• உள்நுழை
 • |
 • பதிவு
உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் உணவு மற்றும் ஊட்டச்சத்து

குழந்தைக்கு பசும்பால் எப்போது அறிமுகப்படுத்தலாம்? அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Radha Shri
0 முதல் 1 வயது

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Jun 22, 2021

நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

பெரும்பாலான அம்மாக்களுக்கு தன் குழந்தைக்கு எப்போது பசும்பால் கொடுக்க தொடங்க வேண்டும் என்ற சந்தேகம் வரும். குழந்தை பிறந்து ஒரு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே போதுமானது. குழந்தைக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் தாய்ப்பாலில் அடங்கியுள்ளது. சில அம்மாக்களுக்கு தாய்ப்பால் சுரப்பது குறைவாக இருந்தால் மற்ற பால் அதாவது ஃபார்முலா பால் தேவைப்படும். குழந்தை நல மருத்துவரிடம் ஆலோசித்து குழந்தைக்கான ஃபார்முலா பாலை கொடுக்கலாம். ஆனால் பசும்பால் கொடுப்பதற்கென்று வயது இருக்கின்றது. இது தொடர்பாக அடிக்கடி அம்மாக்களுக்கு தோன்றும் கேள்விகளையும் அதற்கான பதில்களையும் இந்த பதிவில் பார்க்கலாம்.

குழந்தைக்கு எந்த வயதில் பசும்பால் கொடுக்கலாம் என்பது பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் தொடர்ந்து பார்க்கலாம். 

பசும்பாலை அறிமுகப்படுத்த என் குழந்தைக்கு 1 வயது வரை நான் ஏன் காத்திருக்க வேண்டும்?

குழந்தைகளுக்கு தாய்ப்பால் அல்லது ஃபார்முலா பால் போல பசும்பாலில் முழுமையாகவோ அல்லது எளிதாகவோ ஜீரணிக்கும் திறன் இல்லை. பசுவின் பாலில் அதிக அளவு புரதம் மற்றும் தாதுக்கள் உள்ளன, இது உங்கள் குழந்தையின் வளர்ச்சியடையாத சிறுநீரகங்களுக்கு நல்லதல்ல.

பசுவின் பாலில் குழந்தைகளுக்கு இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் சரியான அளவு இல்லை. இது சில குழந்தைகளில் இரும்புச்சத்து குறைபாடினால் இரத்த சோகைக்கு வழிவகுக்கும், ஏனெனில் பசும்பாலின் புரதம் செரிமான அமைப்பில் தொந்தரவை ஏற்படுத்தும், இதனால் மலத்தில் இரத்தம் வரும். இறுதியாக, பசுவின் பால் வளரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான கொழுப்பை வழங்காது.

இருப்பினும், உங்கள் பிள்ளை அதை ஜீரணிக்கத் தயாரானவுடன், தானியங்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் இறைச்சிகளை உள்ளடக்கிய திட உணவுகளோடு பாலும் கொடுக்கும் போது குழந்தைக்கு  சீரான உணவு கிடைக்கும்

என் குழந்தை ஏன் பசும்பால் குடிக்க ஆரம்பிக்க வேண்டும்?

பாலில் கால்சியத்தின் சத்து கிடைக்கும்.  இது வலுவான எலும்புகள் மற்றும் பற்களை உருவாக்குகிறது மற்றும் இரத்த உறைவு மற்றும் தசையை கட்டுப்படுத்த உதவுகிறது. இதிலுள்ள  வைட்டமின் டி,  உடல் கால்சியத்தை உறிஞ்சுவதற்கும்,  எலும்பு வளர்ச்சிக்கு முக்கியமானது.

பால் குழந்தையின் வளர்ச்சிக்கு புரதத்தையும், கார்போஹைட்ரேட்டுகள் உங்கள் குழந்தைக்கு நாள் முழுவதும் தேவையான சக்தியையும் அளிக்கின்றன. உங்கள் குழந்தைக்கு போதுமான கால்சியம் கிடைத்தால், உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம், பெருங்குடல் புற்றுநோய் மற்றும் இடுப்பு எலும்பு முறிவுகள் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கலாம்.

என் குழந்தை பசும்பால் குடிக்க ஆரம்பிக்கும் போது நான் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டுமா?

நீங்கள் பசும்பாலை அறிமுகப்படுத்திய பிறகு தாய்ப்பாலை நிறுத்த வேண்டிய அவசியமில்லை. உங்கள் குழந்தைக்கு 2 வயது வரை தாய்ப்பால் தொடர்ந்து கொடுப்பது நல்லது என்று அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் (ஏஏபி) கூறுகிறது.

என் 1-3 வயது குழந்தை எவ்வளவு பால் குடிக்க வேண்டும்?

உங்கள் 1 வயது குழந்தைக்கு போதுமான கால்சியம் மற்றும் வைட்டமின் டி 16 அவுன்ஸ் (2 கப்) பசும்பாலில் கிடைக்கும் - அல்லது தயிர் அல்லது சீஸ் போன்ற பிற பால் பொருட்களுக்கு சமமான அளவு மூலமாகவும் கால்சியம் சத்து கிடைக்கும். உங்கள் குழந்தையின் 2 வயதில், 18 அவுன்ஸ் அல்லது 2 1/4 கப் பசுவின் பால் அல்லது பிற பால் பொருட்கள் போல் மூலம் கால்சியம் கிடைக்க வேண்டும்.

இருப்பினும், உங்கள் குழந்தைக்கு ஒரு நாளைக்கு (2 1/2 கப்) பாலுக்கு மேல் கொடுக்க வேண்டாம். ஏன்னென்றால் மற்ற உணவை சாப்பிட ஆர்வம் காட்டமாட்டார்கள். உங்கள் குறுநடை(டாட்லர்) போடும் குழந்தை தாகம் எடுத்தால் தண்ணீரை கொடுங்க. அடிக்கடி பாலை கொடுத்து பழக்கப்படுத்தாமல் இருப்பது நல்லது.

எனது 1-3 வயது  குழந்தைக்கு கொழுப்பு இல்லாத அல்லது குறைக்கப்பட்ட கொழுப்பு பால் கொடுக்கலாமா?

1 வயது குழந்தைகளுக்கு உடல் பருமனுக்கு அதிக ஆபத்து இல்லாவிட்டால், முழு கொழுப்புள்ள பாலையும் கொடுக்க பரிந்துரைக்கிறார்கள். இந்த வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இயல்பான எடை அதிகரிப்பைப் பராமரிக்கவும், வைட்டமின்கள் ஏ மற்றும் டி உடலை உறிஞ்சுவதற்கு உடலுக்கு உதவவும் முழு பாலின் கொழுப்புச் சத்து தேவைப்படுகிறது. இந்த வயதில் குழந்தைகளுக்கு புரதமும் தாதுக்களும் செறிவூட்டப்படுவதும் மிக அதிகம். உங்கள் பிள்ளைக்கு 2 வயதாகிவிட்டால், அவர் நன்றாக வளரும் வரை அவரை குறைக்கப்பட்ட கொழுப்பு அல்லது கொழுப்பு இல்லாத பாலுக்கு மாறலாம்

உங்கள் குழந்தை அதிக எடை அல்லது பருமனாக இருந்தால், அல்லது உடல் பருமன், அதிக கொழுப்பு அல்லது இருதய நோய்களின் குடும்ப வரலாற்றை கொண்டிருந்தால், உங்கள் குழந்தையின் மருத்துவர் உங்கள் குழந்தைக்கு 1 வயதிற்குப் பிறகு குறைக்கப்பட்ட கொழுப்புப் பாலை (2 சதவீதம்) கொடுக்க பரிந்துரைக்கலாம்.

எனது குறுநடை போடும் குழந்தைக்கு  பசும்பால் குடிக்க பிடிக்கவில்லை என்றால் எப்படி முயற்சி செய்வது?

சில குழந்தைகள் உடனே பசும்பாலை குடிக்க தொடங்குவார்கள். ஆனால் சிலர் இது தாய்ப்பாலை விட வித்தியாசமான நிறம், சுவை மற்றும் வெப்பநிலை கூட மாறுவதால் தவிர்க்க தொடங்குவார்கள் .

உங்கள் குறுநடை போடும் குழந்தைக்கு அப்படி இருந்தால், முதலில் பசும்பாலோடு கொஞ்சம் தாய்ப்பால் அல்லது ஃபார்முலா பால் கலக்க முயற்சிக்கவும். (ஒரு பகுதி பசுப்பாலில் மூன்று பகுதிதாய்ப்பால் அல்லது ஃபார்முலா பாலில் முயற்சிக்கவும்.) பின்னர்  100 சதவீத பால் குடிக்கும் வரை மெதுவாக விகிதத்தை மாற்றவும்.

எப்படி கொடுத்தாலும் பாலை குடிப்பதில்லை என்றால் வருத்தப்படாதீர்கள். அவர்களுக்கு கால்சியம் சத்து கிடைக்கும் வழிகளை உயற்சி செய்யலாம். அதாவது உங்கள் குழந்தையின் உணவில் இவற்றை சேர்க்கலாம்.  உதாரணத்திற்கு:

 • உங்கள் குழந்தையின் தானியத்தில் பால் சேர்க்கவும். அதாவது ராகி, கோதுமை கஞ்சி, பால் கஞ்சி போல் செய்து கொடுக்கலாம்
 • தயிர், பாலாடைக்கட்டி, பன்னீர், புட்டிங், கஸ்டார்ட் அல்லது மில்க் ஷேக்ஸ்  செய்து கொடுக்கலாம்.
 • தண்ணீருக்கு பதிலாக பாலுடன் சூப் தயாரிக்கவும். கிரீம் சூப்.
 • இட்லி, இடியாப்பாம், சாதம் பால் கலந்து கொடுக்கலாம்.
 • பால் கொழுக்கட்டை, பேரீச்சம் பால் போன்று கொடுக்கலாம்.

சைவ உணவு உண்பவர்கள் என்றால் என் குழந்தைக்கு பசும்பாலுக்கு மாற்று என்ன கொடுக்கலாம்?

பால் மற்றும் பிற பால் பொருட்களிலிருந்து உங்கள் குழந்தைக்கு கால்சியம் மற்றும் வைட்டமின் டி கிடைக்கவில்லை என்றால், நீங்கள் உங்கள் குழந்தை நல மருத்துவர் சோயா பால் அல்லது கால்சியம் மற்றும் வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸை பரிந்துரைப்பார்.

எனது குழந்தைக்கு ஆர்கானிக் அல்லது ஹார்மோன் இல்லாத பசும்பால் வாங்க வேண்டுமா?

இயற்கையாக பசும்பால் குழந்தைகளுக்கு சிறந்தது, ஆனால் கிடைப்பது தான் கடினம். (ஆர்கானிக் பால் அதிக விலை கொண்டதாக இருக்கும்.)

இருப்பினும், உங்கள் பிள்ளைக்கு "பச்சையாக" அல்லது அன்பேஸ்டுரைஸ்டு பால் கொடுப்பதை தவிர்த்துவிடுங்கள். பேஸ்டுரைசேஷன் செய்யாத பாலில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் அல்லது ஒட்டுண்ணிகள் இருக்கலாம், அவை கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

என் குழந்தைக்கு பால் ஒவ்வாமை இருந்தால் எப்படி கண்டுபிடிப்பது?

உங்கள் குழந்தை ஃபார்முலா பால் குடிக்கும் போது எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தால் அவர்களுக்கு பசும்பாலிலும் எந்த பிரச்சனையும் இருக்காது.  முதல் வருடத்தில் தாய்ப்பால் மட்டுமே குடித்த குழந்தைகள் கூட பசும்பாலை குடிப்பதில் சிக்கல் இருக்காது.  

உங்கள் மருத்துவர் பரிந்துரைpபடி உங்கள் குழந்தை சோயா அல்லது  ஃபார்முலாவை குடித்திருந்தால், பசும்பாலை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு உங்கள் மருத்துவரை ஆலோசிக்கலாம்.  

ஆனால் பசும்பாலில் உண்மையாக ஒவ்வாமை ஒப்பீட்டளவில் குறைவானது: குழந்தைகளுக்கு 2 முதல் 3 சதவிகிதம் மட்டுமே ஒவ்வாமை உள்ளது,

பால் ஒவ்வாமையின் முக்கிய அறிகுறிகள்:

 • தடிப்புகள் அல்லது படை நோய், குறிப்பாக வாய் அல்லது கன்னம் சுற்றி
 • வயிறு சார்ந்த தொந்தரவுகள்
 • வயிற்றுப்போக்கு
 • வாந்தி
 • வீக்கம்
 • நமைச்சல்

நாள்பட்ட நாசி அலர்ஜி, மூச்சுத்திணறல், மூக்கு ஒழுகுதல், இருமல், அல்லது சுவாசக் கோளாறுகள் அனைத்தும் பால் ஒவ்வாமையின் வெளிப்பாடு.  உங்கள் குழந்தையின் சுவாச மண்டலத்தை பாதிக்கிறது என்பதற்கான அறிகுறிகளாக இருக்கலாம். உங்கள் குறுநடை போடும் குழந்தை இந்த அறிகுறிகளில் ஏதேனும் இருந்தால், குழந்தை நல மருத்துவரிடம் பேசுங்கள்.

தீவிரமாக ஒவ்வாமை ஏற்பட்டால் வரும் அறிகுறிகள்

 • மிகவும் வெளிர் அல்லது பலவீனமான
 • உடல் முழுவதும் படை நோய் உள்ளது
 • தலை அல்லது கழுத்தில் வீக்கத்தை உருவாக்குகிறது
 • இரத்தம் தோய்ந்த வயிற்றுப்போக்கு உள்ளது
 • உயிருக்கு ஆபத்தான ஒவ்வாமை இருக்கலாம்.

உங்கள் குறுநடை போடும் குழந்தைக்கு பசும்பால் ஒவ்வாமை என்று தெரிந்தால், பாலாடைக்கட்டி, ஐஸ்கிரீம், தயிர், பால், பால் பவுடர், பால் சாக்லேட் மற்றும் தூள் ஆகியவற்றைக் கொண்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.

உங்கள் குழந்தைக்கு பசும்பால் கொடுக்க தொடங்கும் போது ஒரே மாட்டுப்பாலாக இருந்தால் சிறந்தது. அடிக்கடி பாலை மாற்றிக் கொண்டே இருப்பதை குறைப்பது நல்லது. ஆரம்பத்தில் குடிக்க மறுத்தாலும் பிறகு பழகிவிடுவார்கள் குழந்தைகள். உங்கள் குழந்தைக்கு கால்சியம் சத்து கிடைக்கும் உணவுகளை தவறாமல் கொடுப்பதன் மூலம் அவர்களின் எலும்பு உறுதியாக இருக்கும்.

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

 • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}