• உள்நுழை
 • |
 • பதிவு
பெற்றோர் கல்வி மற்றும் கற்றல்

ப்ரீ-ஸ்கூல் தேடும் போது எதற்கு முன்னிரிமை அளிக்க வேண்டும் ?

Radha Shri
1 முதல் 3 வயது

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது May 27, 2022

பள்ளிக்கு விடுமுறை என்றால் குழந்தைகளுக்கு ஏன் இவ்வளவு சந்தோஷம் என்று யோசித்தது உண்டா? விளையாட்டு, மகிழ்ச்சி, குதூகலம், குறும்புத்தனம் என்று தன்னுடைய இயல்புகளை பள்ளியில் வெளிப்படுத்த முடியாது. எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு என் பாட்டி தினமும் பள்ளிக்கு என்னை இழுத்து கொண்டு தான் விடுவாங்க. காலம் காலமாக மாறாத விஷயங்களில் இதுவும் ஒன்று என்று சொல்லலாம். குழந்தைகள் முன்பு போல் இப்போது அழுவது இல்லை என்றாலும் இன்னும் பள்ளிக்கு ஏதோ ஒரு கட்டாயத்தில், மகிழ்ச்சி இல்லாமல் போவதை நம்மால் பார்க்க முடிகிறது. லீவ் என்றால் ஏன் இவ்வளவு மகிழச்சி, பள்ளிக்கூடம் ஏன மகிழ்ச்சியானதாக இல்லை? என பல கேள்விகல் கேட்க தோணுது. நம் குழந்தைகளுக்கு பள்ளி செல்லும் அனுபவம் மகிச்சியாக மாற வேண்டுமென்றால் பள்ளி தேடும் போதே முன்னுரிமை அளிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

ஆரம்ப கல்வியிலேயே மதிப்பெண், ரிஸல்ட் போன்ற விஷயங்கள் தொடங்கிவிடுகிறது. என் குழந்தையை பள்ளியில் சேர்ப்பதற்காக சென்ற போது  சில பெற்றோர்கள் பகிர்ந்து கொண்டது. அக்கம் பக்கத்தில் சொந்தகாரங்க சொல்வது  கேள்வி எந்த பள்ளியில்  படித்தால் அதிக மதிப்பெண் வாங்கலாமோ அந்த பள்ளியில் சேரு என்று ஒரு பெரிய பட்டியலே போடுகிறார்கள். LKG க்கே இவ்வளவு யோசிக்க வேண்டுமா என்று தலை சுற்றுகிறது. என்னோட மகள் ரொம்ப சுட்டி. கிரியேட்டிவ்வா நிறைய யோச்சிகிறவள். அவள் படிக்கிற பள்ளி இந்த சுட்டித்தனத்தை, கிரியேட்டிவிட்டியை மழுங்கடிக்காம இருக்க வேண்டும் என்பது தான் என்னோட முதல் எதிர்பார்ப்பு மற்றொரு பெற்றோர் கூறினார்.

எல்லாம் சரி, குழந்தைகளின் முதல் பள்ளி வாழ்க்கை மகிழ்ச்சியானதாக அமைய பெற்றோர்கள் நாம் சரியான பள்ளியை தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் சில நேரங்களில் நம்முடைய முடிவு வேறு சில காரணங்களுக்காக தவறாக கூட இருக்கலாம். இதற்காக வருந்த வேண்டாம். இதை விட நம் குழந்தைக்கு சிறந்த பள்ளி கிடைக்கப் போகிறது என்று நினைத்து அடுத்த முறை இன்னும் ஆராய்ந்து பள்ளியை தேடுவோம். என் மகளுக்காக பள்ளியை தேடும் போது என்னென்ன விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று ஒரு நீண்ட பட்டியலிட்டேன். அதை உங்கள் பார்வைக்கும் கொண்டுவர விரும்புகிறேன்.

எதற்கெல்லாம் முன்னுரிமை அளிக்க வேண்டும்

நமது குழந்தையின் வாழ்க்கையில் எடுக்க வேண்டிய முக்கியமான முடிவுகளில் இதுவும் ஒன்று என்ற எண்ணம் பெற்றோர்கள் பள்ளியை தேர்ந்தெடுக்கும் போது இருக்க வேண்டும்.

 • குழந்தையின் பண்புகள், ஆளுமை, தேவைகள், பலம், பலவீனம், உடல்நலம் இவைகளையும் கருத்தில் கொள்வது நல்லது.
 • தேர்ந்தெடுக்கும் பள்ளியை பற்றிய தகவல்கள், செய்திகளை தெரிந்து கொள்வது நல்லது. பள்ளியின் வரலாறு மதிப்பெண் அடிப்படையில் மட்டும் சிறந்ததாக இல்லாமல் சுகாதாரம், சூழல், பாதுகாப்பு, விளையாடு, பள்ளியின் தூரம், பெற்றோர் ஆசிரியர் பிணைப்பு போன்ற விஷயங்களுக்கும் முக்கியத்துவம் இருக்க வேண்டும்.
 • நண்பர்கள், நெருங்கியவர்கள் தங்கள் குழந்தைகளை எந்த பள்ளியில் சேர்த்திருக்கிறார்கள், என்ன காரணத்திற்காக சேர்த்திருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். அவர்களின் குழந்தையின்  ஆர்வத்தை, நடத்தையை வைத்து தேர்வு செய்யலாமா வேண்டாமா என்று நம்மால் பெரும்பாலும் கணிக்க முடியும்.
 • மற்ற குழந்தைகள் படிக்கும் பள்ளியை பொருளாரம், கெளரம் அடிப்படையில் மட்டும் ஒப்பிட்டு பார்க்காமல் கல்வித்தரம், ஆசிரியர்- குழந்தை விகிதம், விளையாட்டு, நூலகம் போன்ற விஷயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
 • School Annual programmes, வலைப்பதிவு, website, கண்காட்சி மூலமாக பள்ளியை பார்வை இடலாம்.

குழந்தையின் தேவைகள் மற்றும் தனித்துவங்கள்

 • படைப்பாற்றல் மிக்க செயல்கள் தேவை. அதை வளர்க்கும் சூழல் வேண்டும்.
 • குழந்தைக்கு தனிப்பட்ட கவனம் தேவை. மற்றும் சுதந்திரம் தேவை.
 • கற்றல் குறைபாடு, மற்ற காரணங்களுக்காக கற்றலில் சிக்கல் இருந்தால் சிறப்பு பயிற்சி தேவைப்படும்.
 • அதிக சவாலான பணிகள் தேவை.
 • துறு துறு குழந்தை. தண்டைனை இல்லாமல் கையாளும் சூழல் தேவை.

கற்கும் முறைகள்

உங்கள் குழந்தையின் கற்றல் முறைகளை தெரிந்து கொள்ளுங்கள்

 • ஒரு விஷயத்தை பார்த்துக் கற்றுக் கொள்வது (படங்கள், செயல்முறை)
 • ஒரு விஷயத்தை படித்துக் கற்றுக் கொள்வது (வாசித்துக் காட்டுதல், theory சார்ந்து).
 • ஒரு விஷயத்தை கேட்டுக் கற்றுக் கொள்வது (கலந்துரையாடல்,விவாதங்கள்)
 • உடல் செயல்பாடு மூலம் அறிந்து கொள்வது (விளையாட்டு)
 • இசை மற்றும் கலையில் திறன் கொண்டவர்கள் (Music Artistic)
 • குழுக்கலாக கற்க விரும்புகிறார்கள்.
 • தனியாக வேலை செய்ய விரும்புகிறவர்கள்.

பள்ளியின் தூரம்

 • பள்ளிக்கு வீட்டிலிருந்து நடந்து செல்ல விரும்புகிறார்கள்.
 • பள்ளிக்கு சொந்தமான பஸ்ஸில் பயணம் செய்கிறார்கள். எவ்வளவு தூரம் பஸ்ஸில் பயணம் செய்ய தயாராக இருக்கிறார்கள்.
 • பெற்றோர்கள் கொண்டு விட விரும்புகிறார்கள்.
 • பள்ளிக்கு அருகில் உங்கள் அலுவலகமோ, உறவினர்களோ இருக்க வேண்டும் என்று எதிபார்க்கிறார்கள்.

கல்வித் தரம்

ஒரு பள்ளி என்பது அறிவியல், கணிதம், இயற்பியல் என்று வெறும் பாடங்களை மட்டும் கற்றுக் கொடுக்கும் இடமாக இருக்ககூடாது. ஒழுக்கம், படைப்பாற்றல், நல்லுறவு, நற்பண்புகள், தன்னம்பிக்கை வளர்க்கும் இடமாகவும் இருக்க வேண்டும்.

அணுகுமுறை  

ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஒவ்வொரு விதமான கற்றல் திறன் இருக்கும். ஆசிரியர்கள் அனைவருக்கும் புரியும் வகையில் கற்பிக்கிறார்களா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான உறவு எப்படி இருக்கிறது என்பதும் முக்கியம். குழநதைகளுக்கான உரிமைகள் வகுப்பறைக்குள் கிடைக்கிறதா என்பதும் கற்றலில் மிக முக்கியமானது.

பெற்றோருக்கும் பள்ளிக்கும், பெற்றோர்க்கும் ஆசிரியருக்குமான உறவு வெளிப்படையாக இருக்க வேண்டும்.  குழந்தைகளை பற்றிய நிறை குறைகளை பகிர்ந்து கொள்ளும் அளவில் இருக்க வேண்டும்.

கல்விமுறை

ப்ரீ-ஸ்கூல் தானே என்று கல்விமுறையில் கோட்டை விட்டுவிடாதீர்கள். State Board, Central Boards of Secondary Examination (CBSE), Indian Certificate of Secondary Education (ICSE), Open Schooling, International Schools, Montessori Schools போன்ற பல்வேறு கல்விமுறைகளையும் கருத்தில் கொண்டு பார்கக்வும்.சில மெட்ரிக் பள்ளிகளில் ஆங்கிலமும் தமிழிலும் முழுமையாக கற்பிக்காமல் இருக்கிறார்கள். குழந்தைகள். சில பள்ளிகளில் ஹிந்தி, சமஸ்கிருதம் மொழிகளை முதல் மொழியாக வைத்திருப்பார்கள். மொழி மிக முக்கியம். தெரிந்த மொழியில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பாதுகாப்பு மற்றும் நடத்தை

 • ஏதாவது பிரச்சனை என்றால் சீக்கிரம் தொடர்பு கொள்ளும் தூரத்தில் மருத்துவமனை, காவல் நிலையம் இருக்கிறதா என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் பள்ளியில் விபத்து ஏற்பட்டால் அதற்கான பாதுகாப்பு அம்சங்கள் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவும்.
 • விபத்துகளோ, பிரச்சனையோ அப்பள்ளியில் முன் நடந்த போது அதை எப்படி  கையாண்டார்கள். வெளிப்படையான தன்மை இருக்கிறதா?
 • குழந்தைகளுக்கு இருக்கும் பாதுகாப்பு ரீதியான பிரச்சனையை(சக மாணவர்களோடு சண்டை, கீழே விழுந்து அடிபட்டால், ஆசிரியரின் கடும் தண்டனை) பெற்றோர்களிடம் எப்படி வெளிப்படுத்துகிறார்கள்? எப்படி கையாள்கிறார்கள்? பெற்றோர்களிடம் எவ்வளவு கால அவகாசத்தில் தெரியப்படுத்துகிறார்கள்.
 • குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் ரீதியான பிரச்சனைகளுக்கு என்னென்ன முதலுதவி உள்ளது. பெற்றோர்களுக்கு எப்படி தெரியப்படுத்துகிறார்கள்.
 • சுய ஒழுக்கத்தை கடைப்பிடிக்க  பள்ளி என்னெனன் விதிமுறைகளை மேற்கொள்கிறார்கள்.

குழந்தைகள் சிரித்து கொண்டே பள்ளிக்கு போக வேண்டும் என்பதே எல்லா பெற்றோர்களின் ஆசை. நிச்சயமாக அவர்களுக்கான சரியான பள்ளியை தேர்ந்தெடுக்கும் போது மகிழ்ச்சியோடு செல்வதை நாம் தினந்தோறும் பார்க்க முடியும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

 • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த பெற்றோர் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}