• உள்நுழை
 • |
 • பதிவு
கல்வி மற்றும் கற்றல் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் உணவு மற்றும் ஊட்டச்சத்து

குழந்தையின் கண் பார்வையை இயற்கையாகவே மேம்படுத்த உதவும் வழிகள்

Bharathi
1 முதல் 3 வயது

Bharathi ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Aug 26, 2021

நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

குழந்தையின் கண் பார்வை சார்ந்த அக்கறை பெற்றோர் நமக்கு அதிகமாகவே இருக்கும். பெரும்பாலும் நம் உணவில் ஏராளமான சத்துக்கள் கண்களை வளம் பெற உதவுகின்றது. இப்போது குழந்தைகள் மொபைல் போன், டிவி, ஆன்லைன் கிளாஸ் என அதிகமாக ஸ்க்ரீனை பார்க்கும் சூழலில் தான் குழந்தைகள் வளர்கிறார்கள். அதனால் அவர்களின் கண்ணை பாதுகாக்க கூடுதல் கவனம் தேவைப்படுகின்றது.

முன்பெல்லாம் பிறந்தது முதல் 1 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு மொபைல் காரணமாக பிரச்சனை ஏற்பட்டிருக்காது. ஆனால் இப்போது சிறு குழந்தைகளுக்கும் கண் எரிச்சல், பார்வைக் கோளாறு என கண் பிரச்சனைகள் வருகின்றது. அதனால் பிறந்தது முதலே குழந்தையின் கண்களை பாதுகாக்க நாம் முயற்சி செய்வதன் மூலம் பார்வை குறைப்பாட்டை தவிர்க்கலாம். அதற்கான வழிமுறைகளையும், உணவுகளையும் இந்தப் பதிவில் பார்க்கலாம்.

கண்களைப் பாதுகாக்க என்ன செய்யலாம்?

இன்றைய காலகட்டத்தில் கணிணி, தொலைக்காட்சி முக்கிய அங்கமாக இருக்கும் அலைபேசி இதை எல்லாம் பார்க்காமல் நம்மால் இருக்க முடியாது என்ற நிலை வந்து விட்டது. அதனால் வயது வித்தியாசம் இன்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண் பாதிப்பிற்கு உள்ளாகும் நிலையில் இருப்பது மிகவும் வருந்தத்தக்க விஷயமாக இருக்கிறது.அதனால் கண்களைப் பாதுகாக்க சில ஆலோசனைகள்:

 1. அடிக்கடி கண்களை குளிர்ந்த நீரால் கழுவுவது நல்லது.
 2. கண்களை துடைக்கும் போது கைகளை சுத்தப்படுத்திய பிறகு கண்களை துடைத்துக் கொள்ள வேண்டும்.
 3. ஏதேனும் தூசி விழுந்தால் உடனே கைகளை கொண்டு கசக்க கூடாது.
 4. இரவில் தூங்கும் போது கண்களை சுற்றி விளக்கு எண்ணெய் தடவி வந்தால் குளிர்ச்சியாக இருக்கும்.
 5. போதிய அளவு தூக்கம் தேவை.
 6. கண்களுக்கு அவ்வப்போது சிறு பயிற்சிகள் செய்யலாம். என்ன என்றால் கரு விழியை மேலும் கீழும் அசைக்க செய்வது பின்னர் வட்ட சுழற்சியில் சுற்றுவது தினமும் காலையில் ஒரு முறை செய்யலாம்.
 7. காய்கறிகளில் கேரட் கண்களுக்கு மிகவும் நல்லது.
 8. பழங்களில் ஆரஞ்சு, திராட்சை, மாம்பழம் கண்களுக்கு மிகவும் நல்லது.ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி தவிர மிக முக்கியமாக கருதப்படுவது ஆன்டி ஆக்சிடென்ட் எனப்படும் சத்தாகும். இது கண்களில் ஏற்படக்கூடிய வரட்சியை தடுத்து கண்களைப்பாதுகாக்கின்றது.
 9. வாரம் இரு முறையாவது தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் கண்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. ஆன்லைன் கிளாஸ் நடக்கும் போது 

கண்களில் ஏற்படும் நோய்கள் மற்றும் வீட்டு வைத்தியம்

 • வீங்கிய கண்களைக் குறைக்க நீங்கள் வெள்ளரிக்காயையும் பயன்படுத்தலாம். வெள்ளரிக்காயின் ஒரு சில துண்டுகளை குளிர்சாதன பெட்டியில் வைத்து பின்னர் கண்களில் சுமார் 15 நிமிடங்கள் வைக்கவும். இது வீக்கத்தை குறைக்க உதவும்.
 •  நவீன தொழில்நுட்ப காலத்தில் சிறு வயதிலேயே பிள்ளைகள் ஐ பேட், கம்ப்யூட்டர்களில் கேம்ஸ் ஆடுவதில் மும்முரமாக இருக்கிறார்கள். கண்களை இமைக்காமல் ஆர்வ மிகுதியில் அதிக நேரம் விளையாடுவதால் கண்களில் ஈரப்பதம் குறைந்துப் போகும். அதனால் பிரச்னைகள் வரலாம். ஐடி துறைகளில் இருவர்கள் இந்தக் குறைபாடுகளால் அதிகம் பாதிக்கப்படுகின்றன.
 • கற்றாழை மேஜிக் ஜெல் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் கண்களின் கீழ் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. கண்களுக்குக் கீழே உள்ள பைகளைக் குறைக்க குளிரூட்டப்பட்ட ஜெல்லை அந்தப் பகுதியில் சில நிமிடங்கள் தடவவும்.
 • சில பிள்ளைகளுக்கு சிறு வயதிலேயே கண்களில் நீர் வடியும். அது ஒருவிதமான ஒவ்வாமை. அப்படி இருந்தால் மருத்துவரை அனுகுவது அவசியம். அதற்கு சில விரல் மசாஜ் வகைகள் உண்டு. அதை அன்றாடம் செய்வதால் இதைக் குணப்படுத்திவிடலாம்.
 • சத்தான உணவுகளை குழந்தைகளுக்கு சிறுவயது முதலே கொடுக்க வேண்டும். கீரை, முட்டை போன்ற உணவுபொருட்களை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளவது அவசியம்.
 • பிறந்தக் குழந்தையின் ‘கண் அசைவு’ மூன்று மாதங்களில் தொடங்கிவிடும். அவ்வாறு இல்லை எனில் ஏதோ பிரச்னை இருப்பதாக எடுத்துக் கொண்டு சிகிச்சைக்கு செல்வது நல்லது.
 • குழந்தைகளுக்கு மாறுகண் பிரச்னை இருப்பதாக உணர்ந்தால் உடனே ஆலோசனைப் பெற வேண்டும். பலருக்கு கண் கண்ணாடியே போதும். சிலருக்கு அவசியம் இருப்பின் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரலாம்.
 • சூரிய வெளிச்சத்தில் இருந்து கண்களைக் காக்க கூலிங் கிளாஸ் போடலாம். யூவி புரடெக்ஷன் கண்ணாடிகளை பயன்படுத்துவது நல்லது.
 • கண் சிவப்பாக இருப்பதுகூட அலர்ஜி சம்பந்தமானதுதான். இது நார்மல் பிரச்னைதான். வண்டிகளில் அதிக தூரம் பயணம் செய்வதால்கூட இப்படி நேரலாம். இதற்கும் சொட்டு மருந்துகள் உண்டு.
 • சிலருக்கு அடிக்கடி கண்களில் அழுக்கு சேர்ந்துக் கொண்டே இருக்கும். கண்களில் கண்ணீரை சேமிக்கக்கூடிய பைகள் உள்ளது. அதில் ஏதாவது பிரச்னை வந்தால் நீர் வடியும். ஊளை சேரும். ஆரம்பக்கட்டத்தில் மருத்து மூலமே இந்த ஒவ்வாமையை நீக்கிவிடலாம். அவசியம் எனில் அதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வது நல்லது.
 • கோடைக் காலத்தில் சூரியக்கதிர்களின் வெளிப்பாடு காரணமாக, அதிகமாக கண் எரிச்சல் பிரச்சினை ஏற்படுகின்றது. இந்தச் சிக்கலை தவிர்க்க சன் கிளாஸைப் பயன்படுத்தவும். சில கிரீம்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் கண் எரிச்சலை ஏற்படுத்துகின்றன. இது போன்ற சந்தர்ப்பங்களில், கண் எரிச்சலிளிருந்து நிவாரணம் பெற கண்களை சரியாக கழுவ வேண்டும்.

 கண்களை காக்க சில எளிய வழிகள்

 • நீங்கள் நீண்ட நேரம் கணினிகளைப் பயன்படுத்த நேரிட்டால், உங்கள் கண்களை கவனித்துக் கொள்ள வேண்டும்.
 • கணினியில் பணிபுரியும் போது, சிறிய இடைவெளியை எடுத்துக் கொள்ளுங்கள்.
 • கணினித் திரையை கண்களிலிருந்து குறைந்தபட்சம் 20 முதல் 25 அங்குல தூரத்தில் வைக்கவும்.
 • கணினியில் பணிபுரியும் போது, தொலைதூர பொருள்களை சில முறை பாருங்கள்.
 • கணினியில் மிகவும் பிரகாசமான ஒளியைப் பயன்படுத்த வேண்டாம். மங்கலான ஒளியையேப் பயன்படுத்துங்கள்.
 • கண் எரிச்சல் இருக்கும் போது, -மொபைல் ஃபோன்களைப் பயன்படுத்த வேண்டாம்.
 • தொற்றுநோய்களைத் தவிர்க்க கண்களை அடிக்கடி  கழுவுங்கள்.
 • கண் வறட்சியிலிருந்து நிவாரணம் பெற கண் சொட்டு மருந்துகளைப் பயன்படுத்துங்கள்.
 • வெயில் காலங்களில் சன் கிளாஸைப் பயன்படுத்துங்கள்.
 • சாலைகளில் அதிகமான மாசு இருக்கும் போது, கண்ணாடிகளைப் பயன்படுத்துங்கள்.

கண் பார்வை திறன் அதிகரிக்கும் 9 உணவுகள்

 1. கீரைகள் என்றாலே கண்களின் ஆரோக்கியத்திற்கான மிகச் சிறந்த உணவு என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. அதிலும் குறிப்பாக முருங்கைக்கீரையும்,பொன்னாங்கண்ணிக்கீரையும் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு மிகச் சிறந்த மருந்துகளாகும். கண்களுக்கு தேவையான வைட்டமின் ஏ சத்தும், அமினோ அமிலங்களும் இந்த கீரைகளில் நிரம்பியுள்ளன.
 2. கேரட்டில் கண்களுக்கு ஆரோக்கியம் தரும் பீட்டா கரோட்டினும், வைட்டமின் ஏ சத்தும் நிரம்பியுள்ளன. எனவே கேரட்டை தொடர்ந்து சாப்பிட்டு வருவது கண் பார்வையை அதிகரிக்கவும், கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மிகவும் உறுதுணையானது. கேரட்டை பொரியலாகவோ, ஜூஸாகவோ, சாலட் ஆகவோ அல்லது உங்களுக்குப் பிடித்தமான வேறு ஏதேனும் முறையிலோ  சாப்பிடலாம்!!
 3. வால்நட்டில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் இ, வைட்டமின் ஏ உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. இது உங்கள் கண் பார்வையை தெளிவுபெற செய்ய மிகவும் உதவுகிறது. வால்நட் மட்டுமின்றி பாதாம், பிஸ்தா, நிலக்கடலை உள்ளிட்ட கொட்டை வகைகளிலும் உங்கள் கண் பார்வையை அதிகரிப்பதற்கான சத்துக்கள் ஏராளம் உள்ளன. எனவே உங்கள் கண்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்க பருப்பு வகைகளை சாப்பிடுவது மிகவும் நல்லது.
 4. கொத்தமல்லி இலைகள்
 5. கண்களில் படும் தூசினால் ஏற்படும் பாதிப்பைப் போக்க வைட்டமின் ஏ, பி, சி, ஈ,இரும்புச்சத்து, ஜிங்க், லூடைன் போன்ற அணைத்து வைட்டமின் சத்துக்களும் இதில் இருக்கிறது.
 6. ப்ரோக்கோலி கண்களில் படும் அதிக வெளிச்சத்தினால் கண்களுக்கு ஏற்படும் அழுத்தத்தினால் உண்டாகும் பார்வைக்கோளாறை சரி செய்யும் ப்ரோக்கோலி . இதில் வைட்டமின் பி, லூடைன், ஜீஏந்த்ஏக்ஸ்கின் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கிறது.
 7. பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகளில் கரோட்டினாய்டு என்னும் சத்து அதிகம் உள்ளது. அதிலும் லுடீன் சத்தும் அதிகம் உள்ளது. ஆகவே இந்த உணவுகளை சாப்பிட்டால், கண்களில் உள்ள ரெட்டினாவை, கண் எரிச்சல் மற்றும் பார்வையை பாதிக்கும் வெளிச்சத்திலிருந்து பாதுகாக்கிறது.
 8. மீன்களில் ஒமேகா-3 1பேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. இதனை அதிகம் சாப்பிட்டால், பார்வையில் கோளாறு ஏற்படாமல், கண்கள் நன்கு பளிச்சென்று தெரியும்.
 9. சிட்ரஸ் பழங்களில் விட்டமின் சி அதிகளவில் காணப்படுகிறது. விட்டமின் ஈ மற்றும் விட்டமின் சி போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இது வயதான காலத்தில் ஏற்படும் கண் தொடர்பான பிரச்சினைகளில் இருந்து நம்மை காக்கிறது.

கருப்பு வெள்ளையில்

பல கோடி வண்ணங்கள்

விழி....  ஆகவே கண்களை பாதுகாப்பது அவசியம்...

இந்தப் பதிவை பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். 

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

 • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த கல்வி மற்றும் கற்றல் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}