• உள்நுழை
 • |
 • பதிவு
உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் உணவு மற்றும் ஊட்டச்சத்து

நீர் மூலம் பரவும் நோய்கள் - குழந்தைகளை பாதுகாக்கும் வழிகள்

Bharathi
கர்ப்பகாலம்

Bharathi ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Jun 23, 2022

பொதுவாக 70% நோய்கள் தண்ணீரின் மூலம் தான் பரவுகின்றன. ஜலதோஷம், டைபாய்டு, வைரஸ் காய்ச்சல், காலரா, மஞ்சள் காமாலை நோய், போன்றவைகள் தண்ணீர் மூலம் பரவும் நோய்கள். வீட்டின் அருகே சுற்றுப்புறங்கள் தூய்மையில்லாத காரணத்தால் கழிவுநீர்களில் வாழும் கொசுக்கள் மற்றும் ஈக்கள் மூலமாக மலேரியா மற்றும் மஞ்சள் காமாலை நோய்ஏற்படலாம்.

மழைக்காலத்தில் கொசுக்கள் மற்றும் நீரின் மூலம் பரவும் நோய்களில் இருந்து எப்படி பாதுகாப்பது என்ற குறிப்புகளை பார்க்கலாம்.

நீரினால் பரவும் பெரும்பாலான நோய்கள் தொற்றுநோயாகும், அவை சரியாக கவனிக்கப்படாவிட்டால் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவக்கூடும். இருப்பினும், சில உணவுகள் தொற்றுநோயைத் தடுக்கவும் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும். மழைக்காலங்களில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் தண்ணீரினால் பரவும் நோய்கள் எளிதாக வருகிறது. மழைக்காலத்தில் அதிகம் தாக்கும் நோய்கள் என்னென்ன என்பதையும் தவிர்க்கும் வழிமுறையும் குறித்து பார்க்கலாம். கொசுக்களை விரட்டும் செடிகளை வைக்கலாம். 

நீர் நிலைகள் தேங்கியிருப்பதன் மூலம் பரவும் நோய்கள்

நீர் நிலைகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் கட்டாயம் இருக்கும். அதுவும் மழைக்காலத்தில், எல்லா இடங்களிலும் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்திக்கு உதவுகின்றன. இதில், முக்கியமானது மலேரியா காய்ச்சலை உருவாக்கும் கொசு.

மலேரியா காய்ச்சல் - அனோபீலஸ்’ என்ற பெண் கொசுதான் மலேரியா காய்ச்சலுக்கு மிக முக்கியக் காரணம். இந்தக் கொசு ஒருவரைக் கடித்து, மற்றொருவரைக் கடிக்கும்போது, அதன் எச்சில் வழியாக கிருமிகள் பரவி, மலேரியா காய்ச்சல் ஏற்படுகிறது. மலேரியா காய்ச்சலை ஏற்படுத்தும் ஒட்டுண்ணி, உடலுக்குள் சென்று, சாதகமான காலம் வரும் வரை காத்திருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்ததும் காய்ச்சல் வரும். மலேரியா – அறிகுறிகள் மற்றும் குழந்தைகளை எப்படி பாதுகாப்பது?

டெங்கு காய்ச்சல் - மலேரியாவுக்கு அடுத்தபடியாக நாட்டையே பயமுறுத்தும் கொசு, டெங்குவைப் பரப்பும் ‘ஏடிஸ் எஜிப்டி’. இந்தக் கொசு, அசுத்தமான நீர் நிலைகளில் வாழாது. எனவே, சாக்கடைகளில் இந்தக் கொசு உற்பத்தி ஆவது இல்லை. வீட்டைச் சுற்றி இருக்கும் தேங்காய்ச் சரடுகள், ஓடுகள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றில் தேங்கும் மழைத் தண்ணீரில் இருந்துதான்  இந்தக் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொண்டாலே, டெங்கு காய்ச்சலைத் தவிர்க்க முடியும். டெங்குவில் இருந்து உங்கள் குழந்தைகளை எப்படி பாதுகாக்கலாம்.

சிக்குன்குனியா காய்ச்சல் - இந்த காய்ச்சல் வருவதற்கும் ஏடிஸ் ஏஜிப்டி வகை கொசுதான் காரணமாக இருக்கிறது. சிக்குன்குனியா வந்தால், காய்ச்சல் மற்றும் உடலில் உள்ள மூட்டு இணைப்புகளில் கடுமையான வலி போன்றவை ஏற்படும். எலியின் சிறுநீர் வழியாக எலிக்காய்ச்சல் பரவுகிறது. இந்தக் கிருமித்தொற்று உள்ள சிறுநீர், மழை நீரில் கலக்கும்போது, அது மனிதர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்திவிடும். இதனால், வெளியே சென்று வீடு திரும்பியதும், வெதுவெதுப்பான நீரில் கால்களை நன்கு கழுவ வேண்டும். வீட்டைச் சுற்றி நடப்பதாக இருந்தாலும், காலணி அணியாமல் செல்லக் கூடாது

மலேரியா, டெங்கு மற்றும் சிக்குன்குனியா ஆகியவை அதிக காய்ச்சல், சளி, உடல்வலி மற்றும் சோர்வை கொண்டு வருகின்றன. அதனால் இந்த அறிகுறிகள் வரும் போது தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும்.

மழைக்காலத்தில் தண்ணீரில் கழிவுநீர் கலக்க வாய்ப்பு அதிகம். இதனால், காலரா போன்ற வயிற்றுப் போக்கைப் பரப்பும் கிருமிகள் இந்தப் பருவத்தில் வேகமாகப் பரவும். சுகாதாரம் அற்ற முறையில் தயாரித்து விற்கப்படும் உணவுப் பொருட்களை உண்பதன் மூலமும், ஈ மொய்த்த பொருட்களைச் சாப்பிடுவதன் மூலமும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு இந்தப் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். தெருவோர உணவுகள் மட்டும் இன்றி வீட்டிலும் சுத்தமான உணவு, காய்ச்சி வடிகட்டிய சுத்தமான நீரைப் பருகவில்லை எனில், டைபாய்டு காய்ச்சல் வரலாம். கனமழையின் போது குழந்தைகளை சுகாதாரமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பது எப்படி?

கொசுக்களிடமிருந்து பாதுகாப்பாக இருக்க

 • வீட்டை சுற்றி கொசுவலை தவிர்க்காமல் பயன்படுத்துங்கள். கொசுக்களிடமிருந்து நம்ம குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது
 • கொசுக்கள் இனப்பெருக்கம் ஆகாமல் இருக்க வீட்டை சுற்றிலும் எங்கும் தண்ணீர் தேங்கவோ அல்லது சேகரிக்கவோ செய்யாதீர்கள். 
 • குளியலறை, கழிப்பறை, வீட்டை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரியுங்கள்.
 • மாலை நேரத்தில் கொசு விரட்டி மற்றும் க்ரீம்களை பயன்படுத்துங்கள்.
 • இரவு நேரத்தில் கை கால் முழுவதும் மூடி இருக்கும் ஆடைகளை அணியுங்கள்.
 • நீர் மூலம் பரவும் நோய்கள்
 • தண்ணீரை கொதிக்க வைத்து குடிப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். எப்போதும் சுத்தமான காய்ச்சி வடிகட்டிய நீரை மட்டுமே குடியுங்கள்.
 • பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதற்கு முன்பு நன்றாக சுத்தமாக கழுவி பயன்படுத்துங்கள்.
 • உணவுகளை எப்போதும் மூடி வைத்து பயன்படுத்துங்கள். 
 • மழை நாட்களில் வெளி உணவுகளை உட்கொள்வதை தவிர்த்து விடுங்கள். எல்லா நேரங்களிலும் சுகாதாரத்தை பராமரியுங்கள்.
 • வீட்டை சுற்றி திறந்திருக்கும் வடிகால் மற்றும் பள்ளங்கள் மூடிவைக்கவும்.
 • குழந்தைகளை வெளியில் விளையாட அனுமதிக்காதீர்கள். ஐஸ்க்ரீம், குளிர்பானங்களை தவிருங்கள்.
 • எப்போதும் கையில் ஒரு கர்ச்சீப் வைத்திருப்பது  அவசியம். தும்மல் வந்தாலோ, சளி வந்தாலோ கர்சீப் பயன்படுத்த வேண்டும்.
 • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் முன்னெச்சரிக்கையாக போடக்கூடிய தடுப்பூசிகளை மருத்துவரின் ஆலோசனையோடு போட்டு விடுங்கள்.

சித்த மருத்துவம்

இந்த மூலிகை மருத்துவத்தை சித்த மருத்துவர்களும், மரபு வழி மருத்துவர்களும் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

 • கொத்தமல்லி  -  காய்ச்சல், நாவறட்சி, வாந்தி இருமல், இளைப்பு.
 • சீரகம் -  வயிறு உப்புசம், காய்ச்சல், வாந்தி
 • திப்பிலி - இருமல், அஜீரணம், சுவையின்மை, இதய நோய், சோகை.
 • பூசணி - புத்தம், ரத்த தோஷம், மனநோய்.
 • பூண்டு -  இதய நோய், இருமல்.
 • மழைக்காலத்தில் டான்சில் மற்றும் சைனஸ் நோய்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக பதிப்புகள் ஏற்படும். இவர்கள் தினமும் உப்பு கலந்த  நீரால் தொண்டை வரை கொப்பளிக்க வேண்டும்.
 • அடிக்கடி ஆவி பிடிப்பது, மூச்சுப் பயிற்சியில் ஈடுபடுவதன் மூலம் சளி, இருமல் பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம்.
 • தண்ணீரை கொதிக்க வைத்து பருகி, சுத்தமான, ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொண்டு, சுகாதாரமான சுற்றுச்சூழலில் வாழ்ந்தால் பெரும்பாலான நோய்களை தடுத்துவிடலாம்.
 • நிலவேம்பு, பப்பாளி இலைச்சாறு, ஆடாதொடை போன்ற சித்தமருத்துவ மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
 • இஞ்சியை இடித்துச் சாறு எடுக்கவும். ஒரு தேக்கரண்டி அளவு சாறுடன், சிறிதளவு தேன் கலந்து, தினமும் மூன்று வேளைகள், 7  நாட்களுக்குப் பருகினால் சளியுடன் கூடிய இருமல் கட்டுப்படும்.
 • தூதுவளை இலையைப் பறித்து நன்கு சுத்தம் செய்து அதனுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து  ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் இருமல், இரைப்பு, சளி முதலியவை நீங்கும்.
 • ஆஸ்துமா நோயாளிகள், காலை வேளையில் வெறும் வயிற்றில் தூதுவளைச்சாறு 50 மில்லியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமாவினால் ஏற்படும் சளி, இருமல் கபத்தைப் போக்கும்.
 • கொய்யா, மாதுளை, பப்பாளி, ஆப்பிள், அன்னாசி, பேரிக்காய், நெல்லிக்காய், ஆரஞ்சு  முதலானவற்றில் வைட்டமின் சி நிறைவாக உள்ளன. இவை, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச்  செய்யும்.
 • மழைக்காலத்தில் தண்ணீர் தாகம் அதிகம் இருக்காது. அதனால், தண்ணீர் அருந்தாமலேயே இருக்கக் கூடாது. சூப், ரசம், பால், டீ, காபி  எனத் திரவ உணவுகள் மற்றும் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம்.

மழைக்காலம் மகிழ்ச்சியான காலம் என்றாலும் நோயில்லாமல் பாதுகாத்துக் கொள்வது நம் கையில் தான் இருக்கிறது. மேலே உள்ல குறிப்புகளை பின்பற்றி மழைக்காலத்தில் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்

 • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}