• உள்நுழை
 • |
 • பதிவு
பெற்றோர் குழத்தை நலம்

பிறந்த குழந்தைக்கான சரியான குளியல் முறை என்ன?

Radha Shri
0 முதல் 1 வயது

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Jan 22, 2019

இன்றைய சூழலில் பாட்டிகள் இல்லாத வீடுகளில் பிறந்த குழந்தைகளை பராமரிப்பது என்பது அம்மாக்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கின்றது. அதில் முக்கியமான சவால் குழந்தையை குளிப்பாட்டுவது. இதை வெறும் சுத்தம் செய்யும் பணியாக மட்டும் எண்ணிவிட முடியாது. குழந்தைகளின் வலிமைக்கு, வளர்ச்சிக்கு மற்றும் இது அவர்களுடன் விளையாடவும், அவர்களுக்கென நேரம் ஒதுக்கவும் ஒரு சந்தர்ப்பமாகும்.

குழந்தையை எப்படி குளிப்பாட்டுவது?

அம்மா குழந்தை என இருவருக்குமே வேடிக்கையான நேரம். உங்கள் குழந்தைகளுக்கு குளியல் நேரத்தை பழகிக்கொள்ள சில காலம் தேவைப்படும். குழந்தைகள் குளியலை வெறுப்பதற்கு வெவ்வேறு காரணங்கள் இருக்கின்றன. உதாரணமாக, நிர்வாணமாக்கப்படுவது, உடம்பு முழுவதும் தண்ணீராக இருப்பது, சோப்பு நுரை, சோப்புக்கைகள் போன்றன இதற்கு காரணமாகின்றன. பிறந்த குழந்தைகளை குளிப்பாட்டும் போது நிறைய சந்தேகங்கள் உதிக்கும். என் குழந்தையை நான் தான் குளிப்பாட்டுவேன். ஆனால் பாட்டிகள அளவு எனக்கு அனுபவம் கிடையாது. எனக்கு தெரிந்த சில வழிகளை பின்பற்றினேன். (உங்கள் 0-1 வயது குழந்தைக்கு எண்ணெய் குளியல் செய்வதற்கான குறிப்புகள் -http://www.parentune.com/parent-blog/uka-0-1-vayatu-kuantaikku-eey-kuiyal-ceyvataka-kuippuka/5068)

குழந்தைகளுக்கு குளியல் நேரத்தை எப்படி வேடிக்கை செய்வது?

ஆனால் குளிப்பாட்டுவதில் நிறைய விஷயங்கள் இருக்கின்றது என்பதை என் தோழிகளின் குழந்தையை குளிப்பாட்டும் போது தான் தெரிந்து கொண்டேன்.

எப்படி குளிப்பாட்ட வேண்டும் ?

 • இளஞ்சூடான தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும். சில்லென்ற தண்ணீரைக் குழந்தைக்கு ஊற்றக் கூடாது. அதுபோல சுடுநீர், பின் சில்லென்ற நீர் என மாற்றி மாற்றி ஊற்றக்கூடாது.
 • முதலில் குழந்தைக்கு தேவையான எண்ணெய், சோப், பேபி ஷாம்பு, துண்டு, மற்றும் நீங்கள் உட்கார மனை போன்ற பயன்படுத்தப் போகும் பொருட்கலையெல்லாம் எடுத்து  கைக்கு எட்டும் தூரத்தில்  வைத்துக் கொள்ளுங்கள்.
 • கலக்க வேண்டிய தண்ணீர் அதாவது ஒரு பக்கெட்டில் வெந்நீர், இன்னொரு பக்கெட்டில் இளஞ்சூடான தண்ணீர். உங்கள் முழங்கையை வைத்து சூட்டை பரிசோதித்துக் கொள்ளுங்கள் (குழந்தைக்கு தேங்காய் எண்ணெய் மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்/ மசாஜ் செய்யும் உதவிக்குறிப்புகள் - http://www.parentune.com/parent-blog/kuzhainthaikalukku-thengkaay-enney-massage-seyvathaal-kidaikkum-nanmaikal-massage-seyyum-uthavikkurippukal/5874)
 • குழந்தையின் முகம், மார்பு பகுதி, வயிறு, கால்கள் ஆகிய இடங்களில் எண்ணெய்யைத் தேய்க்க வேண்டும். இப்போது கால்களை நீட்டிக் கொண்டு குழந்தையை நிமிர்த்தி கால்களில் விட்டுக் கொள்ளுங்கள். குழந்தையின் தலையை உங்கள் கால்களால் கிளிப் மாதிரி பிடித்துக் கொள்ளுங்கள். மெதுவாக குழந்தையின் தலையை நிமிர்த்தி கழுத்தில் எண்ணெயைத் தேய்த்துக் கொள்ளுங்கள்.
 • எண்ணெய் தேய்க்கும் போது கவனமாக கையாளுங்கள். ஏனென்றால் உங்கள் கைகளிலும் எண்ணெய், குழந்தையின் உடலிலும் எண்ணெய் இருப்பதால்  குழந்தையை மிக கவனமாக எடுத்து கால்களின் மேல் கவிழ்த்து படுக்க வைக்கவும். சிலருக்கு குழந்தையை பின்புறம் கவிழ்க்க சிரமமாக இருக்கும். கழுத்துப்பகுதிக்கு எப்போதும் சப்போர்ட் தேவை. கவிழ்க்க சிரமமாக இருந்தால் உங்கள் கால்களை சாய்த்த மாதிரி வைத்து குழந்தையை திருப்பி படுக்க வைத்துப் பாருங்கள். பயமாக இருந்தால் டப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
 • முன்பு போலவே, கால்களால் குழந்தையின் தலையை கிளிப் போல பிடித்துக் கொண்டு குழந்தையின் தலை, பின் கழுத்து, முதுகு, பின்னங்கால்கள் ஆகியவற்றில் எண்ணெய்த் தேய்க்க வேண்டும். எண்ணெய் தேய்க்கும் போதே குழந்தையின் உடலுக்கு நன்றாக மசாஜ் செய்து கொடுங்கள். குழந்தையின் தசைகளுக்கு வலிமை கொடுக்கும். குழந்தை நன்றாக தூங்கும்.
 • குழந்தை கவிழ்ந்து படுத்திருக்கும் போதே, தலை, முதுகு, பின்னங்கால் ஆகியவற்றில் இளஞ்சூடான நீரை ஊற்ற வேண்டும். குழந்தை கவிழ்ந்து படுத்திருப்பதால் முகத்தில் நீர் விழாது, அப்படியிருந்தும் நீரை கவனமாக, மெதுவாக ஊற்றுங்கள்.
 • பின்புறம் சோப் அல்லது பயித்தம் மாவு அல்லது வீட்டில் தயாரித்த குழந்தைக்கான குளியல் பொடியை பயன்படுத்தலாம். குழந்தையை திருப்பி, முகம், கை, கால்கள், உடம்புக்கும் போட்டு அலசி விடுங்கள்.  தொடை இடுக்கு, கை இடுக்கு, அக்குள் ஆகிய இடங்களில் சுத்தப்படுத்துவது நல்லது. தலைக்கு ஷாம்பு அல்லது கடலை மாவு போடும் போது கண்களில் படாமல் கவனமாக கையாளுங்கள்.
 • குளிக்க வைத்தப் பின் கொஞ்சம் கூட தண்ணீர் இல்லாமல் குழந்தையை துண்டால் நன்றாகத் துடைத்து விடுங்கள்.

குளியலறையை வேடிக்கை செய்ய எளிய டிப்ஸ்

உங்கள் குழந்தைக்கு குளியல் நேரத்தை வேடிக்கையாக மாற்றுவதற்கான வழிகள் அல்லது படிகள்

 • முதல் இரண்டு வாரத்திற்கு சோப்போ, ஷாம்புவோ உபயோகிக்க வேண்டாம். ஏனெனில், தண்ணீரே போதுமானதாக இருக்கும். ஒவ்வொரு வாரத்திற்கும் 2-3 முறை குளிப்பாட்டுங்கள்.
 • குழந்தையின் தொப்பிள்கொடி உதிர்ந்து குணமாகும் வரை கடற்பஞ்சு (ஸ்பான்ஜ்) கொண்டு கூட குளிப்பாட்டலாம்.
 • குழந்தையின் மார்புப் பகுதியைச் சுற்றி ஈரமான கம்பளித்துணியையோ அல்லது வேறு துணியையோ போடலாம். இது அவர்களை இதமாக வைத்துக்கொள்ள உதவி புரியும்.
 • வெப்பமான பகுதிகளில் 9-10 மணிக்குள் குளிப்பாட்டலாம். குளித்த பிறகு தாய்ப்பால் ஊட்டிவிட்டு குழந்தையைத் தூங்க வைக்கலாம். உதாரணத்துக்கு 9 மணிக்கு தாய்ப்பால் கொடுத்தீர்கள் என்றால் அடுத்த பசி வருவதற்குள் குளிப்பாட்டிவிட ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்.
 • பேசுதல், பாடுதல், குழந்தையுடன் விளையாடுதல் - இவற்றை செய்தன் மூலம் அவர்கள் அந்நேரத்தை சிறப்பானதாகக் உணருவர். அதுபோன்ற தருணங்கள் உங்களை குழந்தையுடன் அதிகமாக பிணைத்துக்கொள்ள உதவும்.
 • உங்கள் குழந்தையை நிலையாகப் பிடித்துக்கொள்ள வேண்டும். அவர்களை மடியில் வைத்து குளிப்பாட்டும் பட்சத்தில், அவர்களின் தோள்களை உங்கள் கைகளால் தாங்கிக்கொண்டால், அவர்களின் தலையை உள்ளங்கையில் பிடித்துக்கொள்ள வசதியாக இருக்கும். தொட்டியில் வைத்துக் குளிப்பாட்டினால்,அவர்களின் கைகளுக்கு கீழ் பிடித்துக்கொள்ளுங்கள்.
 • மிருதுவாக குழந்தையின் உடலை மசாஜ் செய்தலே, அவர்களின் உடலின் அமைப்பையும், அவர்களது விலைமதிப்பற்ற முகபாவத்தையும் கண்டுகொள்ள உதவும். (என் குழந்தைக்கு குளிர் காலத்தில் எண்ணெய் மசாஜ் செய்யலாமா ? - http://www.parentune.com/parent-blog/en-kuzhanthaiku-kuzhir-kaalathil-yennai-massage-seiyallama/4779)
 • குழந்தைக்கு மூச்சு திணறும் அளவுக்கு பவுடர் போட வேண்டாம். கழுத்து, கை, அக்குள், கால், தொடை இடுக்குகளில் தரமான பவுடரைப் போடலாம். தரமான பவுடரைப் பார்த்து வாங்குங்கள். மருத்துவர் ஏதேனும் பவுடரைப் பரிந்துதைத்தால் அதையே குழந்தைக்கு போடலாம்.

குழந்தைகளை அழ வைத்து தான் குளிப்பாட்ட வேண்டும் என்று அவசியமில்லை. இந்த வழிமுறைகளை கையாண்டு அவர்களுக்கு குளியலை ஜாலியான அனுபவமாகவும் மாற்றலாம். கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் குளிப்பாட்டும் முறைக்கும் குழந்தையும், குழந்தையின் விருப்பத்திற்கேற்ப நீங்களும் மாறி உங்களுக்குள் ஒரு புரிதல் அதிகரிக்க ஆரம்பிக்கும்.

 • 5
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.

| Mar 21, 2019

குழந்தைக்கு 4மாத நடக்கிறது இரவு தூங்கும்போது சிறுநீர் கழிப்பதில்லை ஏன்

 • Reply
 • அறிக்கை

| Apr 02, 2019

நீங்கள் தாய்ப்பால் கொடுப்பவராக இருந்தால் நிறைய தண்ணீர் குடிங்க, மோர், இளநீர் எடுத்துக் கொள்ளுங்கள். குழந்தைக்கும் ஸ்பூனில் அவ்வப்போது தண்ணீர் கொடுக்கலாம். நீங்கள் உணவில் பழங்கள் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு நீர்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்

 • Reply
 • அறிக்கை

| Jul 25, 2019

ö⅝⁰⁶

 • Reply
 • அறிக்கை

| Sep 19, 2019

⁰7u99iy7046

 • Reply
 • அறிக்கை

| Sep 19, 2019

.ĺ b8£)_)-/&⁵$70,&&€¥8),),,-4€7£98

 • Reply
 • அறிக்கை
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}