• உள்நுழை
 • |
 • பதிவு
உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் கர்ப்பம்

ஏன் கருவுற்ற பெண்களை இசை கேட்க சொல்கிறார்கள் ?

Kiruthiga Arun
கர்ப்பகாலம்

Kiruthiga Arun ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது May 23, 2022

பொதுவாக நாம் கருவுற்று இருக்கும் பொழுது ஏதாவது இசை கேக்க சொல்லுவாங்க. ஏன் சொல்றாங்கன்னு தெரியுமா? நம்ம குழந்தையோட வளர்ச்சிக்காக தான். அதெப்படி நம்ம பாட்டு கேக்கறதுக்கும் குழந்தை வளர்ச்சிக்கும் சம்மந்தம் இருக்கும்னு யோசிக்கிறீங்களா? 

நிச்சயமா சம்மந்தம் இருக்கு. எப்படி நம்ம பேசுறது குழந்தைக்கு கேக்குமோ, நம்முடைய உணர்ச்சிகளை வயிற்றுக்குள் இருக்கும் குழந்தை உணருமோ அதே மாதிரி தான்  இந்த இசையும் புரியும் உணரவும் முடியும்.

கர்ப்ப காலத்தில் இசையைக் கேட்பதன் நன்மைகள் என்ன? 

கர்ப்ப காலத்தில் இசையைக் கேட்பதன் 9 அற்புதமான விளைவுகள். இங்கே மேலும் தெரிந்து கொள்ளுங்கள்...

 • நீங்க  கர்ப்பமா இருக்கும் போது இசை அல்லது பாடல் கேட்பதன் மூலம் உங்களுக்கு மன அமைதி மற்றும் இனிமையான அனுபவம் கிடைக்கும். அதே மாதிரி தான் குழந்தை நம்ம கருவில் இருக்கும் பொழுது மெல்லிய இனிமையான இசை அல்லது பாடல் கேட்பதன் மூலம் அவங்களோட உணர்ச்சிகள் வலுப்பெறும். 
 • அதுமட்டுமில்லாமல் அந்த இனிமையான இசை நேர்மறையான அதிர்வுகளை ஏற்படுத்தும். அது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்குமான ஒரு தூண்டுதலை ஏற்படுத்தும். எப்படி நம்ம கருவில் இருக்கும் அவங்ககிட்ட பேசுறோமோ அதே மாதிரி இந்த இசையும் நம்ம அவங்களோடு இருக்கிற மாதிரியான ஒரு உணர்வை ஏற்படுத்தும் 
 • மெல்லிய இசையானது நிச்சயமா நம்முடைய மன அழுத்தம் பதட்டம் இது எல்லாவற்றையும் குறைக்கும். நமக்கு பதட்டம் இருக்கும் போது அதே உணர்வு தானே நம் கருவில் இருக்கும் குழந்தைக்கும் இருக்கும். அந்த நேரத்துல மெல்லிய இசை அல்லது பாடல் கேட்பதன் மூலம் இருவரது உணர்ச்சிகளும் ரிலாக்ஸாகும். 
 • கருவுற்று இருப்பவர்களுக்கு இசை ஒரு ட்ரெஸ் பஸ்டர். தங்களுக்குள் உருவாகும் கோபம், எரிச்சல், பதட்டம் போன்ற எதிர்மறையான மனநிலை தொடர்ந்து இருப்பது ஆரோக்கியம் கிடையாது. அதனால் அதிகாலையில் எழும் போது, இரவு தூங்கும் போது மெல்லிய இசையை கேட்பதை பழக்கபப்டுத்திக் கொள்ளலாம்.
 • நம்ம இசை கேக்கும் போது வரும் அதிர்வுகள் நிச்சயமா நம்ம குழந்தைகளுக்கு தெரியும். அந்த மெட்டுக்கு ஏத்த மாதிரி அவங்க கருவில் அசைய கூட செய்வாங்க. நான் கருவுற்று இருக்கும் போது ஒரு குறிப்பிட்ட இசைக்கு என் குழந்தையின் அசைவு அதிகமாக இருக்கும். அவள் பிறந்தவுடன் அதே மெட்டை உடனே கண்டுபிடுத்து ரசிக்க ஆரம்பிச்சது ரொம்ப ஆச்சர்யமா இருந்துச்சு. 
 • நம்ம ஹெட் போன் பயன் படுத்தி பாடல் அல்லது இசை கேட்கும் பொழுது அவங்களுக்கும் கேட்கும் திறன் அதிகமாகும். சில சமயங்களில் நமக்கு ரொம்ப பிடிச்ச பாடலை திரும்ப திரும்ப கேப்போம். அது அவங்களுக்கும் பிடிச்சிடலாம். அவங்க பிறந்த பிறகு அந்த பாடலே தாலாட்டு பாடலா இருந்தா அவங்களுக்கு அது ரொம்ப பிடிக்கும். அழும் போது இல்லனா தூங்கவைக்கும் போது அது பயன்படும்.
 • நீங்க கர்ப்பமா இருக்கும் பொழுது கேட்கும் இசை உங்கள் குழந்தையின் ஒட்டுமொத்த ஆளுமை திறனை மேம்படுத்தும்.
 • எனக்கு மெலடி பாடல் பிடிக்காது நல்ல குத்து பாடல் இல்லனா பீட் ரொம்ப இருக்கிற பாடல்கள் தான் பிடிக்கும். நா அந்த மாதிரி பாடல்களை கேட்க கூடாதான்னு கேக்கறீங்களா? நிச்சயமா கேட்க்கலாம். அந்த மாதிரி பாடல்கள் கேட்கும் பொழுது அதற்கு ஏற்ற மாதிரி அவங்களோட அசைவுகள் மற்றும் உணர்வுகள் இருக்கும்.அதனால நம்ம குழந்தை சில சமயங்களில் பதட்டமா கூட ஆகிடலாம். அதுனால ரொம்ப நேரம் அதிக சத்தத்துடனோ இல்ல பீட் அதிகமா இருக்கிற பாடல்களையோ கேட்க வேண்டாம். அப்படியே பிடித்தாலும் கொஞ்ச நேரம் மட்டும் கேட்டுக்கோங்க.
 • அதிகமான சத்தம் நிச்சயமா உங்கள் குழந்தையை பாதிக்கும். மெலடி பாடல் அல்லது இசை எதுவா இருந்தாலும் குறைவான சத்தத்தோடு கேக்றதே நல்லது. 

இந்த இசை கேக்கறது மூலமா குழந்தை நல்ல வளர்ச்சி அடையும்ங்கிறதுக்கு உறுதியான சான்றுகள் இல்லனாலும் நிச்சயமா நமக்கு பிடிச்ச பாடல் கேட்டு நாம மகிழ்ச்சியா இருக்கிற மாதிரி அவங்களும் கருவில் சந்தோஷமா இருப்பாங்க. கருவில் இருக்கும் குழந்தையை மகிழ்விக்கும் வழிகளில் இதுவும் ஒன்று.

 

 • 3
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.

| Apr 30, 2019

எப்பொதிருந்து கருவிலிருக்கும் குழந்தை கேட்கும் திறன் பெறும்

 • Reply
 • அறிக்கை
 • Reply
 • அறிக்கை

| May 15, 2020

Yentha month la eruthu ketkanum song

 • Reply
 • அறிக்கை
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}