• உள்நுழை
 • |
 • பதிவு
பெற்றோர் கல்வி மற்றும் கற்றல்

உங்கள் குழந்தையின் மோட்டார் திறமையை வளர்க்கும் வழிகள்

Radha Shri
1 முதல் 3 வயது

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Feb 01, 2019

நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

குழந்தைகள் செய்யும் எல்லா செயல்களும் ரசிக்கத்தக்கவை. ஒவ்வொரு வயதிற்கான வளர்ச்சியை குழந்தைகள் அடையும் போது அவர்களால் இயல்பாக அந்த செயல்களை செய்ய முடிகிறது. குழந்தைகளோடு வளர்ச்சிப் பட்டியலில் ஃபைன் மோட்டார்  மற்றும் க்ராஸ் மோட்டர் திறன்கள் என்பது முக்கியமான திறன்களாக பார்க்கப்படுகிறது.  குழந்தைகள் தங்களது சின்ன சின்ன தசைகளான கைகள், விரல்கள், மணிக்கட்டுகள் ஆகியவற்றை பயன்படுத்தி கற்றுக் கொள்வதை ஃபைன் மோட்டார்  திறன்கள் என்கிறார்கள்.

அதாவது குழந்தைகள் எழுதுவது, சிறிய பொருட்களை பிடித்திருப்பது, ஆடைக்கு பட்டன் போடுவது, புத்தக பக்கங்களை திருப்பவது, சாப்பிடுவது, கத்திரிக்கோலால் வெட்டுவது, கம்ப்யூட்டர் கீபோர்டை தட்டுவது என ஃபைன் மோட்டார் திறன்களை பயன்படுத்தி தான் இந்த மாதிரி செயல்களை செய்கின்றார்கள். ஃபைன் மோட்டார்  திறன்களை அதிகரிக்க துல்லியம் மற்றும் ஒருக்கிணைப்பு தேவைப்படுகின்றது. ஃபைன் மோட்டார்  திறன்களுக்கு பிறகு க்ராஸ் மோட்டர் திறன்கள் உருவாகின்றது. அதாவது பந்தை உதைப்பது, தூக்கி எறிவது, குதிப்பது மற்றும் நடப்பது. இதற்கு வலிமையான தசைகள் தேவைபப்டுகின்றது.

மோட்டார் திறன்களை வளர்க்க ஒரு குழந்தைக்கு பெற்றோர்கள் எவ்வாறு உதவ முடியும்?

குழந்தையின் ஃபைன் மோட்டார் திறன்களை வளர்ப்பதற்கு எவ்வாறெல்லாம் பெற்றோர்கள் உதவலாம் என்பதை பார்க்கலாம்…

ஃபைன் மோட்டார் திறன்களை வளர்ப்பதற்கு மிக மிக அவசியம் பயிற்சி. குழந்தைகள் ஒரு செயலை திரும்ப திரும்ப செய்வதை பார்த்திருப்போம். அந்த செயலை சரியாக செய்து முடிக்கும் வரைக்கும் அவர்கள் ஓய மாட்டார்கள். முக்கியமாக குழந்தைகள் ஒரு செயலை செய்ய முயற்சிக்கும் போது பெரியவர்கள் தலையீடு இல்லாமல் இருப்பது நல்லது. பாதுகாப்பு அம்சங்களை மட்டுமே கருத்தில் கொண்டு குழந்தையின் எல்லா செயல்களையும் நாம் தடுக்கக்கூடாது. அதே போல் அந்த நேரத்தில் அவர்களுக்கு உதவி செய்வதையும் தவிர்க்கலாம். பல முறை முயற்சி செய்வதன் மூலம் குழந்தைகள் அந்த செயலை திறம்பட செய்ய கற்றுக் கொள்கிறார்கள்.

குழந்தையின் மோட்டார் திறன்களை வளர்ப்பதற்கான நடவடிக்கைகள்

பின்வரும் செயல்கள் மூலம் குழந்தைகளின் மோட்டார் திறன்களை வளர்க்கலாம்.

 • குழந்தைகளின் விரல்கள் மற்றும் கட்டை விரலை பயன்படுத்தி செய்யும் செயல்கள். Pop bubbles, அதாவது குமிழ்களை விரல்களால் அமுக்குவது.
 • இன்க் ஃபில்லர் அல்லது ஐ-ட்ராப்பர் கொண்டு அழுத்தி வண்ணங்கள் இடலாம். .
 • விரால்களால் ஓவியம் வரைவது
 • புதிர் விளையாட்டுகள் (Puzzle)
 • பட்டன் அழுத்தும் விளையாட்டுகள்
 • வடிவங்கள் அல்லது எழுத்துக்களை கண்டறிவது
 • பில்டிங் ப்ளாக்ஸ் விளையாடுவது.
 • மாவு பிசைவது
 • ஒரு தட்டில் மணல் போட்டு விளையாட சொல்வது.
 • சிறிய பொருட்களை அல்லது உருளை கிழங்கை ஒடு தட்டிலிருந்து மற்றோரு தட்டிற்கு எடுத்துப் போடுவது.

இந்த செயல்கள் குழந்தைகளின் சிறிய தசைகளுக்கு வேளைக் கொடுக்கின்றது. இதே தசைகள் மூலம் அவர்களுக்கு இந்த மோட்டர் திறன்களை நினைவில் வைத்துக் கொள்வது அதிகரிக்கும். அதாவது ஒரு செயலை திரும்ப திரும்ப செய்வதன் மூலம் அந்த செயல் அவர்கள் மூளையில் பதிந்துவிடுகிறது. அடுத்த முறை அந்த செயலை செய்யும் போது அதீத முயற்சி இல்லாமல் அதை திறம்பட செய்வார்கள். இதை மோட்டார் திறன் நினைவகம் என்கிறார்கள்.

உதாரணத்திற்கு குழந்தைகள் முதல் முறை பில்டிங் ப்ளாக்ஸ் அடுக்கும் போது அதை திரும்ப திரும்ப செய்வார்கள். இதற்கு கணக்கே கிடையாது. அவர்களுக்குள் ஒரு புரிதல் உருவானவுடன் அதில் மாஸ்டர் ஆகிவிடுவார்கள். அதன் பிறகு கட கடவென்று அடுக்கி விடுவார்கள்.

0 வயது முதல் 1.5 வயது வரை உள்ள ஃபைன் மோட்டார்  திறன்கள்

0-3 மாதம்

கிரகித்தல் (Grasping) – ஒரு சில விநாடிகளுக்கு பொருட்களை அல்லது அம்மா அப்பாவின் விரல்களை பிடித்திருக முடியும்.

3-6 மாதம்

உள்ளங்கை பிடிப்பு (Palmar Grasp) – தங்களுடைய உள்ளங்கை மற்றும் விரல்களை கொண்டு ஒரு நிமிடம் வரை பொருட்களை பிடித்திருப்பது.

6-9 மாதம்

Pincer Grasp - கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரலை பயன்படுத்தி ஒரு பொருளைப் பிடித்திருப்பது. சிறிய பொருட்களை எடுப்பர்கள். மேஜையில் முன் கையை வைத்து அழுத்தி பொருட்களை எடுக்க முயற்சி செய்வார்கள்.

9-12 மாதம்

ஆள்காட்டி விரல் – தங்களுடைய ஆள்காட்டி விரலை பயன்படுத்தி ஒரு பொருளை சுட்டிக் காட்ட தொடங்குவார்கள். தானாக சாப்பிட தொடங்குவார்கள். சின்ன சின்ன துண்டுகளை எடுத்து சாபிடுவார்கள்.

1-1.5 வயது

தனது கட்டை விரல், விரல்கள், உள்ளங்கைகளை பயன்படுத்துவார்கள். சிறிய கரண்டி, கிரயான், கலர் பென்சில் பிடித்து பயன்படுத்த தொடங்குவார்கள்.

குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான திறன்களை வளர்க்க உதவும் செயல்களை நாம் அவர்கள் இருக்கும் சூழலிலேயே உருவாக்கி கொடுக்க முடியும். இந்த அனுபவங்கள் அவர்கள் ஒரு வேலையை திறம்பட செய்ய வழிவகுக்கும்.

 

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

 • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}