• உள்நுழை
  • |
  • பதிவு
உணவு மற்றும் ஊட்டச்சத்து

உங்கள் பிள்ளைக்கு உணவை வீணாக்காமல் வைக்க எவ்வாறு கற்பிப்பது ?

Radha Shri
1 முதல் 3 வயது

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Mar 04, 2021

நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

இந்த விஷயத்தில் எல்லா அம்மாக்களுக்கும் அடிக்கடி தோன்றும் கேள்வி குழந்தைகள் ஏன் சாப்பாட்டை மிச்சம் வைக்கிறாங்க ? ஏன் வீணாக்குறாங்க. குழந்தைகளை பொறுத்தவரிக்கும் எதையுமே அறிவுரையா சொல்றதை விட வேடிக்கையா சொன்னா  கவனிப்பாங்க, அதை தொடர்ந்து செய்யவும் கத்துப்பாங்க. உணவோட முக்கியத்துவத்தை உங்கள் குழந்தைகளுக்கு புரியற மாதிரி சொல்றதுக்கான ஆலோசனைகளை இந்த பதிவில பார்க்கலாம்.

உணவு பற்றி குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்பது

உணவப் பத்தி குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க நிறைய வழிகள் இருக்கு. தினமும் இதை நம்ம அவங்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லாம். சாப்பாடு கொடுக்கும் போது, காய்கறிகள் வாங்கும் போது கூட அழைச்சிட்டு போய் ஒவ்வொரு காய்கள், பழங்கள், பருப்புகள் பற்றி சொல்லிக் கொடுக்கலாம். இதே மாதிரி வீட்டுத் தோட்டம் மூலமாவும் சொல்லிக் கொடுத்தா குழந்தைங்க ரொம்ப விரும்பி கேட்பாங்க. செடிகளை வளர்க்கும் போது அவர்களையும்  நாம ஈடுபடுத்திகிட்டே சொல்லிக் கொடுக்கலாம். சமைக்கும் போது அவர்களுக்கு சின்ன சின்ன வேலைகள் கொடுத்து ஈடுபடுத்தினால் குழந்தைங்க எளிதா புரிஞ்சுக்குவாங்க. கதைகள், குறும்படங்கள் மூலமாகவும் உணவின் முக்கியத்துவத்தை புரிய வைக்கலாம்.

சாப்பிட அடம் பிடிப்பதை கையாள்வது

இந்த பிரச்சனையை நிறைய பெற்றோர்கல் எதிர்கொள்றாங்க. சாப்பிட அடம் பிடிக்கிற குழந்தைகளிடம் உணவை பற்றி பேசுவது கொஞ்சம் சவாலானது தான். அவர்களுக்கு பிடித்த வகையில் உணவை தயாரித்து, அலங்கரித்து கொடுக்கும் போது உணவு மீது விருப்பம் வரும். அதுவே தட்டு நிறைய சாப்பாடை போட்டு இதை முடிச்சே ஆகனும் அவர்களிடம் போட்டிப் போட்டா தோற்பது நாம் தான். சாப்பிட அடம் பிடிக்கிற குழந்தைகளை சில டிரிக்ஸ் மூலம் கையாளனும். இல்லைன்னா முரண்டு இன்னும் அதிகமாகும். குழந்தைங்க வெறுக்கிற உணவு திணிக்க வேண்டாம். ஒரு சின்ன கால அவகாசம் விட்டு அதையே கொஞ்சம் வேற மாதிரி செய்து கொடுக்கலாம். என் பையனுக்கு இப்போ 1 ½ வயது ஆகுது. அவனுக்கு சாதம் கொழம்பு கலந்து பிசைந்து கொடுத்தா சாப்பிட மாட்டான். அதுவே வைரைட்டி சாதம் மாதிரி செய்து கொடுத்தா சாதம் சாப்பிடுவான். சாம்பாரை இட்லி தோசைக்கு விரும்பி சாப்பிடும் அவன் சாதம் மேல ஊத்தினா சாப்பிடறதில்ல. இந்த மாதிரி ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஒவ்வொரு விருப்பம் இருக்கும் அதை நம்ம கூர்ந்து கவனிச்சா இதை எளிதா கையாளலாம்.

தட்டு முழுக்க சாப்பாடு கொடுப்பதை தவிர்க்கவும்

குழந்தைங்களுக்கு பிடித்த சாப்பாடாகவே இருந்தாலும் கொஞ்சமா முதல்ல கொடுங்க, அதையும் அவங்களோட தட்டுல அழகா வச்சு கொடுங்க. சாதத்தோடு சேர்த்து பொரியல், ப்ரெஷ் கேரட், வெள்ளரிக்காய் இப்படி கலவையாக கொஞ்சம் கொடுக்க. அவங்களுக்கு சாப்பிட பிடிக்கும். இது மூலமா அவங்க சாப்பிடுற அளவை தெரிஞ்சுக்கலாம். சாப்பாடும் வீணாகாது. அவங்களுக்கும் சாப்பிட ஈஸியா இருக்கும். குழந்தைங்களை பொறுத்தவரையில ஒரே தடவை நம்மல மாதிரி சப்பிட மாட்டாங்க. இடைவெளி எடுத்து கொடுத்துப்பாருங்க உங்களுக்கே வித்தியாசம் தெரியும்.

சாப்பாட்டு நேரத்திற்கு முன் ’நோ’ ஸ்நாக்ஸ்

சமையலை முன்கூட்டியே திட்டமிடுறதுனால குழந்தைகளுக்கு  சரியான நேரத்துல உணவு கொடுக்க முடியும். முக்கியமா, சாப்பிடுற நேரத்துல பிஸ்கட், சாக்லெட், சிப்ஸ், ஜூஸ் கொடுக்கறதை தவிர்க்கவும். நிச்சயமா அவங்க சாப்பாட்டை வீணாக்குவாங்க. இந்த ஸ்நாக்ஸுக்குனு ஒரு நேரத்தை ஒதுக்குங்க. எந்த நேரத்திலும் ஸ்நாக்ஸ் சாப்பிடலாம் என்ற பழக்கத்துக்கு நோ சொல்லுங்க. பசி நல்லா எடுக்கும் போது இந்த ஜங்க் உணவுகள் அவர்கள் வயிற்றை அடைத்துவிடும். எவ்வளவு விருப்பமாக உணவு கொடுத்தாலும் வீணாக்கத்தான் அதிக வாய்ப்புகள் உண்டு.

உணவை குழந்தைக்கு ஏற்ற வகையில் சுலபமாக சமைப்பது

இது பெரும்பாலான வீடுகளில் நடக்கும். எல்லாருக்கும் ஒரே மாதிரி உணவு சமைப்பது. குழந்தைகளுக்கு சின்ன வயசுலேயே பழக்கனும்னு இப்படி செய்றதுண்டு. இதுல ஒரு சிக்கல் இருக்கு. உதாரணத்திற்கு கேரட் பொரியல் என்று எடுத்துக்கிட்டா, குழந்தைக்கு துருவுன்னா பிடிக்கும், பெரியவங்களுக்கு நறுக்கிப் போட்டா தான் பிடிக்கும். இப்ப என்ன செய்வீங்க, நறுக்கினதை குழந்தை கண்டிப்பா வீணாக்குவாங்க. அதனால் எல்லாருக்கும் சேர்த்து துருவிப் பொரியல் பண்றதுதான் நல்லது. இதுல குடும்பத்துல உள்ள மத்தவங்க கொஞ்சம் விட்டுக்கொடுத்து போனா எல்லாருக்கும் நன்மைகள் உண்டு.

குடும்பத்தோடு சேர்ந்து சாப்பிடுவது

பெரும்பாலும் குழந்தைங்க தனியா தான் சாப்பிடுறங்க. பெரியவங்களோடு சேர்ந்து சாப்பிடும் வாய்ப்பும் அவங்களுக்கு கிடைக்கணும். ரொம்ப சந்தோஷபப்டுவாங்க. அப்ப தான் உணவு பத்தி நிறைய பார்த்து தெரிஞ்சுப்பாங்க. அப்ப நாம அவங்களுக்கு கட்டளையா இல்லாம பொறுமையா சாப்பாட்டின் முக்கியத்துவத்தை சொல்லலாம். ரோல் மாடலிங் முறை தான் குழந்தைகளுக்கு எளிமையா புரியற வழி.

இந்த பதிவு பற்றிய உங்களுடைய கருத்துக்களை சொல்லுங்க. இதே போல் நீங்க கையாள்கிற வழிகளை பகிர்ந்து கொள்ள நாங்க விரும்புறோம். இது மூலமா நிறைய பேருக்கு பலவகையான ஆலோசனைகள் சென்றடையும்.

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

  • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த உணவு மற்றும் ஊட்டச்சத்து Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}