எங்கள் பாப்பாவிற்க்கு ஒரு வயது நடக்கிறது ஒரு வாரம் முன்பு இரவு சாப்பிட்டு அப்புறம் நல்ல சிரித்து விளையாடிட்டு இருந்தாள் திடீர்னு அழுதாள் அழும் போது சத்தமே வரவில்லை உடனே மயங்கிட்டா ஆனால் கொஞ்சநேரம் முதுகில் தட்டினேன் முழித்துடாள் டாக்டர்கிட்ட காட்டினோம் மூளையோட துடிப்பு குறைவானாள் இது மாதிரி வரும் சொன்னாங்க. மூளையோட துடிப்பு குறைந்தா இப்படி வருமா எதனால் இப்படி வந்தது

Created by
Updated on Oct 11, 2020

| Oct 11, 2020
ஹாய் காயத்ரி பிரபு! நீங்க நல்ல வேலை பண்ணி இருக்கீங்க குழந்தை முதுகில் தட்டி விட்டு இருக்கீங்க. கரெக்டான யோசனை உங்களுக்கு வந்திருக்கு சூப்பர். குழந்தைகள் திடீரென்று அழும்போது மூச்சு விடாமல் இழுத்து கொஞ்ச நேரம் பொழுது தான் அவங்க கிட்ட இருந்து அழுகிற சத்தம் வரும். இந்த மாதிரி டைம்ல அவர்களுடைய துடிப்பு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்திருக்கலாம்.