• உள்நுழை
 • |
 • பதிவு
பெற்றோர் கல்வி மற்றும் கற்றல்

முன் KG RTE 2019 தமிழ்நாடு பள்ளி சேர்க்கை

Radha Shri
1 முதல் 3 வயது

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Dec 27, 2018

 KG RTE 2019
நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

சென்னையில் பொதுவாக பெற்றோர்களின் பணியிடத்தை கருத்தில் கொண்டு வசிப்பிடம் தேர்வு செய்யும் நிலை மாறி தங்கள் பிள்ளைகளின் பள்ளி எங்கு அமைகிறதோ அந்த இடத்தில் குடியேறும் சூழல் வந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் ஜனவரி மாதங்களில் இரண்டரை மூன்றரை வயதுள்ள குழந்தைகளின் ப்ரி.கே.ஜி, எல்.கி.ஜி,யில் அட்மிஷன் என பெற்றோர்களின் மனதில் பல கேள்விகள், குழப்பம் , நெருக்கடிகளை தரும் மாதமாக அமைகிறது. குழந்தைகளுக்கு இரண்டு வயது தொடங்கியதுமே பள்ளி அட்மிஷன் பற்றிய பேச்சு தொடங்கிவிடுகிறது, உற்றார் உறவினர் என அனைவரும் பள்ளி பற்றிய தகவல்களையும் கேள்விகளையும் தொடுக்க தொடங்கிவிடுவார்கள்.

நல்ல கல்வி சூழலை அமைத்து கொடுக்க பிறந்தது முதலே மிகுந்த கவனத்துடன் பள்ளிகளை பற்றி விசாரிக்க தொடங்குகின்றனர். விண்ணப்ப படிவம் விநியோகம், அட்மிஷன் செயல்முறை, பள்ளியை தேர்வு செய்வதற்கான திட்டமிடல் போன்ற தகவல்களை இந்த பதிவின் மூலம் நீங்கள் பெறலாம்.

தமிழ்நாடு விண்ணப்ப படிவம் விநியோகம் 2019

ப்ரி.கே.ஜி., எல்.கே.ஜி வகுப்பில் சேர முதல் அடி, அதற்கான விண்ணப்பப் படிவத்தை அந்தந்த பள்ளியில் வாங்கி பூர்த்தி செய்வதுதான்.2019-2020 வருடத்திற்கான பள்ளி சேர்க்கை விண்ணப்பங்கள்  டிசம்பர் மாதத்திலேயே பெரும்பாலான பள்ளிகளில் விநியோகிக்க தொடங்கியது.

அட்மிஷன் தேதிகள் பற்றிய விவரம்

2019-20 ஆண்டுக்கான நர்சரி பள்ளி அட்மிஷன் தகவல்கள் இணையத்தளத்தில் வெளிவரத் தொடங்கிவிட்டது.

பெரும்பாலான பள்ளிகளில் டிசம்பர் மாதம் விண்ணப்ப படிவம் பெற்றுக் கொள்ளலாம். ஜனவரிக்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். ஜனவரி அல்லது பிப்ரவரியில் தேர்வுக்கான நேர்காணல் நடைபெறுகிறது. சில பள்ளிகளில் டிசம்பர் மாதமே விணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க சொல்கிறார்கள். மொத்தத்தில் பிப்ரவரி மாதத்திற்கு அனைத்து அட்மிஷன் செயல்பாடுகளும் நிறைவடைந்துவிடும்.

 

ஒவ்வொரு பள்ளிக்கும் வித்தியாசப்படும் வயது அடிப்படை

2019 ஏப்ரல், மே மற்றும் ஜூனில் ப்ரீ-ஸ்கூல் சேர வேண்டும் என்றால் உங்கள் குழந்தையின் வயது 2 அல்லது 2 வருடம் 6 மாதம், LKG என்றால் 3 அல்லது 3 வருடம் 6 மாதம், சில பள்ளிகள் 4 வயது என்கிறார்கள். ஒவ்வொரு பள்ளியிலும் நர்சரி வகுப்புகளுக்கென்று சில வயது வரம்புகளை நிர்ணயித்திருக்கிறார்கள்.

இப்போதே பள்ளிகளை தேர்வு செய்து அதற்கான விஷயங்களை மேற்கொண்டால் தான் பெற்றோர்களுக்கு தெளிவு கிடைக்கும். மேலும் எதிர்பார்த்த பள்ளியில் சீட் கிடைக்கவில்லை என்றாலும் மற்ற பள்ளிகளை தேட அவகாசம் இருக்கும். இல்லையென்றால் இறுதியில் கிடைக்கும் பள்ளியில் சேர்க்கும் நிலை ஏற்படும்.

உங்கள் குழந்தைக்கான சரியான பள்ளியைத் தேர்ந்தெடுக்க என்னென்ன விஷயங்களை கவனித்தில் கொள்ள வேண்டும் ? எவ்வாறு அதை திட்டமிட வேண்டும் என்பதற்கான வழிகளை தெரிந்து கொள்வோம்.

உங்கள் இருப்பிடத்தை அருகாமையில் உள்ள பள்ளிகளை ஆன்லைனில் பார்த்து பட்டியலிடுங்கள். நிறைய பள்ளிகள் நுழைவு படிவங்களை கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். அணைத்து பள்ளிகளிலும் படிவம் வாங்கி பணத்தை வீணடிக்காமல்  நீங்க சேர்க்க விரும்பும் பள்ளிகளில் மட்டுமே படிவங்களை வாங்குவது சிறந்தது,

ஒவ்வொரு பள்ளியும் ப்ரி.கே.ஜி., எல்.கே.ஜி வகுப்பில் சேர வயது வரம்பை வைத்துள்ளனர் ஆகையால் உங்கள் குழந்தையின் வயது, திறன், தூரம், கட்டணம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு பள்ளியை தீர்மானியுங்கள்.

பொதுவாக நர்சரி பள்ளிகளுக்கான சேர்க்கை படிவங்கள் டிசம்பர் மாதம் விநியோகிக்க தொடங்குவார்கள், ஜனவரியில் படிவங்களை பள்ளிகளில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுவார்கள், பிப்ரவரி மாதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு அட்மிஷனுக்கு பெற்றோர்கள் அழைக்கப்படுவார்கள்.

எந்தக் கல்விமுறையில் சேர்க்க விரும்புகிறீர்கள் என்பதை திட்டமிட்டுக் கொள்ளுங்கள். ப்ளே-வே கல்விமுறை, மாண்டிசோரி, வால்டார்ஃப் கல்விமுறை, ரெஜியோ எமிலியோ கல்விமுறை போன்ற பல்வெறு கல்விமுறைகள் இருக்கின்றது. தற்போது  சில அரசு பள்ளிகள் கூட ஆரம்ப பள்ளிகளுக்குத் தேவையான ப்ளே-வே முறை வசதிகளுடன் சிறப்பாக இயங்கி வருகிறார்கள்.

பல  பள்ளிகளில் டோனேஷன் கட்டணம் கேட்கிறார்கள். ப்ரீ- ஸ்கூலுக்கு பிறகு அதே பள்ளியில் தொடர்ந்து படிக்கப் போகிறர்களா அல்லது வேறு பள்ளிக்கு அனுப்பப் போகிறீர்களா என்பதை திட்டமிடுங்கள். பெரிய பள்ளிகளில் டோனேஷனை கட்டிவிட்டு பிறகு பள்ளியை மாற்ற நினைக்கும் போது சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு

பள்ளியை பற்றி அங்கு படிக்கும் குழந்தைகளின் பெற்றோரிடமும் அப்பள்ளி ஆசிரியரிடமும் அவர்களது அணுகுமுறை,பாதுகாப்பு, தனித்தன்மை என பள்ளியை பற்றிய அணைத்து விஷயங்களையும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

சிறிய குழந்தைகள் என்பதால் ஒவ்வொரு குழந்தைக்கும்  அதிக கவனிப்பு தேவைப்படும் ஆகையால் பள்ளியில் ஆசிரியர் -குழந்தை விகிதாசச்சாரத்தை தெரிந்து கொள்ளவேண்டும், 2 அல்லது 3 வயது குழந்தைகள் என்றால் ஒரு ஆசிரியருக்கு 6 குழந்தைகள் என்பது சரியான விகிதாச்சாரம். அதுவே 4 அல்லது 5 வயது குழந்தைகள் என்றால் 8 குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் விகிதம் சரியானது என்கிறார்கள் கல்வி நிபுணர்கள்.

டொனேஷன்

பெரும்பாலான பள்ளிகளில் டொனேஷன் கேட்கின்றார்கள். சென்னையை பொறுத்தவை விரல்விட்டு எண்ணக்கூடிய பள்ளிகளிலேயே டொனேஷன் கேட்பதில்லை. சுமார் 50 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை நீள்கிறது இந்த தொகை.

தேவையான ஆவணங்கள்

 • பெற்றோர் ஒருவரின் ஆதார் அட்டை
 • குடியிருப்புக்கான ஆதாரம் தேவை. தொலைபேசி பில், EB பில், ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவற்றைக் கொண்டிருக்கலாம்.
 • விண்ணப்பதாரரின் பிறப்பு சான்றிதழ் மிகவும் முக்கியமானது.
 • விண்ணப்பதாரரின் புகைப்படம்
 • ஜாதி சான்றிதழ் கேட்கிறார்கள்.
 • சில பள்ளிகளில் மருத்துவ சான்றிதழ்கள் கேட்கப்படுகின்றன.

நர்சரி அட்மிஷனுக்கான தற்காலிக தேதிகள்

விண்ணப்பம் விநியோகம் – டிசம்பர்/ ஜனவரி

சேர்க்கை படிவத்தை நிரப்புவதற்கான ஆன்லைன் மற்றும் நேரடியாக செல்வது – ஜனவரி

ஆன்லைன் படிவத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி – ஜனவரி இறுதியில் மற்றும் பிப்ரவரி.

தேர்வு – பிப்ரவரி இறுதியில் மற்றும் மார்ச்

இந்த தேதிகள் ஒவ்வொரு பள்ளிகளுக்கும் மாறுபடலாம். விண்ணப்பதை பெறும் போதே ஆன்லைன் படிவத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி மற்றும் தேர்வு நடைபெறும் தேதிகளை அறிந்து குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.

நர்சரி அட்மிஷனில் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள்

 • தேர்ந்தெடுக்கும் பள்ளிகளின் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளுங்கள். ஆன்லைன் மற்றும் நேராக என இருமுறைகளிலும் படிவத்தை நிரப்பிக் கொள்ளலாம். ஆன்லைனில் ஏதாவது பிழை நேர்ந்தால் பள்ளியை தொடர் கொள்ள தயங்காதீர்கள்.
 • படிவத்தை நிரப்பிய பிறகு தொடர்ந்து பள்ளியின் அறிக்கைகளை பின்தொடருங்கள். சில பள்ளிகளில் ரெஜிஸ்ட்ர்டு போஸ்ட் அனுப்புவார்கள். சில பள்ளிகளில் இ-மெயில் அனுப்புவார்கள். சில பள்ளிகளில் நேரில் வர சொல்லுவார்கள். இந்த விஷயத்தில் தொடர்ந்து உங்களை அப்டேட் செய்து கொள்ளுங்கள்.
  ஆன்லைனில் விண்ணப்பதாரர் விவரங்களைப் பெற்றுக்கொள்ள பிழைகள் இருந்தால் கணினியால் நிராகரிக்கப்படலாம். சிறந்த பள்ளிகளுக்கான விண்ணப்பம் சம்ர்பிக்கும் தேதியை சரியான நேரத்தில் கவனமாக சமர்பிக்கவும்.
 • பள்ளியில் கேட்கப்படும் ஆவணங்களை இரண்டு மூன்று நகல் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். கடைசி நேர பரபரப்பில் ஏதாவது ஒன்றை மறக்க வாய்ப்பிருக்கிறது. ஆவணங்களை ஒவ்வொரு பள்ளிப் படிவத்தோடும் இணைத்து தனித்தனி கவரில் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.

 

உங்கள் குழந்தையை நீங்கள் நினைத்த பள்ளியில் சேர்ப்பதற்கும், குழந்தைக்கு பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான சூழல் அமைய அனைத்து பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள். 

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

 • 2
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.

| Feb 26, 2019

நான் அங்கன்வாடி பணியாளராக பணிபுரிகிறேன் குழந்தைகளுக்கான எடை மற்றும் உயரத்தை பெற்றோர்களிடத்தில் அறிவித்தாலும் குழந்தைகள் அதே நிலையில் இருப்பவர்களை நான் எப்படி மேம்படுத்துவது

 • Reply
 • அறிக்கை

| Mar 21, 2019

nye7ra

 • Reply
 • அறிக்கை
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த பெற்றோர் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}