உங்கள் குழந்தை எல். ரூட்டெரி ப்ரோபியோடிக் மூலம் எப்படி நிவாரணம் பெறகிறது ?

Vandana Chawla ஆல் உருவாக்கப்பட்டது புதுப்பிக்கப்பட்டது Jan 19, 2020

கோலிக் வலி ஏற்படும் குழந்தைகள் நாள் முழுவதும் சாதரணமாக இருப்பார்கள். மாலைப் பொழுதுக்கு மேல் கொஞ்சம் கொஞ்சமாக அழ தொடங்குவார்கள். வலியின் போது உங்கள் குழந்தையின் உடல் இறுக்கமடைவது, உள்ளங்கைகளை இறுக்கிப் பிடித்துக் கொள்வது மற்றும் கால்களை வயிற்றோடு சேர்த்து வைப்பது என அவர்களின் செயல் இருக்கும். அவர்களை சமாதானம் செய்ய முடியாமல் தாய்மார்களும் அழும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
பிறந்த குழந்தைகள் ஆரோக்கியமாக இருந்தாலும் கோலிக் வலி ஏற்படுவது பொதுவான பிரச்சனை தான். வயிற்றில் அதிகரிக்கும் வலி மற்றும் அசொளகரியம் காரணமாக குழந்தைகள் அதிகமாக அழுகிறார்கள். முதல் இரண்டு மாதங்களில் தொடங்கி 4 மாதங்கள் வரை இந்த கோலிக் வலி வருவது இயல்பானது. ஐந்தில் ஒரு குழந்தை இந்த கோலிக் வலியால் அவதிப்படுகிறார்கள். இது பெற்றோர்களுக்கும், பராமரிப்பாளர்களுக்கும் கவலை தரும் விஷயமாக உள்ளது. ஏன்னென்றால் இந்த பிரச்சனையை புரிந்து கொள்வதும், சிகிச்சை அளிப்பதும் கடினமாக இருப்பதால் வீட்டில் உள்ளவர்கள் வேதனை அடைகிறார்கள்.
கோலிக் வலியைப் பற்றி புரிந்து கொள்ளுங்கள்
கோலிக் வலி ஏன் ஏற்படுகிறது என்பது பற்றிய தெளிவு கிடைப்பது கடினம் தான். பல்வேறு உடல்நல பிரச்சனைகளை உள்ளடக்கியது. வயிற்றில் சமநிலையற்ற பல பாக்டீரியாக்களின் காரணமாக சொல்லப்படுகின்றது. கோலிக் பிரச்சனை ஏற்பட ஒரு பொதுவான கருத்து என்னவென்றால் வயிற்றில் உள்ள சமநிலையற்ற பாக்டீரியாகளே. செரிமானப் பகுதி முழுமையாக வளர்ச்சி அடையாத போது வாயு உண்டாக்கும் பாக்டீரியாக்கள் சில குழந்தைகளின் வயிற்றில் அதிகமாக உருவாகிவிடும். கோலிக் பிரச்சனையால் அழுவதைப்போல் மலச்சிக்கல் ,எதுக்களிப்பு மற்றும் பாலில் உள்ள ப்ரோடீன் அல்லது லேக்ட்டோசினால் ஏற்படும் ஒவ்வாமை கூட காரணமாக இருக்கலாம்.
எல் ரெட்டரி புரோபயாடிக் மலச்சிக்கல் வராமல் தடுப்பதற்கும், கையாள்வதற்கும் பெரிதளவில் பங்கு வகிக்கின்றது. உங்கள் குழந்தை பிறந்தவுடன் அவர்களின் இரைப்பை குடல் பகுதியில் பல லட்சம் பாக்டீரியாக்கள் நிரம்பியிருக்கும். நன்மை தரும் பாக்டீரியாக்கள் கோலிக் வலியை குணமடைய செய்தாக ஆராச்சிகள் கூறுகின்றது.
உங்கள் குழந்தைக்கு எல். ரெட்டரி புரோபயாடிக் நன்மைகள் என்ன?
- எல் ரெட்டரி புரோபயாடிக் வயிற்றில் நன்மை விளைவிக்கும் ஒரு ஆரோக்கியமான பாக்டீரியாவாக கருதப்படுகின்றது. மேலும் இந்த நன்மை பயக்கும் பாக்டீரியா செரிமானத்திற்கும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வளர்ச்சியடையவும் உதவுகின்றது. அது வயிற்றில் இயற்கையான சமநிலையை உருவாக்குகிறது.
- வயிற்றில் வாயுவை உருவாக்கும் பாக்டீரியாக்களை அழித்து ஆரோக்கியமான பாக்டீரியாக்களை உருவாக்க உதவுவதால் குழந்தைகள் வாயுத் தொல்லையில் இருந்தும், அசொளகரியத்திலும் இருந்தும் விடுபடுகிறார்கள்.
- லேக்டோபேச்சிலஸ் ரூட்டெரி(L.reuteri ) தாய்ப்பாலில் இயற்கையாகவே இருக்கின்றது. இது கோலிக் வலி வராமல் தடுக்கவும், கையாளவும், நிவாரணமளிக்கவும் திறனுள்ளதாகக் கண்டறியப்பட்டது (Reference: https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3183958/)
- எல் ரெட்டரி புரோபயாடிக் எந்த ஒரு குறிப்பிடத்தக்க பக்க விளைவுகளோடு தொடர்பில்லை என்பதால் குழந்தைகளுக்கு ஏற்றதாக கருதப்படுகின்றது. ஆனாலும் உங்கள் குழந்தை நல மருத்துவரின் ஆலோசனை மிக அவசியம். நீங்களாக தன்னிச்சையாக வழங்க கூடாது,
- புரோபயாடிக்குகள் Yogurt மற்றும் சில வகையான சீஸ் போன்ற உணவுகளில் இயற்கையாகவே காணப்படுகின்றன. மருத்துவ பயன்பாட்டிற்காக இது திரவ சொட்டுகள் / சிரப்புகள் போன்றவையும் கிடைக்கின்றன.
எந்த ஒரு காரணமும் தெரியாமல் அதிகமாக அழும் குழந்தைகளை பெற்றோர்கள் கையாள்வது கடினமே. குழந்தையின் இந்த அதீத அழுகைக்கு காரணம் என்ன என்பதை உங்கள் குழந்தை நல மருத்துவரிடம் விரைவாக கேட்டு சரியான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள். புரோபயாடிக்குகள் பயன்படுத்துவதால் ஒரு கணிசமான தீர்வு கிடைக்கின்றது. ஆனால் கோலிக் வலிக்கு இது முழுமையான தீர்வாகாவிட்டாலும், ஒரு தீங்கற்ற நிவாரணியாக விளங்குகிறது.
எழுத்தாளர் பற்றி
டாக்டர் சிப்ரா மாத்தூர் ஏறத்தாழ 10 வருடங்களுக்கு மேலாக குழந்தை மருத்துவத்தில் அனுபவம் பெற்று தற்போது குர்கானில் உள்ள Fortis Memorial Research Institute இல் குழந்தை நலம் மற்றும் நியோநேடாலஜி பிரிவின் மூத்த ஆலோசகராக இருக்கிறார்.
அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

