• உள்நுழை
  • |
  • பதிவு
பெற்றோர் கல்வி மற்றும் கற்றல் குழந்தை உளவியல் மற்றும் நடத்தை

உங்கள் குழந்தையை எளிதாக வீட்டுப்பாடம் செய்ய வைக்கும் 8 யோசனைகள்

Vidhya Manikandan
3 முதல் 7 வயது

Vidhya Manikandan ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Dec 10, 2018

 8

குழந்தைகளை வீட்டுப்பாடம் எழுத வைப்பது என்பது பெற்றோர்களுக்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது. பெற்றோர் ஆகிய நாம் ஓரு எட்டு எழிய முறைகளை கையாண்டால் பிள்ளைகளை எளிதாக வீட்டுப் பாடத்தை செய்ய வைக்கலாம்.

எட்டு வழிமுறைகள்

1. பங்கு மற்றும் பொறுப்பு

பெற்றோர்கள் குழந்தைகளின் வீட்டுப்பாடம் அதிகம் இருந்தால் அவர்களே எழுதிக்கொடுத்து விடுகிறார்கள் இது தவறு. குழந்தைகள் வீட்டுப்பாடம் எழுதும் பொழுது பெற்றோரின் பங்கும், பொறுப்பும் அதிகம் தேவை. நாம் அவர்களுடன் அவர்கள் ஒழுங்காக எழுதுகிறார்களா என்றும் சந்தேகம் சொல்லிக் கொடுப்பதும் மட்டுமே நம் கடமை.

2. நடைமுறைப்படுத்துவது

வீட்டுப்பாடம் இருந்தாலும் இல்லையென்றாலும் குழந்தைகளை பெற்றோர்தான் தினசரி 45 நிமிடம் ஆவது ஏதாவது ஒன்றை கொடுத்து அவர்களை வீட்டுப்பாடம் எழுத வைக்க வேண்டும். 45 நிமிடம் என்பது போதுமானது அதற்கு மேல் அவர்களுக்கு இடைவெளி தேவை. அவர்களின் மூளைக்கு சிறிது ஓய்வு தேவை. அப்பொழுது தான் கவனத்துடன் செய்து முடிக்க முடியும்

3. வழக்கத்தை உருவாக்குவது

எப்படி தினசரி அவர்களின் அடிப்படை தேவைகளை செய்கிறார்களோ அதே போல் பிள்ளைகளுக்கு தினசரி வீட்டுப்பாடம் செய்வது வழக்கமாக மாற வேண்டும். இது எப்போது நடக்கும் என்றால் வீட்டுப்பாடம் செய்வது மகிழ்ச்சியாக இருக்கும் போது தான் அதை அவர்கள் செய்ய முன்வருவார்கள். கட்டாயப்படுத்தாமல் அவர்களின் கடமையாக உணர வைக்க முயற்சி செய்யவும். வீட்டுப்பாடம் செய்வதால் உன்னுடைய அறிவு வளர்கிறது, நீ பாராட்டப்படுவாய், நீ அடுத்த நிலைக்கு செல்வாய், நீ ஆசைப்பட்ட விஷயத்தை அடைய இது உதவியாக இருக்கும் போன்ற ஊக்கப்படுத்தும் வரிகள் தான் அவர்களுக்கு அவசியம் தேவை.  

4. சூழல் முக்கியம்

பிள்ளைகள் வீட்டுப்பாடம் செய்யும் சூழல் மிகவும் முக்கியம். அவர்களை எளிதாக திசைத்திருப்பும் டிவி, மொபைல், லேப்டாப் போன்ற உபகரணங்களை தள்ளி வைப்பது நல்லது. அதே  போல் பாஸ்டிவ்வான சூழலை உருவாக்க வேண்டும். வீட்டுப்பாடம் எழுதும் அவர்களுக்கு தேவையான பொருட்களை, புத்தகங்களை அவர்களையே எடுத்து வர சொல்வதன் மூலம் அந்த சூழலுக்கு தங்களை தயார்படுத்த உதவியாக இருக்கும். பெற்றோர்கள் பிள்ளைகளை மகிழ்ச்சியாக கையாள்வதன் மூலம் அந்த சூழலும் அவர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்காது.

5. பிள்ளைகளின் விருப்பம் போல் நடக்கட்டும்

குழந்தைகள் வீட்டுப் பாடங்களை முடித்து விட்டார்கள் என்றால் அடுத்ததாக இதை செய்துமுடி என்று கட்டளையிடுவதற்கு பதிலாக அவர்களிடமே நீ அடுத்ததாக என்ன செய்ய விரும்புகிறாய் என்று நீயே தேர்வு செய், என்று கூறுங்கள். ஒரு நாள் வீட்டுப்பாடம் செய்து மறுநாள் செய்யவில்லை என்றால் அவர்கள் விரும்பி செய்யும் செயல்களான tv பார்ப்பது, பொம்மைகளுடன் விளையாடுவது என்று எதையாவது ஒன்றை கட் பண்ணுங்க பின்புதான் அவர்கள் உணர்வார்கள் நாம் வீட்டுப்பாடம் செய்யவில்லை என்றால் நாம் டிவி பார்க்க முடியாது விளையாட முடியாது என்று எண்ணி தினமும் வீட்டுப் பாடங்களை முடித்து விடுவார்கள்.

6. வாழ்வோடு தொடர்புப்படுத்தி கற்றுக் கொடுங்கள்

இப்போதெல்லாம் டெக்ஸ்ட் புக்கில் உள்ளது அனைத்தும் பிள்ளைகளின் மண்டைக்குள் அடைப்பதே வீட்டுப்பாடம் என்றாகிவிட்டது. பள்ளியில் அத்தகைய கற்றல்முறை இல்லாவிட்டாலும் பெற்றோர்கள் நாம் வீட்டில் அவ்வாறு கற்றுக் கொடுக்கலாம். ஒவ்வொரு பாடத்திற்கும் நம்முடைய அன்றாட வாழ்வில் நடக்கும் விஷயங்களை தொடர்புப்படுத்தி கூறும் போது கற்றுக்கொடுக்கிற நமக்கும் ஆர்வமாக இருக்கும், கற்றுக் கொள்கிற பிள்ளைகளுக்கும் எளிதாக புரியும் மற்றும் ஆர்வத்தோடும் மகிழ்ச்சியோடும் வீட்டுப்பாடம் செய்வார்கள்.

7. பொறுமை

பெற்றோர்கள் ஆகிய நமக்கு முதலில் பொறுமை தேவை. நாம் நம் குழந்தைகளின் உணர்ச்சிகளை புரிந்து கொள்ள வேண்டும்.நம் கோபத்தையோ, என் குழந்தை இதை செய்யவில்லை அதை செய்யவில்லை என்ற உணர்ச்சிகளை காட்ட வேண்டாம். நாம் நம் குழந்தைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் வீட்டுப்பாடத்திற்கு அல்ல.  நாம் நம் குழந்தைகளிடம் அன்பாகவும் பொறுமையாகவும் இருந்தால் தான் நாம் அவர்களிடம் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதை உணர்ந்து அண்ணா அனைத்தையும் செய்து முடிப்பார்கள்.

8. பாராட்டு தேவை

இன்றைய பெரும்பாலான பெற்றோர்கள் செய்யும் தவறு என்னவென்றால் குழந்தைகளை வீட்டுப்பாடம் எழுத வைப்பதற்காக சாக்லேட் தருவேன் பொம்மை தருவேன் என கூறுவது. ஏதாவது வெகுமதி கொடுப்பதற்கு பதிலாக அவர்களை பாராட்ட வேண்டும். எழுதி முடித்து விட்டார்கள் என்றால் ’வாவ்.. சூப்பரா முடிச்சிட்ட சரியாக இருக்கிறது அடுத்ததை எழுது பார்ப்போம்’ என்று பாராட்ட வேண்டும். வெகுமதி கொடுத்தால் அதுவே அவர்களுக்கு பழக்கம் ஆகிவிடும்.  அதனால் வெகுமதிக்கு பதில்அவர்களை பாராட்ட வேண்டும்

இந்த எட்டு வழி முறைகளை நாம் பின்பற்றும் போது நம் பிள்ளைகள் மகிழ்ச்சியாகவும், ஆர்வமாகவும் வீட்டுப்பாடம் செய்வதை பார்க்கலாம்.  

 

  • கருத்து
விளக்கக்குறிப்புகள்()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

Trying to conceive? Track your most fertile days here!

Ovulation Days Calculator
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}