• உள்நுழை
 • |
 • பதிவு
உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்

சிசேரியனுக்கு பிறகு என்னென்ன செய்ய கூடாது?

Bharathi
0 முதல் 1 வயது

Bharathi ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Jul 27, 2021

நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

இந்த பதிவில் சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட தாய்மார்களுக்கு சில குறிப்புகளை பதிவிடப் போகிறேன். எனக்கு அறுவைச் சிகிச்சை மூலம் தான் குழந்தைகள் பிறந்தனர். அதனால் என்னுடைய அனுபவத்தில் இருந்து சிசேரியனுக்கு பிறகு சிலவற்றை செய்ய கூடாது என்று மருத்துவர்களும், வீட்டில் உள்ள பேரியவர்களும் சொல்வதுண்டு. அது என்ன்ன என்பதை இந்த பதிவில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

சிசேரியனுக்கு பிறகு என்னென்ன செய்ய கூடாது?

சுகப்பிரசவம் என்பது நாளுக்கு நாள் குறைந்துக் கொண்டே வருகிறது. அதற்கு முக்கிய காரணம் நமது உணவுப்பழக்கமும், வாழ்வியல் நடைமுறைகளும் தான். இதனால் தான் சிசேரியன் மூலம் குழந்தை பிறப்பது என்பது சர்வசாதரணமான ஒரு விசயமாக மாறி வருகிறது. நம் உணவுப் பழக்கம் ஒரு காரணமாக இருந்தாலும் உடலில் ஏற்படும் உபாதைகளும் சிசேரியனுக்கு வழி வகுக்கிறது... தாயும் சேயும் நலம் கருதி மருத்துவர்கள் சிசேரியனை பரிந்துரை செய்கின்றனர்...

சிசேரியன் செய்வதற்கான சில மருத்துவ காரணங்கள்

*  குழந்தையின் தலை பெரியதாக இருக்கும் போது.

*  தாயின் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது, இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும் போது.

*   கர்ப்ப வாய் மிக சிறிய அளவில் திறந்து இருப்பதால்.

*  அப்படி கர்ப்ப வாய் விரிவதற்கு நேரம் எடுத்துக் கொள்ளும் போது குழந்தையின் இதய துடிப்பு குறைந்தால்....

*  கர்ப்பப் பையில் குழந்தைகள் மலம் கழித்து விட்டால்.

*  நஞ்சு கொடி சரியான இடத்தில் இல்லாமல் இருந்தால்.

*  சிலர் எல்லாம் சரியாக இருந்தாலும் பிரசவ வலியை தாங்கிக் கொள்ள முடியாமல் தாமாகவே முன்வந்து அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக் கொள்கின்றனர்.

எனக்கு நஞ்சுக்கொடி கீழ் பக்கம் இருந்ததால் பிரசவ தேதிக்கு முன்பாக அவசர நிலையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த காரணங்களினால் அறுவை சிகிச்சை பரிந்துரை செய்யப்படுகிறது.. நான் எழுதிய காரணங்கள் என்னுடைய அனுபவத்தில் இருந்து கூறப்பட்டது...

அறுவை சிகிச்சையின் போது என்ன நடக்கிறது?

 அறுவை சிகிச்சையின் போது தண்டு வடத்தில் அனஸ்தீசியா கொடுக்கப்படுகிறது.. அதனால் இடுப்புக்கு கீழே எந்த வலியும் தெரிவதில்லை... அறுவை சிகிச்சையின் போது இரத்த அழுத்தம் சரிபார்க்கப்படும்...45 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது...மருந்துகள் பயன்படுத்துவதால் சிலருக்கு வாந்தி ஏற்படும்... வயிற்றின் அடி பகுதியில் கீறலிட்டு குழந்தை வெளியே எடுக்கப்படுகிறது..

அறுவைச் சிகிச்சைக்குப் பின் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை

 • சிசேரியன் செய்தால், சில தினங்கள் படுக்கையில் இருந்தபடி குளூக்கோஸ் ஏற்ற வேண்டியிருக்கும்...
 • தையல் காய்ந்து குணமாகும் வரை பொறுத்திருக்க வேண்டும். இந்த தையல் முற்றிலும் காயாமல் வேறு ஏதேனும் தொற்று வந்தாலோ, தையல் பிரிந்தாலோ அதிக ஆபத்தை உண்டாக்கி விடும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் சிசேரியன் செய்து கொண்டவர்களுக்கும் இந்த நிலை தான். ஆரோக்கியமானவர்களாக இருந்தும் சிசேரியனை ஏற்றுகொண்டவர்களுக்கும் இதே நிலை தான் என்பது குறிப்பிடத்தக்கது.
 • மூன்று முதல் ஐந்து நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும்.. அறுவை சிகிச்சைக்குப் பின் உடலை அவ்வப்போது அசைத்து கொடுக்க வேண்டும்.. அப்போது தான் கழிவுகள் வெளியேறும்...
 •  மருத்துவர்கள் ஆலோசனைக்குப் பிறகு மற்றவர்களின் உதவியுடன் படுக்கையை விட்டு மெதுவாக கீழே இறங்கி நடந்து பார்க்க வேண்டும்...
 •  நார்மல் டெலிவரிக்கு அந்த நாள் மட்டும் ‌வலி... ஆனால் சிசேரியனுக்கு வாழ்நாள் முழுவதும் வலி...இதை அநேகம் பேர் உணர்ந்து இருப்பீர்கள்..
 • அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.. இளநீர்,பால் இப்படி நீர் ஆகாரம் அதிகமாக எடுக்கும் போது யூரின் அதிகமாக வெளியேறும் பின்னர் மலச்சிக்கல் கூட இருக்காது...
 • மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்..
 • மருத்துவர் குளிக்க சொன்ன பிறகு குளிக்க வேண்டும்..குளித்து முடித்து விட்டு தையல் போட்ட இடத்தை நன்றாக ஒற்றி எடுக்க வேண்டும்... அழுத்தம் கொடுத்து துடைக்க கூடாது...பின் z - ointment மறக்காமல் போட்டுக் கொள்ள வேண்டும்...
 • மருந்து மாத்திரைகள் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.. இரும்பு சத்து மாத்திரைகள் மற்றும் கால்சியம் மாத்திரைகள் ஆறு மாதங்கள் வரை எடுத்துக் கொள்ள வேண்டும்..
 •  எளிதாக செரிமானம் ஆகும் உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.. பாசிப்பருப்பு, கீரை, இட்டலி, இடியாப்பம் இது எல்லாம் சேர்ந்து கொள்ளலாம்...புளி சேர்த்த உணவுகள் எடுத்துக் கொண்டால் குழந்தைக்கு வாந்தி வரும்..
 • வீட்டிற்கு வந்த பிறகு தையல் போட்ட இடத்தில் எதுவும் தொற்று அல்லது சீழ் எதுவும் கண்டால் மருத்துவரிடம் உடனே சென்று காட்ட வேண்டும்..
 • பின்னர் தமிழ் மருந்துகள் பாட்டி அம்மா கொடுப்பவைகளை சாப்பிட வேண்டும்..
 • குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை எக்காரணம் கொண்டும் புறக்கணிக்கக் கூடாது...45 நாட்கள் வரை ஒருவரின் உதவியுடன் குழந்தையை தூக்கி பால் கொடுக்க வேண்டும்.. ஓரளவு புண் ஆறிய பிறகு குழந்தையை குனிந்து தூக்க முயற்சி செய்ய வேண்டும்...
 • தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் உள்ளாடைகள் அணிவது அவசியம்... அப்போது தான் தசை தளர்ச்சி ஏற்படாமல் இருக்கும்...
 • எந்த கனமான பொருட்களைத் தூக்குவதைத் தவிர்க்க வேண்டும்...
 • கொஞ்சம் கொஞ்சமாக நடைப் பயிற்சி செய்து கொள்ளலாம்...
 • மூன்று மாதங்களுக்குப் பிறகு மருத்துவரிடம் ஆலோசனை பெற்று உடற்பயிற்சி செய்யலாம்..
 • சூரிய நமஸ்காரம் ஆறு மாதங்கள் கழித்து தினமும் காலையில் தவறாமல் செய்தால் அனைத்து பாகங்களும் சரியாக இருக்கும்...அது போக சில உடற்பயிற்சி செய்யலாம்... அப்போது தான் முதுகு வலி வராமல் தடுக்க முடியும்..
 • அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பதை தவிர்க்க வேண்டும்... ஒவ்வொரு அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை இடத்தை விட்டு நகர்ந்து ஒரு நடை நடந்து வந்து ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்...
 • உடல் உறவு கொள்வதை கட்டாயம் மூன்று மாதங்கள் வரை தவிர்க்க வேண்டும்... அதன் பிறகு அவரவர் உடல் வலிகளைப் பொறுத்து முடிவு செய்து கொள்ளலாம்...

 

உலகை உள்ளுக்குள் உருவாக்கி தன்

உணர்வுகளால் பாதுகாக்கும் ஆற்றல் கொண்ட

தாய்மையே....!!!

பிரசவ காலம் சுகம்... தாய்மை அதை விட சுகம்...

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

 • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}