• உள்நுழை
  • |
  • பதிவு
பெற்றோர் குழந்தை உளவியல் மற்றும் நடத்தை

உங்கள் குழந்தை வாயில் விரலை வைப்பதை தவிர்க்க 6 வழிகள்

Parentune Support
1 முதல் 3 வயது

Parentune Support ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Jun 11, 2019

 6

குழந்தைங்க என்ன பண்ணாலும் அழகு தான். சில குழந்தைகள் கொஞ்ச நாள்ல விரல் சூப்புறதை மறந்துடுவாங்க. ஆனா சில குழந்தைகள் வளர்ந்த அப்புறமும் இந்த பழக்கத்தை தொடர்ந்துக்கிட்டே இருப்பாங்க. அதுக்காக விரல் சூப்புற குழந்தைகளை நாம அப்படியே விட்டுட முடியுமா? அப்படியே விட்டுட்டா நிறுத்த கடினமாக இருக்கும்.கவலைப்பட வேண்டாம், இதை நிறுத்த வழிகள் இருக்கின்றது

குழந்தைங்க தாயோட வயிற்றில் இருக்கும்போதே விரல் சூப்பும் பழக்கத்தை தொடங்கிடுறாங்க. பிறந்த அப்புறம் இந்த பழக்கம் தானா அவங்களுக்கு வந்துடுது. குழந்தைங்களோட விரல் சூப்புற பழக்கத்துக்கு நிறைய காரணங்கள் இருக்கு. பொதுவா புட்டிப்பால் குடிக்க ஆரம்பிக்கிற காலத்துல தான் நிறைய குழந்தைகள் விரல் சூப்ப ஆரம்பிக்கிறாங்க. தாய்ப்பால் குடிக்கும்போது குழந்தைக்கு கிடைக்கிற நிறைவு புட்டிப்பால் குடிக்கும்போது கிடைக்கிறது இல்ல. புட்டியில பால் தீர்ந்ததும் தன்னோட மனநிறைவுக்காக குழந்தை விரல் சூப்பத் தொடங்குது.

குழந்தைகளுக்கு பசி எடுக்கும்போது விரல் சூப்ப ஆரம்பிச்சிடுவாங்க. தாய்ப்பால் குடிக்கும்போது கிடைக்கிற அதே உணர்வு விரல் சூப்பும்போது கிடைக்கிறதால அதைத் தொடர்ந்து செய்யுறாங்க. சில குழந்தைகளுக்கு பல் வளர ஆரம்பிக்கும்போது விரல் சூப்பணும்ங்கிற எண்ணம் உருவாகும், பல் முளைக்க ஆரம்பிக்கும்போது ஈறுகள்ல உண்டாகிற உறுத்தல் காரணமாக விரல் சூப்ப நினைக்கிறாங்க. பெரும்பாலான குழந்தைகள் பல் வளர்ந்ததும் இந்த பழக்கத்தை கைவிட்டுடுவாங்க. ஆனா சில குழந்தைகள்

விரல் சூப்பும் குழந்தைகளோட உடலுக்குள் நோய்க்கிருமிகள் எளிதாகப் போய்விடுகிறது. இதனால வயிற்றுப்போக்கு, காய்ச்சல், வாய்ப்புண், குடல்புழு பிரச்னைகள் இந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கு. இதுவே மூன்று, நான்கு வயது வரைக்கும் இந்தப் பழக்கம் தொடர்ந்தால் அந்த குழந்தையோட பற்கள், ஈறுகள்ல பாதிப்பு ஏற்படும். முளைக்கிற பற்கள் தெற்றுப்பல்லா மாறக்கூடும். தாடைலயும் பிரச்னை வர்றதுக்கான வாய்ப்புகள் அதிகமா இருக்கு.

பள்ளி செல்லும் வயது வரைக்கும் விரல் சூப்பும் பழக்கம் இருக்கிற குழந்தைகள் சக மாணவர்களால கிண்டல் செய்யப்படுற சூழ்நிலைக்கு ஆளாவாங்க. இதனால எல்லாரோட கூடி விளையாடுற அனுபவம் கிடைக்காம தனிமைப் படுத்தப் படுவாங்க. இது அவங்களுக்கு மனரீதியான பாதிப்பை ஏற்படுத்தும்.

விரல் சூப்புற பழக்கம் இத்தனை விளைவுகளை ஏற்படுத்துமா? அப்படின்னு கேட்டா அதுக்கு பதில் ஆமாம் தான். சரி இதையெல்லாம் தவிர்க்கிறதுக்கு என்ன செய்யலாம்?

  • முதலில் விரல் சூப்பும் குழந்தைகளை கடுமையாக நடத்தக் கூடாது. வலுக்கட்டாயமாக அவர்களது வாயில் இருந்து விரல்களை எடுத்து விடக்கூடாது. அவர்களிடம் அன்பாகப் பேசி, இந்த பழக்கம் எத்தனை தீங்கு விளைவிக்கும் என்பதை புரிய வைக்க வேண்டும்.
  • அடுத்ததாக குழந்தைகள் எப்போதெல்லாம் அதிகமாக வாயில் கை வைக்கிறார்கள் என்று கவனித்து அந்த நேரத்தில் குழந்தைக்கு வரைவது அல்லது எழுதுவது இப்படி எதில் ஆர்வம் அதிகமாக இருக்கிறது என்பதைக் கண்டறிந்து அது தொடர்பான வேலைகளைச் செய்ய பழக்க வேண்டும்.
  • சிறு குழந்தைகளுக்கு கைகளில் க்ளவுஸ் மாட்டி விடலாம். வெளியிடங்களில் அல்லாமல் வீட்டில் இருக்கும் போது விரலை தொடாத துணி அல்லது க்ளவுஸ் மாட்டிவிடுங்கள்.
  • அவர்களுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்யும்போது, அதில் கவனம் செலுத்துவதால் விரல் சூப்புவதை அவர்களாகவே விரைவில் மறந்து விடுவார்கள்.
  • இரண்டு வயது வரைக்கும் குழந்தைகளை உங்கள் அருகாமையிலேயே வைத்துக் கொள்ளுங்கள். அவர்களோடு நிறைய நேரம் செலவழியுங்கள். பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் தங்களுக்கு கிடைக்கிறது என்றாலே தனிமை தொடர்பான பிரச்னைகள் அவர்களுக்கு வராது. அதனால் விரம் சூப்பும் பழக்கத்திற்கு அடிமை ஆவது தவிர்க்கப்படும்.
  • குழந்தைகளோட மனரீதியான பிரச்னைகளும் விரல் சூப்பறதுக்கான காரணமா இருக்கு. ஏமாற்றம், பயம், பதற்றம், தனிமை, கவலை இந்த மாதிரி மனரீதியா ஏற்படுற பாதிப்புகள் குழந்தைகளை விரல் சூப்பத் தூண்டுது. வளர்கிற வயதில் குழந்தைகளுக்கு பெற்றோரோட அன்பும், அரவணைப்பும் தேவை.

இவை எல்லாவற்றையும் தாண்டி அவர்கள் விரல் சூப்புவதை நிறுத்தவில்லை என்றால் மருத்துவரை அணுகி முறையான ஆலோசனை பெறுங்கள்.

  • கருத்து
விளக்கக்குறிப்புகள்()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

Always looking for healthy meal ideas for your child?

Get meal plans
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}