• உள்நுழை
 • |
 • பதிவு
குழத்தை நலம் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் உணவு மற்றும் ஊட்டச்சத்து

0-3 மாத குழந்தைகளை தூங்க வைப்பது எப்படி? எளிதாக தூங்க வைக்கும் வழிகள்

Bharathi
0 முதல் 1 வயது

Bharathi ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Jan 29, 2022

0 3

பிறந்தது முதல் 1 வயது வரை குழந்தைகளை தூங்க வைப்பது என்பது அம்மாக்களுக்கு சவாலான விஷயம். பிறந்தது முதல் குழந்தைகளின் தூக்க சுழற்சி மாறிக் கொண்டே இருக்கும். குறிப்பாக, இரவு நேரத்தில் குழந்தைகளை தூங்க வைப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். ஆனால் குழந்தைகளை ஆரம்பத்திலேயே சரியான நேரத்தில் தூங்க வைத்துப் பழக்குவதன் மூலம் இதை எளிதாக்கலாம்.

குழந்தைகள் தூங்க மறுபதற்கான காரணம் அறிவது அவசியம். ஏன் இரவில் தூங்க குழந்தைகள் கஷ்டப்படுகிறார்கள்? அவர்களை எளிதாக தூங்க வைப்பதற்கான வழிகளை இந்தப் பதிவில் பார்ப்போம்..

குழந்தைகள் தூங்காமல் இருப்பதற்கான காரணங்கள்

குழந்தை தூங்காதது தொடர்பான பெரும்பாலான சிக்கல்கள் உடல்நலப் பிரச்சனைகள், பற்கள், வளர்ச்சி மைல்கற்கள் அல்லது வழக்கமான மாற்றங்கள் போன்ற தற்காலிக விஷயங்களால் ஏற்படுகின்றன.

சில குழந்தைகள், குறிப்பாக வயதானவர்கள், அவர்கள் விரும்பும் மற்றும் எதிர்பார்க்கும் உறக்கப் பழக்கங்களை உடைப்பது கடினம். அதாவது இடையில் அவர்களை எழுப்பி உணவளிப்பது மற்றும் எழுப்புவது போன்ற செயல்கள்.

தூக்க பிரச்சனைகள்: 0 முதல் 3 மாதங்கள் வரை

புதிதாகப் பிறந்தவர்கள் எவ்வளவு நேரம் தூங்குவார்கள். பொதுவாக 24 மணி நேரத்தில் சுமார் 14 முதல் 17 மணி நேரம் தூங்குகிறார்கள், இரவும் பகலும் உணவளிப்பதற்காக அடிக்கடி எழுந்திருக்கிறார்கள்.

1 மற்றும் 2 மாத குழந்தை ஒரு நாளைக்கு 14 முதல் 17 மணிநேரம் வரை அதே அளவு தூக்கத்தைப் பெற வேண்டும். 3 மாத குழந்தைக்கு 24 மணி நேரத்தில் 14 முதல் 16 மணி நேரம் தூக்கம் தேவை.

பிறந்த குழந்தையை மடியில் வைத்து தாலாட்டு பாடியபடி தொடையை ஆட்டியபடி தூங்க வைப்பார்கள். சுகமான ஆட்டலில் குழந்தை தூங்கிவிடும். ஆனால் இதை தொடர்ந்து செய்தால் குழந்தை நாளடைவில் தானாக தூங்குவதற்கு அதிக சிரமத்தை எதிர்கொள்வார்கள்.

தூக்கம் தடைப்பட காரணம்

ஆச்சரியமாக இருக்கலாம். குழந்தை வளர்ந்து எழுந்து நிற்பது, பல் முளைப்பது போன்ற நேரங்களில் அவர்களின் தூக்கம் கலைவதற்கான சாத்தியம் உண்டு. உடல் ரீதியிலான இந்த முன்னேற்றம் தூக்கத்தில் இடையூறை உண்டாக்க வாய்ப்புண்டு.

பிறந்த குழந்தைக்கு 6 மாதங்கள் ஆன பிறகு அம்மாவின் அரவணைப்பு உணர்வு நன்றாக தெரியக்கூடும். அதனால் தூக்க கலக்கத்திலும் அம்மா அருகில் இருப்பதை போன்ற உணர்வை விரும்பும். அந்த நேரத்தில் அம்மாவின் அருகாமை இல்லாத போது அவர்கள் அழுவோ அல்லது தூக்கத்திலிருந்து விழித்திருக்கவோ செய்யலாம். உங்களுக்கு இது குறித்த சந்தேகம் இருந்தால் நீங்கள் இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து கவனித்தால் ஒப்புக் கொள்வீர்கள்.

குழந்தைக்கு காய்ச்சல் அல்லது குளிர் அறிகுறிகள் இருந்தாலும் இந்த இரவு நேர தூக்கம் தொல்லைக்கு ஆளாகலாம். அதனால் இந்த அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என்று பார்ப்பதன் மூலம் அதை தவிர்க்கலாம்.

குழந்தைகளை தூங்க வைக்க சில எளிய டிப்ஸ்

 1. குழந்தையின் படுக்கை தாரளமாக வைத்திருங்கள். அருகில் பெரிய குழந்தையைப் படுக்க வைப்பதாக இருந்தால் அது குழந்தைக்கு இடைஞ்சல் இல்லாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள்.
 2. குழந்தையின் படுக்கை அறை அதிக வெளிச்சம் இல்லாமல் இருக்க வேண்டும். இந்த நிலை குழந்தையின் தூக்கத்தை எளிதாக்க செய்கிறது. அறை வெப்பநிலை சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ இருக்க வேண்டாம்.
 3. குழந்தையின் ஆடைகள் அதிக இறுக்கமில்லாமல் தளர்வாக இருக்கட்டும். காற்று புகாத ஆடைகள் தூக்கத்தில் பாதிப்பை உண்டாக்க செய்யும். இயல்பாக குழந்தையை தூங்க செய்வதன் மூலம் அவர்கள் இரவில் அச்சம் கொள்ளாமல் தூங்குவார்கள்.
 4. ஆரோக்கியமான தூக்கத்திற்கு முதலில் குழந்தையின் வயிறு நிரம்பி இருக்க வேண்டும். அப்படி வயிறு நிரம்பி விட்டால் குழந்தை நீண்ட நேரம் நிம்மதியாக தூங்குவார்கள். குழந்தைகள் நிம்மதியாக அழாமல் தூங்க வேண்டுமென்றால் நீங்கள் தாய்ப்பால் கொடுக்க வேண்டியது அவசியம் அல்லது ஒரு டப்பா பால் கொடுத்து குழந்தையை உறங்க வைக்கலாம்.
 5. தூக்கத்தில் குழந்தை அசைவதும் சிணுங்குவதும் இயல்பு; உடனே தூக்கக் கூடாது. தட்டிக்கொடுக்க, தூளியை ஆட்ட என இருந்தால், மீண்டும் அது தூக்கத்தைத் தொடர்ந்துவிடும். பிறந்த ஒரு மாதத்திலிருந்தே இரவு விரைவில் தூங்கவைத்து, காலையில் விரைந்து எழுந்து குழந்தையைப் பழக்கப்படுத்துவது நன்று. பிறந்த குழந்தை மட்டுமல்ல, வளர்ந்த குழந்தைகளுக்கும் இரவில் ஆழ்ந்த, தடையற்ற உறக்கம் அவசியம்.
 6. சிறுநீர் கழித்தால் உடனே துணியை மாற்ற வேண்டும்.ஈரத்தினால் தூக்கம் கலையாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
 7. இரவு நேரத்தில் குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் போது விளக்கை அணைத்து விட்டு பால் கொடுக்கவும். அல்லது குறைவான ஒளியை கொடுக்க கூடிய விளக்குகளை பயன்படுத்த வேண்டும். இதனால் குழந்தை பால் குடித்துக் கொண்டே நிம்மதியாக தூங்கிவிடும்.
 8.  மென்மையான இசை அல்லது தாலாட்டுப் பாடல்களை ஒலிக்க விடலாம்.

தொடர்புடைய வாசிப்பு: குழந்தைகள் தூங்க உதவும் சிறந்த தாலாட்டுப் பாடல்களை பாடலாம்.

குழந்தைகளின் தலையை கோதி விடுதல், கால்களை அமுக்கி விடுதல் போன்ற செயல்கள் செய்தால் குழந்தை தானாக தூங்கி விடும். வளர்ந்த குழந்தைகளுக்கு கதைகள் சொல்லி தூங்க வைக்கலாம்.. அல்லது கதைகளை சொல்ல சொல்லி அப்படியே தூங்க வைக்கலாம்.

 • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}