• உள்நுழை
 • |
 • பதிவு
கேஜெட்கள் மற்றும் இணையம்

குழந்தைகளிடம் கேட்ஜெட் பயன்பாட்டை குறைக்கும் வழிகள்

Monika
3 முதல் 7 வயது

Monika ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது May 12, 2020

இணையம் என்பது குழந்தைகளுக்கான ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு, இது வீட்டு வேலைகள், ஆன்லைன் விளையாட்டுக்கள், சமூக வலைப்பின்னல்கள், வீடியோக்கள், இசை மற்றும் பலவற்றின் உதவியுடன் அவர்களுக்கு கற்பிக்கிறது, அது விக்கிபீடியாவாக இருந்தாலும் சரி. இருப்பினும், அதற்கு நிகராக பல இணையதளங்கள் நம் குழந்தையை சீரழிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காலத்தில் பெற்றோர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று, அவர்களின் குழந்தைகள் பாதுகாப்பாக இணையதளத்தை உபயோகிக்கிறீர்களா என்று உறுதி செய்வது.

மூளை வளர்ச்சிக்கான ஒரு குழந்தையின் நிரந்தர அடித்தளத்தின் 90% வளர்ச்சி ஆரம்ப வருடங்களில் ஏற்படுகிறது. கேஜெட்டுகளின் அதிகப்பயன்பாடானது, இந்த வளர்ச்சியைத் தடுத்து, குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். உங்கள் குழந்தை நிஜ உலகத்துடன் தொடர்புக்கு கொள்வதற்கு பதிலாக, அதிக நேரம் ஸ்வைப் செய்து ஸ்க்ரோலிங் செய்தால், நீங்கள் தாமதிக்காமல் அவர்களை கண்டிக்க வேண்டும்.

சமீபத்தில் ஒரு ஆராய்ச்சியில், இங்கிலாந்தில் இருந்து ஒரு கட்டுரையை பகிர்ந்து கொண்டதாவது கெட்ஜெட்டுகளால் ஒரு ஆறு வயது குழந்தையின் பேச்சு 70 சதவிகிதம் குறைந்துள்ளது. 2011 ஆம் ஆண்டில் பட்டியலின்படி, பெரும்பாலான குழந்தைகள் தங்கள் காலடியை சரியாக மட்ட கற்றுக்கொள்ளவில்லை ஆனால் தற்போதைய மின்னணு கேட்ஜெட்டை எப்படி பயன்படுத்துவது என்று நன்கு தெரிந்து வைத்திருக்கின்றனர்.

மின்னனு கேட்ஜெட்டுகளால் ஏற்படும் விளைவுகள்:

 • தொழில்நுட்பம் நிச்சயமாக ஒரு குழந்தையின் பேச்சு, மொழி மற்றும் மூளை வளர்ச்சியை பாதிக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது.

 • குழந்தை தனது பொம்மைகளுடன் விளையாடும் நேரம் அதிகமாக குறைந்துள்ளது

 • அவரது தாயார், தந்தை அல்லது உடன்பிறந்தோருடன் உரையாட நேரம் செலவழிப்பது மிகவும் குறைந்து காணப்படுகிறது.

 • அம்மாவுடனும் அப்பாவுடனும் புத்தகங்கள் படிப்பதற்கு நேரம் ஒதுக்குவதில்லை

 • வெளியே சென்று மற்ற குழந்தைகளுடன் விளையாடுவதற்கு நேரத்தை செலவிடவில்லை

 • நண்பர்களுடன் நேரம் ஒதுக்க ஆசை கூட படுவதில்லை

 • மற்ற நண்பர்களுடன் எப்படி தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வது என்று பழகவில்லை

அனைத்து தொழில்நுடங்களும் பிரச்சினையை ஏற்படுத்தாது," என்று டாக்டர் ரிச் கூறுகிறார். ஆனால் அதில் முக்கியமான ஒன்று, உங்கள் குழந்தை என்ன சாப்பிடுகிறது என்று கண்காணிப்பது போல, அவர்கள் மின்னணு கேட்ஜெட்டுகளை பயன்படுத்தும்போது தரம் வாய்ந்த ஊடகங்களை பயன்படுத்துகிறீர்களா என்று பார்ப்பது.

அவர்கள் என்ன பார்க்கிறார்கள், கேட்கிறார்கள் என்பதை கண்காணித்துக்கொண்டே இருங்கள். ஆனால், அதே சமயம் வீட்டு வேலைகள், உடல் செயல்பாடு, குடும்பம் மற்றும் நண்பர்களை மறக்காமல் அதற்காகவும் நேரம் செலவழிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுங்கள்.

உங்கள் குழந்தைகளை பயங்கரமான அல்லது வன்முறை ஊடகங்கள் மற்றும் அதிக வணிக ரீதியிலான பொருட்களைக் பார்ப்பதிலிருந்து தவிர்ப்பது நல்லது. "7 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எப்போதுமே கற்பனைக்கும் உண்மைக்கும் இடையில் வேறுபாடு தெரிந்து கொள்ள முடியாது". எனவே, சிறிய குழந்தைகள் திரையில் ஒருவர் மற்றோருவரை அடிப்பதை பார்க்கும் போது அதைப் பின்பற்றுவதைக் கற்றுக்கொள்வார்கள்.

பெற்றோர் பிள்ளைகள் பிணைப்பை அதிகரிக்கும் வழிகள் காண இங்கே கிளிக் செய்யவும்

குழந்தைகளை இணையதள பிரச்சனைகளிலிருந்து காப்பாற்ற சில முன்னெச்சரிக்கைகள்:

 • ஒரு உயர் தொழில்நுட்ப உலகில் வாழ்வது எப்படி என்பதைப் புரிந்துகொள்வது, எப்போதும் பாதுகாப்பாக, பொறுப்புணர்வுடன் எப்படி நடந்துகொள்வது என்று குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.

 • "பெஸ்புக், வாட்சாப் போன்ற சமூக வலைப்பின்னல் தளங்களை குழந்தைகள் பார்க்கும் போது, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் இருந்து  அனைத்து அரட்டைகளையும் கண்காணிக்க வேண்டும்.

 • பெரியவர்களுக்கான விளையாட்டுகளை குழந்தைகள் விளையாட நேரினால் அது அவர்களுக்கு ஏற்றதா என்று தேர்வு செய்யுங்கள், ஏனென்றால் பெரியவர்களுக்கான பல விளையாட்டுகள் பாலியல், வணிகம் அல்லது வன்முறையை உள்ளடக்கி உருவாக்கப்பட்டதாக இருக்கும்.

 • குழந்தைகள் அவர்கள் நேரத்தை குறைக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் முதலில் பெற்றோர்களாகிய நீங்கள் ஸ்மார்ட்போனிலும் கணினியிலும் நேரம் செலவிடுவதை குறைக்க வேண்டும். குழந்தைகள் முன்பு நீங்கள் இணையதளத்தில் அதிக நேரம் செலவிடும்போது அவர்கள் உங்கள் செயலை பார்த்து கற்றுக்கொள்கின்றனர்.

 • குழந்தைகளை தொழில்நுட்பங்களை பயன்படுத்த கூடாது என்று கட்டளை இட்டு தண்டிக்காதீர்கள். அதனால் அவர்கள் மாறப்போவதில்லை. மற்ற நண்பர்களுடன் சென்று அந்த பழக்கத்தை மறுபடியும் செய்வர். அதற்கு பதிலாக, அவர்களுக்கு புரியும்படி கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக்கூறி அவர்களை மாற்ற முயற்சியுங்கள்.

 • 7 வயதிற்குள் பிள்ளைகள் தொழில்நுட்ப கருவிகளை வாங்க விரும்ப ஆரம்பித்துவிடுகிறார்கள். எனவே அவர்களுக்கு எப்படி தெளிவாக சுருக்கமாக கேட்ஜெட்டுகளை பயன்படுத்தவேண்டும் என்று கற்றுக்கொடுங்கள்.

 • ஆபாசமான பதிவுகளை உள்ளடக்கிய பக்கங்கள், மோசமான படங்கள், இணக்கமற்ற வீடியோ கிளிப்புகள் போன்றவற்றை குழந்தையின் பார்வையிலிருந்து தவிர்க்க வேண்டியது பெற்றோர்களின் கடமை. கூகிள் வலைப்பின்னல் மூலம் இயங்கும் குழந்தைகளுக்கான ஒரு தேடல் இயந்திரம் kiddle, அவர்களுக்கு பாதுகாப்பான படம் மற்றும் வீடியோ தேடலை வழங்குகிறது.

பிள்ளைகளுக்கு ஒழுக்கமான பழக்கங்களை ஏற்படுத்த பெற்றோர்கள் மிகவும் உழைக்கிறார்கள். இருப்பினும், கேட்ஜெட்டுகள் நம் குழந்தைகளின் வாழ்வில் வேரூன்றி வருகையில் பெரும்பாலான பெற்றோர்களால் அவர்களை இணையதளத்திலிருந்து முழுமையாக வெளியேற்ற முடிவதில்லை.

 

ஸ்மார்ட் போன், டேப்லெட் (ஐபாட்), லேப்டாப் மற்றும் கணினி ஆகியவை குழந்தைகளுக்கு பெற்றோரின் மேற்பார்வை இல்லாமல் உலகிற்கு வெளிப்படும் வகையில் மாறி வருகின்றன. எனவே, குழந்தைகள்  இணையதளத்தில் செலவிடும் நேரத்தை குறைத்து அவர்களை மற்ற வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுத்த முயற்சி செய்யுங்கள்.

 

 • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த கேஜெட்கள் மற்றும் இணையம் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}