• உள்நுழை
  • |
  • பதிவு
தொழில் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் கர்ப்பம்

உங்கள் மகப்பேறு விடுப்பை எப்போது எடுக்கலாம்?

Kiruthiga Arun
கர்ப்பகாலம்

Kiruthiga Arun ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Feb 04, 2020

நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

மகப்பேறு கால விடுப்பு என்பது  எல்லாருமே முதல் மாதத்துல இருந்தே எப்போ எடுக்கலாம்னு யோசிக்கிற ஒரு விஷயம்.  நானும் என்னோட கற்பகாலத்துல முதல் மாதமே எப்போ விடுப்பு எடுத்தா சரியா இருக்கும்னு யோசிச்சேன்.  டாக்டர் ஓட ஆலோசனை இதுல ரொம்ப முக்கியம். சில பெண்களுக்கு முதல் மூணு மாதம் விடுப்பு ரொம்ப அவசியமானத இருக்கலாம். சில பெண்களுக்கு கடைசி மூணு மாதம் விடுப்பு அவசியமானதா இருக்கலாம். நம்முடைய உடலுக்கும், மனதுக்கும் ஓய்வு, அமைதி தேவை என்பதன் அடிப்படையில் விடுப்பு எடுப்பது நல்லது. அப்பொழுது தான் கருவில் உள்ள குழந்தைக்கும் அந்த நலன்கள் சென்றடையும்.

மகப்பேறு விடுப்பு எடுப்பதற்கு முன் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

கர்ப்ப காலம் முழுவதும் ஒருவருடைய உடல், மனம், உணர்ச்சிகள் எவ்வாறு இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் கர்ப்ப காலம் வித்தியாசமாக இருக்கும். நாம் செய்யும் வேலையால் அழுத்தம், சோர்வு, தூக்கமின்மை, முதுகுவலி, நெஞ்செரிச்சல் போன்ற அறிகுறிகள் தொடர்ந்து காணப்பட்டால் முன்னதாகவே விடுப்பு எடுத்து இந்த அறுகுறிகளுக்கு ஏற்ற ஓவும், சிகிச்சையும் எடுத்துக் கொள்வது அவசியம். மேலும் உங்களுக்கு கர்ப்ப காலம் முழுவதும் ஆற்றல் இருந்தால் தொடர்ந்து வேலை செய்து விட்டு, தேவைப்படும் நேரத்தில் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.

இது தொடர்பாக பற்ற தாய்மார்கலீடமும் ஆலோசனை கேட்டுக் கொள்ளலாம். அவர்கள் சந்தித்த சவால்கள், எதிர்கொண்ட அனுபவம் மூலம் நமக்கான விடுப்பு எப்போது எடுக்கலாம் என்ற முடிவை எடுக்க உதவியாக இருக்கும்

ஏன் விடுப்பு எடுக்கணும்? எப்போது எடுக்கணும்?

உங்கள் கரு ஆரோக்கியமானதாக இருக்கும் போது முதல் மூன்று மாதம் விடுப்பு என்பது அவ்வளவு அவசியம் இல்லாத ஒன்று. பொதுவாக காலையில் வாந்தி, உடல் சோர்வு, மயக்கம், எல்லாருக்கும் இருக்கும். நம்ம அந்த நேரத்துல ஒரு இரண்டு நாள் மட்டும் மெடிக்கல் லீவு எடுத்துட்டு வேலைக்கு செல்வதே நல்லது. ஏன்னென்றால் மகப்பேறு விடுமுறை என்பது பொதுவாக நம் குழந்தை பிறந்த பின்பு குழந்தை பராமரிப்பது மற்றும் நமது அரோக்கியத்திற்காக எடுப்பதாகும். 

அந்த விடுமுறை நாட்களை நம் சோர்வாக இருப்பதின் காரணத்தினால் ஆரம்ப காலத்துலே எடுத்து வீணாக்க வேண்டாம்.  மகப்பேறு விடுமுறை எடுக்க சரியான நேரம் கடைசி இரண்டு முதல் மூன்று மாதம். சில பெண்கள் அவங்களோட சரியான நேரம் அதாவது குழந்தை பிறப்பதிற்கான நாள் வரை வேலைக்கு போறாங்க. அப்படி செல்வது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். அப்படி செல்வதால் அவங்களுக்கு மட்டும் இல்ல குழந்தைக்கும் சில பாதிப்புகள் உண்டாகும். வேலை காரணமா கடைசி நிமிட மன அழுத்தம் உண்டாகலாம். அது கர்ப்பத்தில் இருக்கும் உங்கள் குழந்தைக்கும் நல்லதல்ல. இதன் காரணமாகவே கடைசி இரண்டு மாதங்கள் விடுப்பு என்பது மிக அவசியமான ஒன்று.

சிலருக்கு கரு பலவீனமானதாக இருக்கும் பொழுது முதல்  மூன்று வாரம் விடுப்பு மிக அவசியமான ஒன்று. மருத்துவரின் ஆலோசனை படி விடுப்பு எடுப்பது அவசியம். முதல் மூன்று வாரம் கவனமாக இருக்கவேண்டும். கடைசி இரண்டு அல்லது மூன்று மாதம் விடுப்பு எடுக்கும் பெண்கள் பொதுவாக அவர்களது பிரசவத்திற்காக உடல் மற்றும் மனதை தயார்படுத்திக்கணும். மனதளவில் தைரியமாகவும் இருப்பது என்பது தாய் மற்றும் குழந்தைக்கு மிகவும் நல்லது.

இன்றைய சூழலில் பெண்களுக்கான பொறுப்பு வீட்டிலும், அலுவலகத்திலும் சமமாகவே தேவைப்படுகிறது. முக்கியமாக கர்ப்ப காலத்தில் இந்த இரண்டையும் சமமாக கையாள்வது என்பது எல்லா நேரங்களிலும் இயலாது. அதனால் நம்முடைய ஆரோக்கியம் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தான் முன்னுரிமை அளிக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் பிரசவம் சுகமாக அமையும்.

மகிழ்ச்சியான பெற்றோர்!

 

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

  • 1
விளக்கக்குறிப்புகள்()
Kindly Login or Register to post a comment.

| May 08, 2019

நான் 33வாரக் கற்பமாக உள்லோன்

  • அறிக்கை
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்
Parentoon of the day
Lighter side of parenting

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}