உங்கள் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதுமே முதலில் அதிர்ச்சிக்கு உள்ளானது பெற்றோர்களே. இந்த வைரஸிற்கு தடுப்பு மருந்து இன்னும் கண்டுபிடிக்காத சூழலில் இதிலிருந்து எவ்வாறு தங்கள் குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற குழப்பமே அனைத்து பெற்றோரின் மனதிலும் எழுந்தது. ஏனென்றால் பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும். இதனால் அடிக்கடி காய்ச்சல் ஜலதோஷம் என பலவகை தொடர்கள் அவர்களது உடல் நலனை பாதிக்கிறது.
கரோனா பரவிக் கொண்டிருக்கும் இந்த சூழலில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வெளியே செல்லவிடாமல் வைப்பதும் அவர்களுக்கு எதிர்ப்பு சக்தி மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கான சிறந்த உணவுகள் கொடுப்பதும் மிக மிக அத்தியவாசியமான ஒன்று. எந்தெந்த உணவுகள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது என்பதற்கான குறிப்புகளை இப்பதிவில் பார்ப்போம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகள்
நம்முடைய உணவிலே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியிருக்கின்றது. தினமும் உங்கள் குழந்தைகளின் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் அவர்களின் நோய் எதிர்க்கும் திறனை அதிகரிக்கலாம்.
துளசி - நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் பெரிதளவில் துளசி உதவுவது. துளசியை தண்ணீரில் கொதிக்க வைத்து பருகலாம். துளசி மூலிகை டீ குடிக்கலாம்.
மிளகு - மிளகை ரசமாகவோ, சிறிது தேனில் கலந்தோ, கஷாயம் வைத்தோ கொடுக்கலாம்.
ஆடாதோடை இலை - ஆடாதோடை கஷாயம் வைத்து கொடுக்கலாம்.
இந்த மூன்றுன்மே சுவாசம் மற்றும் சளி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கும் நல்லது.
சூப் வகைகள் - தக்காளி சூப், கேரட் சூப், காய்கறி கலவை சூப் வைத்துக் குடிக்கலாம்.
ரசம் - இந்திய உணவு வகையில் மிக முக்கியமான பங்கு வகிக்கும் ரசத்தில் நம் உடலுக்கு நன்மை தரக்கூடிய மசாலாக்கள் பல உண்டு. இஞ்சி, பூண்டு மிளகு பெருங்காயம் கொத்தமல்லி என நோய் எதிர்ப்பு திறனை கொடுக்கக்கூடிய சத்துக்கள் அதில் அடங்கியிருக்கிறது. இதில் மிளகின் பங்கு மிக முக்கியமானது. தூதுவளை ரசம் வைத்துக் கொடுக்கலாம்.
அன்னாசிப்பூ - குருமா குழம்புகளில் பயன்படுத்தப்படும். ஸ்டார் வடிவிலான அன்னாசிப்பூ அருமருந்தாக பயன்படுகிறது. இதில் ZINC சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.
நட்ஸ் - முந்திரி பாதாம் போன்ற நட்ஸிலும் ZINC அதிகம் உள்ளது
கீரை வகைகள் - கீரைகளிலும் அதிக அளவில் சத்துக்கள் நிறைந்துள்ளன. கூட்டாகவோ, பொரியலாகவோ, ஸ்மூத்திஸ் ஆகவோ உங்களுக்கு குழந்தைக்கு பிடித்த வகையில் செய்து கொடுக்கலாம். கொத்தமல்லி மற்றும் புதினாவை துவையலாகவோ, சாதமாகவோ, குழம்பிலோ தினமும் சேர்த்துக் கொள்ளலாம்
மசாலா பொருட்கள் - மிளகு, கருஞ்சீரகம், இஞ்சி, பூண்டு, பெருங்காயம் கொத்தமல்லி, அண்ணாச்சி பூ போன்றவை வாசனைப் பொருளாக மட்டுமின்றி உடலுக்கு நன்மை தரக்கூடிய பண்புக்கூறுகளை கொண்டது. சூப் , குழம்பு வகைகள் கருஞ்சீரகத்தை சேர்த்துக் கொள்ளலாம்.
சட்னி வகைகள் - இஞ்சி சட்னி, பூண்டு சட்னி போன்றவை எதிர்ப்பாற்றல் தருபவை. உங்கள் குழந்தைக்கு காலை அல்லது இரவு உணவுக்கு கொத்தமல்லி, புதினா, இஞ்சி, பூண்டு சட்னிகள் அரைத்துப் பறிமாறலாம். 3 பூண்டை நசுக்கி பாலில் சேர்த்துக் கொடுக்கலாம்.
பழங்கள் - கருப்பு திராட்சை, ஸ்டாபெரி, பப்பாளி மற்றும் வைட்டமின் சி அதிகமுள்ள நெல்லிக்காய், கொய்யாப்பழம், ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவை உடலுக்கு சக்தி கொடுக்கும். உலர் திராட்சை கொடுக்கலாம்.
சர்க்கரைவள்ளி கிழங்கு - வேகவைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
குறிப்பாக, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி ஆகும் பழங்களை விட, நம்மூரில் விளைந்த பொருட்களை மட்டுமே வாங்கி சாப்பிட்டாலே எதிர்ப்பு திறன் அதிகரிக்கும். அதே போல் கடைகளில் வாங்கிய உணவை சாப்பிடுவதை தவிர்த்து வீட்டில் சுத்தமாக நன்கு கழுவி வேகவைத்து உண்பது ஆரோக்கியமானதாக இருக்கும்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், துரித உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. இந்த உணவு வகைகளில் உடலுக்கு கேடு தரும் ரசாயனங்கள் கலந்து இருக்க வாய்ப்புள்ளதால் உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
வைட்டமின் டி
நோய் எதிர்க்கும் திறனை அதிகரிக்க உதவுவதி முக்கியமானது வைட்டமின் டி ஒவ்வொருவருக்கும் வைட்டமின் டி சத்து மிக அவசியமானது. தினமும் குறைந்தது 20 நிமிடம் வெயில் நம் மீது பட்டால் சூரிய ஒளியிலிருந்து வைட்டமின் டி நமக்குக் கிடைக்கிறது. அதனால் குழந்தைகளை காலை இளம் வெயிலில் அல்லது மாலை வெயிலில் சிறிது நேரம் விளையாட வைக்கலாம். இப்போதுள்ள சூழலில் தினமும் மொட்டை மாடியில் விளையாட வைக்கலாம். வைட்டமின் டி சத்து அவர்களுக்கு கிடைக்கும்.
குழந்தைகளின் ஆரோக்கியத்தை வளர்க்க இது ஒரு நல்ல தருணம்
எப்போதும் கொரோனாவின் அச்சத்தில் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. முன்னெச்சரிக்கையும், பாதுகாப்பு நடவடிக்கையும் பின்பற்றினாலே நலமாக இருக்கலாம். மேலும் நம் குடும்பத்தின் ஆரோக்கியத்தை வளர்க்க இது ஒரு நல்ல தருணமாகும். முக்கியமாக வேலைக்கு செல்லும் பெற்றோரால் ஊட்டச்சத்தான உணவுகளை தினமும் தங்கள் குழந்தைக்கு வழங்க முடியாமல் இருந்திருக்கும். ஆனால் இந்த தருணத்தில் குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையானவற்றை நிதானமாக சிந்தித்து அட்டவணைப்போட்டு தயார் செய்து கொடுக்கலாம். அவர்களின் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க நமக்கு கிடைத்திருக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக இந்த தருணத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
Be the first to support
Be the first to share
Comment (0)
Related Blogs & Vlogs
No related events found.
Loading more...