• உள்நுழை
 • |
 • பதிவு
உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்

தக்காளி காய்ச்சல் Tomato flu அறிகுறிகள்– 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாதிக்கும்

Radha Shri
0 முதல் 1 வயது

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது May 12, 2022

கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா என தெற்குப் பகுதியில் முக்கியமாக கண்டறியப்பட்டுள்ளது.  ஊடக அறிக்கைகளின்படி, கேரளாவில் இந்த அரிய வைரஸ் நோயானது இதுவரை ஐந்து வயதுக்குட்பட்ட 80 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.  இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.

தக்காளி காய்ச்சல் என்றால் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் சிகிச்சையை அறிந்து கொள்ளுங்கள்

தக்காளி காய்ச்சல் என்றால் என்ன ?

தக்காளி காய்ச்சல் என்பது ஒரு கொடிய வைரஸ் ஆகும், இது நாட்டின் தெற்குப் பகுதியில் முக்கியமாக கண்டறியப்பட்டுள்ளது. கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய இடங்களில் தங்கள் உள்ளூர் அரசு மருத்துவமனைகளில் அடையாளம் தெரியாத இந்த காய்ச்சலுக்காக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

PTI படி, கோயம்புத்தூர், வாளையார் மற்றும் கேரளாவின் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த மருத்துவக் குழுக்கள் தொற்றுநோயைக் கண்டறிய குழந்தைகளுக்கு காய்ச்சல் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றன.

தக்காளி காய்ச்சல் அறிகுறிகள் என்ன?

முக்கியமாக ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை இந்த வைரஸ் தாக்குகிறது. இந்த தொற்று அவர்களின் தோலில் சிவப்பு வட்டமான கொப்புளங்களை உண்டாக்குகிறது, அதன் காரணமாக இது தக்காளி காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது

உங்கள் குழந்தையிடம் இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே மருத்துவமனை அழைத்து செல்லுங்கள்.

 • அதிக காய்ச்சல்
 • நீரிழப்பு
 • உடல் வலிகள்
 • தடிப்புகள்
 • கொப்புளம்
 • வீக்கம்
 • தசைப்பிடிப்புகள்
 • வாந்தி
 • தும்மல்
 • மூக்கு ஒழுகுதல்
 • சோர்வு
 • வாயில் எரிச்சல்
 • கைகள், கால்கள் மற்றும் உடலின் மற்ற பாகங்களில் நிறமாற்றம்

பெற்றோர் பீதி அடைய வேண்டாம். சிக்கன்குனியா அறிகுறிகள்போல் பார்க்க தோன்றும். பெரும்பாலும் கோடை மற்றும் குளிர் காலங்களில் வரும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நீரோற்றமாக்வும், சுகாதாரமாகவும் வைக்க சொல்லி வலியுறுத்துகிறார்கள்.  

தக்காளி காய்ச்சல்: சிகிச்சை

 • உடனடியாக மருத்துவரை அணுகுவது பரிந்துரைக்கப்படுகிறது
 • பாதிக்கப்பட்ட குழந்தைகள் கொப்புளங்களைத் தொடுவதையோ அல்லது சொறிவதையோ தவிர்க்க வேண்டும்.
 • கொதிக்க வைத்த தண்ணீரைக் குடிப்பது பாக்டீரியாவை அழிக்க பரிந்துரைக்கப்படுகிறது
 • டயப்பர் மாற்றிய பிறகு , கழிப்பறை பயன்படுத்திய பிறகு கைகளை நன்கு கழுவவும்.
 • பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து தூரத்தை பராமரிப்பது கட்டாயமாகும்
 • தூய்மை மற்றும் சரியான சுகாதாரத்தை பராமரிக்கவும். குழந்தைகள் விளையாடும் பொம்மைகளை சுத்தமாக வைத்திருக்கவும்.
 • குழந்தைகளின் கைகளை நன்கு கழுவவும்
 • காய்ச்சலில் இருந்து விரைவாக குணமடைய பாதிக்கப்பட்டவர்கள் சரியான ஓய்வு எடுக்க வேண்டும்.

தடுப்பு நடவடிக்கைகள்

கேரளா மற்றும் தமிழ்நாட்டில் இதை தடுக்கும் வகையில், அப்பகுதியில் உள்ள உள்ளூர் அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டு, அதன் விழிப்புணர்வு தொடர்பான புதிய பிரச்சாரங்கள் தொடங்கப்பட்டுள்ளன, அங்கன்வாடிகளில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை பரிசோதிக்க 24 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து வாகனங்களிலும் பயணிகளை, குறிப்பாக குழந்தைகளை பரிசோதிக்க இரண்டு மருத்துவ அதிகாரிகள் குழுவை வழிநடத்துகின்றனர் என்று அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது.

தமிழ்நாட்டில் என்ன நிலை?

தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் கூறுகையில், பெற்றோர்கள் அச்சப்பட வேண்டாம். கேரளாவை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் எடுத்து வருகிறோம். தக்காளிக்கும் இந்த காய்ச்சலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்கிறார். காய்ச்சல், வலி, வாய்ப்புண் போன்ற நோய்களுக்கான சிகிச்சையே வழங்கப்படும்.

உங்கள் பரிந்துரைகளில் ஒன்று எங்கள் அடுத்த வலைப்பதிவை சிறந்ததாக்குகிறது, பின்னர் கருத்துத் தெரிவிக்கவும், வலைப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவலில் நீங்கள் திருப்தி அடைந்தால், நிச்சயமாக மற்ற பெற்றோருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}