உங்கள் குழந்தைக்கு இருமல் & சளி பிரச்சனைக்கான வீட்டு வைத்தியம்

குழந்தைகள் பெரும்பாலும் சளி மற்றும் இருமல் பிரச்சனையால் அவதிப்படுவது வழக்கம். நோய் எதிர்ப்பு சக்தி வளரும் சமயம் என்பதால அடிக்கடி இதுபோல் தொற்றுகள் அவர்களை பாதிக்கும். சளி இருமல் பிரச்சனையில் இருந்து விடுபட பல மருந்துகள் இருந்தாலும் ஆரம்பத்தில் நமது சமயலறையில் உள்ள அஞ்சறப் பெட்டி மூலம் அதனை சரி செய்வதே சிறந்த வழி. சரி வாங்க நமது சமையல் அறையில் உள்ள பொருட்களை வச்சு சளி மற்றும் இருமலை விரட்டலாம்னு பார்க்கலாம்.
தாய் பால்
தாய்ப்பால் பல தொற்றுகளில் இருந்து குழந்தைகளை காக்கும். இயற்கை வரம் என்றே சொல்லலாம், தாய்ப்பாள் தொடர்ந்து குடிக்கிற குழந்தைக்கு அவ்வளவு எளிதில சளி இருமல் வராது. அப்படியே வந்தாலும் சீக்கிரம் குணமாகிவிடும். இது பிறந்த குழந்தைக்கு மட்டுமல்லாமல் ஆறு மாதத்திற்கு மேல் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கும் மிக சிறந்த பலனளிக்கிறது.
மஞ்சள்
மஞ்சள் நமது சமயலறையில் மிக அத்தியாவசியமான பொருள், மஞ்சள் மருத்துவத்தில் மிக சிறந்த கிருமி நாசினியாக பயன்படுகிறது. மஞ்சளை வெதுவெதுப்பான தண்ணீரில் பேஸ்ட் போல நன்றாக குழைத்து குழந்தையின் நெஞ்சுப் பகுதி, நெற்றி, உள்ளங்காலில் தடவிவிட்டு சிறு நேரம் கழித்து கழுவி விடவேண்டும். மஞ்சள் சூட்டினால் சளியை கரைத்து எளிதாக வெளியேற்ற உதவுகிறது.
கடுகு என்னை மசாஜ்
ஒரு கப் கடுகு எண்ணையுடன் இரண்டு பள்ளு பூண்டு சிறுது அளவு கருஞ்சீரகம் அனைத்தையும் சேர்த்து சூடாக்கவும். இந்த எண்ணெயை உங்கள் குழந்தையின் கால்கள், மார்பு, முதுகு மற்றும் உள்ளங்கைகளில் லேசாக எடுத்து மசாஜ் செய்யவும்.
சிறிதளவு வெல்லம், சீரகம், கருப்பு மிளகு, மற்றும் சூடான நீருடன் கலந்து வடிவட்டி கொடுக்கும் போது சளி மற்றும் இருமல் மற்றும் தொண்டை புண் ஆகியவற்றை குறைத்து குழந்தைகளுக்கு ஆறுதல் தரும்.
இந்த நீரை தயாரிக்க தேவைப்படும் பொருட்கள் :
வெல்லம்- 1 அல்லது 2 தேக்கரண்டி.
கருப்பு மிளகு - 1 முதல் 2 வரை
சீரகம் - ஒரு சிட்டிகை
நீர்– 1 கப்
அனைத்துப் பொருட்களையும் கலந்து தண்ணீரை ஒரு கொதி நிலைக்கு கொண்டு வாருங்கள். தண்ணீரை குளிர்வித்து வடிகட்டவும். வெல்லம் மற்றும் மிளகு வெப்பத்தைக் கொண்டிருப்பதால் குழந்தைக்கு இந்த கலவையில் இரண்டு டீஸ்பூனுக்கு மேல் அதிகமாக கொடுக்க வேண்டாம்.
தேங்காய் எண்ணெய் மசாஜ்
சளி இருமல் பிரச்சனைகளுக்கு இந்த மசாஜ் உகந்தது. தேங்காய் எண்ணெயை சூடாக்கி, வெங்காயம், துளசி மற்றும் வெற்றிலை சேர்க்கவும். பொருட்கள் போதுமான சூடாக இருக்கும்போது, அடுப்பை அனைக்கவும். அதை குளிர்விக்க விடுங்கள், எண்ணெய் சூடு குறைந்து வெதுவெதுப்பான நிலைக்கு வந்த பிறகு, குழந்தையின் மார்பு, பின்புறம், அவர்களது கால்கள் மற்றும் உள்ளங்கைகளில் தடவவும்.
தேவையான பொருட்கள்
1/2 கப் தேங்காய் எண்ணெய்
1 சின்ன வெங்காயம்,
2 முதல் 3 துளசி இலைகள்
1 வெற்றிலை
தேன்
மருத்துவ குணமுள்ள தேனை ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிக்கவும். அக்குழந்தைகளுக்கு தேன் செரிமானம் ஆகாது. அதலால் 1 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு சளி இருமல் பிரச்சனையின் போது கொடுக்கலாம்.
சளி மற்றும் இருமல் பரவும் கிருமிகளை எதிர்த்துப் போராட தேன் ஒரு சிறந்த தீர்வாகிறது. மிளகு, உலர்ந்த இஞ்சி, எலுமிச்சை சாறு ஆகியவற்றுடன் தேன் கலந்து கொடுக்கும் போது சிறந்த பலன் தருகிறது.
தேனில் ஒரு சிட்டிகை தூள் மிளகு சேர்த்து சரியான இடைவெளியில் குழந்தைக்கு உணவளிக்கவும். சளி மற்றும்
ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு சிட்டிகை உலர்ந்த இஞ்சி தூள் கலந்து சாப்பிடுவது இருமலுக்கு ஒரு சிறந்த தீர்வாகும்.
ஒரு கிளாஸ் தண்ணீரில் சிறிது எலுமிச்சை சாற்றை பிழிந்து அதில் சிறிது தேன் சேர்க்கவும். இது இருமல் மற்றும் சளி இரண்டையும் நீக்குகிறது.
மஞ்சள் கலந்த பால்
குழந்தைக்கு இரவில் ஒரு சிட்டிகை மஞ்சள், சிறிது மிளகுத் தூள் கலந்த ஒரு கிளாஸ் பால் கொடுங்கள். இனிப்புக்கு வெல்லம் கூட சேர்க்கலாம். மேலும், பால் மற்றும் மஞ்சள் ஆரோக்கியம் தரும்.
சளி பிடிக்கும் சமயங்களில் சுக்கு காபி இரண்டு வயது குழந்தைகளுக்கு சிறந்த மருந்தாகிறது.
உலர்ந்த இஞ்சி மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை ஒன்றாக நசுக்கவும். வெல்லத்துடன் தண்ணீரை கொதிக்க கவைத்து, உலர்ந்த இஞ்சி மற்றும் மிளகுத்தூள் சேர்த்து துளசி இலைகளை சேர்க்கவும். அதை கொதிக்க வைத்து சற்று ஆற வைத்து வடிகட்டி குழந்தைக்கு கொடுக்கலாம்.
‘சுக்கு’ காபி செய்முறை இங்கே.
உலர் இஞ்சி (சுக்கு) - 1 அங்குல துண்டு
துளசி இலைகள் - 6 முதல் 7 வரை
மிளகுத்தூள் - சிறிதளவு
வெல்லம் - 1 தேக்கரண்டி (அல்லது உங்கள் தேவைக்கேற்ப)
நீர் - 1 கப்
தண்ணீர்
வெதுவெதுப்பான நீர் அடிக்கடி குடிக்க வைப்பது சிறந்தது. சளி இருமல் இருக்கும்போது திடஉணவை சாப்பிடுவதற்கு மிகவும் சிரமம் ஆகையால் கஞ்சி, சூப் போன்ற தண்ணீர் நிறைந்த உணவாக கொடுப்பது நல்லது. வெதுவெதுப்பான தண்ணீரில் ஓம வல்லி இலை, துளசி இலை போட்டு வைத்து அந்த தண்ணீரை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கு சளி தொல்லைகள் ஏற்படும் போது ஆரம்பத்திலேயே அலோபதி மருந்தை கொடுத்து இயற்கையாக வெளியேறும் கழிவுகளை கட்டுப்படுத்தாமல் முதலில் நமக்கு தெரிந்த வீட்டு வைத்திய முறைகளை முயற்சி செய்து பார்க்கலாம். ஒவ்வொரு குழந்தைக்கும் மாறுபடும். அதனால் முதலில் கொடுக்கும் போது சிறிதளவு கொடுத்துப் பாருங்கள். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கூடுவதோடு, வளர வளர இந்த மாதிரி உடல் பிரச்சனைகளை எதிர்த்து போராட பழகி கொள்வார்கள்.
Be the first to support
Be the first to share
Comment (0)
Related Blogs & Vlogs
No related events found.
Loading more...