• உள்நுழை
 • |
 • பதிவு
குழத்தை நலம் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்

உங்க குழந்தைக்கு ஏற்ற சரியான டையப்பரை எப்படி தேர்ந்தெடுக்கணும்?

Jeeji Naresh
0 முதல் 1 வயது

Jeeji Naresh ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Mar 12, 2021

நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

உங்க செல்ல குழந்தை பிறந்தாச்சி, புதிய பொறுப்புகள் துவங்கும் போது ஒவ்வொரு பெற்றோர்குள்ளும் ஒரு பயம், குழப்பம் ,தேடல் இருக்கும். நம்ம குழந்தைக்கு சிறந்த ஒன்றை தான் அளிக்க வேண்டும் என்பதில் ஒவ்வொரு பெற்றோரும் ஆர்வம் காட்டுவோம். குழந்தை பிறந்த முதல் நாள் முதற்கொண்டு குழந்தைக்கு தேவைப்படும் ஒன்றில் டயப்பர் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனென்றால் பிறந்தது முதல் குழந்தைக்கு நல்ல, இனிமையான , ஒரு சௌகரியமாக உறக்கத்தை அளிப்பதில் இந்த டயப்பர் பயன்பாடு  மிகவும் உதவியாக இருக்கின்றது.

பொதுவாக நிறைய தாய்மார்களுக்கு வர்ற ஒரு குழப்பம் நம்ம குழந்தைக்கு டயப்பர் அவசியமாக போடணுமா.? அதனால் பக்க விளைவுகள் எதும் வருமா? ஆரோக்கியமான ஒன்றுதானா ? என்று பல கேள்விகள் வரும்..சரியான, பொருத்தமான சிறந்த டயாபரை தேர்வு செய்வது மற்றும் முறையாக பயன்படுத்துவதன் மூலம் உங்க குழந்தையோட ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

பிறந்த குழந்தைக்கு எந்த மாதிரியான டயப்பர் பயன்படுத்துவது?

பிறந்த குழந்தைகளுக்குகென்றே பிரத்யோகமாக தயாரிக்கப்பட்ட நியூபார்ன் டேப் (New born tape model) டயப்பர்கள் சந்தையில் விற்கும். முதல் சில நாட்கள்  குழந்தையோட தொப்பில் கொடி காயமல் இருக்கும், அதனால் இந்த டேப் டைப் (tape type)  டயப்பர் பயன்படுத்துவது குழந்தைக்கு நல்லது. இந்த வகையான டயப்பர் எளிதாக காற்று உட்செல்ல கூடியதாகவும் இருக்கும் அதே நேரத்தில் குழந்தையோட மென்மையான சருமத்திலும் எந்த ஒரு சொரி(rashes) அல்லது ஒவ்வாமையும்(அழற்சி) வராமல் காக்க உதவும். குழந்தையோட வளர்ச்சி மற்றும் எடையை பொறுத்து டயப்பர் சைஸை அவ்வபோது மாற்றி கொள்ளலாம்.

எந்த வகையான டயப்பர் தேர்வு செய்வது:

நீங்க டயப்பர் வாங்க யோசிக்கும்போது முதலில் எந்த வகையான டயப்பர் உங்க வாழ்க்கை முறைக்கு பொருந்தும் என்பதை பார்த்து தேர்வு செய்ய வேண்டும். 

 • மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணியால் செய்யப்பட்ட டயப்பர்       (cloth diaper), 
 • ஒரு முறை மட்டுமே பயன்படுத்த கூடிய தூக்கி எறிய கூடிய டயப்பர்( disposable diapers) மற்றும் 
 • ஆர்கானிக் டயப்பர் என்று மூன்று வகையான டயப்பர்கள் சந்தையில் கிடைக்கின்றன. 
 • அதுமட்டும் இல்லாமல் வாசனை உள்ள மற்றும் வாசனையற்ற டயப்பர் கிடைக்கும்.

உங்க குழந்தைக்கும், உங்க வாழ்க்கை முறைக்கும் ஏற்ற வகையில் இருக்கும் டயப்பரை தேர்வு செய்வது நல்லது.

டயப்பர் வாங்கும்போது கவனிக்க வேண்டிய சில முக்கியமான குறிப்புக்கள்:

 • உங்க குழந்தைக்கு சரியாக பொருந்த கூடிய அளவிலான, குழந்தையின் எடைக்கு ஏற்ப டயப்பரை தேர்வு செய்வது நல்லது
 • குழந்தையின் டயப்பர் ஈரமானதை குறிப்பிடுவது போன்று நிறங்கள் மற்றும் கோடுகள் இருக்கும் டயப்பர்களும் மார்கெட்- இல் கிடைக்கின்றன.
 • சில நறுமணமுள்ள மற்றும் நறுமணம் இல்லாத  டயப்பர்களும் கிடைக்கின்றன , குழந்தையின் மலம் வாசனையை மறைக்க பெரும்பாலும் பெற்றோர்கள் நருமணமுள்ள டயப்பர்கள் விருபுவார்கள். ஆனால் சில நேரங்களில் நறுமணம் உள்ள டயப்பர்கள் மூலம் குழந்தைகளுக்கு அலர்ஜி வரலாம். அதனால் உங்க குழந்தையின் சருமத்திற்கு ஏற்றதாக உள்ளதா என்று பரிசோதித்து டயப்பர் தேர்வு செய்வது நல்லது. அதன்பிறகு அதை தொடர்ந்து பயன்படுத்துங்கள்.
 • சுற்றுச் சூழலை கருத்தில் கொள்ளும் சில பெற்றோர்கள் eco friendly-யான மறுபடியும் பயன்படுத்த கூடிய டயப்பர்களை பார்த்து வாங்கலாம்.

உங்க குழந்தைக்கு சரியான , பொருத்தமான டயப்பரை எவ்வாறு வாங்குவது:

ஒரு பெற்றோராக குழந்தைக்கு சரியான அளவிலான டயப்பறை தேர்ந்தெடுப்பது ரொம்ப முக்கியமான ஒன்று. குழந்தையோட வயதை சொல்லி டயப்பரை வாங்குவதை விட குழந்தையோட எடையை சொல்லி வாங்க வேண்டும்.

ஒவ்வொரு குழந்தையும் தனது வயதுக்கேற்ற எடையுடன் இருப்பாங்க என்று சொல்ல முடியாது. ஏனென்றால் குழந்தை பிறக்கும் போதே எடையும், அளவும் வேறுபடும். சரியான அளவு பார்த்து வாங்க வில்லை என்றால் குழந்தைக்கு சௌகரிமாக இருக்காது மற்றும் சொரி(Rashes) , தடிப்புகள், சிறுநீர் கசிவிர்க்கும் வழிவகுக்கும். குழந்தைகள் சட்டுனு வளர்ந்துடுவாங்க. அதுவும் பிறந்த ஒரு வருடத்திற்குள் குழந்தைகளின் வளர்ச்சி விரைவாக இருக்கும்.

குழந்தைக்கு டயப்பர் சரியான பொருந்தவில்லை என்பதற்கான அறிகுறிகள்:

டயப்பர் பத்தாமல் இருந்தாலோ அல்லது பெரிதாக இருந்தாலோ எளிதாக பெற்றோர்கள் கண்டுபிடித்து விடலாம். சின்னதாக இருந்தா குழந்தையோட தொடயைச் சுற்றி சிவப்பு வண்ணத்தில் பட்டயாக தடிப்புகள் இருக்கும். அல்லது சொரி(rashes) வரும். அல்லது குழந்தை நடக்கவும், விளையாடவும் அசௌகரியப்படுவது தெரியும். ஒரு வேளை டயப்பர் பெரிதாக இருந்தால் சிறுநீர் கசிவு ஏற்படும். நடக்கும்போது கீழிறங்கிவிடும். டயப்பர் போடும்போதே எளிதாக கண்டுபிடித்து விடலாம் குழந்தையோட தொடைக்கும், டயப்பருக்கும்  உள்ள இடைவெளி பார்த்து வாங்கவும்.

பொதுவாக சந்தையில் பயன்படுத்தும் டயப்பர் அளவு மற்றும் குழந்தையின் எடை பற்றி கீழே குறிப்பிட்டுள்ள சில குறிப்புகள் உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.

 குழந்தையின் எடை

  டயப்பர் அளவு

பிறந்த குழந்தை – 4kg

New Born Size

4 – 8 kg

Size S (Small)

7 – 12 kg

Size M (Medium)

9 – 14 kg

Size L (Large)

12 – 17 kg

Size XL (Extra Large)

15 – 25 kg

Size XXL (Extra Extra Large)

டயப்பர் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை:

 • பெரும்பாலும் குழந்தைகள் தாங்கள்  டயப்பர் மூலமாக அசௌகரியமாக இருப்பதை வெளிப்படுத்த முதலில் அழுவார்கள். அதன் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
 • அடிக்கடி குழந்தையோட டயப்பர் நிறைந்து விட்டதா அல்லது மலமாகிவிட்டதா என்று சோதனை செய்து பார்த்து கொண்டே இருக்க வேண்டும். உடனே அதை சுத்தம் செய்ய வேண்டும். மலம் அதிக நேரம் டயப்பரில் இருந்தால் குழந்தைக்கு சொரி(rashes) மற்றும் தொற்று ஏற்படும். என்னென்றால் குழந்தையின் சருமம் மிகவும் மென்மையானது. எளிதாக தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.
 • இரண்டு அல்லது மூன்று மணி நேரத்தில் டயப்பர் மாற்றுவது நல்லது.
 • துணி டயப்பர்கள் பயன்படுத்தும் போது அடிக்கடி மாற்ற வேண்டும். ஏனென்றால் குழந்தைக்கு ஈர உணர்வை ஏற்படுத்தும் அதனால் தூக்கம் கெட வாய்ப்பு உண்டு.
 • டயப்பர் மாற்றும்போது சுத்தமான துணி அல்லது காட்டன் பயன்படுத்தி இதமான தண்ணீர் மூலமாக சுத்தம் செய்யலாம்.
 • அடுத்த டயப்பர் பயன்படுத்தும் முன் குழந்தையின் சருமம் நன்றாக காய்ந்துள்ளதா என்று சோதனை செய்த பிறகு பயன்படுத்தலாம்.

டயப்பர் பயன்படுத்துவதால் வருகின்ற பக்க விளைவுகள்:

ஒரு பெற்றோராக தங்கள் குழந்தைகளின் நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியத்தை கவனிப்பது ரொம்ப முக்கயமான ஒன்று. டயப்பர்கள் பயன்பாடு எப்படி நம்ம வாழ்க்கைய எளிதாக்கி உள்ளதோ அதே போல் அவை பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும் என்பதை மறுக்க முடியாது.

 • டயப்பர் பயன்படுத்துவதால் பெரும்பாலான குழந்தைகளுக்கு ஒவ்வாமை (alergy reaction) தொற்று ஏற்படுகின்றது.
 • அதிக நேரம் ஈரத்தில் இருப்பதால் குழந்தைகளின் சருமத்தில் சொரி(rashes) ஏற்பட வாய்ப்பு உள்ளது.
 • இதில் இரசாயன மற்றும் செயற்கை பொருட்கள் உள்ளதால் இது ஒரு நச்சிதன்மை வாய்ந்த ஒன்றாக உள்ளது. இதனால் குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட வாய்ப்புண்டு.
 • இன்று பெரும்பாலான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு டயப்பர் பயன்படுத்துவதால் குறிப்பிட்ட வயது வந்தால் கூட கழிப்பறைப் பயிற்சி குடுக்க சிரமப் படுகிறார்கள்.
 • இன்றைய சூழலில் டயப்பர்களின் அதிக பயன்பாடுகளினால் சுற்றுசூழல் பாதிக்கப்பட்டது மட்டும் அல்லாமல் அவற்றை அப்புரபடுத்துவது பெரிய சவாலாக உள்ளது.

டயப்பர் சொரி(rashes) வீட்டு வைத்தியம்

 • டயப்பர் சொரி(rashes) இருக்கும் போது , அது சரியாகும் வரை டயப்பர் பயன்படுத்த வேண்டாம்
 • மிதமான சூடு உள்ள தண்ணீர் மற்றும் லேசான காட்டன் துணி பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும்.
 • சுத்தமான தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி சொரி(rashes) இருக்கும் இடத்தில் மசாஜ் செய்து விடலாம். இயற்கையாகவே தேங்காய் எண்ணெய் விரைவாக குணப்படுத்தும் திறனுடையது
 • மருத்துவரால் பரிந்துரைக்க பட்ட சொரி(anti -rash) கிரீம் பயன்படுத்தலாம்.
 • சிறிது தாய்ப்பால் எடுத்து காட்டன் துணியால் சொரி(rashes) இருக்கும் இடத்தில் மெதுவாக தேய்த்து விடலாம்.

எவ்வளவு நாட்களில் இந்த டயப்பர் சொறி (rashes) குணமாகும்?

லேசாக இருக்கும் சொரி(rashes) இரண்டு முதல் மூன்று நாட்களில் சரியாகிவிடும். அதிக பாதிப்புடன் உள்ளது என்றால் ஒரு வாரம் முதல் பத்து நாட்களில் முழுமையாக சரியாகி விடும். அந்த சமயங்களில் டயப்பர் ஏதும் அணிவிக்கமாமல் இருப்பது நல்லது.

இந்த பதிவு உங்களுக்கு உதவியிருக்கும் என நம்புகிறேன். உங்களுடைய கருத்துக்களை கேட்க நான் விருப்பமாக இருக்கின்றேன். நன்றி

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

 • 2
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.

| Mar 13, 2021

 • Reply | 1 Reply
 • அறிக்கை
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த குழத்தை நலம் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}