• உள்நுழை
  • |
  • பதிவு
பெற்றோர்

உங்கள் குழந்தைகள் தாத்தா பாட்டிகளுடன் நேரத்தை செலவிட காரணங்கள்

Parentune Support
3 முதல் 7 வயது

Parentune Support ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Nov 14, 2019

"நம்ம பாட்டி , தாத்தா வீட்டுக்கு எப்போ போறோம்?" என்று தொலைவில் பேத்தியும் பேரனும் கேட்ட கனமே "வாங்க டா கண்ணுகளா'னு" மனம் பூரித்து அன்பு  தளும்ப பேசும் தாத்தா பாட்டியிடம் செல்ல காரணம் தேவையா ?!

குழந்தைகள் பாட்டி தாத்தா அருமை அறிந்து தொலைவில் இருப்போருக்கும் உடன் வசித்துவருவோருக்கும் எதனால் தாத்தா பாட்டி இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு கோடிட்டு நிரப்ப பல காரணங்களில் சில

குழந்தைகளுக்கு தாத்தா பாட்டி தேவை 5 காரணங்கள்

உங்கள் குழந்தைகள் தாத்தா பாட்டிகளுடன் தரமான நேரத்தை செலவிட்டால் அவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் பின்வருமாறு. இங்கே படியுங்கள்

1. பெற்றோர் இணையான பெற்றோர்

நம்மை பெற்று வளர்க்க தெரிந்த அவர்களுக்கு நாம பெற்றதை பற்றி தெரியாதா என்ன ?! அவர்கள்  மரபணுவிலிருந்து வந்த சந்ததிக்கு இணையான பெற்றோராக இருக்கும் தகுதி பாட்டி தாத்தாக்கு மட்டுமே நிதர்சனமாக சேரும். குழந்தைகளுக்கு தன் பெற்றோரை தாண்டி பாதுகாப்பாக உணரும் இடம் என்றால் அது பாட்டி தாத்தாவின் அரவணைப்பே . அன்பு , அரவணைப்பு , சதோஷம், துக்கம், கோபம், ஆசை, சிந்தனைகளை மனத்தின்பால் பகிர்வது என்று உணர்வுபூர்வமாக சேரும் ஒரு உறவே தாத்தா பாட்டியை  பெற்றோரின் நகலாக மாற்றிவிடுகிறது.

 

2. ரெண்டாம் நண்பர்கள் - பெற்றோருக்கு பிறகு

இவர்களே ரெண்டாம்  நண்பன் ; இவர்களே ரெண்டாம் எதிரி . அவர்கள் எப்படிப்பட்ட நண்பர்களாக இருக்கிறார்களோ அப்படியே அந்த குழந்தைகளின் எதிர்கால நட்பு வட்டாரம் அமையும். பொய் சொல்லி பழக்கும் நட்பு எதிர்காலத்தில் திருடத்தூண்டும்; அன்பு காட்டி விதைக்கப்பட்ட நட்பு, எதிரியை கூட நேசிக்க தூண்டும் வல்லமையுடையது.

 

3. கலைப்பெட்டகம்

எங்கிருந்து இவர்களுக்கு இத்தனை கற்பனை வந்தது என்று வியக்கும் அளவிற்கு கதைவளம் , கதை கூறும் திறன் , நடித்து அரங்கேற்றம், என பல திறமைகளையும் சேர்த்து தனக்குள் இருக்கும் குழந்தையையும் அடையாளம் கண்டு குழந்தையாகவே மாறி குழந்தையோடு இணையும் திறமை சில சமயங்களில் பெற்றோரால் கூட செயல்படுத்த முடியாது . தாத்தா பாட்டியால் அதட்டாமல், அடிக்காமல் , அமைதியாகவும் பக்குவமாகவும் தங்கள் விளையாட்டுத்தனத்தால் கட்டி போடமுடியும். தற்போது வளர்ந்துவிட்ட கைபேசி காட்டும் பொழுது போக்கை விட பாட்டி  தாத்தாவிடம் இருக்கும் பொழுது போக்கு அம்சம் ஜாஸ்தி.

 

4. இயல்பான மருத்துவர்கள்

அவர்களுக்கு மிகவும் துல்லியமாக குழந்தைகளின் உடல்  வாகு தெரியும். குழந்தைகளுக்கு உடல் உபாதை வருவதுபோல் இருந்தாலும் வந்தாலும் தானே  மருத்துவம் பார்க்க தயாராக இருப்பார்கள். அவர்களால் உடனடி நிவாரணதுக்கும் வழி இருக்கும், வியாதியை விரட்டி அடிக்கவும் வழி தெரியும். இதில் தடவும் பாட்டியும் ஒரு அணியாக செயல்பட்ட சம்பவம் நிறைய உண்டு . ஒருவர் சூத்திரத்தை கூற, ஒருவர்  செயல் படுத்துவார்.

 

5. மறுபடியும் முதலிருந்து

பேரன் பேத்தி வாழ்க்கையில் பங்குஎடுத்து கொள்வது பெற்றோருக்கும் குழந்தைக்கு மட்டும் உகந்ததல்ல தாத்தா பாட்டிக்கும் ஒரு மாரு வாழ்வாக இருக்கும். அவர்கள் குழந்தை வளர்க்கும் காலத்தில் செய்ய நினைத்ததை செய்ய ஒரு வாய்ப்பு, குழந்தை வளர்ப்பில் செய்த தவறுகளை திருத்திகொள்ள மறுவாய்ப்பு, நிறைய நேரம் இருப்பதால் குழந்தைகளுக்கு உலகத்தை காட்ட, நேரம் கழிக்க , பெற்றோராக செய்ய முடியாததை தாத்தா பாட்டியாக செய்ய வாய்ப்பு கிடைத்தால் வேண்டாம் என்றா தோன்றும் ?

 

  • கருத்து
விளக்கக்குறிப்புகள்()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

Always looking for healthy meal ideas for your child?

Get meal plans
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}