• உள்நுழை
  • |
  • பதிவு
பெற்றோர் கல்வி மற்றும் கற்றல் பொழுதுபோக்குகள்

உங்கள் குழந்தையை வீட்டிற்குள் பிஸியாக வைக்கும் 7 வழிகள்

Radha Shri
1 முதல் 3 வயது

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Apr 27, 2020

 7
நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

குழந்தைகளைப் பொறுத்தவரையில் வீட்டில் இருக்கும் போது  அவர்கள் அதிகாலையில் எழுந்திருக்கவோ பள்ளிக்கு செல்லவோ அல்லது வீட்டுப்பாடம் பற்றி யோசிக்கவோ வாய்ப்புகள் இருக்காது. இதனால் குழந்தைகள் எளிதில் சலித்துக் கொள்கிறார்கள் குறிப்பாக இப்போது உள்ள இந்த ஊரடங்கில் வீட்டை விட்டு வெளியேறுவது பாதுபாப்பில்லை என்பதால் குழந்தைகள் நேரம் கழிக்க மிகவும் சிரமப்படுகிறார்கள்.  அவர்கள் எளிதில் எரிச்சல் அடைவதும், கோபம் கொள்வதும் உண்டு. குறிப்பாக இந்த சமயத்தில் உங்கள் குழந்தையை பிஸியாக வைத்திருப்பதற்கான உதவிக்குறிப்புகளை இங்கே பார்க்கலா,ம்.

சக பெற்றோர்கள் பரிந்துரைத்த மற்றும் முயற்சித்த உதவிக் குறிப்புகளை இங்கே பார்க்கலாம் உங்கள் குழந்தையை இப்போதுள்ள சூழ்நிலையில் மகிழ்ச்சியுடனும்  பிஸியாகவும் வைத்திருக்க உதவும்.

1. குழந்தைகளுக்குள் இருக்கும்  கிரியேட்டிவிட்டியை வெளிக்கொண்டு வருவது:

உங்கள் குழந்தையிடம் வெற்றுத்தாள்களை கொடுத்து அதில் படங்கள் வரைய சொல்லலாம். அவர்கள் என்ன வரைந்தாலும், கலரிங் செய்தாலும் அதை பாராட்டுங்கள் மற்றும் பெயிண்ட் பண்ண சொல்லலாம் . அவர்கள் தரையை பெயிண்ட் ஆக்காமல் இருக்க அவர்களுக்கு ஒரு நியூஸ் பேப்பர்  கொடுத்து அதில் விரித்து அதன் மேல் அமரவைத்து வாட்டர் கலர் கொடுத்து கலரிங் பண்ண சொல்லலாம்.

2. வீட்டு வேலைகளில் உதவட்டும்

வீட்டு வேலைகளில் உங்கள் குழந்தையை ஈடுபடுத்தலாம். உணவுக்கு முன் அட்டவணையை அமைப்பது ஒரு குறிப்பிட்ட இடத்தை தூய்மைப்படுத்துவது துணியை மடித்து வைப்பது காய்களை ஃப்ரிட்ஜ்  அடிக்கி  வைப்பது என அவர்களை ஈடுபடுத்துவதன் மூலம் அவர்களின் நேரம் கழிவது மட்டுமில்லாமல் ஏதோ ஒரு செயலில் அவர்கள் ஈடுபாட்டுடன் செய்வதற்கான வாய்ப்பாகும். கூடவே பொறுப்பையும் கற்றுக் கொள்கிறார்கள் இதனால் நாளடைவில் அவர்களுடைய வேலையை அவர் செய்வதற்கான பழக்கமாக மாற இந்த அனுபவம், கற்றலாக இருக்கும்.

3. ஒன்றாக விளையாட்டுக்களை விளையாடலாம்

பொதுவாக குழந்தைகளுக்கு பெற்றோருடன் விளையாடும் நேரம் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை பல காரணங்களினால் வீட்டில் இருக்கும் பெற்றவர்களாக இருந்தாலும் வேலைக்கு செல்பவராக இருந்தாலும் பெற்றோரும் குழந்தைகளும் சேர்ந்து விளையாடும் நேரம் என்பது அரிதாகவே கிடைக்கிறது. இப்போது இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஒன்றாக விளையாட்டுக்களை விளையாடலாம். உதாரணத்திற்கு போர்டு கேம்ஸ், ஏணியும்-பாம்பும், இசை விளையாட்டுகள் புதையல் விளையாட்டுகள் மறைக்கப்பட்ட பொக்கிஷங்களை உங்கள் பிள்ளைகளை கண்டுபிடிக்க செல்லலாம், அவர்களுடன் நடனமாடுவது, புகைப்படங்கள் எடுத்துக் கொள்வது என  இப்போது இருக்கிறா இந்த இக்கட்டான சூழ்நிலையில் சிறந்த தருணங்களாக பெற்றோர்கள் நாம் நினைத்தால் மாற்றலாம்.

4. DIY ப்ராஜெக்ட்ஸ்

பெரிய குழந்தைகளை சில ப்ராஜெக்ட்ஸ் கொடுத்து ஈடுபடுத்தலாம் உதாரணத்திற்கு இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கு அறிவியல் தொடர்பான தலைப்புகளில் வெட்டி ஓட்டுதல், சார்ட் உருவாக்குவது ம்  என ஒரு புதுமையான விஷயத்தை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பாக இருக்கும்.  சிறு குழந்தைகளாக இருந்தால் கிரீட்டிங் கார்ட் பண்ண சொல்லலாம் அட்டை பெட்டி வைத்து மாஸ்க், கிரீடம் எல்லாம் செய்ய சொல்லலாம். அவர்கள்  செய்யும் இந்த கிரியேடிவ் வொர்க் மூலம் படைப்பாற்றலையும் தன்னம்பிக்கையையும் அதிகரிக்க செய்கின்ற்து.

5. கலந்துரையாடும் விளையாட்டுகள்:

கலந்துரையாடும் விளையாட்டுகளை குழந்தைகளோடு சேர்ந்து விளையாடலாம். உதாரணத்திற்கு ஆங்கிலத்தில் சைமன் கேம்ஸ் என்ற ஒரு கேம் இருக்கிறது. இந்த கேம் குழந்தைகளின் உடலைப் பற்றிய விழிப்புணர்வை வேடிக்கையான வழியில் அதிகரிக்க உதவுகின்றது.  இதோடு அவர்களது மோட்டார் திறன்களும் அதிகரிக்கின்றது. இது போன்ற விளையாட்டுகளை குழந்தைகளுடன் விளையாடும் போது இயல்பாகவே ஈடுபடுவதோடு நிறைய நேரம் சலிப்பு இல்லாமல் விளையாடுவார்கள்

6.வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கலாம்

பொறுத்தவரையில் கதைகள் கூறுவதும் கதைகளை வாசித்துக் காட்டுவது அல்லது அவர்களிடம் கதை கேட்பதும் அவர்களுக்கு பிடித்தமான ஒரு செயலாகும்.  நீங்கள் அவர்களுக்கு கதை சொல்லலாம் அல்லது அவர்களுக்கு ஏதாவது ஒரு புத்தகத்திலிருந்து கதையை வாசித்துக் காட்டலாம். இதன் மூலம் அவர்களுக்கு பல்வேறு தலைப்புகள் பற்றிய தகவல்களும், அறிவும் கிடைக்கும்

7. தினமும் விளையாட்டு நேரம்

இருக்கும் இந்த ஊரடங்கு சமயத்தில் நண்பர்கள் வீட்டுக்கு செல்வதோ அல்லது அவர்களை வீட்டுக்கு அழைத்து விளையாடுவதோ சிறந்ததல்ல . ஆதலால் சில விளையாட்டுகளை உங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே நீங்கள் திட்டமிடலாம் தினமும் ஏதாவது ஒரு நேரத்தில் உங்கள் வீட்டில் அனைவரும் கூட வேண்டும். அந்த விளையாட்டிற்கான பொருட்களை எடுத்து வருவது ,சுத்தம் செய்வது ஒழுங்கமைப்பது என குழந்தைகளோடு சேர்ந்து நீங்களும் அந்த பணியில் ஈடுபடலாம். அதன்பின் விளையாடி முடித்துவிட்டு அதைப்போல் நீங்கள் அவர்களோடு சேர்ந்து அதை அந்த இடத்தில் வைப்பதற்கு உதவலாம் இதனால் குழந்தைகளுக்கு ஒரு புதுவித அனுபவம் கிடைப்பதோடு அவர்கள் நம்மிடமிருந்து இயல்பாகவே நிறைய நன்னடத்தையை கற்றுக் கொள்வார்கள்.

விளையாட்டுகளை மாற்றிக் கொண்டே இருங்கள் குழந்தைகளுக்கு சில நாட்களிலேயே ஒரே மாதிரியான விளையாட்டுகள் சலிப்பை உண்டாக்கும் அதனால் அனைத்து விளையாட்டுப் பொருட்களையும் அவர்கள் முன் எடுத்து வைக்காமல் சில விளையாட்டு பொருட்களை அவர்களுக்கு தெரியாத இடத்தில் வைத்துவிடலாம் குழந்தைக்கு இப்போது இருக்கும் விளையாட்டுப் பொருட்கள் போரடிக்குது என்று சொன்னவுடன் மற்ற விளையாட்டுப் பொருட்களை எடுத்துக் கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கு எளிதாக இந்த சமயத்தில் சலிப்பு ஏற்படும் என்பதால் அவர்களோடு சேர்ந்து திட்டமிடுவது மிகவும் உதவியாக இருக்கும். நீங்கள் திட்டமிடும்போது உங்கள் குழந்தைகளையும் அதில் ஈடுபடுத்தி அவர்களிடம் என்னென்ன விளையாட்டுகள் எப்படி விளையாடுவது அவர்களுக்கு என்ன தேவை என்ன ஆக்டிவிடீஸ் அவர்களுக்கு ஆர்வத்தை அதிகரிக்கிறது போன்ற விஷயங்களை அவர்களுடன் கலந்து பேசி திட்டமிடலாம். இதனால் குழந்தைகளின் ஈடுபாடும் அதிகளவில் இருக்கும் அதோடு அவர்களுக்கு இந்த இந்த நேரத்தில் இருக்கும் பயமோ பதட்டமோ அதிகளவில் பாதிக்காது .

குழந்தைகளை எல்லா காலகட்டத்திலும் நிச்சயமாக மகிழ்ச்சியாக வைக்க முடியும் அதற்கு பெற்றோராகிய நாமே இப்போதைக்கு அவர்களுக்கு இருக்கும் ஒரே ஆதரவு

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

  • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த பெற்றோர் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}