• உள்நுழை
  • |
  • பதிவு
பெற்றோர் கல்வி மற்றும் கற்றல் குழந்தை உளவியல் மற்றும் நடத்தை

பிறந்தது முதல் குழந்தையின் பேச்சு மற்றும் மொழி வளர்ச்சி ஏன் தாமதம் ஆகிறது?

Radha Shri
0 முதல் 1 வயது

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Apr 11, 2022

குழந்தை பிறந்தது முதல் அவர்களின் ஒவ்வொரு வளர்ச்சி மைல்கற்களையும் ஒரு பெற்றோராக நாம் எதிர் நோக்குகின்றோம். குறிப்பாக, குழந்தையின் தொடர்பு கொள்ளும் திறன். இது பேச்சு வளர்ச்சியின் ஆரம்ப கட்டம். ஒரு குழந்தையின் வாழ்க்கையின் முதல் சில ஆண்டுகளில், அவர்கள் விரைவாக தொடர்புத் திறன்களை வளர்த்துக் கொள்கிறார்கள். அதாவது சிரிப்பு, கூச்சலிடுவது, மழலையாக பேசுவது, ஆ, ஊ, பூ என சத்தம் இடுவது, ஒன்றை சுட்டிக் காட்டி சைகை காட்டுவது என குழந்தைகள் பிறந்ததலிருந்து தங்களை வெளிப்படுத்துகிறார்கள்.

ஆனால் கொரோனாவுக்கு பிறகு குழந்தைகளின் பேச்சு மற்றும் மொழி வளர்ச்சியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 1 வயது முதல் 3 வயது வரையுள்ள குழந்தைகளிடம் இந்தப் பிரச்சனை அதிகமாக வருவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பெற்றோர் முதல் தின பராமரிப்பாளர்கள், ஆசிரியர்கள், சக குழந்தைகள் என அனைவரும் மாஸ்க் அணிந்திருக்கிறார்கள். இது தங்களின் குழந்தையின் பேச்சு மற்றும் மொழி வளர்ச்சியை பாதிக்குமா என்று ஆச்சரியப்படுகிறார்கள். ஆனால் மாஸ்க் அணிவதால் குழந்தையின் பேச்சு திறன் பாதிக்கப்படுகிறது என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை.  குழந்தையிடம் இதன் தாக்கம் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு.

குழந்தைகள் முதலில் எப்படி பேச கற்றுக் கொள்கிறார்கள்

குழந்தை முதல் நாளிலிருந்து தன் அன்புக்குரியவர்களின் முக பாவனைகள் மற்றும் வாய் அசைவுகளைப் பார்க்கிறார்கள். அவர்கள் பேசுவதை கேட்கிறார்கள், பேசும் மொழியை கவனிக்கிறார்கள். இதன் மூலம் குழந்தை மற்றவர்களோடு தொடர்பு கொள்ள முயற்சிக்கிறது. அவர்களுடைய ஒவ்வொரு மைல்கல்லும் மற்ற ஒன்றோடு தொடர்புடையது.

பெற்றோர்களும் வீட்டில் உள்ள பிற குடும்ப உறுப்பினர்களும் ஒவ்வொரு நாளும் தங்கள் குழந்தையிடம் பேசுவது, பாடுவது, விளையாடுவது, படிப்பது மற்றும் பல வழிகளில் ஈடுபடுவதன் மூலம் இந்த வளர்ச்சியை ஊக்குவிக்கிறார்கள். அதாவது,  பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு உணவளிப்பது, குளிப்பது, டயப்பரை மாற்றுவது, தள்ளுவண்டியில் தள்ளுவது, வெளியில் விளையாடுவது போன்றவற்றின் மூலம் எவ்வளவு பேசுகிறார்களோ, ஒரு குழந்தை எந்தளவுக்கு மொழிகளை கிரக்கிறதோ, குழந்தையின் தகவல் தொடர்பு திறன் சிறப்பாக இருக்கும்.

மாஸ்க் அணிவதால் பேச்சு மற்றும் மொழி வளர்ச்சியில் தாமதத்தை ஏற்படுத்துமா?

இதற்கு ஆதாரம் இல்லை என்றாலும், குழந்தையிடம் இதன் தாக்கம் உள்ளது. ஏன்னென்றால் ஒரு குழந்தை பேசவோ அல்லது மொழியோ கற்றுக் கொள்ளும் போது நெருங்கியவர்களின் முக பாவனைகல், வாய் அசைத்தலை உன்னிப்பாக கவனிக்கிறார்கள். மாஸ்க் அணிவதால் குழந்தை அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள சிரமப்படுகிறார்கள். அதாவது அவர்கள் மகிழ்ச்சியாக பேசுகிறார்களா, கோபமாக பேசுகிறார்களா, என்ன பேசுகிறார்கள்? என பல விஷயங்கள் குழந்தைக்கு புரியாது.

ஆனால் நீங்கள் கவனித்து இருக்கிறீர்களா? பார்வை குறைப்பாடு உள்ள குழந்தைகள் எப்படி பேச்சு மற்றும் மொழித்திறனை வளர்த்துக் கொள்கிறார்கள். ஒரு உணர்வு அகற்றப்படும் போது மற்ற உணர்வுகள் மேம்படலாம். அதாவது மொழியை புரிந்து கொள்வதற்கும், கற்றுக் கொள்வதற்கும் பிற காரணிகள் உதவுகிறது, சைகைகளைப் பார்ப்பார்கள், குரலின் தொனியில் மாற்றங்களை கேட்பார்கள், கண்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதைக் காண்பார்கள், வார்த்தைகளைக் கேட்பார்கள்.

மாஸ்க் அணிந்திருந்தாகும் குழந்தையோடு எப்படி சிறப்பாக பேச உதவும் டிப்ஸ்

  • பேசுவதற்கு முன் குழந்தையின் கவனத்தை ஈர்க்கவும்
  • குழந்தையை நேரடியாக எதிர்கொண்டு, குழந்தையின் நம்மை நேராக பார்ப்பதற்கு இடையூறுகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • மெதுவாகவும் சற்று சத்தமாகவும் அதாவது கத்தாமல் பேசவும். குழந்தையால் உணர்வை அடையாளம் காண முடியும்
  • ஒரு குழந்தை கேட்கும் கருவிகள் ஏதேனும் பயன்படுத்துகிறதா அல்லது பிற கேட்கும் சாதனங்களைப் பயன்படுத்துகிறதா என்பதைப் பார்க்கவும்
  • பேசும் போது, கண்கள், கைகள், உடல் மொழி மற்றும் குரலில் தொடர்பு கொள்ளும் விஷயங்களை பயன்படுத்தவும். குழந்தைக்கு ஏற்றவாறு இவையனைத்தையும் கலந்த மொழியில் பேசவும்.
  • குழந்தைக்கு புரிந்ததா என்று கேளுங்கள்; தேவைப்படும் போது வார்த்தைகள் மற்றும் வாக்கியங்களை மீண்டும் சொல்லவும்
  • சூழலில் உள்ள சத்தம் மற்றும் கவனச்சிதறலை குறைக்கவும்

இந்த உதவிக்குறிப்புகளை உங்கள் குழந்தையின் பகல்நேர பராமரிப்பு வழங்குநர், பாலர் பள்ளி மற்றும் மாஸ்க் அணிந்துகொண்டு உங்கள் குழந்தையுடன் தொடர்ந்து பழகும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

வீட்டில் எப்படி குழந்தையின் பேச்சு மற்றும் மொழி திறனை வளர்க்கலாம்

நினைவில் கொள்ளுங்கள், குழந்தைகள் நம் முகம் பார்க்க தொடங்கியதிலிருந்து அதிகம் கற்றுக்கொள்கிறார்கள்! மாஸ்க் அணியாத குடும்ப உறுப்பினர்களுடன் வீட்டில் இருக்கும் போது பேச்சு மற்றும் மொழி வளர்ச்சி மற்றும் சமூக தொடர்புக்கு  உதவலாம். டிவி, மொபைல் அல்லது பிற குறுக்கீடுகள் இல்லாமல் உங்கள் குழந்தையுடன் உரையாடுவதற்கு பிரத்யேக நேரத்தை அமைத்துக் கொள்ளுங்கள் - உதாரணமாக, குளியல் நேரம் மற்றும் இரவு உணவு நேரத்தில் - குழந்தைகள் அவர்களின் பேச்சு மைல்கற்களை அடைய உதவலாம்.

இயல்பாகவே சில குழந்தைகள் பேச்சு மற்றும் மொழி மைல்கற்களை அடைய அதிக நேரம் எடுக்கும் - மேலும் சிலருக்கு நிபுணர்களின் உதவி தேவைப்படலாம். பேச்சு மற்றும் மொழி தாமதங்கள் மற்றும் கோளாறுகள் சிறு குழந்தைகளில் பொதுவானவை, ஆனால் சான்றளிக்கப்பட்ட பேச்சு-மொழி நிபுணரின் உதவியுடன் சிகிச்சையளிக்கக்கூடியவை.

உங்கள் பிள்ளையின் திறன்களைப் பற்றி உங்களுக்கு கவலைகள் இருந்தால், தாமதிக்காதீர்கள் - முடிந்தவரை விரைவாக அடுத்த கட்டத்திற்கு செல்லுங்கள். ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அல்லது உதவுவதன் மூலம், குழந்தைகளின் பேச்சு மற்றும் மொழி வளச்சியை வளர்க்கலாம்.

  • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த பெற்றோர் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}