• உள்நுழை
  • |
  • பதிவு
உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்

தாய்ப்பாலின் முக்கியத்துவங்கள் என்னென்ன ?

Parentune Support
0 முதல் 1 வயது

Parentune Support ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Aug 01, 2019

தாய்ப்பாலின் முக்கியத்துவங்கள் என்னென்ன ?

 

ஆகஸ்ட் 1 முதல் 7 வரை உலக தாய்ப்பால் வாரமா அனுசரிக்கப்படுது. தாய்பாலோட முக்கியத்துவத்தை எல்லோருக்கும் புரிய வைக்குறது தான் இதோட நோக்கமே.

தாய்ப்பால் கொடுக்கிறது குழந்தைகளுக்கு மட்டுமில்லாம, கொடுக்கிற தாய்மார்களுக்கும் மிகவும் நல்லது. தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய், கருப்பை புற்றுநோய், நீரிழிவு நோய், இதயக் கோளாறு இது போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

ஏறத்தாழ 30% பெண்கள் மட்டுமே தாய்ப்பால் கொடுக்கிறாங்கன்னு ஒரு சர்வே சொல்லுது. ஒரு சில பெண்கள் தாய்ப்பால் கொடுக்க முடியாத சூழ்நிலையால கொடுக்கிறதில்லை சிலர் தேவையில்லாத காரணங்களுக்காக தாய்ப்பால் கொடுக்கிறதை தவிர்க்கிறாங்க.

தாய்ப்பால் கொடுப்பது குழந்தை மற்றும் தாய் இருவருக்கும் நன்மைகளை மட்டுமே தரும். தாய்ப்பாலின் கொடுப்பதால ஏற்படக்கூடிய நன்மைகள் மற்றும் தாய்ப்பாலின் முக்கியத்துவம் என்ன என்பதை இப்போ நாம பார்ப்போம்:

குழந்தைகளுக்கான நன்மைகள்:

தாய்ப்பால் குழந்தையின் முதல் உணவு. தாய்ப்பால்ல குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் சரியான அளவில இருக்கிறதால சுலபமா செரிமானம் ஆகும். 6 மாதங்களுக்கு மேல வேற உணவுகள் கொடுக்க ஆரம்பிச்சாலும் குறைந்தது ஒரு வருடத்திற்காவது தாய்ப்பால் கொடுக்கிறது குழந்தைக்கு ரொம்ப நல்லது. குழந்தையோட முதல் ஆறு மாதங்களுக்குத் தேவையான எல்லா சத்துக்களுமே சரியான அளவுல தாய்ப்பால்ல இருக்கு. குழந்தையோட வளர்ச்சி மாறுதலுக்கு ஏற்ப தாய்ப்பாலோட கலவையும் மாறி அவங்களுக்கு தேவையான சத்துக்களை தருது.

தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கு. குறிப்பாக குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய நோய்களை எதிர்த்துப் போராட உதவுற இம்யூனோகுளோபுலின் ஏ அப்படிங்கிற நோய் எதிர்ப்பு புரதம் தாய்ப்பால்ல இருக்கு. இதனால் குழந்தைகள் நோய்த் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பா இருக்க தாய்ப்பால் உதவியா இருக்கு.

தாய்ப்பால் குழந்தைகளை நோய்த்தொற்று அதாவது இன்ஃபெக்‌ஷன்ஸ்ல இருந்து பாதுகாக்கிறது. குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய சளித் தொந்தரவு, சுவாசப் பிரச்னைகள், அலர்ஜி, சர்க்கரை நோய், லுகேமியா இது போன்ற நோய்கள்ல இருந்து தாய்ப்பால் குழந்தைகளை பாதுகாக்குது.

தாய்ப்பால் குடிக்கிற குழந்தைங்க தங்களோட உணவு எடுத்துக் கொள்ளும் முறைய அவங்களே தீர்மானிக்கிறாங்க. அவங்க வயிறு நிரம்புற வரைக்கும் தான் அவங்க தாய்ப்பால் குடிப்பாங்க. தாய்ப்பால் குடிக்கிற குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்னைகள் வர்றது ரொம்ப குறைவு. ஏன்னா கொழுப்பைக் கட்டுப்படுத்துற லெப்டின் தாய்ப்பால் குடிக்கிற குழந்தைகளுக்கு அதிகமா சுரக்கும். அது மட்டும் இல்லாம தாய்ப்பால்ல நன்மை செய்ற பாக்டீரியாக்கள் இருக்கு.

தாய்ப்பால் குழந்தைகளோட மூளை வளர்ச்சிக்கு ரொம்ப அவசியமானது. தாய்ப்பால் குடிக்கிற குழந்தைகளுக்கு பின்னாடி கற்றல் குறைபாடு போன்ற பிரச்னைகள் வர்றது ரொம்ப குறைவு.

தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களுக்கு கிடைக்கும் நன்மைகள் :

தாய்ப்பால் கொடுக்கும்போது பெண்களுக்கு எடை கூடவோ அல்லது குறையவோ செய்யலாம். குழந்தை பிறந்த முதல் மூணு மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுக்கிற பெண்களோட எடை கொஞ்சம் அதிகரிக்கலாம். ஏன்னா தாய்ப்பால் கொடுக்கும்போது அவங்களுக்கு அதிக அளவு எனர்ஜி தேவைப்படும். அதனால நிறைய ஹார்மோன் மாற்றங்கள் இருக்கும். அதனால நிறைய பசி எடுக்கும். அப்போ கண்டிப்பா எடை அதிகரிக்கும். ஆனா மூணு மாதங்களுக்குப் பிறகு அவங்களோட எடை குறைய ஆரம்பிக்கும். அதுவே தாய்ப்பால் கொடுக்காதவங்களுக்கு எடை குறையாது.

கர்ப்ப காலத்தின் போது கருப்பை பெரிதா விரிவடையும். பிரசவத்துக்கு அப்புறம் அது பழைய நிலைக்கு சுருங்கும். அப்படி சுருங்குவதற்கு ஆக்ஸிடோசின் அப்படிங்கிற ஹார்மோன் உதவுது. அது மட்டும் இல்லாம பிரசவத்துக்குப் பிறகு இரத்த இழப்பு ஏற்படுறதையும் ஆக்ஸிடோசின் குறைக்குது. தாய்ப்பால் கொடுக்கிறது இந்த ஆக்ஸிடோசின் சுரக்கிறதை அதிகப்படுத்துது.

தாய்ப்பால் கொடுக்கிற பெண்களுக்குப் பிரசவத்திற்கு பிறகு ஏற்படக்கூடிய மன அழுத்தம் குறையுது. தாய்ப்பால் கொடுக்கிற பெண்களுக்கு அதிக அளவுல சுரக்கிற ஆக்ஸிடோசின் மன அமைதியை கொடுக்கிறதோட, குழந்தைக்கும் தாய்க்குமான பிணைப்பை அதிகமாக்குது. தாய்ப்பால் கொடுக்காத பெண்களுக்கு இது கிடைக்காது.

குறைஞ்சது ஒரு வருஷமாவது தாய்ப்பால் கொடுக்கிற பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய், கருப்பை புற்றுநோய், இதயம் சம்பந்தமான நோய்கள் வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.

தாய்ப்பால் கொடுக்கிறதால கிடைக்கக் கூடிய நன்மைகளை தெரிஞ்சுக்கிட்டீங்க.. இதை பத்தின உங்களோட கருத்துகளை கமெண்ட் பாக்ஸ்ல சொல்லுங்க.

இந்த கட்டுரையை இன்னும் மேம்படுத்தணுமா? உங்களோட ஆலோசனைகளையும் சொல்லுங்க.

 

 

 

 

 

  • கருத்து
விளக்கக்குறிப்புகள்()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Blogs

Always looking for healthy meal ideas for your child?

Get meal plans
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}