• உள்நுழை
 • |
 • பதிவு
பெற்றோர் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்

வீட்டு வைத்தியம் : குழந்தைகளின் உடல்நலக் கோளாறுகள்

Vidhya Manikandan
0 முதல் 1 வயது

Vidhya Manikandan ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Dec 11, 2018

நம்முடைய தாத்தா/பாட்டி காலத்தில் குழந்தைகளுக்கு ஏதாவது நோய் வந்தால் கைவைத்தியம் மூலமாகத்தான் குணப்படுத்துவார்கள்.  ஆனால் இப்பொழுது குழந்தைக்கு லேசாக சளி, காய்ச்சல் வந்தாலே உடனே மருத்துவமனைக்கு கூட்டி கொண்டு செல்கிறோம். ஆனால் இன்றைய சூழ்நிலையில் மருத்துவமனைக்கு சென்று வந்தால் தான் குழந்தைகளுக்கு சரியாகிவிடும் என்ற நம்பிக்கை நம்மிடம் அதிகம் உள்ளது. மருந்துகளில் கெமிக்கல் நிறைய சேர்க்கிறார்கள். இதை குழந்தைகளுக்கு கொடுத்தால் அந்த நிமிடம் சரியாகுமே தவிர மருந்து, மாத்திரை ஒரு நிரந்தர தீர்வு கிடையாது. 

ஒவ்வொரு வயதிலும் தடுப்பூசி போடுவது சளி மற்றும் சுவாசக் கோளாறு ஏற்பட்டால் நெபிலிஸிர் உபயோகிப்பது என நவீன இயந்திரங்கள், மருந்துகள்என நிறையவற்றை கண்டுபிடிக்கிறார்கள். இதனால் எவ்வளவு அபாயம் ஏற்படும் என்பதை அறிந்தும் நாம் அதைத்தான் குழந்தைகளுக்கு கொடுக்கிறோம். அந்தகாலத்தில் எந்த ஒரு நோய் வந்தாலும் முதலில் கை வைத்தியதை அதாவது வீட்டில் உள்ள பொருள்கள் மற்றும் சில மருத்துவ இலைகளை கொண்டு மருந்து தயாரித்து கொடுத்துவிட்டு, இரண்டு நாள் கொடுத்ததும் கேட்கவில்லை என்றால் நீங்கள் மருத்துவரை அணுகலாம். வாரம் ஒருமுறை குழந்தைகளுக்கு வேப்பிலை சாறு,  அல்லது இஞ்சிச் சாறு, துளசிச் சாறு என கொடுத்தால் எந்த நோயும் அண்டாது.

பொதுவாக குழந்தைகளுக்கு சளி,  காய்ச்சல் வருவதை நாம் தடுக்க முடியாது. அது வந்தால் தான் குழந்தையின் உடல் சீராக இயங்குகிறது என்று அர்த்தம். மேலும் இது போன்று குழந்தைகளுக்கு வருகிற பொதுவான உடல் நலப் பிரச்சனைகளுக்கு என்னுடைய பாட்டி கொடுக்கும் கைமருந்துகள் இவை. என்னென்ன கைமருந்து கொடுக்கலாமென்று பார்ப்போம்.

சளி :  

 • குழந்தைகளுக்கு சிறிது தண்ணீரை சுட வைத்து அதில் கற்பூரவல்லி இலை, துளசி, வெற்றிலை போட்டு, குழந்தைகள் உறங்கும் அறையில்  வைக்கலாம். இதில் எதுவும் சேர்க்க வேண்டாம்.  விக்ஸ் உபயோகிப்பதற்கு பதில் தேங்காய் எண்ணெயில் ஒன்று இரண்டு கற்பூரத்தை சுடவைத்து நெஞ்சு,  முதுகு, மூக்கு போன்ற இடத்தில் சூடு பொறுக்கும் அளவில் நாம் தேய்க்க வேண்டும்.
 • கஷாயமும் கொடுக்கலாம். கஷாயம் செய்ய தேவையான பொருள்கள் கொஞ்சம் துளசி இலை, கற்பூரவல்லி இலை, காம்பை நீக்கிய வெற்றிலை ஒன்று, முசுமுசுக்கு இலை, தூதுவளை இலை, பூண்டு ஒரு பல், கட்டிபெருங்காயம் சிறிது,  ஓமம் 1sp, சீரகம் 1sp,  இவை அனைத்தையும் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி 5ml  முதல் 10ml வரை கொடுக்கலாம். இதை கொடுத்தால் சளி மற்றும் நாள் பட்டசளி அனைத்தையும் போக்கி விடும்.
 • வரட்டு இருமல், தொடர் இருமல் இவற்றுக்கு மிளகு,அதிமதுரம்,  கடுக்காய் தோல் மூன்றையும் வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும். இதை காலை மாலை இருவேளையும் 5 கிராம் அளவுக்கு எடுத்து தேனில் கலந்து சாப்பிடவும்.  கலக்கும் போது வெற்றிலையில் வைத்து கலந்து சாப்பிடவும்.

வயிற்றுகோளாறுகள்:

பொதுவாக குழந்தைகளுக்கு வயிற்றுபோக்கு, மலச்சிக்கல்,  வாயுவுத்தொல்லை வயிற்று வலி, வயிற்றுப்பூச்சி என்று அடிக்கடி வயிறு சம்பந்தமான நோய்கள் வரும்.

 • வயிற்று பூச்சிக்கு குழந்தைகளுக்கு பூண்டு 2 பல், குப்பைமேனி இலை 2 இவை இரண்டையும் அரைத்து வடிகட்டி கொடுக்கலாம்.  வாரத்திற்கு 2 முறை கொடுக்கலாம்.  இதனால் எந்த பக்க விளைவுகளும் கிடையாது.  
 • வயிற்றில் வாயு இருந்து வயிறு உப்புசமாக தெரிந்தால் சிறிது பெருங்காயம் பொடி எடுத்து வெது வெதுப்பான நீரில் கரைத்து பேஸ்ட் போல் செய்து குழந்தைகளின் வயிற்றில் தடவலாம். வளர்ந்த குழந்தைகளுக்கு இதையே குடிக்க கொடுக்கலாம். 
 • வயிற்றுபோக்கு உள்ள குழந்தைகள் களைத்து காணப்படுவார்கள் அவர்களுக்கு electrol பொடிக்கு பதில் தண்ணீரில் சம அளவு உப்பும் சர்க்கரையும் கலந்து குடிக்க கொடுத்தால் வயிற்றுப்போக்கு குணமாகி சுறுசுறுப்பாக இருப்பார்கள்.
 • குழந்தைகளுக்கு இரண்டு மூன்று நாட்கள் மலம் கழிக்கவில்லை என்றால் சீரகத் தண்ணீர் கொடுக்கலாம். உலர் திராட்சை பழத்தை தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்கலாம். அவர்களின் ஆசன வாயில் சிறிதளவு எண்ணெய் வைக்கலாம். இதனால் மலம் சுலபமாக வந்துவிடும்.  இந்த நேரத்தில் மைதா உணவு வகைகளை குழந்தைகளுக்கு கொடுக்கவே கொடுக்காதீர்கள்.
 • வயிற்று வலி வராமல் இருக்க சுடுநீரில் தேன் கலந்து பருகலாம். வாரம் ஒரு முறை குழந்தைகளுக்கு வேப்பிலைச் சாற்றை குடிக்க கொடுக்கலாம்.

காய்ச்சல் :

குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் துளசி, இஞ்சி சம அளவு எடுத்துச் சாறு எடுத்து கொடுக்கலாம். இனிப்புக்காக தேன் சேர்க்கலாம். அதிக காய்ச்சல் இருந்தால் குழந்தைகளுக்கு குளிர்ந்த நீரில் துணியை நினைத்து உடம்பை துடைத்து எடுக்கவும்.  நெற்றியில் சூடு அதிமானால் வலிப்பு வந்துவிடும்.  இதற்கு ஈரத்துணியை நெற்றியில் வைக்கவும். குழந்தைகளுக்கு நோய் இருந்தாலும் இல்லாவிடிலும் துளசி இஞ்சிச்சாறு, வேப்பிலைச்சாறு, என வாரம் ஒரு முறை கொடுங்கள்.  நோய் வருவதை நம்மால் தடுக்க முடியாது. ஆனால் நோயிலிருந்து குழந்தைகளை நம் வீட்டில் உள்ள அஞ்சறைப் பெட்டி சாமான்களை கொண்டே பாதுகாக்கலாம்.

 • 6
விளக்கக்குறிப்புகள்()
Kindly Login or Register to post a comment.

| Apr 21, 2019

my son 2yrs 2month ..not speaking well. and not sleeping ... very angry and over adampidithal

 • அறிக்கை

| Apr 09, 2019

En babykku 5month aguthu cold pidichiirrukku enna seivar Thu

 • அறிக்கை

| Mar 08, 2019

👌👍

 • அறிக்கை

| Jan 30, 2019

My baby ku 6 month complete cold iruku nenju orachal by birth la irunthu iruku. Enna panaradunu and thulasi appakova leaf kasayam kudutha evlo days continue a kudukanum.

 • அறிக்கை

| Jan 21, 2019

en baby 2 month aagudhu sali pidichuruku enna seivadhu

 • அறிக்கை

| Jan 12, 2019

ennathu kulanthaiku erandu maatham aagirathu sali pidithirikirathu enne seyvanthu

 • அறிக்கை
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்
சிறந்த பெற்றோர் Blogs
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}