• உள்நுழை
  • |
  • பதிவு
உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் உணவு மற்றும் ஊட்டச்சத்து

பிரசவத்திற்கு பிறகு அதிகரிக்கும் எடையை குறைக்க - இந்த மாதிரி சாப்பிடுங்க

Radha Shri
0 முதல் 1 வயது

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Mar 13, 2021

பெண்களுக்கு சவாலை ஏற்படுத்துற விஷயங்கள்ல இதுவும் ஒன்று. பிரசவத்திற்கு பிறகு என்னுடைய உடல் எடையை எப்படி குறைப்பது, முக்கியமாக வயிற்றுப் பகுதிகளில் ஏற்படும் சதையை குறைப்பது பற்றி அதிக கவலை கொள்வதுண்டு. மறுபடியும் எனக்கு விருப்பமான ஆடைகளை போட முடியுமான்னு பல கேள்விகள் மனசுக்குள் வரும். பிரசவத்திற்கு பிறகு வயீறு மட்டும் பெரிசாகறதில்லை. உடல் எடை மொத்தமும் அதிகரிக்கிறது என்பதே உண்மை. கவலை வேண்டாம் அம்மாக்களே.. விடாமுயற்சியும், உணவில் கவனமும், உடற்பயிற்சியும் இருந்தால் நிச்சயமாக இது சாத்தியம்.

பிரசவத்திற்கு பிறகு உங்களுடைய உடலுக்கு நிறைய ஓய்வும் பரிபூர்ண குணமும் தேவை.அதனால் சில வாரங்கள் கழித்து பயிற்சிகளை தொடங்கலாம்.  சுகப்பிரசவம் ஆனவர்கள், பிரசவத்திற்கு பிறகு சில வாரங்கள் கழித்து மிதமான உடற்பயிற்சிகள் அதாவது நடைபயிற்சி, வயிறு மற்றும் இடுப்புப் பகுதிகள் இறுகச் செய்யும் பயிற்சிகளை செய்யலாம். ஆனால் அறுவை சிகிச்சை செய்தவர்கள் உடற்பயிற்சி 6 முதல் 8 வாரங்கள் கழித்து தான் ஆரம்பிக்க வேண்டும். அதுவும் மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகு தொடங்கவும்.

உணவுப்பழக்கத்தை திட்டமிடுங்க

ஏற்கனவே, கர்ப்ப காலத்துல இரண்டு பேருக்கு சேர்த்து சாப்பிடனும்னு சொல்லி எடையை  ஏத்தி இருப்பாங்க நம்ம பாசக்கார அம்மாக்கள். பிரசவத்திற்கு பிறகு தாய்ப்பால் கொடுப்பதால நிறைய சாப்பிட சொல்லுவாங்க. அதனால் எடை மேலும் அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கு. என்னென்ன உணவுப்பழத்தை கடைபிடிச்சா எடையை குறைக்கலாம்னு பார்க்கலாம்.

காலை உணவு - இட்லி, தோசை, பொங்கல் சாம்பார், வடை என்று பட்டியலை அடுக்காமல் காய்கறி மற்றும் பழங்களை தேர்வு செய்து சாப்பிடுங்கள். பழ சாலட், காய்கரி சாலட் அல்லது இட்லி என்றால் இரண்டு மற்றும் அதனோடு காய்கறிகள், பழங்கள். கூழ் ஆகாரம், கஞ்சி அன இப்படி மாற்றிக் கொள்ளுங்கள்.

மதிய உணவு – சாதம் பாதி அளவாக குறைத்துவிட்டு, வேக வைத்த பயிறுகள், பொரியல், பழங்கள் இவைகளை பாதியாக ஒவ்வொரு நாளும் விதவிதமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

இரவு உணவு – எளிதாக செரிக்கக்கூடிய உணவாக சாபிடுங்கள். உங்களுக்கும் உங்க குழந்தைக்கும் எந்த வித வயிற்றுப்பிரச்சனையும் வாராமல் இருக்கும். ரசம் சாதம், இட்லி, இடியாப்பம் போன்ற வகைகளை எடுக்கலாம்.

சுரைக்காய் – உங்களுக்கு பிடித்த மாதிரி சமைத்து சாப்பிடுங்கள். அதிகப்படியான கொழுப்பை குறைக்க இது உதவுகின்றது.

கொள்ளு – தேவையற்ற கொழுப்புகளை கரைப்பதில் கொள்ளு முக்கிய பங்கு வகிக்கின்றது. அதே போல் அதிக சக்தி கொடுக்ககூடிய பலன்களுக் இதில் உள்ளது. அதனால் இதை ரசமாகவோ, கஞ்சியாக எடுத்துக் கொள்ளலாம்.

எழுமிச்சை/தேன் கலந்த தேநீர் - ஒரு கிளாஸ் தண்ணீரில், எலுமிச்சை சாறு மற்றும் ஒரு தேன் சேர்க்கவும். அதை கலந்து ஒவ்வொரு நாளும் காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இது நச்சுத்தன்மையையும் உடலில் இருந்து கொழுப்பையும் கரைக்க உதவும்.

இலங்கப்பட்டை தேநீர் – இரவு தூங்குவதற்கு முன் அல்லது காலை உணவுக்கு முன் இதை நீங்கள் அருந்தலாம். அரை டீஸ் ஸ்பூன் பட்டை எடுத்து சுடு தண்ணீர்ல் கலந்து அதிக கொதிக்கவிடாமல், இனிப்பு சேர்க்காமல் அருந்தினால் இன்னும் நல்லது.

கீரீன் டீ: தினமும் குடிப்பதன் மூலம் உங்கள் காபி, டீயை சிக்கிரமே மறந்திடுவீங்க. அந்த அளவுக்கு உங்கள் உடல்ல நடக்கிற மாற்றத்தை நீங்க பார்ப்பீங்க. கொழுப்பை குறைப்பதோடு ஆரோக்கியத்தையும் மேபடுத்த உதவுது.

முட்டைக்கோஸ்: முட்டைக்கோசு சாப்பிடுவது தொப்பை கொழுப்பைக் குறைக்க உதவுகிறது மற்றும் உங்கள் வளர்சிதை மாற்றத்திற்கு ஒரு ஊக்கத்தை அளிக்கிறது, இதனால் உங்கள் உடல் எந்த கொழுப்பும் சேராமல் உணவை எளிதில் ஜீரணிக்கும்.

சிறுதானியங்கள் - நம்முடைய உணவுகள்ல மிக சிறந்தது சிறுதானிய வகைகள். உடல் எடையும் அதிகரிக்காது, அதே நேரம் ஆரோக்கியத்தையும் தக்க வச்சுக்க முடியும்.

பயிறு வகைகள் - காலை உணவோட ஏதாவது ஒரு பயிறு வகையை தினமும் சாப்பிடலாம். பச்சைப் பயிறு, கருப்பு கொண்டைக்கடலை வேகவைத்தோ அல்லது முளைகட்டியோ சாப்பிடலாம். 

தவிர்க்க வேண்டியது

பால் – தாய்ப்பால் கொடுப்பதால் பால் அதிகம் குடிக்க வேண்டும் என்று அவசியமில்லை. பால் கால்சியம் சத்துக்காக குடிக்க சொல்கிறார்கள். கால்சியம் சத்துள்ள காய்கறிகளும், பழங்களும் இதற்கு பதிலாக சாப்பிடலாம். பால் சேர்த்துக் கொள்வதை குறைத்துக் கொள்ளலாம்.

சர்க்கரை – இனிப்பு திண்பண்டங்களை தவிர்க்கவும்: இது கலோரிகளை கட்டுக்குள் வைத்திருக்கவும், வீட்டில்  அடிக்கடி நொறுத்தீனி சாப்பிடுவதையும் தவிர்க்கவும் உதவும்.

எண்ணெய்யில் பொறித்தது – காய்கறிகளை எண்ணெய்யில் பொறித்து சாப்பிடுவதை தவிர்க்கவும். அதற்கு பதிலாக பொரியல் அல்லது சூப் மாதிரி சமைத்து சாப்பிடலாம்.

மன அழுத்தத்தை குறைக்கவும்

மன அழுத்தம் அதிகமானாலும் எடை கூடும். அதனால் முடிந்தவரையில் உங்களை ஈடுபாடாக வைத்திருங்கள். குழந்தையோடு நேரத்தை சந்தோஷமாக கழியுங்கள். உங்களை சமநிலையாக வைதிருக்க முயற்சி செய்யவும்.

உடற்பயிற்சி

உங்கள் வீட்டில் சில எளிதான வயிற்றுப் பகுதிகளுக்கான பயிற்சிகளில் ஈடுபடுங்கள். நடைபயிற்சி, சிட்-அப்கள், யோகா போன்றவை வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பை குறைக்கும் பயிற்சிகள் அதிக நன்மை தரும். உடல் தயாராக இருப்பதாக நீங்கள் உணரும்போது அதிகரிக்கவும். உடலை வருத்திக் கொள்ள வேண்டாம்.

சரியான உணவுப்பழக்கத்தை கடைப்படிப்பதன் மூலம் மன வருத்தம் அடையாமல் உங்கள் எடையை இயல்பாக குறைக்க முடியும். இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களையும், கேள்விகளையும் பகிர்ந்து கொள்ள தவறாதீர்கள். உங்கள் அனுபவங்களையும் எங்களோடு பகிர்ந்து கொள்வதன் மூலம் பல அம்மாக்கள் பயனடைவார்கள்.

  • 1
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.

| Jul 06, 2021

  • Reply
  • அறிக்கை
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}