• உள்நுழை
 • |
 • பதிவு
பெற்றோர் கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழா

உங்கள் குழந்தையின் முதல் பிறந்த நாளை சிறப்பிக்கும் ஐடியாஸ்

Kiruthiga Arun
0 முதல் 1 வயது

Kiruthiga Arun ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Jan 08, 2019

குழந்தையின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது எப்போதுமே அம்மாக்களுக்கு ஸ்பெஷல். குழந்தை பிறந்த நாளிலிருந்து  எப்படியெல்லாம் கொண்டாடணும்னு நம்ம யோசிக்க ஆரம்பிச்சுடுவோம். நமக்கு ஒரு லிஸ்டே இருக்கும். ஆனா நம்ம குழந்தை இந்த கொண்டாட்டங்களை ரசிக்குமான்னு கேட்டா பெரியவங்க நம்ம யோசிக்கிற அளவுக்கு இல்லாவிட்டாலும் அவங்களோடு நினைவுகள்ல இது மகிழ்ச்சியான நிகழ்வா பதியும். ஆடம்பரத்தை விட அன்பும், அரவணைப்புமே அவங்க அதிகமா உணர்வாங்க.

நான் என் குழந்தையின் முதல் பிறந்த நாளை மிக எளிமையாக என் குடும்பதோடு மட்டுமே கொண்டாடினேன். அதற்கும் சேர்த்து இரண்டாவது பிறந்தநாளை சிறப்பாக என் குழந்தை ரசிக்கும் படியாக கொண்டாடினோம்.

முதல் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட விரும்பும் பெற்றோருக்கான சில குறிப்புகளை இப்போ பார்க்கலாம். 

 • முதலில் ரொம்ப கூட்டம் வராம பாத்துகிறது அவசியம். குழந்தை எரிச்சல் அடைய வாய்ப்புகள் அதிகம். அதன் காரணமாக அழ ஆரம்பிச்சிடுவாங்க. அப்பறம் நமக்கும் வருத்தமா இருக்கும். முடிஞ்ச வரை ரொம்ப நெருக்கமான உறவுகளை மட்டும் முதல் பிறந்தநாளுக்கு அழைப்பது நல்லது.
 • எந்த இடத்தில் பிறந்த நாள் கொண்டாட போறீங்கன்னு திட்டமிடனும். பார்டி ஹால், லான், வீடு, வீட்டு மொட்டை மாடி ஈபடி பல தேர்வுகள் இருக்குது. உங்க பட்ஜெட் மற்றும் குழந்தையின் வசதி, உடல்நிலை, மனநிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு தேர்வு செய்யுங்கள்.
 • பிறந்த நாள் கொண்டாட்டத்தில் குழந்தை உணர்கிற ஒரு முக்கியமான விஷயம் ட்ரெஸ். அதிக நேரம் போடுக் கொள்ளப்போவது குழந்தை தான். பார்ப்பதற்கு அழகா இருக்கிறது என்பதை விட குழந்தை அணிந்து கொள்ள சொளகரியமாக இருப்பதே முக்கியம். ஜிகு ஜிகுன்னு, குழந்தைக்கு அசொளகரியத்தை ஏற்படுத்தும் ஆடைகளை தெர்வு செய்யாமல் இருப்பது நல்லது. குழந்தையால் இதை சொல்ல முடியாது. அழுது கொண்டே இருந்தால் நமக்கும் கஷ்டம் தான்.
 • அதே போல் தாய் பால் கொடுக்கும் அம்மாக்கள் போடற உடை அதற்கு ஏத்த மாதிரி இருந்தா நல்லது. அப்போ தான் நீங்களும் பதற்றம் இல்லாம இருப்பீங்க.
 • அலங்காரம் செய்யும் போது முடிந்தவரை இயற்கையான பொருட்கள் கொண்டு அலங்காரம் செய்யலாம். ப்ளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை தவிர்க்கலாம். பூக்கள், இலைகள் மற்றும் காகிதம் போன்றவற்றை கொண்டு அலங்காரம் செய்யலாம்.
 • மிக முக்கியமானது கேக். பிறந்தநாள் கொண்டாட்டம் கேக் இல்லாம எப்படி. கேக் கிரீம் கேக் இருந்தா நல்லது. ஏன்னா குழந்தைங்க அதிகம் விரும்புவது அதைத்தான். நிறைய கதாபாத்திரங்கள் இருப்பதை தவிர்த்துவிடுங்கள். குழந்தைக்கு தெரியப்போவதில்லை. அந்த சீனி மிட்டாய் நல்லதுமில்லை. ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் தனியாக பணம் வேறு செலவாகும். செலவானால் கூட பராவாயில்லை, நல்லதாக தேர்ந்தெடுக்க வேண்டியது பெற்றோர்களே.  
 • அதே மாதிரி கேக் வாங்கும் போது தனியா இரண்டு கிலோவும் அனைவருக்கும் தரத்துக்கு தனியாவும் நம்ம வாங்கிட்டா சாப்பாடு பரிமாறும் பொழுதே கேக் தந்துடலாம். அனைவருக்கும் கேக் பரிமாறிய திருப்தி இருக்கும். அல்லது கப் கேக் கூட வாங்கிடலாம்
 • சாப்பாடு ரொம்ப முக்கியம். இதிலும் நம்ம கவனம் செலுத்தணும். நிச்சயமா குழந்தைங்க விரும்பும் உணவுகள் அதிகமா இருக்கணும். அதுவும் ஆரோக்கியமானதா இருந்தா நல்லது.
 • ரிட்டர்ன் கிஃப்ட் தருவது இப்போ வழக்கம் ஆயிடுச்சு. அதற்கு தக்கவாறு திட்டம் இருந்தா அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள். எந்த வயதை சேர்ந்த குழந்தைகள் எத்தனை பேர் வராங்க என்பதை பொறுத்து பரிசுகள் வாங்கலாம். புத்தகம் தரலாம். குழந்தைகள் படிக்கிறதுக்கு ஏத்த மாதிரி வாங்கணும். அல்லது கலர் வண்ணங்கள் கொண்ட புத்தகங்கள் இப்படி அந்த வயதை சார்ந்த பரிசுகளா இருந்தா வருகிற குழந்தைகளும் மகிழ்ச்சி அடைவார்கள்.

முன்னதாகவே திட்டமிடுங்கள்

இந்த விஷயத்தில் அப்பாக்களை எதிர்பார்த்து கொண்டே இருக்காமல், அம்மாக்கள் நாமே திட்டமிட வேண்டும். ஆடை, அலங்காரம், சாப்பாடு, இடம், எவ்வளவு பேர் வரப்போறாங்க, அழைப்பிதழ், ரிட்டன் கிஃப்ட் இப்படி உங்கள் குழந்தையின் பிறந்த நாளுக்கு என்னவெல்லாம் செய்யப் போகிறீர்கள் என்பதை முன்னதாக திட்டமிடுவதன் மூலம் கடைசி நேர டென்ஷனை தவிர்க்கலாம். குழந்தையையும் பார்த்து கொள்வதால் பொறுப்புகள் அதிகமாக இருக்கும். நாட்கல் சீக்கிரமே ஓடிவிடும். நிதானமாக திட்டமிட்டால் பணம் விரயம் ஆகாது, அந்த நாளும் நம் குடும்பத்துக்கு மறக்க முடியாத இனிமையான நாளாக அமையும்.

இதெல்லாம் நான் என் குழந்தையின் பிறந்தநாளில் செஞ்சது. உங்களுக்கு உதவும்னு நம்பறேன் 

 • கருத்து
விளக்கக்குறிப்புகள்()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}