• உள்நுழை
 • |
 • பதிவு
பெற்றோர் கல்வி மற்றும் கற்றல்

ப்ரைமரி குழந்தையின் கல்வியில் ஏற்பட்ட இடைவெளியை சரிசெய்யும் வழிகள்

Radha Shri
3 முதல் 7 வயது

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Nov 26, 2021

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குழந்தைகளின் கல்வியில் பெரிய அளவில் இடைவெளி ஏற்பட்டுள்ளதை நாம் அனைவரும் அறிந்த ஒன்று. குறிப்பாக ப்ரைமரி என்று சொல்லப்படுகின்ற வயது அதாவது 4 வயது முதல் 7 வயது வரை உள்ள குழந்தைகளின் கற்றல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில் முதன் முதலில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு வகுப்பறையில் கல்வி கற்பது என்பது கொரோனா வைரஸ் காரணமாக நிகழவில்லை. அவர்களுக்கும் ஆன்லைன் வழியாக கற்கும் நிலை ஏற்பட்டது.

 இந்த விஷயத்தில் ஒரு பெற்றோராக நானும் என் குழந்தையை எண்ணி வருத்தம் அடைந்தேன். என் மகளுக்கு 6 வயதாகின்றது. அவளின் கற்றலில் நிகழ்ந்த இழப்பை, இடைவெளியை இணைக்க என்னென்ன வழிகள் இருக்கின்றது என்பதை ஒரு பெற்றோராக இன்று வரை சிந்தித்து வருகிறேன். வீட்டில் சில திறன்களை ஊக்குவிக்கும் வகையில் சில செயல்பாடுகளை செய்ய அவளை ஊக்குவித்து வருகிறேன்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நான் சவாலாக எண்ணியது என் மகளின் மொழித்திறன் குறிப்பாக வாசிப்பு மற்றும் எழுத்து திறன். இந்த இரண்டில் நடந்த இழப்பை ஈடுசெய்ய சில ஆக்டிவிட்டீஸ் கொடுப்பதுண்டு. ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடந்தாலும் ஒரு பெற்றோராக அவளின் கல்வியை நினைத்து கவலை கொள்வதுண்டு. இப்போது பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தாலும் இன்னும் முழுமையான கற்றல் நடைபெறவில்லை. அதனால் இந்த வயதுக்கு ஏற்ற திறன்களை வளர்க்க பல்வேறு ஆய்வுகளைல் ஈடுபடுவதுண்டு.

குழந்தைகளின் கல்வியில் உள்ள இடைவெளியை இணைக்க எனக்கு கிடைத்த சில தகவல்களை, ஆலோசனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். மேலும் இது தொடர்பாக கல்வி ஆலோசகர் சொல்லும் அறிவுரைகளையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

குழந்தைக்கு ப்ரைமரி கல்வி ஏன் முக்கியம்?

ஃபிரடெரிக் டக்ளஸ் " பலவீனமான மனிதர்களை சரிசெய்வதை விட வலிமையான குழந்தைகளை உருவாக்குவது எளிது" என்றார். இந்த மேற்கோள் ஆரம்பக் கல்வியின் முக்கியத்துவத்தை ஆழமான உணர்த்துகிறது.

ஆரம்பக் கல்வியின் நன்மைகள்

1. சமூக மற்றும் உணர்ச்சி ரீதியான வளர்ச்சியை ஊக்குவிக்கிறது

2. சுதந்திரம் மற்றும் நம்பிக்கையை கற்பிக்கிறது

3. வாசிப்பு மற்றும் தொடர்பு திறன்களை மேம்படுத்துகிறது

ஆரம்பக் கல்வி என்பது ஒவ்வொரு குழந்தையின் முதன்மையான மற்றும் அடிப்படை கற்றலாகும். குழந்தையின் தன்மையை உருவாக்குவதற்கான முதல் படி இது. ஆரம்பக் கல்வியின் பங்கு குழந்தையின் பரந்த கற்றலுக்கான அடிப்படையை உறுதி செய்வதாகும். சமூக, அறிவாற்றல், கலாச்சார, உணர்ச்சி மற்றும் உடல் திறன்களின் வளர்ச்சி இதில் அடங்கும். இந்தக் கல்வியானது தகவல்களையும் பொழுதுபோக்கையும் இணைத்து வழங்கப்பட வேண்டும்.

இந்த வயதினரின் கவனம் 5-6 நிமிடங்களுக்கு மேல் இல்லை, இது பெரியவர்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு. செயல்பாடுகள் மற்றும் பாடங்கள் இதற்கேற்றவாறு திட்டமிடப்பட வேண்டும், அது அவர்களை ஈடுபாட்டுடனும் அதிக நேரம் ஈடுபடவும் செய்வதாகும்.

ஆரம்பப் பள்ளி குழந்தைகள் கற்பதற்கான உதவிக்குறிப்புகள்

உங்கள் ஆரம்பப் பள்ளி வயதுக் குழந்தை கற்க உதவும் சில நடைமுறை குறிப்புகள் இங்கே:

 • உங்கள் குழந்தையுடன் ரைமிங் கேம்கள், லெட்டர் கேம்கள் மற்றும் வடிவம் மற்றும் எண் கேம்களை விளையாடுங்கள், மேலும் கேம்களிலும் செயல்பாடுகளிலும் மாறி மாறிப் பயிற்சி செய்யுங்கள்.
 • எளிமையான மொழியைப் பயன்படுத்தவும், வார்த்தைகள் மற்றும் வார்த்தைகளின் அர்த்தங்களுடன் விளையாடவும். உங்கள் குழந்தை படிக்கும் போது கூட தொடர்ந்து படிக்கவும்.
 • புத்தகங்கள், டிவி அல்லது பொதுவான உரையாடல்களில் நிறைய புதிய வார்த்தைகளைக் கேட்கவும் பார்க்கவும் உங்கள் குழந்தை அனுமதிக்கவும், மேலும் அந்த வார்த்தைகளின் அர்த்தம் என்ன என்பதைப் பற்றி பேசவும்.
 • உங்கள் பிள்ளைக்கு இலவச, கட்டமைக்கப்படாத விளையாட்டுக்கான நேரம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்த மாதிரி பலவிதமான செயல்பாடுகளை முயற்சி செய்ய ஊக்குவிப்பதன் மூலம் உங்கள் பிள்ளைக்கு அவர் எதில் திறமையானவர் என்பதைக் கண்டறிய உதவுங்கள்.

கற்றல் இடைவெளியை ஈடுசெய்ய செய்ய உதவும் வழிகள்

உங்கள் குழந்தைகளின் ப்ரைமரி கல்வியில் உள்ள இடைவெளியை,  வகுப்பறையில் விடுபட்ட அனுபவத்தை, மற்ற குழந்தைகளோடு இணைந்து கற்க முடியாத சூழல், வயதுக்கேற்ற கற்றல் திறன்களை மேம்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் என பல்வேறு சவால்களை சந்தித்தித்து கொண்டிருக்கும் பெற்றோர்களுக்கு கீழே குறிப்பிடப்படும் இந்த ஆலோசனைகள் ஆறுதலை தரும்.

1. கற்றல் இடைவெளிகளைக் கண்டறிதல்

குழந்தைகள் ஒவ்வொருவரும் வித்தியாசமாணவர்கள். தனித்திறன்கள் கொண்டவர்கள். அதனால் ஒரு குழந்தையின் கற்றல் இடைவெளியை இன்னொரு குழந்தையோடு ஒப்பிடுவதற்கு பதிலாக உங்கள் குழந்தையின் கற்றலில் என்னென்ன இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிவது சிறந்தது. அப்போதும் தான் அவர்களுக்கேற்ற திறன்களை வளர்க்க எளிதாக இருக்கும். உங்கள் குழந்தை எந்த பாடத்தில் வலிமையாக இருக்கிறார்கள் மற்றும்  எந்த பாடம் கற்க சிரம்மப்படுகிறார்கள் என்பதை அறிவது. ஒவ்வொரு குழந்தையின் முன்னேற்றம் மற்றும் திறமையின் மதிப்பீட்டை அளவிடுவது.

கற்றல் இழப்பின் உண்மையான அளவு தெளிவாக இல்லை என்றாலும், ஆசிரியர்களும், பெற்றோரும் குழந்தையின் கற்றல் இடைவெளியை தொடர்ந்து கவனித்து அதை இணைக்கும் பாலமாக உதவலாம்.

2. புதிய கல்வி சூழலை எவ்வாறு எதிர்கொள்வது?

ஒரு 4 வயது குழந்தைக்கு ஆன்லைன் வழியாக பயில்வது என்பது மிகப்பெரிய சவால். இதன் வழியாக கற்பதை கொண்டு அவர்களின் கற்றல் திறனை, கவனத்தை சரியாக மதிப்பீடு செய்ய இயலாது. வகுப்பறையில் சென்று கற்கும் போது குழந்தைகள் நிறைய கற்றுக் கொள்கிறார்கள். ஆரம்பக் கல்வியானது பாதுகாப்பான, மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான சூழலை வழங்குகிறது, அங்கு குழந்தைகள் சுய உணர்வைப் பெறலாம் மற்றும் புதிய விஷயங்களை கண்டறியலாம்.

இவ்வளவு நாட்கள் ஆன்லைன் வழியாக கற்றுக் கொண்டு வகுப்பறைக்கு நேராக சென்று கற்கும் போது சில சவால்களை எதிர்கொள்ளலாம். ஆன்லைன்  வழியாக என்ன கற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிவதன் மூலம் படிப்படியாக பாடங்களை கற்பிக்க எளிதாக இருக்கும்.

3. ஆரம்ப தொடக்கப்பள்ளியில் கற்பிக்கும் முறை

குழந்தைகள் வெவ்வேறு வழிகளில் கற்றுக்கொள்கிறார்கள் - சிலர் பார்த்து கற்றுக்கொள்கிறார்கள், சிலர் கேட்பதன் மூலம், சிலர் படிப்பதன் மூலம், சிலர் செய்வதன் மூலம். இந்த வயதில் குழந்தைகள் இன்னும் விளையாட்டின் மூலம் கற்றுக்கொள்கிறார்கள். பள்ளியில் கட்டமைக்கப்படாத, சுதந்திரமான விளையாட்டு முறையில் பாடங்களை கற்க உதவுகிறது.

பல்வேறு வழிகளில் பொருட்களைப் பயன்படுத்தி குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள். உங்கள் குழந்தை பலவிதமான பொருட்களை கொண்டு பரிசோதனை செய்து, ஆராய்ந்து, உருவாக்கும்போது, சிக்கலை தீர்க்கும் திறனை இயல்பாக கற்றுக்கொள்கிறாள்.

குழந்தைகள் சமூக திறன்களுடன் பிறக்கவில்லை - அவர்கள் படிக்கவும் எழுதவும் கற்றுக்கொள்வதைப் போலவே இதையும் கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் குழந்தைக்கு மற்ற குழந்தைகளுடன் விளையாடுவதற்கான வாய்ப்புகளை வழங்குவது, அவர் மற்றவர்களுடன் பழகுவதற்குத் தேவையான திறன்களை வளர்த்து கொள்வதற்கான சிறந்த வழியாகும்.

4. வீட்டில் கற்றலை வளர்க்கும் ஆக்டிவிட்டீஸ்

 • தன்னுடைய வேலைகளை தானே செய்ய கற்றுக் கொடுப்போம்.

உதாரணம் - குழந்தைகளுக்கு சிறு சிறு வீட்டு வேலைகள் செய்ய கற்று கொடுங்கள். எடுத்துக்காட்டாக காலையில் படுக்கையை விட்டு எழும் போது அவர்களுடைய படுக்கையை மடித்து சுத்தமாக வைப்பது எப்படி என்று  கற்றுகொடுக்கலாம்.

 • சமயலறையில் எப்படி குழந்தைகளை ஈடுபடுத்துவது:

உதாரணம் - எந்தெந்த பொருட்கள் எங்கு உள்ளது என்று தெரிந்து இருக்க வேண்டும். நீங்கள் வேலை செய்யும் போது உங்களுக்கு உதவியாக காய்கறிகள், பழங்கள் தோல் உறிக்க சொல்லித் தரலாம். சிறு சிறு ஈஸியான ஸ்நாக்ஸ் eg. சாலட் செய்ய கற்றுக் கொடுக்கலாம்.

 • கிராஃப்ட் வேலைகள் செய்ய சொல்லித் தரலாம்:

உதாரணம் - சிறு சிறு ஈஸியான கைவினை பொருட்கள் செய்ய கற்றுக் கொடுக்கலாம். பிளாஸ்டிக் பாட்டில கலர் தீட்டி அதில் பிளவர் வாஷ் பண்ணலாம். கலர் பேப்பர் வைத்து நிறைய வடிவங்கள், பப்பெட்ஸ், ரெயின்போ போன்றவை செய்ய் சொல்லித் தரலாம். பழைய பாசிகளை வைத்து அழகு பொருட்கள் செய்ய கற்றுத் தரலாம்

 • ஓவியம் வரைய கற்று தரலாம்:

உதாரணம் - கலர் பென்சில், கலர் பெய்ன்ட் வைத்து டூடல் ஆர்ட், பப்பில் ஆர்ட், நெய்ல் பாலிஷ் ஆர்ட், விரல் ஆர்ட் வைத்து ஃபேமிலி மரம், டாட்டூ பாட்டர்ன் ஆர்ட் போன்ற ஆர்ட் வகைகளை பயன்படுத்தி குழந்தைகளை ஈடுபடுத்தலாம். படம் வரைந்து கதை சொல்ல கற்று தரலாம். வீடு, மரம், வாகனங்கள், கதையில் வரக்கூடிய கார்ட்டூன் கதாபாத்திரங்கள் போன்றவற்றை வரைய பழக்கப்படுத்தலாம்.

 • குழந்தைகளுக்கு புத்தகம் வாசிக்க கற்றுகொடுக்கலாம்.

உதாரணம் - தினமும் வாசிப்பதை ஒரு பழக்கமாக ஏற்படுத்திக் குடுக்க வேண்டும். நாமும் கூட சேர்ந்து வாசிக்க வேண்டும். வாசிக்கும்போது கேள்விகள் கேட்க ஊக்கப்படுத்தவும். ஐந்து முதல் ஏழு வயது குழந்தைகளுக்கு சிறு சிறு நீதி கதைகள், காமிக் கதைகள் கூறலாம்.

5. நெகிழ்வாகவும் கையாள்வது

இன்றைய சூழலில், ஒரு ஆசிரியர் வகுப்பறையில் அல்லது  தொலைதூர அமைப்பில் அல்லது இரண்டின் கலவையில் மாணவர்களை சென்றடைய வேண்டிய நிலையில் உள்ளனர்.  இன்றைய நிச்சயமற்ற கற்றல் சூழலில் ஏற்படும் மாற்றங்கள் ஒவ்வொரு மாணவரின் கற்றல் பயணத்தை வெவ்வேறு வழிகளில் பாதிக்கலாம் மற்றும் சரியான கல்வித் திட்டத்தின் மூலம் கற்றலை எளிதாக்க உதவும், எப்போது அல்லது எங்கு இருந்தாலும் அது நடக்கும்.

6. பெற்றோர்கள் பதட்டப்படாமல் பொறுமையாக கையாள்வது

இன்றைய சூழ்நிலையில் பெற்றோர்களுக்கு இருக்க வேண்டிய மனநிலை பொறுமையும், அமைதியும். ஏன்னென்றால், பெற்றோர் நாம் பதட்டபப்டுவதன் மூலம் குழந்தையின் கற்றல் பாதிப்பப்படலாம். நம்முடைய நம்பிக்கையற்ற செயல்பாடுகள் குழந்தைக்கு கவனச்சிதறலையும் மற்றும் நம்பிக்கையின்மையையும்  உருவாக்கலாம். ஒவ்வொரு குழந்தைக்கும் வெவ்வேறு விதமான கற்றல் திறன் இருக்கும். சில குழந்தைகள் எளிதாக கற்றுக் கொள்வார்கள், சில குழந்தைகளுக்கு கற்பிக்கும் முறையில் மாற்றம் தேவைப்படும்.  நாம் நம் குழந்தையை நன்றாக புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். இது வெற்றிகரமான கற்றலுக்கு வழிவகுக்கும்

குழந்தையின் கற்றல் இடைவெளியை இணைப்பதில் பெற்றோரின் பங்கு மிக முக்கியம். இந்த இடைவெளி நம் குழந்தைக்கும் மட்டும் ஏற்படவில்லை. உலகம் முழுக்க இந்தப் பிரச்சனை உள்ளதை நாம் முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும். பெற்றோர் நம்மால் முடிந்த ஆதரவையும், உறுதுணையையும் குழந்தைக்கு கொடுக்க வேண்டும். குழந்தையின் கல்வி முன்னேற்றத்தில் தாமதம் ஏற்படுவதை ஏற்றுக் கொண்டு, பாஸிட்டிவ்வான அணுகுமுறையில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது இன்றைய சூழலில் மிக அவசியம்

 • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த பெற்றோர் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}