உங்கள் பிறந்த குழந்தைக்கு ஏர் கண்டிஷனர்கள் அல்லது ஏர் – கூலர்ஸ் பாதுகாப்பானதா?

Radha Shree ஆல் உருவாக்கப்பட்டது புதுப்பிக்கப்பட்டது Apr 29, 2020

பிறந்த குழந்தைகள் மிகவும் மென்மையானவர்கள். எனவே அவர்களுக்கு அன்றாடம் நாம் வழக்கமாக பயன்படுத்தும் விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது. கோடைகாலங்களில் வெப்பத்திலிருந்து அவர்களை பாதுகாப்பாக வைத்திருப்பது போன்ற விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. சிலர் பிறந்த குழந்தைகளுக்கு ஏர் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டாம் என்று சொல்வதுண்டு.
பொதுவாக பெரியவர்களுக்கு உள்ள உடல் வெப்பநிலை போல் குழந்தைகளுக்கு இருப்பதில்லை. எனவே அவர்களுக்கு பயன்படுத்தும்போது நான் சில தவறுகளை செய்வதுண்டு. புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு அதிக சூடாகவோ அல்லது அதிக குளிராகவோ இரண்டுமே அவர்களுக்கு அசௌகரியத்தை தரும்.
சூடான மற்றும் அதிக குளிர் இதன் தாக்கங்கள் என்ன?
அதிக சூடாக இருந்தால் குழந்தைகள் பின்வரும் விஷயங்களை பாதிக்கப்படுகிறார்கள்
- தடுப்பு தடிப்புகள்
- அரிப்பு
- ஹீட் ஸ்ட்ரோக்
அதிக குளிராக இருந்தால்
- குளிர்
- அடிக்கடி காய்ச்சல்
- தொண்டை புண் மற்றும் இருமல்.
ஆதலால் இதுபோன்ற குளிரூட்டி உபகரணங்களை குழந்தைகளுக்கு பயன்படுத்தும் போது அதிக கவனம் தேவை.
ஏர் கண்டிஷனர் மற்றும் குளிரூட்டிகள் எவ்வாறு இயங்குகிறது ?
ஆவியாதலின் அடிப்படையிலேயே இவை செயல்படுகின்றன. நெருக்கமாக அமைக்கப்பட்ட கம்பிச் சுருள்களில் உள்ள குளிர்விப்பான்கள் (Refrigerants) தொடர்ந்து ஆவியாக்குவதன் மூலம் குளிர்ச்சியை உண்டாக்குகின்றன. ஏ.சி. என்பது வெளியில் உள்ள காற்றை அறைக்குள் அனுப்புவதில்லை. அறைக்குள் இருக்கும் வெப்பக் காற்றுதான் குளிர்விக்கப்பட்டு மீண்டும் நம்மை வந்தடைகிறது. இதை HVAC என்பார்கள். அதாவது வெப்பமாக்கப்படுதல் (Heating), காற்றோட்டம் (Ventilation) மற்றும் காற்றுச் சீரமைப்பு (Air conditioning).
பிறந்த குழந்தைகளுக்கு ஏர்கண்டிஷனர் அல்லது குளிரூட்டிகள் எது சிறந்தது.
என்னுடைய புரிதல் மற்றும் அனுபவத்திலிருந்து சொல்ல வேண்டுமானால்,
1. ஏசி - அறையிலுள்ள வெப்பநிலையை சீராக வைத்திருக்க உதவுகிறது ஏர்கூலர் காற்றை அதிக அளவில் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் வெளியேற்றும் தன்மை கொண்டது.
2. ஏசி ஈரப்பதம் அதிகரிக்காமல் தடுக்கிறது. ஆனால் ஏர்கூலர் ஈரப்பதத்தின் அளவு அதிகரிப்பதால் குழந்தைகளுக்கு அசவுகரியத்தை உண்டாக்கும்.
3. மழை காலங்களிலும் ஏசி வெப்ப நிலைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் ஏர் கூலர் மழை காலங்களில் குழந்தைகள் பயன்படுத்துவது உகந்ததல்ல.
4. புதிய தொழில்நுட்பங்களுடன் உள்ள ஏசி சுத்தமான காற்று தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது. ஆனால் ஏர் கூலர் கள் மூலம் தூசி அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இத்தனை நன்மைகள் கொண்ட ஏர் கண்டிஷனர்களின் பயன்பாட்டை சான்றளிக்க முடியாது அவற்றின் பயன்பாட்டில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்களும் உள்ளது.
- ஏர் கண்டிஷனரிலிருந்து வரும் காற்று குழந்தையின் மீது நேரடியாக படும்படி பயன்படுத்த வேண்டாம்
- கூலர்ஸ் மற்றும் கண்டிஷனர்கள் இரண்டையும் நன்கு பராமரிக்கவும் இதன் மூலம் அதில் படியும் தூசுகள் மற்றும் தொற்றுகளை தவிர்க்க முடியும்
ஏர்கூலர் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை
- குழந்தைகளுக்கு அதிக குளிர்ச்சி ஏற்படாமல் இருப்பதற்கு திக்கான பருத்தி ஆடைகளை அணிந்து விடுங்கள்
- அறையில் எப்போதும் ஈரப்பதத்தை தக்க வைக்க ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி வையுங்கள்.
- பிறந்த குழந்தைகளுக்கு மூடிய அறைகள் பாதுகாப்பானவை அல்ல அதனால் அறையை காற்றோட்டமாக வைத்திருங்கள்
- குழந்தைகளுக்கு இருக்கும் அறியில் பகலை விட இரவில் ஏர்கூலர் வெப்பநிலையை கண்காணித்துக் கொண்டே இருங்கள் ஏனென்றால் இரவில் குளிர் அதிகரிக்கும். 23 முதல் 26 டிகிரி வரை வைப்பது குழந்தைகளுக்கு ஆரோக்கியமானது
- உங்கள் குழந்தைக்கு வெளிக்காற்று அவசியம் என்பதால் மாலையில் வெளியே அழைத்துச் செல்லுங்கள்.
- குழந்தைகள் படுக்கும் அறையில் இருக்கும் curtains-களை சுத்தமாக வைத்திருங்கள்.
- உங்கள் குழந்தையின் சரியான வெப்ப நிலையை அறிய அவர்களின் கழுத்து மற்றும் மார்பை பரிசோதிக்கவும்
நாம் பலவிதமான முறைகளை தெரிந்திருந்தாலும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் இது மாறுபடலாம். அதனால் எந்த முறை உங்கள் குழந்தைக்கு பொருத்தமாக இருக்கிறதோ அவர்கள் தூங்குவதற்கு வசதியாகவும் சௌகரியமாக இருக்கிறதோ அதை தேர்ந்தெடுக்கவே எல்லா அம்மாக்களும் விருப்பப்படுகிறார்கள். இந்த மாதிரி தொழிட்நுட்ப கருவிகளை கொண்டு செளகரியமாகவும், பாதுகாப்பாகவும் இந்த கோடை காலத்தை இனிமையாக எதிர்கொள்ளுங்கள்.
உங்கள் கருத்துகளை மறவாமல் பகிர்ந்து கொள்ளவும்.
அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.