• உள்நுழை
 • |
 • பதிவு
உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் உணவு மற்றும் ஊட்டச்சத்து கர்ப்பம்

உங்கள் அழகை கர்ப்ப காலத்தில் எப்படி பராமரிக்கலாம்?

Radha Shree
கர்ப்பகாலம்

Radha Shree ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Apr 29, 2019

கர்ப்ப காலத்தில் நம் உடலில் நிறைய ஹார்மோன் மாற்றங்கள் தோன்ற ஆரம்பிக்கும். ஆனால் இந்த மாற்றங்களால் உங்கள் சருமமும், அழகும் கெடும் என்று கவலை கொள்கிறீர்களா? கர்ப்ப காலத்தில் இயற்கையாகவே நமக்கு பொலிவும், அழகும் கூடும் என்று வீட்டில் பெரியவர்கள் சொல்வார்கள். அது உண்மை தான். இந்த அழகையும், பொலிவையும் கர்ப்ப காலம் முழுவதும் தக்க வைத்துக் கொள்ள முடியும். அதற்கு சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டியுள்ளது. அது என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

கர்ப்ப கால அழகை பராமரிக்க உடலின் ஆரோக்கியம் மட்டுமில்லாமல் மனதின் மகிழ்ச்சியும் இணைந்து செயல்பட வேண்டும். உங்கள் அழகுக்கு உதவும் வகையில் 8 பயனுள்ள வழிகளை வழங்குகிறோம்.

 • தண்ணீர் நிறைய குடிக்கவும்

கர்ப்ப காலத்தில் ஒரு நாளில் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். இது உங்கள் உடலில் இருந்து அனைத்து நச்சுத்தன்மையையும் அகற்ற உதவுகிறது. கூடுதலாக, தண்ணீர் உங்கள் உடலில் சரியான அளவு அம்மோனியோ திரவத்தை பராமரிக்க உதவுகிறது. ஒரு நாளைக்கு 2 லிட்டர் தண்ணீரை குடிப்பதன் மூலம் தாய் மற்றும் சேய் இருவரும் ஆரோக்கியம் பெறுவார்கள்.

 • சரியான உணவு

கர்ப்ப காலத்தில் நீங்கள் சாப்பிடும் உணவு ஊட்டச்சத்துள்ளதாக, ஆரோக்கியமானதாக இருப்பது அவசியம். இந்த காலத்திற்கேற்ப உணவு அட்டவணையை தயாரித்துக் கொள்ளுங்கள். துரித உணவுகளை தவிர்த்து எளிதாக ஜீரணிக்கக்கூடிய உணவுகள், பழங்கள், கீரை, பச்சை காய்கறிகள், சிறுதானியங்கள், பருப்பு மற்றும் பீன்ஸ் வகைகள், முட்டை, பால், மீன் போன்ற சத்தான உணவு உண்பதால் உங்கள் அழகு மட்டுமில்லாமல் ஆரோக்கியமும் நிலைத்திருப்பதை உணர்வீர்கள்.

 • தரமான தூக்கம்

முதல் ட்ரைமெஸ்டரில் சோர்வு, மயக்கம் போன்ற அறிகுறிகள் காணப்படும். அதனால் இந்த காலத்தில் உடலுக்கும், மனதுக்கும் அதிகமான ஓய்வு அவசியம். தரமான தூக்கத்திற்கு தேவைப்படும் சரியான தூங்கும் நிலை (Posture), வசதியான ஆடைகள், மொபைல் போன் அதிகம் பார்ப்பதை தவிர்ப்பது, இசை கேட்பது, நேர்மறையான எண்ணங்கள் போன்றவற்றை கடைப்பிடிப்பதன் மூலம் தரமான தூக்கத்தை பெற முடியும்.

 • ஆரோக்கியமான எடை

கர்ப்ப காலத்தில் அதிகமாக எடை அதிகரிக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஆரோக்கியமான எடை இருந்தாலே போதும். இது எல்லாருக்கும் ஒரே மாதிரி இருக்காது. இந்த நேரத்தில் சரியான உணவுப்பழக்கம் அவசியம். அதனால் இயற்கையாக எடையை அதிகரிப்பதே நல்லது.

 • உடற்பயிற்சி

கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி மிக மிக அவசியம். ஆனால் சரியான வழிகாட்டுதலோடு செய்வது நல்லது. தினமும் நடைப்பயணம், சின்ன சின்ன அசைவுகள், யோகா ஆசனம், தியானம் போன்ற பயிற்சிகள் உங்கள் அழகை மட்டுமில்லாமல் உடல், மனம், அழகு இவை அனைத்தையும் பாதுகாக்க பெரிதளவில் உதவுகின்றது. மேலும் கர்ப்ப காலத்தில் வரும் மன அழுத்தத்தை கையாளவும், மனதை சமநிலையாக வைக்கவும் முடியும்.

 • சரும பராமரிப்பு

சருமத்தை பராமரிக்க செயற்கை அல்லாத தாவரம் மற்றும் மூலிகையை பயன்படுத்தி செய்த இயற்கையான சருமப் பராமரிப்பு சாதனங்களை பயன்படுத்தவும். வீட்டிலேயே தயாரித்த அழகு சாதனப்பொடிகளும் சிறந்தது தான். இது கோடை காலம் என்பதால் சருமம் வறட்சியடையும். ரசாயனம் கலக்காத உங்கள் சருமத்திற்கேற்ற ஆர்கானிக் சருமப் பொருட்களை வாங்கி பயன்படுத்தலாம். தினமும் இரண்டு வேளை குளிப்பது, எண்ணெய் குளியல் சிறந்தது.

 • அழகான ஆடை

கர்ப்ப காலத்தில் இயற்கையாக மாறும் உங்கள் உடல் அமைப்பை ரசியுங்கள். உங்கள் வயிற்றுப் பகுதி அழகான வளைவு வடிவத்தில் மாறும். உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ற ஆடைகளை தேர்வு செய்து அணியுங்கள். இந்த் காலத்தில் உங்கள் உடல் அமைப்பு மாறுவதை எண்ணி மகிழ்ச்சியும், பெருமையும் கொள்ளுங்கள். தாய்மையின் மேலும் அழகுப்படுத்துங்கள்.

 • மேக் – அப்

கர்ப்ப காலத்திலும் மேக்-அப் செய்யலாம். இது உங்கள் தன்னம்ப்பிக்கையை உயர்த்தும். உங்களை சின்ன சின்ன அளவில் க்ரூம் செய்வதன் மூலம் மகிழ்ச்சியாகவும்,. புத்துணர்வாகவும் உணர்வீர்கள்.  ஆனால் இரசாயனங்கள் கலக்காத தயாரிப்புகளை பயன்படுத்துவது நல்லது.

அகத்திம் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். இந்த கர்ப்ப காலத்தில் உங்கள் உடலையும், மனதையும் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வைப்பதன் மூலம் இந்த கர்ப்ப கால பொலிவை உங்களால் தொடர்ந்து பெற முடியும்.

 • 1
விளக்கக்குறிப்புகள்()
Kindly Login or Register to post a comment.

| May 03, 2019

Diet chart for 1st month pregnancy

 • அறிக்கை
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்
சிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Blogs
Tools

Trying to conceive? Track your most fertile days here!

Ovulation Calculator

Are you pregnant? Track your pregnancy weeks here!

Duedate Calculator
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}