• உள்நுழை
  • |
  • பதிவு
பெற்றோர் குழத்தை நலம்

குழந்தையின் முதல் ஆண்டில் தந்தையின் பொறுப்புகள்

Sagar
0 முதல் 1 வயது

Sagar ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Jan 24, 2019

எனது குழந்தை பிறந்த பொழுது சுவாசிக்க சிரமப்பட்டதால் ஒரு வாரம் மருத்துவமனையில் அம்மாவிடம் இருந்து பிரித்து தனி சிகிச்சை கொடுக்கப்பட்டது, அப்பாவை தவிர யாரையும் குழந்தை சிகிச்சை பிரிவில் அனுமதிக்காத நிலையில் நான் மட்டும் என் குழந்தையை பார்க்க அனுமதித்தார்கள், நான் சென்று குழந்தை நல  மருத்துவரிடம் விசாரித்துக் கொண்டிருந்த நேரத்தில் எனது குரலை கேட்டு எனது குழந்தை கை கால்கலை ஆட்டி சத்தம் போட்டது, அப்போது தான் நான் அப்பாவிற்கான தனித்துவத்தை உணர்ந்தேன். 

பொதுவாக பிரசவ காலத்தில் 6 மாதம் தொடங்கி குழந்தை பிறந்து 6 மாதங்கள் வரை அம்மா வீட்டில் இருந்துவிடுவதால் அப்பாவிற்கும் குழந்தைக்கும் இடையான ஆரம்ப கால பிணைப்பு தடைபடுகிறது, தாய் வீடு தான் பிரசவத்தின்போது ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்ற இடம் என்பது மறுக்கமுடியாத உண்மை.

குழந்தை வளர்ச்சியில் தந்தை எவ்வாறு உதவுகிறார்?

தந்தையாக குழந்தையுடன் நேரம் கழிப்பதும் சில கடமைகளை பகிர்ந்துகொள்வதும் குழந்தைகளுக்கு இனம் புரியாத சந்தோஷத்தையும் தன்னம்பிக்கையை வளர்க்கும் என்பதை என் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். இந்த தலைமுறை அப்பாக்கள் குழந்தை வளர்ப்பில் முன்வந்து சிலவற்றை அக்கறையுடன் உணர்ந்து பொறுப்புகளை பகிர்ந்து செய்வது  என்பது அம்மா மற்றும்  குழந்தை மீதும் வெளிப்படுத்தும் அன்பாகவே பார்க்கிறேன்.

பாத்திரங்கள் மற்றும் பொறுப்புகள் தந்தை செய்ய வேண்டியது

குழந்தை பிறந்த முதல் ஒரு வருட த்தில் அப்பா செய்ய வேண்டிய  சில கடமைகள். பொதுவாக ஆண்களுக்கு குழந்தையை கையாள்வது என்பது புதிய அனுபவமாக இருக்கும். பல தயக்கங்களுடன் இருக்கும் அப்பாக்கள் செய்ய வேண்டியவை

  • குழந்தைக்கு டயப்பர் போடுவது, வீட்டில் இருக்கும்போது குழந்தைகள் டயப்பரில் கரை ஆகியிருக்கிறதா என்று பார்த்து சுத்தம் செய்து மாற்றுவது. பெரும்பாலும் இந்த டிபார்ட்மென்ட் அம்மாக்களுடையதாகவே ரொம்ப காலமாக இருக்கிறது, பிரசவம் முடிந்து உடளவில் சோர்வுற்று இருக்கும் மனைவிக்கு இது சற்று ஆறுதலை தரும்.
  • குழந்தை தாயிடம் பால் குடித்த பிறகு உடனே படுக்க வைக்க கூடாது அதனால் அரை மணி நேரமாவது நேராக வைத்திருக்க வேண்டும் அப்போது குழந்தையை தூக்கி முதுகில் மெதுவாக தட்டி கொடுத்தபடி நடந்தால் குழந்தை வாந்தி எடுக்காமல் இருக்கும். அப்படியே தோளில்  போட்டு தூங்க வைக்கலாம். முதல் 3 மாதங்கள் பெரும்பாலும் குழந்தை தூங்கிக்கொண்டு இருக்கும். பெரும்பாலும் நான் வீட்டில் இருக்கும் சமயத்தில் அந்த அரை மணி நேரமும் என் குழந்தையை நான் தான் தூக்கி நடப்பேன். அவள் ஏப்பம் விடும் சத்தம் கேட்டவுடன் ஏதோ பெரிதாக சாதித்த உணர்வு எனக்குள் ஏற்படும். ஏனென்றால் குழந்தை ஏப்பம் விடும் சத்தம் கேட்பதே அரிது.
  • குழந்தை பிறந்தவுடன் முழு அக்கறையும் அக்குழந்தை மீதே இருக்கும்  தாயின் உடலை தேற்ற பழம், கஞ்சி என சத்தான உணவுகளை நீங்களே கலந்து அவ்வப்போது மனைவிக்கு கொடுக்கும் போது உடல் அளவிலும் மனதளவிலும் புத்துணர்ச்சி அடைவார்கள். 

சாப்பாடு கொடுக்கலாம்

ஆறாம் மாதத்தில் இருந்து திட உணவை கொடுக்க தொடங்குவார்கள், குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டுவது ஒரு கலை அது இயல்பிலேயே பெண்களுக்கு இருக்கும். ஆனால் பொறுமையுடன் குழந்தையுடன் விளையாடி வீட்டிற்கு வெளியே மரங்களை, பறவைகளை காட்டி அப்பாக்கள் சிறுது நேரம் சாப்பாடு ஊட்டிவிடுவதால் குழந்தைக்கும் நமக்கும் இருக்கும் பிணைப்பு இயல்பாகவே அதிகரிக்கும். மனைவிக்கும் உதவி செய்த மாதிரி ஆச்சு.

மருத்துவ நேரம்

குழந்தைக்கு தடுப்பூசி போடும் சமயம் வீட்டில் எவ்வளவு நபர்கள் இருந்தாலும் கட்டாயம் அப்பாவை அழைத்து சென்று மருத்துவரிடம் கேட்க நினைக்கும் சந்தேகங்களை குறிப்பெடுத்துக்கொண்டு தெளிவுபடுத்திக் கொள்வது சிறந்தது. இதன் மூலம் குழந்தையின் நலத்தை பற்றி நாமும் முழுமையாக அறிந்து தீர்வு காண முடியும்.

நிறைய பேசுங்கள்

அப்பாக்கள் அலுலகத்தில் இருந்து வந்தவுடன் குழந்தைவுடன் நேரம் செலவழிப்பது அவர்களின் தன்னபிக்கையையும், பாதுகாப்பு உணர்வையும் அதிகரிக்கும். என் குழந்தைக்கு நான் நிறைய கதை சொல்வேன். இன்று வரை தூங்கும் போது என்னிடம் கதைகள் கேட்பது அதை சார்ந்து உரையாடுவது என்பது அவளுக்கு பிடித்தமானது.

டிவி செல்போனை தவிர்த்துவிட்டு குழந்தையிடம் உரையாடுங்கள், குழந்தைகள் உங்களது பேச்சை கவனித்து உங்களுடன் பேச முயற்சி செய்வார்கள். இதனால் பேச்சு திறன் சீக்கிரம் வந்துவிடும். பல வீடுகளில் நிறைய குடும்ப நபர்கள் இருந்து பேச தொடங்கவில்லை என்ற செய்திகள் கேட்டு கொண்டே இருக்கிறோம் அதற்கு காரணம் குழந்தைகளுடன் உரையாடாததுதான் காரணம்.

அப்பா என்றால் குழந்தைக்கான நிதி தேவைக்காகவே மட்டுமே ஓட வேண்டும் என்றில்லை. குழந்தை பிறந்த தருணத்தில்ருந்தே அப்பாவாக பகிர்ந்து கொள்ள வேண்டிய பொறுப்புகள் ஏராளம் இருக்கின்றது. இப்போது நமக்கு தெரியாவிட்டாலும், குழந்தைகள் வளர்ந்து வரும் போது நமக்கும் குழந்தைக்கும் இருக்கும் பிணைப்பு மற்றும் அவர்களது ஆளுமை போன்ற விஷயங்களில் நிச்சயமாக நல்ல முன்னேற்றங்களை நம்மால் பார்க்க முடியும்.

என் மகள் பிறந்ததிலிருந்து இன்று வரை நான் அவளுக்காக செய்த அனைத்தும் என்றும் இனிமையான நினைவுகளாக எனக்குள் இருக்கின்றது. இந்த உணர்வை அனுபவித்தால் மட்டுமே புரியும்.

 

  • 2
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.

| Mar 12, 2019

1. 1/2 maatham thaduppuci pattri solluingalean doctor

  • Reply
  • அறிக்கை

| Jul 29, 2019

1year baby food chart send panuga pls

  • Reply
  • அறிக்கை
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}