• உள்நுழை
  • |
  • பதிவு
பெற்றோர் கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழா

தைத் திருநாளின் சிறப்பை குழந்தைகளுக்கு கூறும் வழிகள்

Radha Shri
3 முதல் 7 வயது

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Jan 16, 2019

நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

பொங்கல் பண்டிகையை பற்றி குழந்தைகளுக்கு சில விஷயங்களை கண்டிப்பாக கற்றுக் கொடுக்க வேண்டியது இன்றைய பெற்றோர்களின் முக்கிய கடமையாக இருக்கின்றது. ஆம், இன்றைய நவீன காலத்தில் நம்முடைய பாரம்பரிய சிறப்பை குழந்தைகள் நேரில் சென்று அனுபவிப்பது என்பது கடினமாக மாறி வருகின்றது. விவசாயி என்றால் யார், உணவு எப்படி கிடைக்கிறது? அதன் செயல்முறைகள் என்ன? போன்ற கேள்விகளுக்கான விடைகளை வெறும் பாடப்புத்தகத்தில் மட்டும் படித்தால் போதாது. குழந்தைகள் களத்தில் இறங்கி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். பொங்கல் தினங்களின் வழியாக குழந்தைகளுக்கு இந்த விஷயங்களை கற்றுக் கொடுப்பது நம்மை போன்ற பெற்றோர்களுக்கு கிடைத்திருக்கும் அறிய வாய்ப்பு.

பொங்கல் விழாவை கொண்டாடும் இந்த நான்கு நாட்களும் குழந்தைகளுக்கு நம்முடைய பாரம்பரியத்தை பற்றியும், விவசாயத்தை பற்றியும் மற்றும் இன்னும் சில முக்கியமான விஷயங்களை பற்றியும் குழந்தைகளுக்கு எவ்வாறு கற்றுக் கொடுக்கலாம் என்பதை பார்க்கலாம்.

சூரிய வணக்கம்

மார்கழி முடிந்து தை மாதம் ஆரம்பிக்கின்றது. அதாவது கோடை காலம் ஆரம்பிக்க போகின்றது. இந்நாளில் விவசாயத்திற்கு பெரும் உதவியாக இருக்கும் சூரிய பகவானுக்கு நன்றி கூறுவார்கள். பொங்கலன்று அதிகாலை எழுந்து மொழுகி வீட்டு முற்றத்தில் கோலமிட்டு, அதன் நடுவில் மஞ்சள் காப்பாக அணிந்த மண்பானையை வைத்து பொங்கல் வைப்பர். அதன் பிறகு தலைவாழையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி கதிரவனை வணங்கி பொங்கலிட தொடங்குவார்கள். பொங்கல் பொங்கியவுடன் ’பொங்கலோ பொங்கல்’ என்று உரக்க சொல்வார்கள். முதலில் பானையை கதிவனுக்கு படைத்துவிட்டு பிறகு குடும்பத்தாருடன் கூடி உண்பர். இந்நாளில் கதிரவனின் முக்கியத்துவத்தை குழந்தைகள் கற்றுக் கொள்வார்கள்.

இறை வழிபாடு

கிராமம் முதல் நகரம் வரை இந்நாள் இறைவழிப்பாட்டுக்கான சிறந்த நாட்கள். மஞ்சள் காப்பு, கரும்பு, அறிசி, காய்கறிகள், பழங்கள், சமைத்த பொங்கல் என அனைத்தையும் இறைவனுக்கு படைத்து வழிபட்டுவிடுவது தழிழர்களின் பாரம்பரியம். இன்றைய நாளில் படைப்புக்கு காரணமானவர்களுக்கும், இறைவனுக்கும் நன்றி கூற வேண்டும் என்று குழந்தைகளுக்கு கற்ருக் கொடுக்கலாம்.

மாட்டுப் பொங்கல்

நகரங்களை விட கிராமங்களில் தான் மாட்டுப்பொங்கல் விமர்சையாக கொண்டாடுவர். மாட்டை தெய்வமாக வழிபடுவது தமிழர்களின் வழக்கம். விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கு அலங்காரம் செய்து, மணி கட்டி, அதற்கு பூஜை செய்து நன்றி கூறி வழிபடுவது வழக்கம். பசுமாடுகளுக்கும், காளை மாடுகளுக்கும் வழிபடுவது மூலம் தீய சக்திகளிடமிருந்து குடும்பத்தை காக்கும் என்பது நம்பிக்கை. இந்நாளில் குழந்தைகள் ஒற்றுமையையும், கால்நடைகளுக்கு நன்றி கூறுவதையும் கற்றுக் கொள்வார்கள்.

விவசாயம்

உழைப்பின் அருமையை குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்ல சிறந்த தருணம் இது தான். நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவும் எங்கிருந்து வருகிறது, அதற்கு யாரெல்லாம் உதவியாக இருக்கிறார்கள் என்பதை குழந்தைகளுக்கு இந்நாளில் சொல்லலாம். உழைத்தால் தான் சோறு, உழைப்பே உயர்வு என்ற நீதியை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள்.

கணுப்பொங்கல்

காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். பெண்களுக்கு முக்கியமான பண்டிகை. அண்ணனிடம் ஆசி பெறுவார்கள். ஜல்லிக்கட்டு, ரேக்லா ரேஸ், உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் போன்ற பல்வேறு போட்டிகள் நடக்கும். இந்த மாதிரி பண்டிகை நாட்களில் குழந்தைகளுக்கு அனைவருக்கும் மரியாதை செலுத்துவதை கற்றுக் கொள்வார்கள்.

பஞ்சபூதங்களுக்கும் நன்றி

பொங்கல் விழா நாட்கள் மூலம் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என பஞ்சபூதங்களுக்கும் நன்றி செலுத்துகிறோம். இந்த விழா காலங்களில் பஞ்சபூதங்களின் பங்களிப்பும் பெரிதளவில் இருக்கின்றது. குழந்தைகளுக்கு பஞ்சபூதங்களையும் பற்றியும், அதன் பங்களிப்பையு எடுத்துரைக்கலாம்.

புத்தாடை அணிந்து டிவியின் முன்பு பொழுதைக் கழிக்கும் நாட்கள் கிடையாது பொங்கல் பண்டிகை தினங்கள். பண்பாடும், பாரம்பரியமும், நன்றி செலுத்துவதும், புதுமையாய் மாறுவதும், அனைவருக்கும் மரியாதை செலுத்துவதும், உற்றார் உறவினரை உபசரிப்பதும், தமிழர்களின் வீர விளையாட்டுகளை நிலைநாட்டுவதும், கால்நடைகளுக்கு நன்றி கூறுவதும், இறை வழிபாடும் நிறைந்தது தான் இந்த பொங்கல் விழாக்காலம். இந்த நான்கு தினங்களும் குழந்தைகள் வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை விஷயங்களை கற்றுக் கொள்கிறார்கள். இவைகளை கற்றுக் கொடுக்கும் சூழ்நிலையை குழந்தைகளுக்கு பெற்றோர்கள் நாமே உருவாக்கித் தர முடியும்.

இந்த பொங்கல் தினங்களை குடும்பத்தோடு இனிமையாய் கொண்டாடுங்கள். பொங்கள் தின நல்வாழ்த்துக்கள்.

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

  • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}