிகளையும் சாப்பிடுவார்கள். இதனால் அவர்களின் எடை அதிகரிக்கும்.
உண்மையில், கடந்த ஆண்டு மழலையர் பள்ளி மற்றும் முதல் வகுப்பில் 5,380 குழந்தைகளைக் கண்காணித்து நடத்தப்பட்ட ஒரு சர்வதேச ஆய்வில், உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ) பள்ளி ஆண்டை விட கோடை விடுமுறையின் போது வேகமாக அதிகரித்தது. ஆண்டு முழுவதும் உங்கள் குழந்தைக்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை வளர்ப்பது அவசியம் என்றாலும், கோடை காலத்தில் இது மிகவும் முக்கியமானது. உங்கள் குழந்தைக்கான ஆரோக்கியமான கோடைகால உணவுத் திட்டத்தை உருவாக்குவதற்கான அருமையான வழிகள் இதோ.
எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவுகளை தயார் செய்யுங்கள்
உங்கள் பிள்ளைக்கு ஒரு பாக்கெட் சிப்ஸை எடுத்து சாப்பிடுவது மிக எளிதானது. ஆனால் இது அவர்களின் உடலுக்கு நல்லதல்ல. விளையாடிவிட்டு வரும் போது பசிக்கும், அப்போது அவர்களுக்கு கண்ணில் படுவதை அதுவும் பிஸ்கட், சிப்ஸ் என பிடித்தது தென்பட்டால் அப்படியே சாப்பிட்டு பசியை ஆற்றிவிடுவார்கள்.
இதனை தவுர்க்க, உணவு நேரத்தில் நொருக்கு தீனிக்கு நோ சொல்லுங்க. ஏனென்றால் கோடைக்காலம் என்பது உங்கள் குழந்தை அதிகமாக வெயிலில் இருக்கும் நேரம் மற்றும் முழுமையான உடல் பயிற்சிக்கு முன்னும் பின்னும் அதிக உணவை உட்கொள்வது குமட்டலை ஏற்படுத்தும். அதற்கு பதிலாக, வெள்ளரி சாலட் போன்றவற்றுடன் அரிசி மற்றும் பருப்பு போன்ற எளிய வீட்டில் சமைத்த உணவுகளை தயார் நிலையில் வைத்து கொடுத்து விடுங்கள்.
புதுமையான உணவை தேர்வு செய்யவும்
இந்த பருவத்தில், உணவு மிக விரைவாக கெட்டுவிடும். உங்கள் குழந்தைக்கு ஏற்கனவே வெட்டப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை ஃப்ரிட்ஜில் வைத்து கொடுப்பதை தவிக்கவும். அதே போல் பள்ளிக்கும் டிபன் பாக்ஸ்களில் கொடுப்பதை தவிர்க்கவும், ஏனெனில் வெட்டப்பட்ட பொருட்களில் பாக்டீரியா வளர்ச்சி துரிதப்படுத்தப்பட்டு இரைப்பையில் தொந்தரவுகளை ஏற்படுத்தலாம்.
கோடை பழங்களை வீட்டில் எப்போதும் வைக்கவும்
ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, பெற்றோர்கள் கோடைகால பழங்களை வீட்டில் நிறைய சேமித்து வைக்க வேண்டும், ஏனெனில் அவற்றை சாப்பிடுவது குழந்தைகளுக்கு வைட்டமின் மற்றும் தாது குறைபாடுகளை உருவாக்குவதை தடுக்க உதவும். ஒரு துண்டு தர்பூசணி, பெர்ரி, மாம்பழம், ஆரஞ்சு, லிச்சி போன்றவை கோடையில் குழந்தைகளை நீரேற்றமாக வைத்திருக்கின்றன.
உங்கள் குழந்தைக்கு நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் இருப்பதை உறுதி செய்வதற்காக, குளுக்கோஸ் கொண்ட தண்ணீரை ஒரு பாட்டிலில் நிரப்பி, அதை எல்லா நேரங்களிலும் எடுத்துச் செல்லும்படி உங்கள் குழந்தைக்கு சொல்லுங்கள்.
பால் மட்டும் போததாது - பாலை புதுமையாக கொடுங்கள்
பால்ல் கால்சியத்தின் மிக அவசியமான ஆதாரம் மற்றும் உங்கள் குழந்தையின் உணவில் சேர்க்கப்பட வேண்டும் என்றாலும், குழந்தைகள் சாப்பிடவில்லை என்பதற்காக பாலை அதிகமாக கொடுக்காதீர்கள். இதனால் எந்த நன்மையும் இல்லை. பாலை லஸ்ஸி, மோர் வடிவில் கொடுங்கள் அல்லது பழ மில்க் ஷேக்குகளை தயார் செய்து கொடுங்கள்.
தினசரி வழக்கத்தை அமைக்கவும்
உங்கள் பிள்ளைக்கு பள்ளி இல்லையென்றால் என்ன செய்வது? அவர்/அவள் சரியான நேரத்தில் உணவைச் சாப்பிடுகிறாரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
- உங்கள் குழந்தை சீக்கிரம் எழும்பினால், காலை எட்டு முதல் ஒன்பது மணிக்குள் காலை உணவு
- காலை 11 மணி அளவில் குடிக்க பழச்சாறுகள்
- மதியம் ஒன்று முதல் இரண்டு மணிக்குள் மதிய உணவு
- 5 மணி அளவில் பச்சைப் பயிறு, கொண்டைக்கடலை சுண்டல், வேர்க்கடலை சுண்டல் கொடுக்கலாம்
- இரவு உணவை ஒன்பது மணிக்குள் முடிக்கவும்.
- உங்கள் குழந்தையை சீக்கிரம் தூங்க வைக்க வேண்டும்
சமையலை கொஞ்சம் படைப்பாற்றலோடு செய்யுங்கள்
குழந்தைகளுக்கு சுவாரஸ்யமான முறையில் உணவை வழங்கினால் அவர்கள் அதை விரும்புவார்கள். லெமன் ஜூஸ் அதனுடன் புதினா இலைகளை சேர்க்கவும். இளநீர் மில்க் ஷேக், நொங்கை சிறிது சிறிதாக கட் செய்து பாலுடன் சேர்த்து சர்க்கரை சேர்த்து கொடுக்கலாம்.
தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்று உங்களுக்குத் தெரியாததால், ஸ்டால்களில் இருந்து வாங்கப்படும் எந்த வகையான பானங்களையும் உங்கள் குழந்தைக்குக் கொடுப்பதை நீங்கள் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக, சுவையான பழச்சாறுகள், இளநீர், மோர் போன்ற நீர் ஆகாரங்கள் குழந்தையின் உடலுக்கு நல்லது மற்றும் பாதுகாப்பானது.
சிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Blogs
சிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Talks
சிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் கேள்வி

{{trans('web/app_labels.text_some_custom_error')}}
{{trans('web/app_labels.text_some_custom_error')}}