• உள்நுழை
 • |
 • பதிவு
பெற்றோர் கல்வி மற்றும் கற்றல் குழந்தை உளவியல் மற்றும் நடத்தை

உங்கள் குழந்தையின் தனித்துவமான திறமை என்ன? கண்டுபிடிக்கும் வழிகள்

Radha Shri
7 முதல் 11 வயது

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Feb 10, 2021

பெற்றோர்கள் நம்முடைய பெரிய சவாலா நான் நினைக்கிறது குழந்தைகளிடம் இருக்கிற தனித்திறன் என்ன என்று கண்டுபிடிப்பது. இயல்பாகவே குழந்தைகளிடம் ஒன்று அல்லது பல திறன்கள் ஒலிந்திருக்கும். இதில் ஆட்டிசம், டிஸ்லெக்சியா, டிஸ்பிராக்சியா போன்ற கற்றல் குறைபாடு மற்றும் மாற்று திறனாளி என இந்த உலகத்தில் பிறக்கும் எல்லா குழந்தைளுக்கும் இயல்பகவே ஒரு திறமை இருக்க வேண்டும் என்று பல ஆய்வுகள் நிரூபித்துள்ளது.

இங்கே நம்முடைய குழந்தைகளின் திறமையை கண்டறிய உதவும் ஒரு கோட்பாட்டை அறிவுறுத்த விரும்புகிறேன். அதுதான் Howard Gardner அவர்களின் கோட்பாடு ”Theory of Intelligence” எல்லா மனிதர்களுக்கும் வெவ்வேறு திறமைகள் இருக்கிறது என்று பரிந்துரைக்கிறது. இவர் 9 விதமான நுண்ணறிவுகளை முன்வைக்கிறார். பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் இந்த 9 நுண்ணறிவில் ஏதாவது ஒன்றோ அல்லது பலவோ கண்டிப்பாக இருக்கும் என்று அவர் கோட்பாடு கூறுகிறது.

உங்கள் குழந்தைகளுக்கு திறனைக் கண்டறிய உதவும் 8 நுண்ணறிவுகள்

ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு திறமையும் ஆர்வமும் உண்டு. நாம் யாருடனும் ஒப்பிடும்போது மட்டுமே நம் குழந்தையின் தனித்துவத்தை அடையாளம் காண முடியும்..

 1. இசைத்திறன் (Musical intelligence)
 2. காட்சி - இடவெளி நுண்ணறிவு (Visual-Spatial intelligence)
 3. மொழியியியல் நுண்ணறிவு (Verbal-linguistic intelligence)
 4. தர்க்க-கணித நுண்ணறிவு(Logical-Mathematical intelligence)
 5. உடல்-தசை இயக்கத் திறன்(Bodily-Kinesthetic intelligence)
 6. மனிதர்களை கையாளும் திறன்(Interpersonal intelligence)
 7. தன்னிலை சார்ந்த நுண்ணறிவு(Intra personal intelligence)
 8. இயற்கை சார்ந்த நுண்ணறிவு(Naturalistic Intelligence)
 9. இருப்பு மற்றும் அறம் சார்ந்த நுண்ணறிவு (Existential intelligence)

என்னுடைய மகளுக்கு படம் வரைவதை விட ஓடி ஆடி விளையாடுவது, பால் விளையாடுவது, பாட்டு பாடுவது போன்ற விஷயங்களில் விருப்பம் அதிகம் உண்டு. அதே அவள் வகுப்பில் உள்ள மற்றொரு குழந்தைக்கு படம் வரைவது என்றால் அவ்வளவு விருப்பம். அவன் வீட்டின் சுவர் முழுவதும் அவனின் கைவண்ணம் அழகுப்படுத்துகிறது. 

உங்கள் பிள்ளையில் திறமையைக் கண்டறிய உதவும் வழிகள்

உங்கள் பிள்ளையில் மறைக்கப்பட்ட திறமையைக் கண்டறிய சில வழிகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இதை படிக்கவும்...

 • முதலில் எதில் திறமை இருக்கிறது என்பதை அடையாளம் காண வேண்டும். பிறகு அந்த திறமையை பற்றிய ஆர்வத்தை ஊக்கப்படுத்த  வேண்டும். குழந்தைகள் அது தொடர்பாக செய்யும் சின்ன செயல்களையும் பாராட்ட வேண்டும். அந்த குழந்தைக்கு நடனம், விளையாட்டு, இசை, எழுத்து, அகடமிக், நாடகம், ஓவியம் இப்படி எந்த துறையில் ஆர்வம் இருந்தாலும் அவர்களை ஊக்கப்படுத்துவதே சிறந்தது.
 • இயற்கையாகவே குழந்தைகளுக்கு தனித் தனித் திறமைகள் இருக்கிறது. இயல்பாகவே இசை திறமை இருப்பதால் தான் இசையில் ஆர்வம் வருகிறது. அதனால தான் அந்த துறையில் ஜீனியஸாக வருகிறார்கள். இதே போல் தான் விளையாட்டு, எழுத்து, சினிமா மற்றும் பல.
 • Academic performance & Academic achievement இரண்டுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. சில குழந்தைகள் academic & extra curricular இரண்டிலும் திறமையாக இருப்பார்கள், சிலகுழந்தைகள் படிப்பை விட மற்ற நடவடிக்கைகளில் ஈடுபாடு அதிகம் இருக்கும். அவர்களின் திறமையை ஊக்குவித்துக் கொண்டே அவர்களை Academic –ல் perform பண்ண வைக்க முடியும்.முதலில் அவர்கள் pass mark வாங்கட்டும் அதன் பிறகு distinction பற்றி யோசிக்கலாம். எடுத்த உடனே அவர்களிடம் Academic –ல் சாதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது. அவர்கள் ஆர்வத்தை நாம் புரிந்து கொள்ளும் போது அவர்களும் நமது எதிர்பார்ப்பை புரிந்து கொண்டும் academic- லும் திறமையோடு செயல்படுவார்கள்.
 • எந்தவிதக் கட்டாயத்தின் பேரிலும், மற்ற குழந்தைகளுடன் உங்கள் குழந்தைகளின் திறமையை ஒப்பிட்டு பார்பது, மற்றவர்கள் முன் குறை சொல்லி காண்பிப்பது போன்ற பெரியவர்களின் செயல்கள் உங்கள் குழந்தையின் திறனை குறைத்து மதிப்பிடுவதாக நினைக்க வழிவகுக்கும். அது அவர்களின் திறமையை வேறோடு அழிப்பதோடு மட்டுமில்லாமல் அவர்களது தன்னம்பிக்கையும் குறைந்து விடும்.
 • இந்த திறமை இருந்தால் முன்னேற மாட்டாய் என்று குழந்தைகளிடம் திறமையை மதிப்பிடாதீர்கள். அவர்களின் திறமையை கண்டறிந்து அவர்கள் வெற்ரியடைய வாய்ப்புகள் அமைத்துக் கொடுப்பதே நாம் அவர்களின் திறமை கொடுக்கும் மதிப்பு.
 • ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு திறனைக் கற்றுக் கொள்வதில் ஈடுபாடு இருக்கும். அக்கம் பக்கத்தில் பாட்டு கிளாசிற்கோ, ட்ராயிங் கிளாசிற்கோ அனுப்புகிறார்கள் என்பதற்காக குழந்தையை கட்டாயப்படுத்தி அனுப்பாதீர்கள். அவர்களுக்கு விருப்பமில்லாமல் கட்டாயப்படுத்தி அனுப்பும் போது அங்கே கற்றல் நிகழ வாய்ப்பில்லை. உங்கள் பணமும், குழந்தையின் நேரமும், ஆர்வமும் தான் வீணாகும். இதை விட அந்த குழந்தையின் விருப்பம் தெரிந்து அனுப்பும் போது அவர்கள் ஆர்வத்துடன் மகிழ்ச்சியாக கற்றுக் கொள்வார்கள்.
 • குழந்தைகளின் படிப்பிற்கு முக்கியத்தும் கொடுப்பது போல் அவர்களின் திறமைக்கும் கொடுங்கள். அவர்களின் திறமையை வளர்க்க செலவு செய்ய யோசிக்காதீர்கள். உடனே அதில் result எதிர்பார்த்து அவர்களுக்கு செலவு செய்வதை சொல்லி காட்டாதீர்கள். விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் பணத்தின் அருமையை உணர்த்துங்கள். இதன் மூலம் மகிழ்ச்சியோடும் இருப்பார்கள், பெற்றோர்கள் நம்மையும் புரிந்து கொள்வார்கள்.
 • உங்கள் குழந்தை திறமையை வெளிப்படுத்தி பரிசு வாங்கி வரும் போது அவர்களை பாராட்டத் தயங்காதீர்கள். அதே போல் தோல்வியடைந்தாலும் தட்டிக்கொடுத்து ஆறுதலான வார்த்தைகளைக் கூறி ஊக்கப்படுத்துங்கள். வெற்றி தோல்வி இரண்டையும் சமமாக ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை பழக்குங்கள். 'தோல்விதான் வெற்றிக்கு முதல் படி’ தோல்வியில் இருந்துதான் வெற்றிக்கான பாடத்தை கற்றுக் கொள்ள முடியும்' என்பதை எடுத்துக் கூறி உங்கள் குழந்தையின் மனதை சிறு வயதிலிருந்தே திடப்படுத்துங்கள்
 • விளையாட்டு, fashion, பேச்சுக்கலை, விண்வெளி ஆராய்ச்சி, இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற துறைகளில் ஆராய்ச்சி, சமூக சேவை என்று அவர்களுக்கு எந்தெந்த துறையில் ஆர்வம் உள்ளது என்பதை அவர்களது செயல்பாடுகளை வைத்தே கண்டுபிடித்து விடலாம். உங்கள் குழந்தைகளின் ஆர்வம் எந்த துறையில் உள்ளது என்பது பற்றி நீங்களே உணர்ந்தாலும் கூட, குழந்தைக்கு அதில் மிகுந்த ஆர்வம் உள்ளதா என்று அவர்களிடமே கேட்டு அதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

 

தன்னம்பிக்கையையும், வீரத்தையும் ஊட்டி வளர்க்கும் விதத்தில், ஜான்சி ராணி லெட்சுமிபாய், வீரசிவாஜி, நெப்போலியன், மாவீரன் அலெக்சாண்டர் போன்றவர்களின் வீரத்தைச் சுட்டிக்காட்டும் சம்பவங்களை கூறுங்கள். பல துறைகளில் உள்ள கண்டுபிடிப்பாளர்கள், படைப்பாளிகள் பற்றிய தகவல்களையும் அவர்கள் வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவங்களையும், தோல்விகளை எதிர்கொண்ட அனுபவங்களையும் உங்கள் குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். இதன் மூலம் அந்த குழந்தை தனக்கான துறையை தேர்ந்தெடுக்கும் அறிவும் வளர்வதோடு தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

 

 • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}