• உள்நுழை
 • |
 • பதிவு
உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்

தமிழ்நாடு அப்டேட் – கரோனா பற்றிய செய்திகள், முன்னெச்சரிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள்

Radha Shri
3 முதல் 7 வயது

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Mar 23, 2020

நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தாக்குதலுக்கு 300000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளன, 95 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர் இதனால் சுமார் 13 ஆயிரத்து 68 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவைப் பொருத்தவரை 384 கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர் , 23 பேர் குணமடைந்துள்ளனர்,  ஐந்து பேர் இந்த அந்த வைரஸால் பலியாகியுள்ளனர். தமிழகத்தைப் பொருத்தவரை 9 பேர் கண்டறியப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு

கரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார்,  தமிழகத்தில் இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட இரண்டாவது நபர் டெல்லியைச் சேர்ந்தவர்  சோதனையில் அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.   தாய்லாந்து நியூசிலாந்து மற்றும் ஸ்பெயின் நாட்டிலிருந்து  தமிழகம் வந்த 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு அவர்களை தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

கரோனா வைரஸால் அதிக  எண்ணிக்கையில் மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு முன்னேற்பாடாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தனி வார்டுகள் , படுக்கைகள் ஒதுக்கி வைத்திருக்க வேண்டுமென்ற மத்திய அரசு உத்தரவுக்கு இணங்க தமிழகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்று பற்றிய பரிசோதனை சென்னை, தேனி ,நெல்லை, திருவாரூர், சேலம், கோவை போன்ற  பல்வேறு  நகரங்களில் உள்ள மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க 22 ஆம் தேதி சுய ஊரடங்கு   இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது. தமிழக மக்கள் கரோனா வைரஸின் தாக்கத்தை உணர்ந்து அனைவரும் வெளியே வராமல் வீட்டிலேயே இருந்து வைரஸ் பரவலைத் தடுக்கும் இந்த முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு அளித்தனர்.

தமிழக அரசு எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

பள்ளிகள்  கல்லூரிகள் 31-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது, பல்வேறு நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும்படி பணியாளர்களுக்கு உத்தரவு கொடுத்துள்ளது,  அரசு கொரோனா பாதிப்பு அதிகம் இருக்க வாய்ப்புள்ள 75 நகரங்களை பட்டியலிட்டுள்ளனர் அதில் சென்னை காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு அதில் உள்ளது. இந்த மூன்று நகரங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு மாநில அரசிற்கு பரிந்துரை செய்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து இங்கு வருவதில் தனிமைப்படுத்தப்பட்ட பயணிகள் வெளியே நடமாடினால் அவர்களது பாஸ்போர்ட் முடக்கப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மற்றும் அவர்களது வீட்டில் இவர்கள் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்பதை ”உள்ளே நுழையாதே இது தனிமைபப்டுத்தப்பட்ட வீடு”என்று நோட்டீஸ் ஒட்டப்போவதாக அறிவித்துள்ளார்கள்.

வெளிநாட்டில் கரோனா பாதிப்பு பட்டியலிடப்பட்ட நாடுகளிலிருந்து  இருந்து வந்தவர்களை உள்ளடக்கிய  3,000 வீடுகளை சென்னையில் தனிமைப்படுத்தி கண்காணிப்பில் இருந்து வருகின்றது.

நாவல் கரோனா வைரஸ் (COVID-19) என்றால் என்ன?

கடுமையான சுவாச நோய்க்குறி இருக்கும். கரோனா வைரஸ் (WHO: SARS-COV) என்பது இந்த  வைரஸுக்கு வழங்கப்பட்ட பெயர், இது சீனாவை தொடர்ந்து  உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோரை பாதித்தது மற்றும் 2003 ஆம் ஆண்டில் 700 க்கும் மேற்பட்டவர்கள் இந்த நோய்க்கு பலியாகி இருக்கிறார்கள். புதுமையான செயல்பாடுகளை கொண்ட வைரஸால் அதிகமாக   நோய்த்தொற்று ஏற்பட்டது. இதனால்  சுகாதார வல்லுநர்களுக்கு  தொற்று பரவாமல் தடுக்க சிறிது கால அவகாசம் தேவைப்பட்டது..

புதிய நோய்த்தொற்றின் அறிகுறிகள் SARS வைரஸைப் போன்ற ஒரு வடிவத்தையும் காட்டுகின்றன. இந்த வைரஸ் மனிதனுக்கு மனிதன் பரவக்கூடிய திறன் உள்ளதா என்பதிலும் எதிர்மறை கருத்துக்கள் விஞ்ஞானிகளிடம் நிலவுகிறது. nCoV / Covid-19 வௌவால்கள்  அல்லது பிற காட்டு விலங்குகளிலிருந்து தோன்றியதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதனால், இறைச்சியைத் தவிர்ப்பதும் உதவியாக இருக்கும்.

SARS-Coronavirus 2003 என்றால் என்ன?

SARS நோய்த்தொற்று காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட நோயாளிக்கு காய்ச்சல், உடல்நலக்குறைவு, தலைவலி, வயிற்றுப்போக்கு மற்றும் நடுக்கம் போன்றவை இருக்கும். இருப்பினும், இந்த அறிகுறிகளின் இருப்பு SARS நோய்த்தொற்றின் அறிகுறியாக இல்லை. கரோனா வைரஸின் குடும்பம் பொதுவாக விலங்குகளை பாதிக்கிறது மற்றும் அவற்றில் சில மனிதர்களைப் பாதிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன; SARS மற்றும் MERS (மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி). இந்த வைரஸ் குடும்பத்தின் தொற்றுநோய்களைத் தவிர்ப்பதற்கான சிறந்த வழி விலங்குகளுடன் பாதுகாப்பான தொடர்பைப்  பேணுவதாகும். ஏதேனும் விலங்குகளைத் தொட்டால் உங்கள் முகத்தையும் வாயையும் தொடும் முன் கைகளை நன்கு கழுவுங்கள் .

கரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?

பாதுகாப்பாக இருக்க நீங்கள் முதலில் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் நோய் மற்றும் வதந்தி இரண்டிற்கும் பலியாகாமல் இருக்க வேண்டும். இந்த வகையான நோய்த்தொற்றுக்கு எதிரான சிறந்த பாதுகாப்பு நடவடிக்கை ஏற்கனவே பாதிக்கப்பட்ட நோயாளிகளிடமிருந்து  விலகி இருப்பதாகும் . எடுத்துக்காட்டாக, பொது இடங்களில், போக்குவரத்தில் பயணம் செய்யும் போது பாதுகாப்பு சுவாச முகமூடிகளைப் பயன்படுத்துவது நல்லது.

பிற முன்னெச்சரிக்கைகள் பின்வருமாறு:

 • மீன்கள் கடல் உணவு மற்றும் அசைவத்தைத் தவிர்க்கவும்
 • வீட்டை சுத்தமாக வைப்பதை உறுதிசெய்யவும்.  நீங்கள் வெளியில் இருந்து கொண்டு வரும் எதையும் கழுவி  சுத்தம் செய்து பயன்படுத்துவது சிறந்தது.
 • அடிக்கடி  சோப்பு மற்றும் தண்ணீரில் உங்கள் கைகளை தவறாமல் கழுவுதல் வேண்டும்
 • காய்ச்சல், இருமல், தும்மல், சளி  போன்ற அறிகுறிகளைக் காட்டும் நபர்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்கவும்
 • குழந்தைகளுக்கு சுத்தமான துண்டுகள் மற்றும் துடைப்பான்களை மட்டுமே பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
 • குழந்தைகள் வெளியில் அதிகமாக விளையாட அனுப்பாமல் வீட்டிலேயே அவர்களை ஏதாவது நடவடிக்கைகளில் ஈடுப்படுத்துங்கள்.
 • கூட்டமாக சேர்ந்து இருக்கும் தருணங்களை  தவிர்க்கவும்.
 • விரைவான பயன்பாட்டிற்கு சானிடைசரை  உபயோகப்படுத்துங்கள்.

கரோனா உதவி எண்கள்

மத்திய உதவி எண்: + 91-11-23978043

தமிழ்நாடு எண்: 044-29510500

மின்னஞ்சல்: ncov2019@gmail.com

கரோனா பரிசோதனை ஆய்வகங்கள்

 1. கிங் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் - சென்னை 
 2. மருத்துவ கல்லூரி மருத்துவமனை – தேனி
 3. அரசு மருத்துவமனை - கோவை
 4. வைரஸ் ஆராய்ச்சி ஆய்வகம், திருநெல்வேலி மருத்துவ கல்லூரி
 5. பெருந்துறை மருத்துவமனை - ஈரோடு மாவட்டம்
 6. மற்றும் திருவாரூர், சேலம் ஆகிய ஊர்களிலும் பரிசோதனை ஆய்வகங்கள் அமைந்துள்ளன.

நாவல் கரோனா வைரஸ் சிகிச்சை முன்னெச்சரிக்கைகள்

 கரோனா வைரஸுக்கு (கோவிட் 2019) என்ன சிகிச்சை? NCoV என்பது முற்றிலும் புதிய வைரஸ் மற்றும் இன்னும் ஆய்வின் கீழ் உள்ளது. NCoV க்கு  தடுப்பூசி கண்டுபிடிக்க வில்லை  என்றாலும், தனிப்பட்ட அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க முடியும். காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவரை அணுகுமாறு பரிந்துரைக்கப்படுகிறது. முடிந்தவரை இதன் அறிகுறிகள் தெரிந்தால் உடனே சிகிச்சை மேற்கொண்டு குணப்படுத்துவதன் மூலம் நீங்கள் நலம் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பரவாமல் தடுக்கலாம்.

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

 • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}