• உள்நுழை
  • |
  • பதிவு
பெற்றோர் கல்வி மற்றும் கற்றல்

உங்கள் குழந்தைகளை டென்ஷன் இல்லாமல் பள்ளிக்கு அனுப்பும் டிப்ஸ்

Parentune Support
1 முதல் 3 வயது

Parentune Support ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Mar 14, 2022

இன்றைய சூழல்ல காலையில அம்மாக்களோட பெரிய டாஸ்க் குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்பறது தான். காலையில  எழுந்ததும் ப்ரேக்ஃபாஸ்ட் தயார் பண்ணனும், லன்ச் பேக் பண்ணனும், இது எல்லாத்துக்கும் மேல குழந்தைய எழுப்பி ரெடி பண்ணி ஸ்கூலுக்கு அனுப்பறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடும். அதுலயும் ஒரு சில குழந்தைங்க ஸ்கூலுக்கு போறதுக்கு அடம் பிடிக்கும். அவங்கள சமாதானப் படுத்தி கொண்டு போய் ஸ்கூல்ல விட்டு வர்றதுங்கிறது சாதாரணமான விஷயம் கிடையாது. இதனால பெரும்பாலான அம்மாக்கள் காலை நேரத்துல ரொம்ப டென்ஷனோட இயங்கிட்டு இருப்பாங்க.

அம்மாக்கள் மட்டுமில்லா அப்பாக்களும் ஆஃபிஸுக்கு கிளம்பிகிட்டே குழந்தையையும் ஸ்கூலுக்கு போக தயார் செய்யும் போது டென்ஷன் ஆகிடுறாங்க. எதுக்கு டென்ஷன், இந்த டென்ஷனை எப்படி குறைக்கலாம்ங்கிறத பத்தி இப்போ நாம பார்க்கலாம்.

வேலைக்கு போற அம்மாக்களா இருந்தாலும் சரி; வீட்டை நிர்வாகம் பண்ற ஹோம் மேக்கரா இருந்தாலும் சரி, முதல் நாள் இராத்திரியே அவங்களோட குழந்தை கிட்ட அன்றைய தினம் ஸ்கூல்ல நடந்த விஷயங்களை கேட்கணும். அதுக்கு அப்புறம் நாளைக்கு ஸ்கூலுக்கு போகணும், புது விஷயங்களை தினமும் கத்துக்கணும் அப்படினு பாஸிட்டிவா சொல்லணும்.

அதே மாதிரி லன்ச் க்கு என்ன வேணும்ங்கிறத குழந்தை கிட்டேயே கேட்டு, அம்மா நாளைக்கு உனக்கு பிடித்த லன்ச் செய்து தரேன்னு சொல்லி நாளைக்கு நாம பள்ளிக்கு போகணும்ங்கிறத முதல் நாளே குழந்தைகளோட மனசுல பதியவச்சுடணும். அப்போ தான் காலையில எழுந்து ஸ்கூலுக்கு போக மாட்டேன்னு குழந்தைங்க அடம்பிடிக்க மாட்டாங்க.. அதுவே பெற்றோர்களுக்கு ஒரு பெரிய டென்ஷனை குறைக்கும்.

குழந்தைகளோட ஹோம் ஒர்க் முடிச்சதும், அப்பாக்கள் அவர்களோட பேக்கை இராத்திரியே அடுக்கி வச்சிடணும். இல்லைன்னா காலையில இந்த புக்கை காணோம், பென்சில் பாக்ஸ் காணோம்ங்கிற பல்வேறு டென்ஷன்கள் வரும். முதல் நாளே இப்படி செய்றதால இந்த மாதிரியான டென்ஷனை நாம அவாய்ட் பண்ணலாம்.

பெற்றோர்கள் காலையில் யார் எந்த வேலையை செய்றதுன்னு அவங்களுக்குள்ள பேசி முடிவெடுத்துட்டா மறுநாள் ஒரே வேலைக்கு ரெண்டு பேரும் ஓட வேண்டிய அவசியம் இருக்காது. குறிப்பாக ரெண்டு பேரும் வேலைக்கு போகும் பட்சத்தில் ஆளுக்கு ஒரு வேலையை பிரிச்சு செஞ்சா தான் டென்ஷன் இல்லாம காலை நேரத்தை சுமூகமா கடக்க முடியும்.

காலையில எல்லா வேலையையும் நாம செய்யுறது ரொம்ப கஷ்டம். முதல் நாளே நாளைக்கு என்ன பிரேக் ஃபாஸ்ட், என்ன லன்ச் செய்யப்போறோம்ங்கிறதை  முடிவு பண்ணி அதற்கு தேவையான எல்லா விஷயங்களையும் முதல் நாளே ரெடி பண்ணிட்டா காலையில பெரும்பாலான வேலை குறையும். குழந்தையை கிளப்புறதுல அதிகமான நேரத்தை செலவிட முடியும்.

பெற்றோர்கள் வேலைகளை சரியாக பிரித்து செய்றதும், குழந்தைகளுக்கு பிடித்த அதே சமயம் ஆரோக்கியமான உணவுகளை செஞ்சு கொடுத்து ஸ்கூலுக்குப் போற ஆர்வத்தை நாம அவங்களுக்கு கொண்டு வந்துட்டா காலை நேரங்கள்ல பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் இருவருக்கும் டென்ஷனே இல்லாம இருக்கும். 

  • 2
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.

| Aug 12, 2019

He s not showing interest in studies

  • Reply
  • அறிக்கை

| Nov 08, 2020

@ NM

  • Reply
  • அறிக்கை
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த பெற்றோர் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}