• உள்நுழை
  • |
  • பதிவு
பெற்றோர் கல்வி மற்றும் கற்றல் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்

உங்கள் குழந்தைகளுக்கு யோகாவின் 8 பலன்கள்

Sagar
3 முதல் 7 வயது

Sagar ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Nov 10, 2019

 8

யோகாவின் முக்கியத்துவத்தை உலகம் உணர்ந்து கொண்டு அதனை பின்பற்ற தொடங்கிவிட்டது, யோகா பெரியவர்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் எண்ணற்ற பலன்களை தருகிறது. குழந்தைகளுக்கு யோகா கற்றுக் கொள்ள சரியான வயது 7. குழந்தைகள் தங்கள் வாழ்க்கையில் சரியானவற்றை தேர்ந்தெடுக்க கற்றுக் கொடுக்கிறது யோகா பயிற்சி. இந்த சர்வதேச யோகா தினத்தில் குழந்தைகளுக்கு யோகா கற்பதன் மூலம் கிடைக்கும் முக்கியமான  8 வகை பலன்களை இப்போது பார்ப்போம் 

போட்டி மனப்பான்மை வராது 

இன்றைய அவசர உலகில் சாப்பிடுவதற்கு கூட யார் முதலில் சாப்பிடுவது என்று அனைத்திலும் தேவையற்ற போட்டி மனப்பான்மையை நம்மையே அறியாமல் குழந்தைகளிடம் வளர்க்கிறோம் .யோகாவின் முக்கிய அம்சமே உலகத்தில் வாழும் அனைவருமே தனித்தன்மை உடையவர்கள் என்று உணர்த்துகிறது. ஒவ்வொரு உடலுக்கும் ஒவ்வொரு ஆற்றல் இருப்பதை உணரச்செய்வதால் அதில் போட்டி மனப்பான்மை என்பதே இல்லாமல் போகிறது. இதனால் கோபம் பொறாமை போன்ற குணங்கள் இல்லாத மனநிலையை குழந்தைகளுக்கு உருவாக்குகிறது.

எதையும் ஏற்றுக்கொள்ளும் மனம்

யோகா தங்களின் இயல்பை உணர செய்வதுடன் எதையும் சந்தோசத்துடன் ஏற்றுக்கொள்ளும் தன்மையை சிறு வயதிலேயே வர பேருதவியாக இருக்கிறது. இந்த சமூகம் பதவி புகழ் பணம் எவ்வளவு சேர்த்தாலும் போதாது என்ற எண்ணத்தையே விதைக்கிறது, ஆனால் இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ கற்றுத்தருகிறது யோகா.

மரியாதை வளர்கிறது

யோகா கற்றுக்கொள்ளும் குழந்தைகள் இவ்வுலகத்தில் வாழும் அனைத்து உயிரினங்களும் சந்தோசமாகவும் மரியாதையுடனும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை பசுமரத்தாணிபோல் பதிய செய்கிறது.  யோகா பயிற்சி செய்பவர்கள் தங்கள் சுற்றத்தாருடன் அமைதியான உறவை வைத்திருப்பார்கள். இதனால் மற்றவர்களுடன் பிரச்சனைகள் இல்லாத சூழலை உருவாக்குகிறது.

உடல் நலத்தை பாதுகாக்கும்

பொதுவாக உடற்பயிற்சி உடலை சுறுசுறுப்பாக வைத்திருப்பதுடன் ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கு வழிவகுக்கும்.யோகா இதனையும் தாண்டி ஆரோக்கியமான உணவு முறையை வளர்கிறது. தங்களை அமைதிப்படுத்தி கொள்ளவும் கவனத்தை அதிகப்படுத்தவும் உதவுகிறது.  

துல்லியமான கவனத்தை தருகிறது

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் குழந்தைகளுக்கு கவனச்சிதறல்கள் மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. குழந்தை சிறிது நேரம் கூட  முழு கவனத்துடன் ஒரு செயலில் ஈடுபட முடியாத நிலை உள்ளது. யோகாவில் மூச்சு பயிற்சியின் மூலம் நாம் சுவாசிக்கும் மூச்சை ஆழமாக கவனிப்பதால் மனதை ஒருநிலைப்படுத்தி கவனத்தை சிதற விடாமல் செய்கிறது. பலவகையான ஆசனங்களின் வாயிலாக உடலின் மீது கவனம் அதிகரிக்க செய்கிறது இதனால் குழந்தைகளுக்கு கவனம் கூர்மை அடைகிறது.

அமைதிப்படுத்துகிறது

யோகா அமைதிப்படுத்தும் நுட்பங்களை கற்பிக்கிறது.

சிறு குழந்தைகள் எளிதில் வெறுப்படைவதும் கையில் கிடைக்கும் பொருட்களை தூக்கி எறிவது என பார்க்கிறோம்.

யோகாவின் மூலம் சுவாச நுட்பங்களையும் அவர்கள் கற்றுக் கொள்ளும்போது, ​​அந்த கருவிகளை அன்றாட வாழ்க்கையில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும், எந்தவொரு சூழ்நிலையிலும் சரியான முறையில் செயல்படுவதையும் அவர்கள் கற்றுக்கொள்ளத் தொடங்குகிறார்கள்.

சுய  அறிதல்

யோகாசனங்கள் செய்வதால் தங்களது  உடலின் ஆற்றலை புரிந்துகொள்ள முடிகிறது. இதனால் தங்களது திறனை முழுமையாக வெளிக்கொணர முடிகிறது. உடல் மனம் ஆவி  பற்றிய புரிதல் வருவதால் அன்பு, தன்னம்பிக்கை, பொறுப்புணர்ச்சி ஆகியவற்றை அவர்களுக்குள் வளர்கிறது. இதனால் எந்த சூழ்நிலையையும் திறம்பட எதிர்கொள்ளும் ஆற்றலை யோக தருகிறது.

நேர்மறை எண்ணத்தை வளர்க்கும்

மேற்சொன்ன காரணங்களால் குழந்தைகள் எதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையுடன் தன் மீதும் பிறர் மீதும் அன்பு செலுத்தவும், மற்றவர்களிடம் இருக்கும் நல்லவற்றை உணர முடியும. தங்களது உள்ளார்ந்த திறன்களை இனம் கண்டு முழு கவனத்துடன் செயல்பட உதவும் கருவியாக யோகா விளங்குகிறது.

எப்போதும் வாழ்வில் நேர்மறையான எண்ணத்தை தந்து, இன்றைய நவீன உலகில் அதிகரிக்கும் பதற்றம்,மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளிலிருந்து குழந்தைகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள சிறந்த கருவியாக யோகா விளங்குகிறது.     

  • 1
விளக்கக்குறிப்புகள்()
Kindly Login or Register to post a comment.

| Aug 09, 2019

. ((@))👺👹👻💅💇💆💃👽👾👿💀💪👀👂💚👣👃👄👅💔💙

  • அறிக்கை
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த பெற்றோர் Blogs

Always looking for healthy meal ideas for your child?

Get meal plans
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}