• உள்நுழை
 • |
 • பதிவு
உணவு மற்றும் ஊட்டச்சத்து கர்ப்பம்

கர்ப்பிணிகள் அவசியம் சாப்பிட வேண்டிய காய்கறிகள் லிஸ்ட்

Bharathi
கர்ப்பகாலம்

Bharathi ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Feb 26, 2022

கர்ப்ப காலத்தில் உணவு என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும் குறிப்பாக சரிவிகித உணவு எடுத்துக் கொள்வதோடு சரியான அளவு மற்றும் சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும்.  காய்கறிகள், பழங்கள், கீரைகள் சேர்த்து கொள்வது அவசியம். 

கர்ப்ப காலத்தில் காய்கறிகளின் பங்கு

காய்கறிகளில் நிறைந்த ஒரு ஆரோக்கியமான உணவு கர்ப்பகால நீரிழிவு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற சிக்கல்களைத் தவிர்க்க உதவும், ஏனெனில் அவை பீட்டா கரோட்டின், வைட்டமின் சி மற்றும் ஃபோலிக் அமிலம் போன்ற வைட்டமின்களைக் கொண்டிருக்கின்றன. காய்கறிகளை சாப்பிடுவது குழந்தைக்கு ஆரோக்கியமான பிறப்பு எடையை அதிகரிக்கவும், இரத்த சோகை அபாயத்தை குறைக்கவும், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. மேலும் கர்ப்ப காலத்தில் தாய்க்கு சீரான எடையை பராமரிக்க உதவுகிறது.

கர்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டிய  காய்கறிகள் உங்கள் உடலுக்கு தொடர்ந்து ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதை உறுதி செய்யும் பல காய்கறிகள் உள்ளன.

கர்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டிய காய்கறிகள்

வீட்டில் காய்கறி சூப்களும் அதிக காய்கறிகளைக் கொண்டிருக்க ஒரு நல்ல வழி.ஒரு நாளில் 2.5 முதல் 3 கப் (சுமார் 500 கிராம்) காய்கறிகளை எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. அவற்றை பச்சையாகவோ அல்லது சமைத்ததாகவோ உட்கொள்ளலாம்.

அவரைக்காய்

அவரைக்காய் சாப்பிட்டால் எளிதாக செரிமானம் ஆகும். நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் நீங்கும்.

கீரைகள்

எந்த வகை கீரையாக இருந்தாலும் எடுத்துக் கொள்வது நல்லது. முருங்கை கீரை வாரம் ஒருமுறை சேர்த்து கொள்வது நல்லது.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு/ இனிப்பு உருளைக்கிழங்கு

இவை வைட்டமின் ஏ, பி மற்றும் சி ஆகியவற்றின் சிறந்த ஆதாரங்கள்.சர்க்கரைவள்ளிக் கிழங்கில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. அதிலும் இதனை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், குழந்தையின் உறுப்புகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இதில் நார்ச்சத்துக்கள் மற்றும் பொட்டாசியம் வளமாக நிறைந்துள்ளது.

பீட்ரூட்

பீட்ரூட்களில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் அவை உதவுகின்றன.

பச்சை பட்டாணி

கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய காய்கறிகளில் முக்கியமான மற்றொன்று தான் பச்சை பட்டாணி. ஏனெனில் இதில் குழந்தையின் மத்திய நரம்பியல் மண்டலம், எலும்புகளின்ஆரோக்கியம் மற்றும் தசைகளின் வளர்ச்சிக்கு வேண்டிய வைட்டமின் கே அதிகம் நிறைந்துள்ளது.

முட்டைக்கோஸ்

கர்ப்பிணிகள் அவசியம் சாப்பிட வேண்டிய காய்கறிகளில் முட்டைக்கோஸ் ஒன்றாகும். ஏனெனில் இதில் வைட்டமின் ஏ, ஈ மற்றும் கே அதிகம் இருப்பதுடன், மக்னீசியம், ஜிங்க் மற்றும் பொட்டாசியம் போன்ற குழந்தையின் ஆரோக்கியத்திற்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளன.

காய்கறிகள் சூப்

தேவையான பொருட்கள்

 • கேரட்        - 1
 • உருளைக்கிழங்கு - 1
 • பீன்ஸ்.      - 4
 • பட்டாணி - 1 கப்
 • சோள மாவு - சிறிது
 • உப்பு தேவையான அளவு
 • வெண்ணெய் - ஒரு தேக்கரண்டியளவு

அலங்கரிக்க கொத்தமல்லி தழை

செய்முறை

 • முதலில் காய்கறிகளை நறுக்கி வைக்கவும்.
 • பின்னர் குக்கரில் போட்டு வேக வைத்து எடுக்கவும்.
 • நன்றாக வடித்து மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
 • பின்னர் வேக வைத்த தண்ணீர் அரைத்து வைத்த காய்கறிகள் எல்லாம் சேர்த்து சிறிது சோள மாவு கரைத்து ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
 • பின்னர் இறக்கி மல்லித்தழை வெண்ணெய் சேர்த்து இறக்கவும்.
 • சுவையான சூப் தயார்.

கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய சில காய்கறிகள்

கர்ப்பிணிப் பெண்கள் தவிர்க்க வேண்டிய சில காய்கறி வகைகளும் உள்ளன. இந்த பொருட்கள் அனைத்தும் உங்கள் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வெளிப்பாட்டின் அபாயத்தைக் கொண்டுள்ளன:

 • முளைக்கட்டிய பயிர்கள் மற்றும் முள்ளங்கிகளை சமைத்து சாப்பிடுவது பாதுகாப்பானது. 
 • கத்தரிக்காய்  போன்ற சில உணவுகள், கிட்டத்தட்ட ஒவ்வொரு இந்திய வீட்டிலும் பொதுவாக உண்ணப்படுகின்றன. அமினோரியா மற்றும் மாதவிடாய்க்கு முந்தைய கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான சிறந்த உணவாக கத்திரிக்காய் கருதப்படுகிறது.
 • கடந்த காலங்களில் உங்களுக்கு ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், கர்ப்ப காலத்தில் கத்தரிக்காயை உட்கொள்வதை பல நேரங்களில் மகளிர் மருத்துவ நிபுணர்கள் கண்டிப்பாக தடை செய்கிறார்கள்.

இவ்வாறு கேரட், வெள்ளரிக்காய் போன்ற பச்சை காய்கறிகளை அதிகமாக உணவில் சேர்த்து வந்தால் ஆரோக்கியமான குழந்தை பெற முடியும்.

 • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த உணவு மற்றும் ஊட்டச்சத்து Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}