• உள்நுழை
 • |
 • பதிவு
பெற்றோர் குழந்தை உளவியல் மற்றும் நடத்தை

குழந்தையின் பேசும் திறனை வளர்க்க - அவர்களை கூர்ந்து கவனியுங்கள்

Radha Shri
1 முதல் 3 வயது

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Apr 06, 2020

நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

பொதுவாக  மூன்று அல்லது நான்கு, ஐந்து வயது குழந்தைகள் அம்மா அப்பாவிடம் பேசிக் கொண்டே இருப்பார்கள். நாம் மற்றவருடன் பேசுகையில், அல்லது வேறு ஏதாவது வேலை பார்க்கையில், நாம் பிஸியாக இருக்கிறோம் என்று தெரிந்தாலும் குழந்தைகள் விடாமல் நம்மிடம் பேசிக் கொண்டே இருப்பார்கள். இது சில பெற்றோருக்கு எரிச்சலை ஏற்படுத்தும். ஆனால் நீங்கள் என்ன வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும் குழந்தைகள் பேசும் போது அவர்களுக்கு முழு கவனம் கொடுக்க வேண்டும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். குழந்தைகள் பேசும் போது ஏன் கூர்ந்து கவனிக்க வேண்டும், அதனால் அவர்களின் வளர்ச்சியில் என்னென்ன நன்மைகள் உண்டாகின்றது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

உங்கள் பிள்ளை எதைப் பற்றி பேசுகிறார் என்பதில் கவனம் செலுத்துவதற்கான வழிகள் யாவை?

பகிர்தல் வளரும்

குழந்தைகளின் அன்றாட தினத்தில் அவர்களுக்கு மகிச்சியும் ஏற்படலாம், வருத்தமும் உண்டாகலாம். அதிலும் ஆரம்ப கட்டத்தில் அவர்கள் கீழே விழுந்த விஷயத்தை அது சின்ன அடியாக கூட இருக்கலாம், அல்லது யாராவது அவர்களை மிரட்டி இருக்கலாம். இதை அம்மா அல்லது அப்பாவிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள். இந்த சமயத்தில் அவர்கள் பேசுவதை நாம் கவனிக்கையில் அவர்களுக்குள் நாம் சொல்வதை கேட்க நம் பெற்றோர் இருக்கிறார்கள் என்ற தன்னம்பிக்கையும், நமக்கும் இங்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது என்ற உணர்வும் வளரும்.

நாளை அவர்கள்  வளர்ந்து பதின்பருவத்தை அடையும் போதும்  சிறியதோ/பெரியதோ அவர்களின் பிரச்சனைகளை தயக்கமும் இல்லாமல் நம்மிடம் பகிருவார்கள்.

பிரச்சனைகளை தீர்க்கும் திறன் வளரும் – பெற்றோர் நாம் அவர்களிடம் ஏதாவது பிரச்சனைக்கு தீர்வு கேட்டால் அவர்கள் கண்டிப்பாக சொல்வார்கள். அந்த பதில் உங்களுக்கு உதவினாலும், உதவாவிட்டாலும் உதாசீனப்படுத்தாமல் கேளுங்கள். இதன் மூலம் தங்களிடமும் முடிவெடுக்கும் திறன் இருப்பதாகவும், அவர்களிடம் பிரச்சனைகளுக்கான தீர்வை காணும் திறன் இருப்பதாகவும் அறிவார்கள். மேலும் நீங்கள் குழந்தைகள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்வார்கள்.

பெற்றோருடன் நல்ல பிணைப்பு ஏற்படும் -  கூர்ந்து கவனிப்பதன் மூலம் குழந்தைகளுக்கும், பெற்றொருக்கும் நல்ல பிணைப்பு ஆரம்பத்திலிருந்தே உண்டாகும்.

எதை பார்க்கிறார்களோ அதையே கற்கிறார்கள் – குழந்தைகள் கூர்ந்து கவனிப்பதன் முக்கியத்துவத்தை பெற்றோரிடம் இருந்து கற்றுக் கொள்வார்கள். அவர்கள் பெரியவர்கள் ஆனதும் வேலை, குடும்பம், உறவுகள் என பல இடங்களில் இந்த திறன் பெரிதளவில் உதவும்.

பலமாக உணர்வார்கள் – குழந்தைகள் தங்களுடைய ஏமாற்றங்களையும், ஏக்கங்களையும் கேட்பதற்கு பெற்றோர் இருக்கிறார்கள் என்று புரிந்து கொள்வார்கள். இது அவர்கள் பல செயல்களை திறம்பட செய்ய உதவுவதோடு தோற்றாலும் ஊக்கம் கொடுக்க நபர்கள் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு பலமாக அமையும்.

சொற்களின் அர்த்தங்களை அறிவார்கள் – தொடர்ந்து அவர்கள் பேசும் போது கேட்பதும், அது தொடர்பாக அவர்களுடன் உரையாடுவதன் மூலமாக  பேச்சுத்திறன் வளர்வதோடு, அவர்களின் தொடர்புத் திறனும் அதிகரிக்கும். இதுவே அவர்கள் சமூகத்தில் மற்றவர்களுடன் உரையாடுவதற்கான முதல் படி. அதை  குழந்தைகள் வீட்டில் தான் கற்க தொடங்குகிறார்கள்.

யோசனைகளை பரிமாறுவார்கள் – குழந்தைகள் தங்களின் கருத்துக்களை, யோசனைகளை பரிமாற தொடங்குவார்கள். ஒவ்வொரு விஷயத்தையும் குழந்தைகள் அவர்களின் உலகத்தின் வாயிலாகவே அறிந்து கொண்டு பேசுவார்கள். பெற்றோர் அதை நீதிபதி போல் அணுகாமல் பகிர்தலாக மாற்றி கலந்துரையாடுங்கள்.

குழந்தைகள் பேசும்போது கேட்காததன் விளைவுகள் என்ன?

 • நேரடியாகவோ, மறைமுகமாகவோ  பெற்றோர் நம் செயல்களை பார்த்தே குழந்தைகள் அவர்களை வடிவமைக்கிறார்கள். குழந்தைகளுக்கு முதல் பள்ளியே வீடு தான். குழந்தைகள் பேசும் போது நீங்கள் கவனிக்கவில்லை என்றால் தான் சொல்வதை கேட்க இந்த வீட்டில் யாரும் இல்லை நான் முக்கியத்துவம் இல்லை என்று எண்ண தொடங்குவார்கள். தன்னம்பிக்கையும், சுயமதீப்பீட்டையும் இழக்க தொடங்குவார்கள். நீங்கள் அவர்கள் பேசும் போதெல்லாம் திருத்திக் கொண்டே இருந்தால் உங்களிடம் பேசுவதை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க ஆரம்பிப்பார்கள். உங்கள் குழந்தைகள் ஒரு பொறுப்புள்ள பதின்பருவ பிள்ளைகளாக வளர வேண்டும் என்றால் அதற்கான சூழலை இந்த வயதிலேயே நீங்கள் உருவாக்கித்தர வேண்டும்.
 • கேட்பது என்பது பெற்றோருக்குரிய பொறுப்புகளில் உள்ள ஒரு முக்கியமான திறமையாகும். இது நீங்கள் அவர்களுக்கு உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துகிறது, இந்த பாதுகாப்பான உறவு உங்கள் பிள்ளை மகிழ்ச்சி, பொறுப்பு, நம்பிக்கை மற்றும் அக்கறையுள்ள பெரியவர்களாக வளர்வதை உறுதிபப்டுத்துகிறது.

சில கேட்கும் திறனை பெற்றோர்கள் எவ்வாறு வளர்க்க முடியும்?

 1. உங்கள் குழந்தை உங்களிடம் பேசும் போது முழுமையாக கவனிக்கவும், நடுவில் குறுக்கிடுவதும், தீர்ப்பு சொல்வதும் வேண்டாம்.
 2. குழந்தைகள் ஒரு விஷயத்தை கூறும் போது அவர்களின் பார்வையில் இருந்து புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அவர்களின் கண்ணோட்டம், அர்த்தங்கள் வேறு.
 3. குழந்தைகள் பேசும் போது முதலில் ஏற்றுக் கொள்ளுங்கள், பொறுமையிழக்காதீர்கள், கேட்க உங்களுக்கு விருப்பம் இல்லையென்றாலும் கோபம் கொள்ளாமல் முழுவதையும் கேட்ட பின் அதற்கான தீர்வையோ, உரையாடலையோ தொடங்குங்கள்.
 4. நிறைய அறிவுரை கூறாதீர்கள். அவர்கள் பேசும் போது உடல் ரீதியாக மட்டும் கவனம் கொடுக்காமல், ஒட்டு மொத்தமாக கவனியுங்கள்.
 5. அவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் அவர்களிடம் பேசுங்கள். அதற்கேற்றவாறு உங்கள் மொழியை அமைத்துக் கொள்ளுங்கள்.
 6. உங்கள் குழந்தையின் உடல் மொழி அவர்கள் பேசும்போது கவனிக்கவும். அவர்கள் வெளிப்படுத்த ஏதாவது உதவி தேவைப்பட்டால் புரிந்து கொண்டு அணுகுங்கள்.
 7. கண்ணை பார்ப்பது அவசியம். ஆர்வமாக கேளுங்கள், கேள்விகளைக் கேளுங்கள், அவர்கள் பேசி முடிக்கும் முன் முடிவுகளுக்கு உடனே செல்ல வேண்டாம். நீங்கள் கவனமாக கேட்டதை அவர்கள் பேசி முடித்த வெளிப்படுத்துங்கள்.

 

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

 • 1
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.

| Nov 04, 2019

 • Reply
 • அறிக்கை
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த பெற்றோர் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}