• உள்நுழை
  • |
  • பதிவு
கல்வி மற்றும் கற்றல்

உங்கள் பிள்ளைக்கு பெட்- டைம் கதைகள் மூலம் கிடைக்கும் 8 நன்மைகள்

Parentune Support
3 முதல் 7 வயது

Parentune Support ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Aug 30, 2020

 8
நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

உங்கள் பிள்ளைக்கு பெட்டைம் கதைகள் மூலம் கிடைக்கும் 8 நன்மைகள்

ராஜுவுக்கு இப்போ வயசு 6. அவனோட எல்லா பிறந்தநாளுக்கும் அவனுக்கு நாங்க கொடுக்கிற கிஃப்ட் புத்தகங்கள் தான். அவனுக்கு புக்ஸ்னா ரொம்ப இஷ்டம். அதுவும் ஃபேன்டஸி கதைகள் இருக்கிற புக்ஸ்னா அவனுக்கு ரொம்ப பிடிக்கும்.

சின்ன வயசுல இருந்தே குழந்தைகளுக்கு புக்ஸ் படிக்கிற பழக்கத்தை உருவாக்குறது ரொம்ப அவசியம். ராஜூ 10 மாதமா இருக்கும் போது இருந்தே தூங்கப் போகும் போது நாங்க அவனுக்கு புக் படிச்சு காட்டுவோம். அப்போ இருந்தே புக்ஸ் எங்களோட சிறந்த நண்பன்.

எப்போது இருந்து குழந்தைகளுக்கு புக்ஸ் படித்து காட்டலாம்?

குழந்தை பிறந்ததுல இருந்தே அவங்களுக்கு புக்ஸ் படித்து காட்டலாம். அது குழந்தைகளோட பெற்றோர் விளையாடுறதுக்கும் உதவியா இருக்கும். குழந்தையை குளிக்க வைக்கும் போது, அல்லது குழந்தைக்கு மசாஜ் செய்யும் போது கதைகள் சொல்லிக்கிட்டே செய்யலாம்.

குழந்தைக்கு நாம சொல்ற கதை புரியுதோ இல்லையோ, ஆனா அந்த விஷயத்தை அவங்க ரொம்ப என்ஜாய் பண்ணுவாங்க

குழந்தைகளுக்கு புத்தகம் படிக்கும் பழக்கத்தை எப்படி உருவாக்குவது?

குழந்தைங்க கையில நேரடியா புக்ஸை கொடுக்கிறதுக்கு முன்னாடி அவங்களுக்கு நாம புக்ஸை படிச்சு காட்டி, அதுல இருக்கிற கதைகளை அவங்களுக்கு சொல்லி, புக்ஸ் படிக்கிற ஆர்வத்தை முதல்ல உண்டாக்கணும். தினமும் இராத்திரி ஒரு பக்கமாவது புத்தகத்துல இருந்து அவங்களுக்கு படிச்சு காட்டணும். கதைகள்ல வர்ற கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நாம குரலை மாத்தி மாத்தி சொல்லும் போது அது அவங்களுக்கு புக்ஸ் படிக்கிற ஆர்வத்தை அதிகப்படுத்தும்.

குழந்தைகள் புத்தகம் படிக்கும் போது எந்த மாதிரியான விஷயங்களை நாம கவனிக்கணும்?

குழந்தைங்க அவங்களுக்கு பிடிச்ச புக்ஸை திரும்பத் திரும்ப படிப்பாங்க. அது அவங்களுக்கு மனப்பாடம் ஆகி அதை அவங்க பாக்காம சொல்லுற அளவுக்கு படிப்பாங்க. அந்த மாதிரி நேரத்துல நாம அவங்களுக்கு எந்த விதமான புக்ஸ் பிடிச்சிருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டு அதுக்கு தகுந்த மாதிரி புக்ஸை வாங்கிக் கொடுக்கணும்.

அதுமட்டுமில்லாம அவங்க வயதுக்குரிய புக்ஸை தான் அவங்க படிக்கிறாங்களாங்கிறதையும் நாம தான் பார்த்துக்கணும்.

படங்கள் இல்லாத புத்தகங்களை எப்படி குழந்தைகளை படிக்க வைப்பது?

படங்களோட இருக்குற புத்தகங்களை குழந்தைகள் ஆர்வத்தோட படிச்சிடுவாங்க. அதே படங்கள் இல்லாம வெறும் கதைகள் மட்டும் இருந்தா அது அவங்க படிக்கிற ஆர்வத்தை குறைச்சிடும். அந்த மாதிரி புத்தங்களை படிக்க கொடுக்கும் போது நீங்களும் ஒரு புத்தகத்தை படிக்க ஆரம்பிச்சிடுங்க. அப்போ அவங்களுக்கு நாமளும் படிக்கணும்ங்கிற ஆர்வம் வந்துடும்.

உங்கள் பிள்ளைக்கு பெட்டைம்  கதைகள் மூலம் கிடைக்கும் 8 நன்மைகள்

புத்தகம் படிக்கிறது ஏராளமான நன்மைகளைத் தரும். அதுல முக்கியமான 8 நன்மைகளை நான் சொல்றேன்.

புரிந்து கொள்ளும் திறன்:

புத்தகம் படிக்கும் குழந்தைகள் பல்வேறு தலைப்புகளை எளிதில் புரிந்து கொள்கிறார்கள். அதனால அவங்களோட லாஜிக்கல் திறனும் அதிகரிக்குது.

கற்பனை திறன்:

புத்தகம் படிக்கிறதால குழந்தைகளோட உலகம் கற்பனை நிறைந்ததா மாறிடுது. அவங்களோட கற்பனை திறனை நாம அவங்களோட ஓவியத்துல, கதைகள் சொல்றதுல மற்றும் அவங்களோட பேச்சுல கூட நாம பார்க்கலாம்.

தொடர்பு படுத்தும் திறன் :

ஒரு புத்தகத்தைப் படிக்கும் போது, அதோட தலைப்பு என்ன? அந்தப் புத்தகத்தை எழுதினவர் யாரு? அந்தப் புத்தகம் எதைப் பற்றியது? இதெல்லாம் பார்த்துட்டு தான் படிக்க ஆரம்பிப்போம். புத்தகத்தைப் படிச்சு முடிச்சுட்டு, உண்மையிலேயே முதல்ல சொன்ன மாதிரி தான் இருந்ததா? குழந்தைங்க அந்த புத்தகத்தைப் படிக்கிறதுக்கு முன்னாடி என்ன நினைச்சாங்க? இப்போ என்ன நினைக்கிறாங்கன்னு கேட்கறது மூலமாஅவங்களோட தொடர்பு படுத்துற திறன் வளரும். 

தெளிவான சிந்தனையை வளர்த்தல் :

நாம புத்தகம் படிக்கும்போது அதுல வர்ற முக்கியமான வார்த்தைகள், சொற்றொடர்கள், வாக்கியங்களை நம்ம குழந்தைகள் கிட்ட பேசும்போது பயன்படுத்தணும். இதனால புதுப்புது வார்த்தைகள் அவங்களுக்கு அறிமுகமகிறது மட்டும் இல்லாம அவங்களோட எண்ணங்கள்ல ஒரு தெளிவும் கிடைக்கும்.

கேள்வி கேட்டல்:

நாம  புத்தகம் படிக்கும்போது நிறைய நேரம் குழந்தைகளோட கேள்விக்கு பதில் சொல்றதுலயே போயிடும்.  புத்தகத்துல எழுதி இருக்கு அப்படிங்கிறதுக்காகவோ இல்ல நாம சொல்றோம் அப்படிங்கிறதுக்காகவோ அவங்களுக்குப் புரியாத ஒரு விஷயத்தை குழந்தைங்க அப்படியே ஏத்துக்க மாட்டாங்க.  அதனால ஏதாவது கேள்வி கேட்டுக்கிட்டே இருப்பாங்க. அது ரொம்ப கஷ்டமான விஷயம் தான் ஆனா அவசியமானதும் கூட.

மொழியறிவு மேம்பட:

நம்ம குழந்தைகளோட மொழி அறிவை வளர்க்கிறதுக்கு புத்தகங்கள் தான் பெரிய மூலதனம். அது மூலமா அவங்க நல்ல எழுத்தாளராகவோ இல்ல கதை சொல்றவங்களாகவோ மாற முடியும்.

பயனுள்ள பழக்கம் :

ஓய்வு நேரங்கள்ல டிவி பார்க்கிறது, ஃபோனை நோண்டுறது  இதையெல்லாம் விட புத்தகம் படிக்கிறது நல்லது. எப்போல்லாம் போர் அடிக்குதோ அப்போல்லாம் புத்தகம் படிங்க.

நிம்மதியான தூக்கம் : 

தூங்கப் போறதுக்கு முன்னாடி 15 - 20 நிமிஷம் புத்தகம் படிக்கிறது மூலமா குழந்தைகளுக்கு நிம்மதியான தூக்கம் கிடைக்கும். நாம நல்ல புத்தகங்களை தான் படிப்போம்ங்கிறதால அவங்களுக்கு  தூக்கத்துல கெட்ட கனவு வர்றதும் தவிர்க்கப்படுது.

இதுல உண்மைலயே சந்தோஷமான விஷயம் என்னன்னா துங்கப் போகும் நேரத்துல தான் நாம ஒண்ணா இருப்போம். அந்த நேரத்துல நல்ல கதைகள் இருக்கிற புத்தகங்களை படிச்சிட்டு தூங்குனா அது ஒரு விதமான சந்தோஷத்தை தரும்.

உங்க குழந்தைகளுக்கு நீங்க படிக்க கொடுக்கிற புத்தகங்கள் என்னென்னங்கிறதை கீழே கமெண்ட்ல சொல்லுங்க.

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

  • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த கல்வி மற்றும் கற்றல் Blogs

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}