• உள்நுழை
  • |
  • பதிவு
பெற்றோர் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்

பிறந்த குழந்தைகளுக்கு என்னென்ன தடுப்பூசிகள் போட வேண்டும்

Radha Shri
0 முதல் 1 வயது

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Jun 01, 2020

எனக்கு 10 மாதக் குழந்தை இருக்கின்றது. ஒரு பெற்றோராக நான் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு என் குழந்தையின் உடல் நலத்தை பாதுகாக்கும் வழிகளை தெரிந்து கொள்ள முயற்சி செய்வேன். இதெல்லாம் அவர்களின்  ஆரோக்கியத்திற்கும், நோய் எதிர்ப்புக்கும் உதவுவதாக நான் எண்ணுகிறேன். அந்த வகையில் தடுப்பூசி இதற்கு உதவக் கூடிய முக்கியமான ஒன்றாக நான் பார்க்கிறேன். அது நம் குழந்தையை பலவகை  ஆபத்தான நோய்களில் இருந்து காப்பாற்ற உதவுகின்றது.

தடுப்பூசியின் முக்கியத்துவம்

பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலே பல நோய்களை எதிர்த்துப் போராட வழி செய்கின்றது. ஆனால், இந்த எதிர்ப்புசக்தியானது ஒரு வருடத்திற்குள்ளேயே மறைந்து விடும்.மேலும் பல குழந்தைகளுக்கு தாய்ப்பாலானது ஆரம்பம் முதலிலிருந்தே கிடைப்பதில்லை.மேலும் தடுப்பூசியானது ஒரு குழந்தையிடமிருந்து மற்ற குழந்தைகளுக்கு நோய் பரவாமல் தடுக்கவும் உதவி புரிகிறது.

முதலில் தடுப்பூசி ஒரு நோய்க்கானத் தொற்றை குழந்தை உடம்பில் போலியாகத் தோற்றுவிக்கும். இது உங்கள் குழந்தையின் உடலில் உள்ள நோய்எதிர்ப்பு மண்டலத்தை 'எதிர்மம்' எனும் ஆயுதத்தை உற்பத்தி செய்ய வைக்கிறது. இந்த எதிர்மங்களானது, தடுப்பூசி எதை எதிர்க்க போடப்பட்டதோ, அந்த நோயை எதிர்த்து போராடவைக்கும். இந்த எதிர்மங்களை கொண்ட உங்கள் குழந்தையின் உடலானது எதிர்காலத்தில் வரும் நோயையும் எதிர்க்கும் ஆற்றலை பெற்றுவிடும்.

போலியோ, தட்டம்மை, டிப்தீரியா, கக்குவான் இருமல், ரூபெல்லா (ஜெர்மன் தட்டம்மை), டெட்டனஸ், ரோட்டா வைரஸ் மற்றும் ஹீமோபிலஸ் இன்ஃப்ளூயன்ஸா வகை பி (ஹிப்) உள்ளிட்ட நோய்களை உலகெங்கிலும் பொதுவாக காணலாம். தடுப்பூசி மூலம் இதிலிருந்து நம் குழந்தைகளை தற்காத்துக் கொள்ள முடியும். நாம் அனைவரும் தடுப்பூசிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் ஏன்னென்றால் வரலாற்றில் மிக பயங்கரமான நோய்களில் ஒன்று பெரியம்மை . இந்த நோய் இப்போது எங்கும் இல்லை. பல ஆண்டுகளாக தடுப்பூசிகள் எண்ணற்ற நோய்களைத் தடுக்கின்றன மற்றும் லட்சக் கணக்கான உயிர்களை காப்பாற்றியுள்ளன.

தடுப்பூசியின் நன்மைகள்

உடம்பின் நோய் எதிர்ப்பு மண்டலம் நோயை பரப்பும் கிருமிகளிடம் இருந்து நம்மை காப்பாற்றும். ஒன்று,நச்சுக்கிருமிகளை உடலில் இருந்து வெளியேற்றும் அல்லது அக்கிருமிகளைத் தொடர்ந்து எதிர்த்து அவைகளிடமிருந்து விடுதலை பெற்றுக் கொடுக்கும். இருப்பினும்,சில சமயங்களில் இத்தகைய ஆற்றல்மிக்க நோய்எதிர்ப்பு மண்டலத்தையும் தாண்டி கிருமிகள் செயல்படுகின்றன. இவ்வாறு நடக்கும் பொழுதே நாம் பல சிக்கலான நோய்க்கு ஆளாகிறோம்.

இந்த கிருமிகள் பெரும்பாலும் பிரச்சினைகளை உண்டாக்குவன. அவை, நம் உடலில் அறியாத வண்ணம் பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. இந்த தடுப்பூசியானது நமது நோய்எதிர்ப்பு மண்டலத்திற்கு கிருமிகளை எப்படி அறிந்து கொண்டு வெளியேற்ற வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுக்கிறது.பிறகு அதை பின்பற்றி நமது உடலானது நம்மை பாதுகாக்கின்றது.

தடுப்பூசி என்பது ஒரு அத்தியாவசிய மருத்துவ சேவையாகவும், தொற்று நோய்களிருந்து தற்காக்க உதவும் ஒரு தடுப்பு மருந்தாக  விளங்குகிறது என்கிறது உலக சுகாதார நிறுவனம் மற்றும் இந்திய குழந்தை மருத்துவவியல் அகாடமி . மேலும் தடுப்பூசிகள் ஒவ்வொரு ஆண்டும் 2 முதல் 3 மில்லியன் உயிர்களைக் காப்பாற்றுவதாக உலக சுகாதார நிறுவனம் மதிப்பிடுகிறது.

தடுப்பூசி அட்டவணை

தடுப்பூசியானது குழந்தை பிறந்த உடனே கொடுக்கப்படுவதல்ல. ஒவ்வொன்றும் வெவ்வேறு நேரங்களில் கொடுக்கப்படுகிறது. ஒரு குழந்தையின் வாழ்வில் முதல் 24 மாதங்களிலும் வெவ்வேறு இடைப்பட்ட காலத்தில் தடுப்பூசி போடப்படுகிறது. பல தடுப்பூசிகள் பல்வேறுபட்ட கட்டங்களாகவும், பல்வேறு மருந்தளவிலும் அளிக்கப்படுகிறது.

கவலை கொள்ளாதீர்கள் - இந்த தடுப்பூசி அட்டவணையை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் குழந்தைகள்நல மருத்துவர் இதில் உதவிபுரிவார்.

தடுப்பூசிகளின் விவரங்கள்

தடுப்பூசிகள் பற்றி தேவையான விவரங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

  1. ஹெப் பி(Hep b) - ஹெபாட்டிட்டிஸ் பி (கல்லீரல் நோய்)- யை எதிர்த்து போராடும். ஹெப் பி மூன்று கட்டங்களில் கொடுக்கப்படுகிறது. முதல் கட்டமாக குழந்தை பிறந்தவுடன் அளிக்கப்படும். பெரும்பாலான மாநிலங்களில் குழந்தையை பள்ளியில் அனுமதிக்க ஹெப் பி தடுப்பூசி அளித்தமையை பற்றி விசாரிக்கின்றனர்.
  2. ஆர்வி(RV) - இது 'ரோட்டோ' நச்சுயிரியை எதிர்த்து போராடும். இக்கிருமி வயிற்றுப்போக்கை உண்டாக்க கூடியது. ஆர்வி இரண்டு அல்லது மூன்று கட்டங்களில் கொடுக்கப்படுகிறது. இது எந்தவகை தடுப்பூசி பயன்படுத்துக்குகிறோம் என்பதை பொறுத்துள்ளது.
  3. டீடிஏபி(DTAP)- இது டிப்தெரியா,தட்டம்மை, கக்குவான் இருமல்(பேர்டுஸிஸ்) போன்றவற்றை எதிர்த்துப் போராட வல்லது. இது குழந்தைப்பருவத்தில் ஐந்து கட்டங்களில் கொடுக்கப்பட வேண்டும்.
  4. ஹிப்(Hib) -  இது எமோப்பிலஸ் இன்ஃப்ளுயன்ஸா - வகை 'பி' யை எதிர்த்து போராடும். இது மூளைக்காய்ச்சலுக்கு முதன்மை காரணமாக இருக்கும் கிருமிகளை எதிர்த்து போராடும். இந்த 'ஹிப்' தடுப்பூசி மூன்று அல்லது நான்கு கட்டங்களில் கொடுக்கப்படும்.
  5. பிசீவி(PCV) - இது நிமோனியா என்னும் கொடூரமான நோயை எதிர்த்து போராடும் சக்திப் பெற்றது. இந்த தடுப்பூசியானது தொடர்ச்சியாக நான்கு கட்டங்களில் கொடுக்கப்படுகிறது.
  6. ஐபிவி(IPV) - இது போலியோவை எதிர்த்து போராடும். மேலும், இது நான்கு கட்டங்களில் கொடுக்கப்படுகிறது.
  7. இன்ஃப்ளூயன்ஸா(Influenza) - இது ஃப்ளூவை எதிர்த்து போராடவல்லது. இது வருடா வருடம் அளிக்கப்படும் தடுப்பூசியாகும்.இது குழந்தை பிறந்த ஆறாவது மாதத்திலிருந்து வருடா வருடம் தவறாமல் அளிக்கப்பட வேண்டும். ஆவணி முதல் மார்கழிக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் அளிக்கலாம்.
  8. எம்எம்(MM) - இது தட்டம்மை, வீக்கம், போன்றவற்றிற்காக போடப்படும். இது இரண்டு கட்டங்களில் கொடுக்கப்படுகிறது. முதல் கட்டம், ஒரு வயது அல்லது அதற்கு மேல்லுள்ளவர்களுக்கு கொடுக்கப்படும்.இரண்டாவது கட்டம், நான்கு முதல் 6 வயது குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும்.

சரியான நேரத்தில் தடுப்பூசி போவதால் ஏற்படும் நன்மைகள்

பெற்றோர்களாகிய நாம் சரியான நேரத்தில் குழந்தைக்கு இந்த தடுப்பூசியை போடத் தவறக்கூடாது. பரிந்துரைக்கப்பட்ட நோய்த்தடுப்பு அட்டவணை நம் குழந்தைக்கு  பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது. இது நம்முடைய குழந்தையின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு கவனமாக செயல்படுவது அவசியம்.

நம் குழந்தையின் உடல்நலம் மற்றும் வளர்ச்சிக்கு தடுப்பூசி சிறந்த தேர்வு

தடுப்பூசிகள் குழந்தைகளின் உடலின் இயற்கையான பாதுகாப்பை உருவாக்குவதன் மூலம் நோய்த் தொற்றுகளிலிருந்து பாதுகாக்கின்றது. குழந்தைக்கு போடும் தடுப்பூசி மூலம் அவர்களின் நோயெதிர்ப்பு அமைப்பு வலுப்பெறுகிறது. ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. இதன் மூலம் நோயை எதிர்த்துப் போராட நோயெதிர்ப்பு மண்டலத்தால் இயற்கையாக உற்பத்தி செய்யப்படும் புரதங்கள். எதிர்காலத்தில் நம் குழந்தை ஏதேனும் கிருமிக்கு ஆளாக நேரிட்டால், நோய்வாய்ப்படுவதற்கு முன்பே அவகளின் நோயெதிர்ப்பு அமைப்பு அதை விரைவாக அழிக்கக்கூடும்.

எனவே தடுப்பூசி போடுவதன் மூலம் நோயை ஏற்படுத்தாமல், உடலில் நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்க ஒரு பாதுகாப்பான மற்றும் சிறந்த வழியாகும்.

சரியான நேரத்தில் தடுப்பூசி விழிப்புணர்வு

தடுப்பூசி விழிப்புணர்வு என்பது GSK முன்னெடுத்த சிறந்த முயற்சியாகும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தடுப்பூசி உதவுகிறது.

உணவு மற்றும் ஊட்டச்சத்து தவிர, உங்கள் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய மற்றொரு விஷயம் தடுப்பூசி.

பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் நம் உடலை சுற்றி எப்பொழுதும் உள்ளன மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பு நம் உடலை அவற்றிலிருந்து பாதுகாக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

குழந்தைகளுக்கு அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் வலுவாக இருப்பது மிகவும் முக்கியம். இப்போது கேள்வி என்னவென்றால், குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம். சரியான மற்றும் சமச்சீரான உணவை தவிர, குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் தடுப்பூசிப் போடுவது மிகவும் முக்கியம். தடுப்பூசிகள் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், பெர்டுசிஸ், டெட்டனஸ், டிப்தீரியா, ஹெபடைடிஸ் மற்றும் பல நோய்களிலிருந்தும் பாதுகாக்கிறது.

சரியான நேரத்தில் தடுப்பூசி உங்கள் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகிறது மற்றும் பல்வேறு தடுப்பூசி தடுக்கப்படக்கூடிய நோய்களால் நீண்ட கால பாதுகாப்பை வழங்குகிறது. எனவே, உங்கள் குழந்தை மருத்துவரின் ஆலோசனையின்படி, உங்கள் குழந்தையின் தடுப்பூசி அட்டவணையைப் பின்பற்றி நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள், தடுப்பூசி அட்டை உங்கள் குழந்தையின் ‘உடல் நலத்திற்கான பாஸ்போர்ட்’

 Disclaimer:

A public awareness initiative by GlaxoSmithKline Pharmaceuticals Limited. Dr. Annie Besant Road, Worli, Mumbai 400 030, India.

The mere appearance of this article on this website/page does not constitute an endorsement by GSK or its affiliates of such website/page or any other articles, images or videos, if any, appearing on this website/page. Information appearing in this material is for general awareness only and does not constitute any medical advice. Please consult your Doctor for medical advice, any question or concern you may have regarding your condition. Please consult your Pediatrician for the complete list of vaccine preventable diseases and for the complete vaccination schedule for each disease.

CL codes: NP-IN-NA-OGM-200001, DOP Dec 2021

  • 2
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.

| Dec 01, 2018

yanthu kulanthiku 12 months aguthu avanuku ena ena youse poda vandum yapothu poda vandom

  • Reply
  • அறிக்கை

| May 03, 2019

How to get releif from pain after vaccination

  • Reply
  • அறிக்கை
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}