• உள்நுழை
 • |
 • பதிவு
பெற்றோர் கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழா

உங்கள் குழந்தைகளுக்கான டாப் 5 கிறிஸ்துமஸ் டிஸ்ஸர்ட்ஸ்

Kiruthiga Arun
3 முதல் 7 வயது

Kiruthiga Arun ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Dec 25, 2018

 5
நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

கிறிஸ்துமஸ் பண்டிகை வந்தாலே பரிசுகளுக்கு அடுத்து நமக்கு நினைவிற்கு வருவது கேக் தானே. எல்லோராலும் வீட்டில் கேக் செய்ய முடிவது இல்லை. அதனால் வீட்ல விடுமுறையில் இருக்கும் உங்கள் குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ்  டஸ்ஸர்ட் எப்படி செய்றதுன்னு சொல்றேன். 

குழந்தைகளுக்கான அற்புதம் இனிப்புகள்(Christmas Desserts For Kids)

தொந்தரவு குறைந்த செயல்முறை. இது நிச்சயமா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் டஸ்ஸர்ட் இது.

தேவையான பொருட்கள்:

 1. 150  கிராம் கிரீம்
 2. 200  கிராம் டார்க் சாக்லேட் 
 3. கோகோ பவுடர் 
 4. ஐசிங் சர்க்கரை 

செய்முறை:

ஒரு கடாய்ல முதலில் கிரீம் சேர்த்துக்கோங்க. அது நல்ல கொதிச்சு வரணும். அடுப்பில இருந்து அதை இறக்கிட்டு அதனுடன் சாக்லேட் சேர்த்து நல்ல கிளறணும். சாக்லேட் உருகி நல்ல கிரீம் ஆகுற வர கிளறணும். இந்த கலவையை இரண்டில் இருந்து மூன்று மணி நேரம் வரை ஆற விடுங்க. நல்ல ஆறிய பிறகு அவற்றை சிறு உருண்டைகளாக உருட்டி கோகோ பவுடரிலும் ஐசிங் சர்க்கரையிலும் அல்லது பொடியாக்கி வச்சிருக்கும் பிஸ்தா பாதாம் போன்றவற்றில் உருட்டி எடுங்க. சுவையான ட்ரபிள் தயார்

2. சாக்லேட் புட்டிங்

தேவையான பொருட்கள் 

 1. கோகோ பவுடர் 30gm
 2. சோள மாவு 60gm
 3.  பொடியாகிய சர்க்கரை 120gm 
 4. பால் 800ml

செய்முறை :

கடாயில் பால் அதில் கோகோ பவுடர் மற்றும் சோள மாவை சலித்து சேர்த்துக்கோங்க, கட்டி இல்லாம நல்ல கிளறிடுங்க. மிதமான தீயில் சூடு பண்ணுங்க. பிறகு சர்க்கரை அதில் சேர்த்து நல்ல கிளறிடுங்க.நல்லா கட்டியா கிரீம் ஆகுற வரை கிளரிவிட்டுகிட்டே இருங்க . நல்ல திக்கா பதம் வந்த பிறகு கண்ணாடி பாத்திரத்தில் ஊத்தி மூடி வைங்க. அப்போ தான் அது மேல ஆடை படராது. அவ்வளவு தான் புட்டிங் தயார் 

3. பிரட் கேக்

தேவையான தேவையான பொருட்கள்:

 1. பிரட் 4
 2. 1/3 cup விப்பிங் கிரீம் 
 3. 2tblspn பவுடர் சர்க்கரை 
 4. 1tblspn கோகோ பவுடர்
 5. 1/2tsp வெண்ணிலா எசென்ஸ் 
 6. அலங்காரத்துக்கு செர்ரி பழம் 

தேவையான தேவையான பொருட்கள்:

பாத்திரத்தில் கிரீம் கோகோ பவுடர் சர்க்கரை எசென்ஸ் அனைத்தையும் சேர்த்து நல்ல பீட்டர் பயன்படுத்தி அடிக்கணும். ஒரு நிமிடம் அடிச்ச பிறகு நல்ல கிரீம் ஆகிடும். ப்ரெட்டின் மூளைகளை வெட்டிவிட்டு அதன் மேல் கிரீமை தடவவும். ஒரு ப்ரெட்டின் மேல் அடுத்த பிரட் வைத்து கிரீம் தடவனும். இப்படி நாலு பிரெட்டும் முடிஞ்சவுடன் அதை சுற்றியும் தடவிட்டிங்கனா பாக்கவும் சுவைக்கவும் கேக் தான்.  அதன் மேல் செர்ரி பழத்தை வைத்து குளிர்சாதன பெட்டியில் வைத்து குழந்தைகள் விரும்பும் போது தரவும் 

4. கேரட் டாஃபி

தேவையான பொருட்கள்:

 1. கேரட், சர்க்கரை- தலா 1/2 கிலோ 
 2. தேங்காய்-அரைமூடி
 3. முந்திரி பருப்பு-1/4 கிலோ 
 4. வென்னிலா எஸென்ஸ்-1 தேக்கரண்டி
 5. நெய்.​

செயல்முறை:

கேரட்டைக் கழுவி, சிறு துண்டுகளாக்கி, மிக்ஸியில் அடித்து, கெட்டி ஜூஸ் எடுக்கவும். வாணலியில் அதை ஊற்றி மிதமான தீயில் காய்ச்சவும். இதில் சர்க்கரை, தேங்காய்த் துருவலைக் கொட்டிக் கிளறிக் கொண்டே இருக்கவும். இடையிடையே நெய் ஊற்றவும். சற்று இறுகி வரும்போது, நெய்யில் வறுத்த இரண்டிரண்டாக உடைத்த முந்திரிப் பருப்புகளைப் போட்டுக் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாத பதத்தில் திரண்டு வரும்போது ‘எஸென்ஸ்’ விட்டுக் கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி சற்று ஆறியவுடன் துண்டுகள் போடவும். மீண்டும் மீண்டும் தின்னத் தூண்டும் கேரட் டாஃபி தயார்.

5. சாக்லேட் பேன் கேக்

தேவையான பொருட்கள்:

 

 1. 100 கிராம் மாவு
 2. 30 கிராம் நல்ல தரமான கோகோ
 3. 2 பெரிய முட்டை
 4. 300 மிலி 1% பால்
 5. 50 கிராம் சர்க்கரை
 6. ½tsp பேக்கிங் பவுடர்
 7. ஒரு சிட்டிகை உப்பு
 8. 30 கிராம் உருகிய வெண்ணெய்

செயல்முறை:

மாவு, கொக்கோ தூள், பேக்கிங் பவுடர், உப்பு மற்றும் சர்க்கரை அனைத்தையும் ஒரு கிண்ணத்தில் கலக்கவும். மற்றோரு கிண்ணத்தில் முட்டையும், பாலையும் நன்றாக அடிக்கவும், பிறகு அதில் ஒரு பாதியை எடுத்து வைத்துவிட்டு, மீதியை மாவுக் கலவையோடு சேர்க்கவும்.கலவையை ஒரு பெரிய தட்டின் மீது பரப்பி அதனை மூடி வைத்து அரை மணி நேரம் ரெஸ்டில் வைக்கவும்.

பேன் கேக் தயார் செய்யும் முன், பேட்டர் கலவையை மிதமாக கலக்கவும். பிறகு டவாவில் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய்யை உருக்கி டவாவின் அடிப்பகுதி முழுவதும் பரப்பி இருக்கும்படி செய்ய வேண்டும். மறுபக்கம் வேக அதை திருப்பி போட வேண்டும். நடுவில் மிருதுவாக இருக்க வேண்டும் என்பதால் அதிகமாக வேகாமல்பார்த்துக் கொள்ளவும். அலுமினிய படலத்துடன் இணைந்த ஒரு தட்டில் சூடாக வைத்து, அவை தளர்வாக மூடிவிடவும். தயாரானவுடன் அலங்கரித்து பரிமாறவும்.

உங்கள் குழந்தைகளோடு இந்த ருசியான டிஸ்ஸர்ட்ஸுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்.

இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். 

 

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

 • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}