• உள்நுழை
 • |
 • பதிவு
பெற்றோர் கல்வி மற்றும் கற்றல்

உங்கள் குழந்தைகள் தங்கள் வேலையை தாங்களே செய்வதற்கான டிப்ஸ்

Radha Shri
1 முதல் 3 வயது

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Apr 20, 2020

நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

ஒரு பெற்றோரா குழந்தையிடம் அதிகமாக எதிர்பார்ப்பது அவர்கள் வேலையை அவர்களே செய்ய வேண்டும் என்பது தான். இது ஒவ்வொரு குழந்தையிடமும் கட்டாயம் நிகழும் எப்போது என்றால் பெற்றோர் ஒரு ரோல் மாடலாக, சிறந்த ஆசிரியராக இருக்கும் போது தான் இது நடக்கும். எப்படி குழந்தைகளுக்கு தங்கள் வேலையை தாங்களே செய்ய கற்றுக் கொடுப்பது என்பதே நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படையான கேள்வி. ஒவ்வொரு நாளும் உங்கள் பிள்ளைக்கு புதிய தகவல்கள், திறன்கள் மற்றும் நடந்து கொள்ளும் வழிகளைக் கற்றுக்கொள்ள உதவுவதன் மூலம் அவர்களே செய்ய தொடங்குவார்கள்.

குழந்தைகளிடம் திறன்களை கற்பிப்பதற்கு முதல் படி அவர்களின் நடத்தையை கையாள்வதாகும். உதாரணமாக உங்கள் குழந்தைக்கு ஒரு வேலையை செய்ய தெரியாத போது அந்த வேலையை நீங்கள் செய்ய சொன்னால் அவர்கள் மறுப்பார்கள். நமக்கு தெரியாது அவர்கள் தெரிந்து செய்ய மாட்டேன் என்கிறார்களா அல்லது உண்மையி அந்த வேலையை எப்படி செய்ய வேண்டும் என்று தெரியவில்லையா? முதலில் ஒரு வேலையை ஏன் செய்ய மறுக்கிறார்கள் என்று தெரிந்த பின் அந்த வேலையை செய்ய கற்றுக் கொடுக்கலாம்.

பொதுவாக ஒரு குழந்தை சுய பாதுகாப்பு முதல் சமூக திறன்கள் வரை அனைத்தையும் கற்றுக்கொள்ள குழந்தைகளுக்கு நீங்கள் மூன்று முக்கிய வழிகள் மூலம் உதவலாம்.

 1. வழிமுறைகள்
 2. ரோல் மாடலிங்
 3. படி படியாக

திறன்கள் வளர நேரம் எடுக்கும் மற்றும் பயிற்சி முக்கியமானது.என்பதை நினைவில் கொள்ளுங்கள்,

வழிமுறைகள் - சொல்வதன் மூலம் கற்பித்தல் திறன்

ஒரு விஷயத்தை எப்படி செய்வது அல்லது என்ன செய்வது என்பதை விளக்கி கூறுவதன் மூலம் கற்பிக்கும் முறை. எப்போதுமே உங்கள் பிள்ளைக்கு அறிவுறுத்தல்களையும் விளக்கங்களையும் கூற வேண்டும்  

நல்ல வழிமுறைகளை எவ்வாறு வழங்குவது

 • உங்கள் குழந்தையிடம் கவனம் இருக்கும்போது மட்டுமே அறிவுறுத்தல்களைக் கொடுங்கள். உங்கள் குழந்தையின் பெயரைப் பயன்படுத்துங்கள், நீங்கள் பேசும்போது உங்களைப் பார்க்க உங்கள் குழந்தையை ஊக்குவிக்கவும்.
 • உங்கள் குழந்தையின் உடல் நிலைக்கு ஏற்றவாறு இறங்கி பேசுங்கள்.
 • டிவி போன்ற எந்த பின்னணி கவனச்சிதறல்களும் இருக்கக்கூடாது
 • உங்கள் பிள்ளை புரிந்துகொள்ளும் மொழியைப் பயன்படுத்துங்கள். உங்கள் வாக்கியங்ள் சுருக்கமாகவும் எளிமையாகவும் இருக்கவும்.
 • தெளிவான, அமைதியான குரலைப் பயன்படுத்துங்கள்.
 • உங்கள் பிள்ளை கவனிக்க விரும்பும் விஷயங்களை வலியுறுத்த சைகைகளைப் பயன்படுத்தவும்.
 • ஒரு போஸ்டர் அல்லது விளக்கம் தரும் பலகைகளை மாட்டுவதன் மூலம் உங்கள் குழந்தைக்கு நீங்கள் கொடுக்கும் வழிமுறைகளை பின்பற்ற உதவும்.
 • உங்கள் பிள்ளை போஸ்டரை பார்த்து தாங்களே வேலை செய்ய போது தானாகவே சரிபார்க்க முடியும். சொற்களைப் புரிந்து கொள்வதில் சிக்கல் இருந்தாலும் குழந்தைகளுக்கு இந்த  சுவரொட்டி உதவும்.

ரோல் மாடலிங் - காண்பிப்பதன் மூலம் கற்பித்தல் திறன்

உங்களைப் பார்ப்பதன் மூலம், உங்கள் குழந்தை என்ன செய்ய வேண்டும், எப்படி செய்வது என்று கற்றுக்கொள்கிறது. ரோல் மாடலிங் என்பது குழந்தைகளுக்கு ஒரு புதிய திறமையைக் கற்பிப்பதற்கான மிகச் சிறந்த வழியாகும். எடுத்துக்காட்டாக, படுக்கையை எப்படி விரிப்பது மற்றும் மடிப்பது, தரையைத் துடைப்பது அல்லது பந்தை எறிவது என்று உங்கள் பிள்ளைக்குச் சொல்வதைக் காட்டிலும் உங்களை பார்த்து சீக்கிரம் கற்றுக் கொள்வார்கள்.

உடல் மொழி மற்றும் குரலின் தொனி போன்ற சொற்கள் அல்லாத தகவல்தொடர்புகள் மூலம் உங்கள் குழந்தையின் திறன்களையும் நடத்தையையும் வடிவமைக்கலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் மற்றவர்களுடன் பேசும்போது நீங்கள் அவர்களை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள் என்பதைக் காட்டலாம், அல்லது அவர்கள் கண்களை பார்த்து பேசுவது மற்றும் உங்கள் புன்னகை மூலம் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும்போது என உங்களை பார்த்து கற்றுக் கொள்வது.

ரோல் மாடலிங் மூலம் சிறப்பாக செயல்படுவது எப்படி ?

 • உங்கள் குழந்தையின் கவனத்தை பெற, அவர் உங்களைப் பார்க்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
 • உங்கள் பிள்ளையை முதலில் பார்க்கச் செய்யுங்கள், பின்னர் திறன்களை படிப்படியாக செய்யவும். இதன் மூலம் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை உங்கள் பிள்ளையால் தெளிவாகக் காண முடியும்.
 • நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதற்கான முக்கிய பகுதிகளை சுட்டிக்காட்டுங்கள். உதாரணமாக, ‘நான் எப்படி இருக்கிறேன் என்று பாருங்கள்…’. விருந்தினரை வாழ்த்துவது போன்ற சமூக திறன்களை நீங்கள் மாதிரியாகக் காட்டலாம்.
 • நீங்கள் அதைச் செய்ததைப் பார்த்தவுடன் உங்கள் பிள்ளைக்கு தனக்குத்தானே பயிற்சி அளிக்க நிறைய வாய்ப்புகளை கொடுங்கள் - எடுத்துக்காட்டாக, ‘சரி, இப்போது நீ செய்யலாம்’ என வாய்ப்பு கொடுப்பது.

படிப்படியாக: பணிகளை படிப்படியாக சொல்வதன் மூலம் திறன்களை கற்பித்தல்

சில பணிகள் அல்லது செயல்பாடுகள் சிக்கலானவையாக இருக்கும். அந்த சமயங்களில் செயல்களின் வரிசையை அல்லது பணியை படிப்படியாக சொல்லிக் கொடுப்பது.

ஒரு நேரத்தில் ஒரு திறமையை உருவாக்கும் படிகளை கற்பிப்பதே படிப்படியாக கற்பித்தல் ஆகும். உங்கள் பிள்ளை முதல் படியைக் கற்றுக்கொண்டதும், அடுத்த கட்டத்தையும், பிறகு அடுத்து என மெல்ல மெல்ல கற்பிக்க வேண்டும். உங்கள் பிள்ளை முந்தைய படியை நம்பகத்தன்மையுடனும் உங்கள் உதவியுமின்றி செய்ய முடிந்தால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு செல்லுங்கள். உங்கள் பிள்ளை முழு பணியையும் தாங்களாக செய்யும் வரை நீங்கள் தொடர்ந்து சொல்ல வேண்டும்.

பணி சிக்கலானதாக இருந்தால், பணியின் முதல் பகுதியைக் காட்டி, உங்கள் பிள்ளைக்கு பயிற்சி எடுக்க வாய்ப்பு கொடுங்கள். பிறகு அடுத்த கட்டத்திற்கு செல்லுங்கள். உங்களால் முடிந்தால் எளிதான பகுதிகளுடன் தொடங்கவும்.

  உங்கள் பிள்ளைக்கு புதிய திறன்களைக் கற்றுக்கொள்ள உதவும் முறைகள்:

 • நீங்கள் தொடங்குவதற்கு முன், புதிய திறமையைக் கையாள உங்கள் குழந்தைக்கு ஒருங்கிணைப்பு, உடல் திறன் மற்றும் வளர்ச்சி முதிர்ச்சி இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால் மிகவும் சிக்கலான திறன்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் பிள்ளைக்கு சில அடிப்படை திறன்களை நீங்கள் கற்பிக்க வேண்டியிருக்கும்.
 • நேரம் மற்றும் சூழலைக் கவனியுங்கள். குழந்தைகள் அதிக எச்சரிக்கையுடனும் கவனம் செலுத்தும் போதும் சிறப்பாகக் கற்றுக்கொள்கிறார்கள். ஆகவே, சிறு தூக்கத்திற்கு அல்லது உணவு நேரத்திற்கு முன்பு புதிய திறன்களைக் கற்பிப்பதைத் தவிர்க்கவும்.
 • உங்கள் பிள்ளைக்கு திறன்களுக்கான பயிற்சி செய்ய வாய்ப்பு கொடுங்கள். திறன்கள் கற்றுக்கொள்ள அவகாசம் எடுக்கும், மேலும் நடைமுறையில் உங்கள் குழந்தைக்கு  விளக்கங்கள் தேவைப்பட்டால் பணியை மீண்டும் செய்து காட்டுங்கள் அல்லது விளக்குங்கள்.
 • குறிப்பாக கற்றலின் ஆரம்ப கட்டங்களில், புகழையும் ஊக்கத்தையும் அதிகமாக கொடுங்கள். உங்கள் பிள்ளை உங்கள் அறிவுறுத்தலைப் பின்பற்றும்போது அல்லது திறமையைக் கடைப்பிடிக்கும்போது அவரைப் புகழ்ந்து, நன்றாகச் செய்ததைச் சரியாகச் வெளிபப்டுத்துங்கள்.
 • உங்கள் பிள்ளை பணியை சரியாக செய்யதா போது எதிர்மறையான கருத்துகளை தவிர்க்கவும். அடுத்த வாய்ப்பு கொடுக்கவும். அடுத்த முறை அந்த பணியை உங்கள் பிள்ளை சரியாக, புதிதாக எப்படி செய்ய முடியும் என்பதை விளக்க வார்த்தைகளையும் சைகைகளையும் பயன்படுத்தவும்.

உங்கள் பிள்ளையின் நடத்தை மேம்படுவதற்கு முன்பு நடத்தை மோசமடையக்கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், குறிப்பாக உங்கள் குழந்தையிடம் நீங்கள் அதிகம் எதிர்பார்க்கிறீர்கல் என்றால். ஒரு நேர்மறையான மற்றும் ஆக்கபூர்வமான அணுகுமுறை மட்டுமே உதவக்கூடும்

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

 • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த பெற்றோர் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}