Normal delivery சுகப்பிரசவ வலியை குறைக்க என்ன செய்ய வேண்டும்?

Bharathi ஆல் உருவாக்கப்பட்டது புதுப்பிக்கப்பட்டது Dec 13, 2021

பெண்களுடைய பிரசவம் என்பது கிட்டதட்ட அவர்களுடைய மறுபிறவி என்று சொ்லவார்கள். இன்றைய காலகட்டத்தில் பிரசவம் நல்ல முறையில் நடந்து முடிவது கொஞ்சம் சிரமமாக உள்ளது. அதிலும் நார்மல் டெலிவரி ஆவது அரிதான ஒன்றாக மாறிவிட்டது. நிறைய பெண்கள் முதலில் சுகப்பிரசவம் என்றால் பயம் அதனால் எனக்கு ஆப்ரேஷன் செய்து கொள்கிறார்கள். அந்த பிரசவ வலியை தாங்கும் சக்தி இயற்கையாகவே பெண்களுக்கு உள்ளது. அதனால் பயப்பட தேவையில்லை. அந்த காலத்தில் சுகப்பிரசவம் எப்படி அதிகமாக ஆனது. அப்போது நமது பாட்டிகள் என்ன வழிகளை பின்பற்றி இருப்பார்கள் என்பதை அறிய வேண்டுமா?
எவ்வாறு சுகப்பிரசவத்திற்கு தயாராவது என்பதற்கான பரிசோதிக்கப்பட்டு வெற்றியடைந்த வழிகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. தண்ணீர் :
ஒரு பெண் கர்ப்ப காலத்தில் ஆரம்பத்தின் முதல் கர்ப்பகால இறுதிவரை உடலுக்குத் தேவையான குழந்தைக்கு தேவையான தண்ணீரை நன்றாக பருக வேண்டும். வாந்தி மயக்கம் இருக்கும் பெண்கள் தண்ணீர் அதிகமாக எடுத்துக்கொள்ள முடியாமல் இருக்கும்.அவர்கள் பழச்சாறு, இளநீர், மோர் இந்த வகையில் பெண்கள் குடிப்பதனால் உடலில் மற்றும் கருப்பையில் உள்ள பனிக்குட நீர் குறையாமல் பார்த்துக்கொள்ளலாம். இந்த மாதிரி நிறைய தண்ணீர் பழச்சாறு மோர் இதனால் குடிப்பதினால் சுகப்பிரசவம் மிகவும் எளிமையானதாக ஒரு பெண்ணிற்கு இருக்கும்
2. கணவர் துணை தேவை
பிரசவத்தின் போது துணைக்கு நம்முடன் இருப்பவர்கள் நாம் மிகவும் விரும்புபவர்களாக இருத்தல் அவசியம். அவர்களின் ஊக்க வார்த்தையானது மற்றும் அன்பும் அரவணைப்பும் அந்த நேரத்தில் மிகவும் அவசியம். அது உங்கள் கணவர் ஆக இருக்கலாம், உங்கள் அம்மாவாக இருக்கலாம், உங்கள் மாமியார் ஆக இருக்கலாம். ஆனால் அவர்கள் உங்களை ஊக்குவிக்கவும் உங்களுக்குத் துணையாகவும் இருப்பவர்களாக இருக்க வேண்டும். நமது ஊரில் கணவரைப் பிரசவ அறைக்குள் அனுமதிப்பதில்லை. ஆனால் வெளிநாடுகளில் பல இடங்களில் கணவரையும் பிரசவ அறைக்கு அனுமதித்து மனைவியின் கூட இருக்க வைத்துக்கொள்வார்கள். இது தன் மனைவிக்கு மிகவும் ஒரு ஆறுதலான ஒரே காரியமாக இருக்கும். இங்கும் சில மருத்துவமனைகளில் கணவரை அனுமதிக்கச் செய்கின்றனர்.
3. நடைப்பயிற்சி:
கர்ப்பகாலத்தின் ஆரம்பகாலத்தில் நடைப்பயிற்சி செய்யாமல் இருந்தாலும் ஒரு பெண்ணின் ஆறு மாத காலத்தில் இருந்து அல்லது ஏழாவது மாத கர்ப்ப காலத்தில் இருந்து காலையில் ஒரு மணி நேரம் மாலையில் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி செய்தாள் குழந்தை தலைகீழாக கர்ப்பவாய் நோக்கி நகரத் தொடங்கி சுகப்பிரசவம் ஆவதற்காக இடுப்பு எலும்புகள் தானாக தயாராகி ஒரு பெண்ணிற்கு எளிமையாக சுகப்பிரசவம் ஆக இந்த நடைபயிற்சி மிகவும் உதவியாக இருக்கும்.
நடை பயிற்சி செய்யும் பொழுது அருகில் உங்கள் துணையும் அல்லது பெற்றோரும் நண்பரும் உடன் இருக்கையில் மட்டுமே நடைப்பயிற்சி செய்ய வேண்டும் காரணம் வாந்தி மயக்கம் இருப்பவர்கள் இதனை அருகில் ஒருத்தர் இருக்கும் போது மட்டும் நடக்க வேண்டும். கர்ப்ப காலத்தின் இறுதி காலத்தில் அதாவது பத்தாவது மாதத்தில் நடை பயிற்சி செய்யும் பொழுது அருகில் ஒரு துணையோடு மட்டுமே நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
கர்ப்பிணி பெண்கள் உணவு உண்டபின் பத்து நிமிடங்கள் அல்லது 20 நிமிடங்கள் கழித்து நடை பயிற்சியோ அல்லது உடற்பயிற்சியோ செய்யலாம் நடை பயிற்சி செய்யும் பொழுது தண்ணீர் குடிக்கலாம் அதனை கையில் எடுத்துச் செல்வது நலம்.
4. உடற்பயிற்சி:
சில மருத்துவமனைகளில் சுகப்பிரசவம் ஆவதற்கு உடற்பயிற்சி கற்றுக் கொடுப்பார்கள் அதை தினமும் தவறாமல் செய்யும் பொழுது இடுப்பு எலும்புகள் சுகப்பிரசவத்துக்கு தயாராகி மிக எளிமையாக சுகப்பிரசவமாகும் அந்த உடற்பயிற்சியை தவறாமல் காலையில் மற்றும் மாலையில் செய்ய வேண்டும் .
மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் அந்த உடற்பயிற்சி செய்யக் கூடாது குழந்தையின் நிலை மற்றும் உங்கள் உடலின் நிலையை மருத்துவர் அறிந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றால் மட்டுமே செய்ய வேண்டும்
5. பயம்:
கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் நாள் நெருங்க நெருங்க மனதில் ஒரு பயம் இருந்தே இருக்கும் அந்த பயத்தை முழுவதுமாக மனதிலிருந்து அகற்றி விடுங்கள் காரணம் அந்த பயமே உங்களை சுகப் பிரசவத்தில் இருந்து சிசேரியனுக்கு மனதை மாற்றி விடும். உங்கள் குழந்தையை இந்த உலகத்திற்கு வர வைக்கப் போகிறோம் நாம் பார்க்க போகிறோம் அப்படிங்கிற ஒரு எண்ணத்தோடு மட்டுமே காத்துக் கொண்டு இருங்கள்.
6.சுடு தண்ணீர் மற்றும் எண்ணெய்:
ஆறுவது மாதத்தில் இருந்து கர்ப்பிணி பெண்கள் இரவு தூளோங்க செல்லும் முன் வயிறின் முன் பகுதியில் விளக்கு எண்ணையை தொப்புளை சுற்றி ஒரு சிறிய மசாஜ் செய்யுது பத்து நிமிடங்கள் களித்து வெது வெது பான சுடுநீரில் குளிக்கவும்.இதனால் இரவில் நன்றாக உறங்க முடியும்.வயிறில் தழும்புகள் வராமல் இருப்பதோடு சுகப்பிரசவத்திற்கு வயிற்று தசைகள் விரிவடையும்.
இடுப்பு எலும்புகள் விரிவடைய சுகம் பிரசவம் எளிமையாக்க காலை மற்றும் மாலையில் நன்றாக காய வாய்த்த சுடுநீரை இடுப்பு பகுதில் ஊற்றவும்.வயிற்றின் முன் பகுதில் ஊற்ற கூடாது.
7.வேலைகள்:
கர்ப்பிணி பெண்கள் சில சின்னசின்ன வேலைகளை செய்யலாம் ஏழாவது மாதத்தில் குனிந்து வீட்டைக் கூட்டுவது பாத்திரம் விளக்குவது இது சுகப்பிரசவத்திற்கு மிகவும் உதவும்.வீட்டைக் கூட்டுவது என்றால் குனிந்து மட்டுமே கூட்ட வேண்டும் நின்ன வாக்கில் கூட்டக் கூடாது.
பெரியவர்கள் நிறைய பேர் சொல்லிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் கர்ப்பிணி பெண்கள் குனிந்து நிமிர்ந்து வேலை செய்தால் மட்டுமே சுகப்பிரசவம் ஆகும் என்பது இது முற்றிலும் உண்மைதான் வீட்டை பெருக்கும் போது பாத்திரத்தைத் துலக்கும் போதும் உங்கள் உடல் மற்றும் இடுப்பில் ஏற்படுகின்ற மாற்றத்தை உணர்வீர்கள் இதுநாள் தோறும் செய்வதால் சுகப்பிரசவத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும்.